ஃபிபா: ஐரோப்பிய ஓரவஞ்சனை

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 8)
நா.கண்ணன்

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒýப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

ஜூன் 9 அன்று தொடங்கிய ஃபிபா - உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர், ஜூலை 9 அன்று வரை நடைபெறுகிறது. இதில் உலகெங்குமிருந்து 32 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் சுற்றிலேயே 16 அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றில் மேலும் 8 அணிகள் வெளியேறிவிட்டன. காலிறுதியில் ஜெர்மனி, அர்ஜென்டைனா, பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், உக்ரைன், போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் மட்டுமே தகுதி பெற்றன.

துரதிருஷ்டவசமாக கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய ஆசிய அணிகள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்துவிட்டன. காலிறுதியில் ஆசிய நாடு ஒன்றுகூட இடம் பெறவில்லை. ஆப்பிரிக்க அணிகளும் இடம் பெறவில்லை. எனவே கால்பந்து, ஐரோப்பிய ஆட்டம் போலவே இப்போது நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்க அணிகள் மட்டுமே ஐரோப்பாவுக்கு ஈடான போட்டியை அளித்து வருகின்றன.

கொரியாவில் கால்பந்து ஒரு தேசிய விளையாட்டைப் போலவே ஆடப்படுகிறது. அந்த நிலையில் கொரியா, இரண்டாம் சுற்றுக்குக்கூட தகுதி பெறாதது அவர்களுக்குப் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. அநேக கொரியர்கள், ஃபிபா, ஐரோப்பிய அமைப்பைப் போலவே செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

முதல் சுற்றில் கொரியாவுக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஒரு பெனால்டி கிக் வரவேண்டியது. ஆனால், நடுவர், அந்த வாய்ப்பை சுவிட்சர்லாந்திற்கு அளித்துவிட்டார். ஏனெனில் ஃபிபா அமைப்பின் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ளது. எனவே, இப்படி ஓர் ஓரவஞ்சனை.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை கொண்ட ஆசியக் கண்டத்திலிருந்து 4 நாடுகள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்று ஃபிபா அளவுகோல் வைத்துள்ளது. ஆனால், இந்தியாவின் அளவே நிலப்பரப்புக் கொண்ட மேற்கு ஐரோப்பாவிலிருந்து எவ்வளவு நாடுகள் கலந்துகொள்கின்றன! இது, மீண்டும் வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவதாகவே உள்ளது.

இப்படியான ஒரு கண்ணோட்டத்தில் இந்த ஒலிப்பதிவு அமைந்துள்ளது. நா.கண்ணனின் மூலம் கொரியர்களின் உணர்வுகளை நாம் நேரடியாக அறிய முடிகிறது. ஃபிபா அமைப்பின் ஐரோப்பிய ஓரவஞ்சனையை அவர் சான்றுகளுடன் கூறியுள்ளார்.

வித்தியாசமான பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 7. 16 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

0 பின்னூட்டங்கள்: