அமெரிக்கா வாட்ச் (1)

America Watch

அமெரிக்கா ஏன் போக வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை முதன்மையாகப்படுவது அமெரிக்கா உலக மக்களின் சங்கமமாக இருப்பதுவே. எப்படி 'திரிவேணி சங்கமத்தில்' குளிப்பது புண்ணியமோ அது போல் அமெரிக்கா போதுவதும் புண்ணியமே :-) இறங்கியவுடனேயே முதலில் படுவது இந்த மானுட சங்கமமே! எத்தனை முகங்கள். எத்தனை நிறங்கள். எத்தனை உடைகள், எத்தனை அலங்காரங்கள். எத்தனை வித அணுகுமுறைகள்! வேகாத வெய்யிலிலும் கருப்பு கோட், டை கட்டித்திரியும் ஜெண்டில்மேன்கள், நம்ம ஊர் பிச்சைக்காரர்கள், நரிக்குரவர்கள் எல்லாம் 'இங்கே' எங்கே வந்தார்கள்! என்று வியக்க வைக்கும் மனிதர்கள். இராமாயண காவியத்தில் வரும் தாடகை, இடும்பை போன்ற பாத்திரங்களைக் கூட அடிக்கடி சந்திக்கலாம். திடீரென்று தேவ கன்னிகை போல் ஒரு பெண் போவாள். உலக விசித்திரங்களின் சங்கமம் அமெரிக்கா! அங்கு போனவுடன் 'நான்' என்பது அழிந்துவிடுகிறது (சில நொடிகளேனும்:-) செட்டியார், அய்யர், கவுண்டர்..ம்..ம்..எல்லாம் கரைந்து போய் வெறும் மனிதாக நிற்க வைக்கும் பூமி. ஒரு கருப்பன் நம்மிடம் வந்து 'என்ன பிரதர்! சவுக்கியமா?' என்று தோழமையுடன் கேட்டால் நாம் கருப்பர் போல் அவனுக்கு தோற்றம் தருகிறோம் என்று பொருள். யாராவது வந்து அரேபிய மொழியில் பேசினால் நாம் மத்திய கிழக்கு போல் இருக்கிறோம் என்று பொருள்! மட, மடவென்று யாராவது வந்து உங்களுடன் ஸ்பானிஷ் பேசினால் உங்களை மெக்கிசிகோ என்று நினைத்துவிட்டார் என்று பொருள். நாம் யார் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாவிடில் நாம் வெறும் மனிதரே!

எடிசன், நியூசெர்சியில் உள்ள ஒரு பேரங்காடியில் ஒரு வடகலைத் திருமண்ணைக் கண்டேன். 'சார்! தமிழா!' என்று கேட்டேன். அவர் பயந்து விட்டார். ஏனெனில் நான் தமிழனாக இருப்பேனோ? என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. மேலும், 'கடை, கண்ணியில் யாரோடும் பேசக்கூடாது' என்று பிள்ளைகள் எச்சரித்து இருக்கலாம் (பெற்றோர்கள் குழந்தையை எச்சரிப்பது இந்தியாவில் இருக்கும் வரைதான். அமெரிக்காவரும் பெற்றோர்களை பிள்ளைகள்தான் எச்சரித்து நடத்துகிறார்கள்!). பின் மெதுவாக பேசினார். அதற்குள் கல்லா பெட்டி வந்துவிட்டது, 'சார் மதுரையாம்! என்று அங்கு அரை டிராயர் போட்டுக்கொண்டு நிற்கும் நாற்பது வயது பிள்ளையிடம் அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, 'மேல் வம்பு வேண்டாம்' என்று அவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்!
Washington DC -ல் ஒரு தெரு!

8 பின்னூட்டங்கள்:

குறும்பன் 8/09/2006 11:34:00 AM

நியூஜெர்சி எடிசனை பற்றி சொல்லிவிட்டு வாசிங்டன் DC படம் போட்டா எப்படி? :-) நியூஜெர்சி இல்லைனாலும் குறைந்தபட்சம் நியூயார்க் படம் போட்டிருக்கலாம்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா 8/09/2006 11:41:00 AM

//செட்டியார், அய்யர், கவுண்டர்..ம்..ம்..எல்லாம் கரைந்து போய் வெறும் மனிதாக நிற்க வைக்கும் பூமி.//

:-)))))

ஆம் முதலில் அப்படித்தான் இருக்கும். தமிழ்சங்கங்களில் சங்கமம் ஆகும் வரை.

நா.கண்ணன் 8/09/2006 11:51:00 AM

:-))

நா.கண்ணன் 8/09/2006 11:53:00 AM

தாமஸ் ஆல்வா எடிசன் பற்றியே எழுதுகிறேன், பொறுங்கள்! அந்தப்படம் ஒரு causual outlook தரும் படம்.

கால்கரி சிவா 8/09/2006 11:57:00 AM

"அவர் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, 'மேல் வம்பு வேண்டாம்' என்று அவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்!"

கண்ணன் சார், இன்னும் அமெரிக்காவில் உள்ளீர்களா, போனமுறை உங்கள் பின்னூட்டத்தில் சிகாகோவிலிருந்து கால்கரிக்கு காரில் வரமுடியுமா? எனக் கேட்டீட்ருந்தீர்கள். நான் பதிலளிக்க தவறிவிட்டேன்.

காரில் வரலாம் என்ன 3 நாட்கள் ஆகும். விமானத்தில் 3 மணிநேரத்தில் வந்துவிடலாம். முடிந்தால் வாருங்கள்.

இங்கும் இவ்வாறு தான் இந்தியர்கள் குறிப்பாக சக தமிழரைக் கண்டால் சரேலென்று விலகுவார்கள்.

ஏனென்று இதுவரைக்கும் எனக்கு விடைக் கிட்டவில்லை

நா.கண்ணன் 8/09/2006 01:41:00 PM

அன்பின் சிவா:

ஊர் திரும்பிவிட்டேன். டொரொண்டோ வரை வந்து நயாக்கராவைக் காட்ட முயன்றேன். நியூயார்க்கிலிருந்து 12 மணிப்பிராயணம் என்று வந்தது (அம்ட்ராக் ரயிலில்)!! போங்க சார்! உங்க நாடுகள் விமானம், கார்களை நம்பி நடந்து கொண்டு இருக்கின்றன. அடுத்தமுறை புஷ்பக விமானம் செய்து கொண்டு வருகிறேன் :-)) கால்கரியில் உள்ள உறவிடம் தொலைபேச மட்டுமே முடிந்தது இப்பயணத்தில்!

கால்கரி சிவா 8/09/2006 11:34:00 PM

கண்ணன் சார் அடுத்த முறை வரும்போது கட்டாயம் வரவேண்டும். நானும் கொரிய பயணத்திற்கு விசா எல்லாம் எடுத்து கடைசி நேரத்தில் கான்சல் ஆகி விட்டது

நா.கண்ணன் 8/10/2006 08:47:00 AM

வேலை விஷயமாக செப்டம்பரில் கேனடா வரும் வாய்ப்பு வந்தது, வேண்டாமென்றுவிட்டேன். ஊர் சுற்றி அலுத்துவிட்டது. கால்கெரி வனப்பு எனக்கு பிடிக்கும். கூலி என்று சொல்லப்படும் நில அமைப்பு வித்தியாசமானது, ரம்யமானது. கொரியா வரும் போது சொல்லுங்கள். சந்திப்போம்.