SBS வானொலி (ஆஸ்திரேலியா) பேச்சு IIthis is an audio post - click to play


1. 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வம் கொணர்ந்துங்கு சேர்ப்பீர்' என்பது ஏன் இன்னும் கனவாக உள்ளது? (மொழிபெயர்ப்பு).

2. தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி...

3. தமிழுக்கு என் பங்களிப்பு. சுயமதிப்பீடு.

பெரிய ஆப்பிள்


அமெரிக்க ஐக்கியநாடுகளின் வாணிப கேந்திரம் 'பெரிய ஆப்பிள்' என்றழைக்கப்படும் நியூயார்க் நகரம். பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப்பயணிகளைக் காந்தம் போல் இழுக்கும் நகரம். அமெரிக்காவின் நாடி பிடித்து பார்க்க உதவும் உயிருள்ள நகரம். உலகின் அனைத்து மனித இனங்களும் சங்கமிக்கும் நகரம். எவ்வளவோ பேர் தாஜ்மகாலைப் பற்றிச் சொல்லிச் சென்றாலும் நாம் சென்று பார்க்கும் வரை நம்பமுடியாது. அதுபோல்தான் நியூயார்க்! எப்படி ஒரு காலத்தில் கிரேக்க ரோமானிய பேரரசுகளின் உன்னதத்தைக் காட்ட ஒரு ரோம், ஒரு அலெக்ஸாண்டிரியா, ஒரு பாபிலோன் இருந்ததோ அது போல் நவீன மனிதனின் வளர்ச்சியை, அவனது செல்வச் செழிப்பைக் காட்ட நியூயார்க். ஒரு காலத்தில் நமது காஞ்சியை, மதுரையை, தஞ்சையை அக்காலத்தின் உன்னதமென்று பயணிகள் வர்ணித்துள்ளனர். ஆனால் அது பல நூற்றாண்டுகளுக்கு முன். ஒரு தஞ்சைக் கோவிலே நமக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. இங்கு சும்மா, தடிக்கி விழுந்தால் ஒரு தஞ்சை என்றளவில் கட்டியுள்ளார்கள். எவ்வளவு செலவு, எவ்வளவு மனித வளம், எவ்வளவு முயற்சி, கனவு இவைகளுக்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும். பிரம்மிப்பாக உள்ளது!

அமெரிக்காவிற்குள் நுழைவது மேலும், மேலும் சிக்கலாகி வருகிறது. 80 களில் நான் பயணப்பட்ட போது என்னை வழியனுப்ப வந்த நண்பர்கள் விமானம்வரை வந்தது எங்குமில்லாத அதிசயமாக இருந்தது. இப்போது வருபவரின் கைநாட்டு வாங்கி, போட்டோ எடுத்து ஆயிரம் கேள்விகள் கேட்டு, 'எண்டா படவா! இங்கே வரே!' எனும் பாவத்தில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒண்ட வந்த பிடாரிகள் நம்மைக் கேட்பது இன்னொருவகையில் அதிசயமாக உள்ளது. சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரம் என்றுமில்லாத அளவில் அரசின் கையில் இருப்பது எவ்வகையில் சிலாக்கியம் என்று தெரியவில்லை. நம்ம போட்ட கைநாட்டு, மற்றும் பிற விவரங்கள் இணையத்தில் காசுக்குக் கிடைக்கிறதாம்! கிழிஞ்சது போ!!

கூகுளுடன் கைகோர்த்து...

இந்த புழக்கடை சினிமா (வீட்டு வீடியோ) என்பது சுவாரசியமான விஷயம். தமிழர்கள் எடுக்கும் ஹோம் வீடீயோவெல்லாம் 'முதுசொம்' தளத்தில் சேர்க்க வேண்டுமென்று பல காலமாக கேட்டு வருகிறேன். ஒருவர் கூட இதுவரை அனுப்பி வைத்ததில்லை. ஆனால் என் ஆசையை கூகுள் நிறைவேற்றி வருவது கண்டு மகிழ்ச்சி. இணையத்தில் எந்த விஷயம் எங்கிருந்தால் என்ன? தொடர்பு முகவரி இருக்கும் வரை எல்லாம் நம் 'ஆறாம்திணையே'! இதோ என் பங்கிற்கு கூகுளுடன் சேர்ந்து....

