ஜன கண மன என மனனம் செய்யடா!ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சரி, இந்தப் பாட்டைச் சத்தியமா தப்பில்லாமப் பாடத் தெரிஞ்சவங்க கைதூக்குங்க பாப்போம்?
அர்த்தம் புரிந்து சரியாப் பாடத் தெரிஞ்சவங்க கை தூக்குங்க?

எப்படியோ இந்தப் பாட்டைக் கேட்டா, 'எம் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறப்பது' என்னவோ உண்மை! அந்த அழகான விழுமியங்கள் அவசர யந்திர வாழ்க்கையில், நுகர் கலாச்சார உலகச் சந்தை பேரம் பேசலலில் காணாமல் போய்விடாமல் இருக்க எம் தந்தையர் இன்னருள் வேண்டும்!

22 பின்னூட்டங்கள்:

நாகை சிவா 8/20/2006 10:57:00 PM

தைரியமாக கைய தூக்குறேன். நம் தேசிய கீதத்தை தவறு இல்லாமல் பாட முடியும் என்று. ஆனால் நம் தேசிய பாடலை என்னால் தவறு இல்லாமல் பாட முடியாது என்பதை வெட்கத்துடன் கூறிக் கொள்கிறேன். விரைவில் தவறு இல்லாமல் அந்த பாடலை பாடுவேன்.

நா.கண்ணன் 8/20/2006 11:02:00 PM

சிவா!

என்ன குழப்புறீங்க? தேசிய கீதத்திற்கும், பாடலுக்கும் என்ன வித்தியாசம்?

வெட்கமெல்லாம் பட வேண்டாங்க. இந்திய தேசிய கீதத்தின் பல பலுப்பல்கள் தமிழில் கிடையாது. எனவே தமிழர்களுக்கு இதைப் பாடுவது சிரமம். முயற்சி செய்தால் பாடலாம். அதிலே நம்ம டி.கே.பட்டம்மா, நித்யஸ்ரீ எல்லாம் இருக்காங்க. எனவே நம்மாலும் முடியும்.

ஆனால் பள்ளியில் ஒருநாளும் நான் உருப்படியாய் பாடியதில்லை. வாத்தியாருக்கும் வராது. அதனால அடி கிடைக்காது :-)

நாகை சிவா 8/20/2006 11:25:00 PM

நான் குழப்பவில்லை. சரியாக தான் சொல்லி உள்ளேன். தேசிய பாடல் "வந்தே மாதரம்" சட்டர்ஜி எழுதியது.

//தமிழர்களுக்கு இதைப் பாடுவது சிரமம். முயற்சி செய்தால் பாடலாம். அதிலே நம்ம டி.கே.பட்டம்மா, நித்யஸ்ரீ எல்லாம் இருக்காங்க. எனவே நம்மாலும் முடியும்.//
சிரமம் எல்லாம் எதும் கிடையாது. சரளமாக பாட வரும். நீங்கள் சொல்லும் இந்த "ஜன கன மன" ஏ. ஆர். ஆர்., இசையமைத்தது. இதையும் பல முறை பார்த்து உள்ளேன். அதிலும் இந்த பாடலில் பட்டமாள், எஸ்.பி.பி, லதா அவர்களின் குரல் இன்னும் அந்த பாடலுக்கு மெருகேற்றும்.

நா.கண்ணன் 8/20/2006 11:32:00 PM

ஓகே! இப்ப புரியுது நீங்க என்ன சொல்ல வரேங்கன்னு. 'வந்தே மாதரம்' பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அற்புதம். சத்தமில்லாமல் உயர நிற்கும் நல்ல கலைஞன்.

"சரளமாக பாட வரும்"

ஆமாங்க. நாங்க எல்லோருமே அப்படித்தாங்க நினைச்சோம். ஆனா வடநாட்டுக்காரங்க திருத்தரபோதுதான் பிழை தெரியும். (உங்களைச் சொல்லலீங்க, கோவிச்சுக்காதீங்க :-)

நாகை சிவா 8/20/2006 11:49:00 PM

//நாங்க எல்லோருமே அப்படித்தாங்க நினைச்சோம். ஆனா வடநாட்டுக்காரங்க திருத்தரபோதுதான் பிழை தெரியும். (உங்களைச் சொல்லலீங்க, கோவிச்சுக்காதீங்க :-) //
கோவிச்சுக்க எல்லாம் இல்லங்க. இதில் கோவித்து கொள்ள என்ன இருக்கு. என்னை எந்த வட நாட்டவனும் இது வரை திருத்தியது இல்லை. அதை வைத்து தான் சொன்னேன். :)

துளசி கோபால் 8/21/2006 05:49:00 AM

இங்கே நான் ஒருத்தி கை தூக்கிக்கிட்டு இருக்கறது தெரியுதா?

