குரங்கு சேட்டைசுட்டியான பையன்களை 'சரியான குரங்கு சேட்டை' என்று சொல்வதுண்டு. சேட்டை பண்ணும் குரங்களை அதிகமாக பார்க்கும் அள்விற்கு வனாந்திரங்கள் குறைந்துவிட்டன. இந்தியா சுதந்திரமடைந்தபோது 40% காடுகள் 60களில் 18% குறைந்துவிட்டன. போகும் ஜனத்தொகை வேகத்தில் இந்தியாவில் வனவிலங்குகளுக்கு இருப்பிடம் இல்லாமல் போகலாம்.

இப்படத்தில் இரண்டு சிறு புலிகள் விளையாடுகின்றன. 1. குரங்கிற்கும் விளையாட ஆசை. ஆனால் வேறு இனம். அடித்துச் சாப்பிட்டுவிடும் (அது எப்படித் தெரிகிறது ஜீவராசிகளுக்கு?). எனவே அது மரத்தில் இருந்து கொண்டும், புலிகள் நிலத்தில் இருந்து கொண்டும் விளையாடுகின்றன. இது ஒரு விளக்கம். 2. குரங்கிற்கு புலிகள் தன் வனாந்திரப்பரப்பில் இருப்பது பிடிக்கவில்லை. குட்டி பெற்ற தாயோ அல்லது சிறு குரங்குகளோ இருக்கலாம். எனவே பாதுகாப்பாக இருக்கட்டுமென்று அங்கு வந்த புலிகளைத் தொந்திரவு செய்து விரட்டி விடுகிறது.

எப்படியாயினும் அக்குரங்கின் துள்ளல், தாவும் திறன் வியப்பளிக்கிறது. என்ன வேகம், என்ன திறமை! இதைப் பார்க்கும் போது ராமயணத்தில் வரும் குரங்குக் கதைகளெல்லாம் உண்மையென்றே தோன்றுகின்றன. சிந்திக்கும் திறன் இல்லாமல் இப்படிச் செயல்படமுடியாது. விஞ்ஞானிகள் 'மொட்டையாக' ஒரு விளக்கம் தருவார்கள், காவியத்தில் உயிருள்ள விளக்கம் தருகிறார்கள், அவ்வளவே! காட்டிற்குள் சென்று பார்க்கும் போதுதான், அறிவு, ஞானம் என்பது எப்படி எல்லா ஜீவராசிகளிடத்தும் மண்டிக் கிடக்கிறது என்பது புரிகிறது. சேதனம், அசேதமெனப் பிரித்து, அவை இரண்டிலும் உள்ளிருந்து செயல்படுவது இறைவன் என்று காண்பது எவ்வளவு ஆரோக்கியமான நோக்கு!

5 பின்னூட்டங்கள்:

குறும்பன் 8/20/2006 10:01:00 AM

அற்புதமான விளையாட்டு, மிகவும் இரசித்தேன் :-))

வசந்தன்(Vasanthan) 8/20/2006 10:40:00 AM

ஒருவருடத்தின் முன்பே தமிழ் வலைப்பதிவில் வந்துவிட்ட படமிது.
இதற்கிடையில் வேறும் இருவர் பதிவிட்டிருந்தார்கள்.
என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
அதைவிட இன்றிருக்கும் புதிய வாசகர்கள், பதிவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நன்று.

நன்றி.

துளசி கோபால் 8/20/2006 10:46:00 AM

பாவம், அந்தப் புலிக்குட்டிகள். இது என்னமா ஆட்டம் போடுது!!!!!

சரியான குரங்குச் சேட்டைதான். நல்லா ரசிச்சேன்.
நன்றி கண்ணன்.

ENNAR 8/20/2006 12:09:00 PM

கண்ணன் சார்
நன்று

உங்கள் நண்பன் 8/20/2006 01:20:00 PM

கண்ணன் சார்! நானும் மிகவும் ரசித்துப் பார்த்தேன்!
சரியான குரங்குச் சேட்டைதான்,


அன்புடன்...
சரவணன்.