ஃபிபா: தோல்விகள் தரும் பாடங்கள்

நா.கண்ணன்
தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 9)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒýப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.இப்போது ஃபிபா - கால்பந்துப் போட்டியைப் பற்றி அவர் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

ஜூன் 9 அன்று தொடங்கிய ஃபிபா - உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரின் பரபரப்பான காலிறுதி ஆட்டங்களில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகியவை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. கோப்பையை வெல்லும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த பிரேசில் அணி, தோல்வியைத் தழுவியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேசிலின் தோல்விக்கு என்ன காரணம்? ஜெர்மனிக்கு இருக்கும் சாதக அம்சங்கள் என்னென்ன? காலிறுதி ஆட்டங்கள் எப்படி அமைந்தன? தற்காப்பு ஆட்டமும் தாக்குதல் ஆட்டமும் எந்தக் கட்டத்தில் அமைய வேண்டும்? கோப்பையை வெல்லப் போகும் அணி எது? எனப் பலவற்றையும் நா.கண்ணன் இந்த ஒலிப்பதிவில் அலசியிருக்கிறார். வெற்றிகளுக்குப் பிறகு உற்சாகமும் தோல்விகளுக்குப் பிறகு பாடங்களும் கிட்டுவதை அவர் எடுத்து இயம்புகிறார்.

கோப்பையை பிரான்ஸ் அணி வெல்ல வேண்டும் என்று கொரியர்கள் விரும்புகிறார்கள். ஏன் தெரியுமா? நகைச்சுவை ஊட்டும் அந்தக் காரணத்தை இந்த உரையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வித்தியாசமான பின்னணி இசையுடன் நா.கண்ணனின் உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 9. 52 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

SBS வானொலி (ஆஸ்திரேலியா) பேச்சு

சிட்னி சென்றிருந்த போது வெரிகாஸ் (மணிலா) வானொலியில் நீண்ட காலம் பணியாற்றி விட்டு தற்போது ஆஸ்திரேலிய எஸ்.பி.எஸ் வானொலியில் பணியாற்றும் திரு.ரேமோண்ட் செல்வராஸ், திரு.திருநந்தன் வழியாக என்னைத் தொடர்பு கொண்டு ஒரு பேட்டி கேட்டார். இரண்டு பேருக்குமே கால நெருக்கடி. எனவே பின்னால் தொலை பேசி மூலம் வைத்துக் கொள்ளலாமென ஒத்தி போட்டு ஜூன் 30 அன்று என்னைத் தென்கொரியாவில் பேட்டி கண்டார். 20 நிமிடங்களுக்குள் எடுத்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறவில்லை. ஏனெனில் மிக ஆழமான, சிந்திக்க வைக்கும் கேள்விகளைக் கேட்டார். கொஞ்சம் விரிவாகப் அதில் சொல்ல வேண்டியதாகிப் போய் விட்டது. எனவே இரண்டு பாகங்களாக இப்பேட்டி வெளி வருகிறது. முதற் பகுதி கேட்க கீழே சொடுக்குக:

சொடுக்க வேண்டிய சுட்டி

முதற்பகுதியில் மூன்று கேள்விகள்

1. மதுரைத் திட்டம் என்றால் என்ன? அதில் எப்படிப் பங்கு கொள்வது. அதில் என் பணி என்ன?

2. இணையம் என்பதை ஏன் 'ஆறாம்திணை' என்கிறோம். அதன் வளர்ச்சி எப்படியிருக்கும்.

3. உயர்தனிச் செம்மொழி எனத் தமிழை இந்திய அரசு அறிவித்திருத்தல் தமிழுக்கு எவ்வகையில் உதவும்?

'தமிழ்' என்று தட்டுடா!கூகுளின் கையில் தமிழ்!

ஒரு சுவாரசியமான 'முதுசொம்' கேள்வி?