என்ன , அர்த்தம் சரியாத் தெரியாது.
ஆனா பிழை இல்லாமப் பாடுவேன்.

பள்ளிக்கூடத்து 'லீட் சிங்கர்' நாந்தான்.

நா.கண்ணன் 8/21/2006 08:53:00 AM

துளசி:

நீங்க இந்த மாதிரிதான்னு தெரியும் :-) லீடர் கையை முதல்லே பார்த்திட்டேன். எல்லா புத்தகத்திலும் முதல் பக்கத்திலே அர்த்தம் போட்டிருப்பாங்க. ஆனா, யாரும் படிக்க மாட்டாங்க :-) ஆங்கிலப் பக்கமொன்று விளக்கம் சொல்கிறது!

தாகூர் எழுதியது. வங்காளம் இனிமையான மொழி. நம்ம ஆள்களுக்கு கொஞ்சம் உதைக்கும். தேசிய கீதத்தை ஒவ்வொரு மாநிலத்துக்காரரையும் இயல்பாகப் பாட விட்டு யாராவது ரெகார்டு செய்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். இந்த வீடியோவிலே, ரகுமானின் உச்சரிப்பும், அதற்கடுத்து வருபவரின் உச்சரிப்பும் வேறு படுவதைக் காணாலம் (ஜெயஹே, ஜெயஹே). அந்த ராஜஸ்தான் முண்டாசிவின் உச்சரிப்பைக் கவனியுங்கள்!

குமரன் (Kumaran) 8/21/2006 09:36:00 AM

http://koodal1.blogspot.com/2006/01/130.html

கண்ணன் ஐயா. இந்த ஆண்டு குடியரசு நாளன்று நம் நாட்டுப் பண்ணின் பொருளை கொஞ்சம் விரித்து இந்தப் பதிவில் கொடுத்திருந்தேன். பொருள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.

துளசி அக்கா. நீங்கள் அந்தப் பதிவைப் படித்தீர்கள் என்று தான் எண்ணுகிறேன். இன்னும் பொருள் சரியாகப் பிடிபடவில்லை என்றால் இன்னொரு முறை பாருங்கள். :-)

குமரன் (Kumaran) 8/21/2006 09:38:00 AM

கண்ணன் ஐயா. நீங்கள் சொல்வது சரி தான். ஒவ்வொரு சொல்லிலும் பலுக்கல் வேறுபாடு இருக்கிறது. அது மட்டும் இன்றி சில சொற்களை மாற்றிப் பாடுவது போலும் இருக்கிறது.

எஸ்.பி.பி. பங்கா என்கிறாரா வங்கா என்கிறாரா என்று தெரியவில்லை. தேவநாகரி 'ப'வும் 'வ'வும் ஏறக்குறைய ஒரே மாதிரி வேறு தெரிகிறது.

குறிப்பாக அந்த இராஜஸ்தானியர் மாங்கே என்கிறார். நாம் மாஹே என்று சொல்லித் தானே வழக்கம்?

நா.கண்ணன் 8/21/2006 09:47:00 AM

குமரன்:

சரியாகப் பிடித்துவிட்டீர்கள்! இப்பாடலை வங்காளியர் பாடிக் கேட்டிருக்கிறீர்களா? வித்தியாசமாக இருக்கும் (கொஞ்சி, கொஞ்சிப் பாடுவது போலிருக்கும் - ரவீ(பீ)ந்திர சங்கீத் இல்லையா!)

பாரதியின் பாடல்களில் இதைவிட பொருட் செறிவு உண்டு. உதாரணமாக பாரதியின் பாடலைத் தேசிய கீதமாக்கியிருந்தால் அது இந்தியாவெங்கும் எப்படிப் பாடப்படும் என்று யூகித்துக் கொள்ளுங்கள் (ஒரு உதித் நாராயண் போதாதா, உதாரணத்திற்கு :-)

உங்கள் இணைப்பு விடுபட்டுப் போயுள்ளது!

http://koodal1.blogspot.com/2006/01/130.html

நா.கண்ணன் 8/21/2006 09:58:00 AM

குமரன்:

உங்கள் பதிவை வாசித்தேன். மிக அருமையான விளக்கம். இதை அப்படியே பாடப் புத்தகங்களில் போடலாம், ஒரு சிறு மாற்றத்துடன் 'திராவிட பீடபூமி' என்று வருகிறது. காவிரி பாயும் தேசம், "செந்நெல் கவரி வீச!" என்று நம்மாழ்வாரும், பிற இன்கவிகளும் பாடிய பிரதேசம். அது எப்படி பீட (பீடை பிடித்த) பூமியாகும்? இராமநாதபுரம் வேண்டுமானால் சில இடங்களில் அப்படி இருக்கலாம். பொதுவாக தமிழ்நாடு வறண்ட பிரதேசம் அல்ல.

