பாகுன்னாரா?

தினமும் பல் தேய்ப்பது போல் இங்கு எழுத வேண்டுமென்று ஆசை! ஆனால் அது முடிவதில்லை. வேலை, அசதி, சோம்பல் etc. எண்ணத்தை அப்படியே பதிவாக்க முடிந்தால் எவ்வளவு சௌகர்யம்!

ஒரு மாதமாக அமெரிக்காவில் சுற்று. தேன் துளி பத்மா, பாஸ்டன் பாலா, செகுவாரா இரமணீதரன், வேந்தன் என்று பல இணைய நண்பர்கள் உற்சாகப்படுத்த அமெரிக்கா போய் ஊர் சுற்றி விட்டு வந்து விட்டேன். Watch America! என்ற தலைப்பில் சில இடுகைகள் இனி வரும். அங்கேயிருந்து எழுதமுடியவில்லை. ஒரே சுற்று. இடையில் முதுகுப் பிடிப்பு வேறு! (நாரணன் நான் சொல்வதைக் கேட்பார்! ஏனெனில் அவர் காலைப் பிடிக்கும் அனுமனின் தந்தை என்னைப் பிடித்துக் கொண்டிருந்ததால்!! - விடை தெரியாவிடில் பிகு பார்க்கவும்).என்ன ஏதோ ஸ்பீல்பெர்க் மூவி மாதிரி இருக்கா? நாங்க போயிருந்த போது சிக்காகோ இப்படி இருந்தது! ஐபீல் கோபுர உயரத்திற்கு உயர்ந்திருந்த ஒரு கட்டிடத்தின் மேலிருந்து எடுத்த படம். கோடை வெயிலில் மழை நன்கு பெய்து உலர்ந்திருந்த பொழுது!


பிகு: வாயுப் பிடிப்பு
பாகுன்னாரா? = நலமா? (தெலுங்கு)

13 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 8/08/2006 10:10:00 AM

மேமு அந்துரு பாக உண்ட்டாம்.
மீரு ஒள்ளு ச்சூசுகினி, பின்ன வச்சி
அன்னி ராயவல.

இதி கூட 'தெலுகே'ண்டி.

துளசி கோபால் 8/08/2006 10:13:00 AM

ஏமண்டி கண்ணன்காரு,
மேமு அந்துரு பாகனே உண்ட்டாமு.
மீரு ஒள்ளு ச்சூஸுகுனி, பின்ன வச்சி அன்னி கதலு ராயவல.
இதுகூட 'தெலுகே'ண்டி.

நா.கண்ணன் 8/08/2006 10:21:00 AM

துளசி அம்மாகாரு:

Surrender !!

அர்த்தத்தை நீங்களே சொல்லி விடுங்கள் :-))

Boston Bala 8/08/2006 11:49:00 AM

சியர்ஸ் டவரா அல்லது ஹான்காக் கோபுரங்களா?

நா.கண்ணன் 8/08/2006 11:56:00 AM

பாலா!

சியர்ஸ் போக முடியவில்லை. கடும் மழை! பக்கத்தில் ஹான்காக் கோபுரம் நின்றது. ஏறிவிட்டோம்! 96 மாடி 40 நொடியில்!!

ENNAR 8/08/2006 12:01:00 PM

தெலுங்கு தெளுசா

நா.கண்ணன் 8/08/2006 12:29:00 PM

ஒரு மாதிரி புரியும். திராவிட மொழிகளுக்குள் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக இது அமையலாம். ஆனாலும் சுந்தரத்தெலுங்கு (=செந்தமிழ்) புரியாது :-) ஒரு காலத்தில் தமிழ் வைணவர்கள் சமிஸ்கிருதம், தெலுங்கு கற்று வந்தனர். இப்போது அப்பழக்கம் மலிந்துவிட்டது.

துளசி கோபால் 8/08/2006 01:04:00 PM

என்னங்க கண்ணன் அவர்களே,

நாங்கள் அனைவரும் நலமே. நீங்கள் உங்க உடம்பைப் பார்த்துக்கிட்டு, அப்புறம்
வந்து எல்லா கதைகளையும் எழுதவேண்டும்.
இதுவும் தெலுங்கேதான்:-)))

மதுமிதா 8/08/2006 01:16:00 PM

மம்மள்னி விடிசி போயி மீரு மட்டும் அந்தரினி சூசி ஒச்சாரா ஏமிடி இதி மீகே பாகுந்தா கண்ணன்காரு.
செப்பண்டி.

சித்ரமு சாலா பாகுந்தி அன்ன மாட்ட

நா.கண்ணன் 8/08/2006 01:23:00 PM

கவிதாயினிகாரு!

நான் மட்டும் போகவில்லை. என் பெண்ணும் கூட வந்தாள் :-) நீங்கள் சொல்வதும் உண்மைதான். நாம் எல்லோரும் சேர்ந்து போனால் எவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்கும்! மன்னிக்க.

'சித்திரமு சால...' புரியலை. உங்கள் கவி நடை வந்துவிட்டது இயல்பாக :-)

நா.கண்ணன் 8/08/2006 01:27:00 PM

துளசி:

நீங்கள் தமிழ்ப்படுத்தியபின் வாசித்தால் தெலுங்கு புரிகிறது. உடல் நலம் விசாரித்தீர்கள் என்ற அளவில் முதலில் புரிந்தது. இப்போது முழுவதும் புரிகிறது. நன்றி.

Anonymous 8/08/2006 03:27:00 PM

??ஒரு காலத்தில் தமிழ் வைணவர்கள் சமிஸ்கிருதம், தெலுங்கு கற்று வந்தனர். இப்போது அப்பழக்கம் மலிந்துவிட்டது.??

மலிந்தா நலிந்தா கண்ணா?

நா.கண்ணன் 8/08/2006 03:53:00 PM

நக்கீரன் சார்!

நலிவுற்றது என்பதே சரி. பிழை எனதே!