மணிலாவாவ்!
அடடா! எங்கேயோ பார்த்தமாதிரி இல்லை?

ஏன் நமது புறநகர் போக்குவரத்தை இப்படி சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை? சுத்தம் என்பதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லையோ?

மெரினாவும் இன்னும் 50 வருடங்களில் இப்படி ஆகிவிடும் (Bay Walk in Manila)

ரிக்ஷா? நோ! Pedicab!

இங்கு சுத்தமாக, நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவுப் பொருளை வாங்கி, சமைத்துக் கொடு என்றால், சமைத்துத்தரும் உணவகங்கள் உள்ளன. நம்ம மெஸ்ஸில் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன? இன்னக்கி சமையலில் ஊத்த காத்திரிக்காய், அழுகின பூசணி! போன்ற கம்ளெய்ண்ட் வராது பாருங்க!!

இந்தச் சமையலகங்களுக்கு யார் ஏஜெண்டு என்று பாருங்கள். பொதுவாகவே கிழக்கு ஆசியாவில் 'அலிகள்' சமூகத்தின் ஒரு அங்கமாக வெட்கமில்லாமல் உலவுகிறார்கள். இந்தியா இன்னும் ரொம்ம்ம்ப மாற வேண்டி இருக்கு!


கொஞ்சம் கோவாப்பழம், கொஞ்சம் அன்னாச்சி, கொஞ்சம் வாழை. எல்லாம் கலந்தால் இந்த சீதப்பழம் போன்ற கோயபானோ! நம்ம ஊர் சீதாப்பழம் இங்கே ஆட்டிஸ்!


சந்தால் எனப்படும் இப்பழம் நிறைய நார் சத்து கொண்ட பழம். கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் இனிப்பு!மணிலா பற்றிய என் பேச்சு விரைவில் சிஃபியில் வரும். இங்கும் இடுகிறேன்.4 பின்னூட்டங்கள்:

Wolfgang Schmidt 9/07/2006 04:16:00 AM

//ஏன் நமது புறநகர் போக்குவரத்தை இப்படி சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை? சுத்தம் என்பதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லையோ?//

ஜனத் தொகை, ஜனத் தொகை என்பார்களே, அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெளிநாட்டைப் பார்த்து இப்படி மொட்டையாக ஒப்பிட்டு பூரிப்படைவதற்கு முன் அந்தந்த நாட்டின் சூழலைப் பற்றியும் சற்று பொறுப்புடன் சிந்திக்க வேண்டும்.

நா.கண்ணன் 9/07/2006 08:22:00 AM

மன்னிக்க வேண்டும்! ஜெர்மானியர் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜெர்மனியின் ஜனநெரிசல், அதாவது அடர்த்தி (people per square kilometer), இந்தியாவை விட அதிகம். அங்கு தெரு எப்படி உள்ளது என்று நீங்களே சொல்லுங்கள். ஜப்பானின் அடர்த்தி அதைவிட அதிகம். அங்கு போய் பாருங்கள். மணிலா ஒரு மூன்றாம் உலக நாடு. ஏறக்குறைய 20 மில்லியன் மக்கள் வாழும் நகரம். ஏழ்மை உள்ள நகரம். அங்குள்ள சேரிகள் நம் சாதாரணத் தெருவை விட சுத்தமாக உள்ளன. சுத்தம் என்பது மனதைப் பொருத்த விஷயம். எவ்வளவு கூட்ட நெரிசலிலும் சுத்தமாக வைத்திருக்க முடியும். குறை சொல்வதற்காகச் சொன்னது அல்ல. எங்கு பிழை என்று சிந்திக்கச் சொன்னது!

ebalasubramanian@sify.com 12/06/2006 05:25:00 AM

We all are responsible for the dirtiness in India. Even when some one spit in front us in the public place most of us do not mind it. We are longing for the greenery in foreign and abuse India. But we do not want to go to the vote booth to elect the right candidate for the nation. We want only to talk and criticize others.

e.balasubramanian.

நா.கண்ணன் 12/06/2006 06:32:00 AM

I went in length discussing about this rather abnormal behaviour of Indians in Singapore recently. Little India in Singapore is as clean like rest of Singapore and not like 'Kothaval Savadi' in Chennai. Why?

We don't throw litter in Californian beach but do readly in Merina Beach. Why?

We were able to maintain a clean country during Emergency in India. How?

Is it not time to introspect? (I presume Abdul Kalam has asked the same questions in one of his speeches)