வாழ்க.

குமரன் (Kumaran) 8/24/2006 02:12:00 AM

தங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி கண்ணன் ஐயா.

Plateau என்பதை பீடபூமி என்று சிறுவயதில் படித்ததாக நினைவு. தக்காண பீடபூமி என்பதைத் தான் திராவிட பீடபூமி என்று குறித்தேன். அது வறண்ட பூமி என்ற பொருள் தருமா? தெரியவில்லையே?

நா.கண்ணன் 8/24/2006 11:35:00 AM

குமரன்:
உங்கள் கூற்று சரியென்றே படுகிறது. 'பீடம்' எனும் வடசொல்லிலிருந்து பீடபூமி வருகிறது. ஆயினும், பீடபூமிகள் இந்திய உபகண்டத்தில் வறண்டே இருக்கின்றன. தக்காண பீடபூமி, திபெத்திய பீடபூமிகள் உதாரணங்கள். பீடத்தில் இருப்பதால் நதிகள் பாய வாய்ப்பில்லை. எனவே வளம் குன்றி இருக்கும். விதி விலக்குகள் உண்டு. எப்படியும் தமிழ்நாடு பீடபூமியல்லவே!

குமரன் (Kumaran) 8/25/2006 12:26:00 AM

உண்மை தான் கண்ணன் ஐயா. தமிழ்நாடு பீடபூமி இல்லை தான். ஆனால் இரவீந்திரநாத் தாகூர் த்ராவிட என்று தமிழகத்தை மட்டும் குறித்ததாகத் தோன்றவில்லை. தக்காண பீடபூமி முழுவதையும் த்ராவிட என்ற சொல்லால் குறிக்கிறார் என்று எண்ணுகிறேன். அதனால் தான் அப்படி பொருள் சொன்னேன்.

நாகை சிவா 8/25/2006 02:50:00 AM

திரு கண்ணன்!

நான் வெட்கப்படுகின்றேன் என்று உங்க பதிவில் சொன்ன மேட்டருக்கு இன்னிக்கு தான் விடிவு காலம் பிறந்துச்சு. அதற்கு வழி கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நா.கண்ணன் 8/25/2006 08:10:00 AM

"ஆனால் இரவீந்திரநாத் தாகூர் த்ராவிட என்று தமிழகத்தை மட்டும் குறித்ததாகத் தோன்றவில்லை"

குமரன், அப்படியெனில் உங்கள் விளக்கம் 100% சரியானதே! இந்தப் பின்னூட்டங்கள் இவ்விடுகையின் நோக்கை தெளிவாக விளக்குகின்றன. பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியா போன்ற பரந்த கண்டத்தில் இம்மாதிரி குழப்பம் இயல்பானதே! இதே பரப்பளவுள்ள ஐரோப்பாவில் நமக்குள்ள ஒற்றுமை உணர்வும், புரிதலும் கிடையாது. ஒரு நார்வீஜியன் மொழிப் பாடலை ஐரோப்பிய தேசிய கீதம் என்று சொன்னால் ஒரு இத்தாலியன் ஒத்துக்கொள்ள மாட்டான். என்னதான் திட்டினாலும் சமிஸ்கிருதம் இந்தியாவை இணைக்க முயன்றிருப்பது, நம் தேசியக் கீதப் பொருள் புரிதலில் இது தெரிகிறது. வேடிக்கை என்னவெனில் 'தமிழ்' என்று சமிஸ்கிருதத்தில் பலுப்ப முடியாது. 'த்ரவிட்' என்றுதான் பலுப்ப முடியும். In a strict sense, த்ரவிட் என்றால் தமிழ்நாடு என்றே பொருள் கொள்ள வேண்டும் அப்பாடலில்!!

குமரன் (Kumaran) 8/25/2006 08:41:00 PM

உண்மை தான் கண்ணன் ஐயா. தமிழ் என்பது தமிழம் > த்ரமிளம் > த்ரவிடம் > த்ராவிடம் என்று வடமொழிகளில் பலுக்கப் பட்டதாகத் தான் நானும் படித்திருக்கிறேன். அந்த வகையில் த்ராவிட என்றால் தமிழை மட்டுமே குறிக்க வேண்டும். ஆனால் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட என்பது தமிழையும் தமிழைச் சார்ந்த தென்னிந்திய மொழிகளையும் குறிக்கும் ஒரு சொல்லாகப் பரிணாமம் பெற்றதே; அதனால் தாகூரும் அதே பொருளைக் கொண்டிருப்பார் என்று எண்ணுகிறேன். இல்லையேல் மற்ற பெருஞ்சமூகங்களை எல்லாம் பெயர் சொல்லிக் குறிப்பிட்டவர் தென்னிந்தியாவில் மற்ற எதையும் குறிப்பிடாமல் த்ராவிட என்ற சொல்லை மட்டும் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். திராவிட என்ற சொல் தென்னகத்தை முழுவதும் குறிப்பிடுவதால் அதுவே போதும் என்று எண்ணியிருக்கலாம்.

நா.கண்ணன் 8/25/2006 08:47:00 PM

குமரன்:

இதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாதே :-) உங்களுக்குத்தான் 100க்கு 100 கொடுத்தாச்சே!

வேடிக்கை என்னவெனில் ஆரியத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் ஆரம்பித்த கழகமே 'திராவிட' என்ற சமிஸ்கிருத 'தமிழ்' பலுப்பலை வைத்துக் கொண்டதுதான் சரித்திர முரண்நகை :-)

தாகூர் நீங்கள் கூறும் பொருளில்தான் சொல்கிறார்.

maalan 8/25/2006 09:29:00 PM

பீடம் என்ற சொல்லுக்கு உயர்ந்த இடம், மேடை என்று பொருள் உண்டு. (உதாரணம்:ஞானபீடம்)பீட பூமி என்ற சொல் அதனடிப்படையில் அமைந்தது

திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்கும் பல சொற்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்த சின்னியம்மாள் என்பவர் ஒரு வைணவ நூலுக்கு பொன்னாங்கால் என்ற ஜீயரிடம் விளக்கமளித்த போது வியந்து போன ஜீயர் 'நீர் எந்த வேதம்?' என்று கேட்க அவர் நான் திராவிட வேதம் என்று சொன்னாதாக ஒரு குறிப்பு உண்டு.அந்த நூலுக்கு சின்னியம்மாள் வார்த்தை ரகசியம் என்று பெயர்.
வங்க மொழியில் 'வ'என்ற உச்சரிப்பு இல்லை,'வ' இடங்களில் எல்லாம் 'ப'தான் உபயோகிக்கப்படுகிறது. அதாவது பெங்காலில் வைத்தியநாதன்கள் கிடையாது. பைத்தியநாதன்கள்தான்.

ஜனகணமன பற்றி விரிவாக வரும் திசைகளில் எழுதியிருக்கிறேன்.
அன்புடன்,
மாலன்

நா.கண்ணன் 8/25/2006 10:52:00 PM

அன்பின் மாலன்:

நன்றி. சீன்னியம்மாள் வார்த்தை ரகசியம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். பதிப்பிக்கமுடிந்தால் மின்பதிப்பாக்குவோம். நான் ஆழ்வார் திருநகரி போயிருந்தபோது ஒரு பெரியவரிடம் ஒரு கிரந்தம் காட்டி விளக்கம் கேட்க அவர் எனக்கு 'திராவிட லிபி'யில் உள்ள சமிஸ்கிருதம்தான் புரியுமென்றார். கிரந்தம் என்பதை திராவிட லிபி என்றார், அது தமிழ் வட்ட எழுத்தில் அமைவதால். (x தேவநாகரி)

இனிமேல் வைத்தியநாதன் என்று பெயர் வைத்துக் கொண்டு வங்காளம் போகக்கூடாது என்று தெரிகிறது!

திசைகள் கட்டுரை உரல் தாருங்கள்.

மோகன் 12/26/2007 05:15:00 PM

இந்தியாவில் தேசியம் ஒரு கற்பனை. அல்லது பாசாங்கு. தேசிய கீதத்தை விட தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதுதான் உணர்ச்சி மேலிடுகிறது.

Mohan Kandasamy 12/26/2007 05:17:00 PM

இந்தியாவில் தேசியம் ஒரு கற்பனை. அல்லது பாசாங்கு. தேசிய கீதத்தை விட தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதுதான் உணர்ச்சி மேலிடுகிறது.