படம் பார்த்து கதை சொல் - 2பறவைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் :-)

பெரும்பாலான பறவைகள் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனுக்கு 10 அடி தள்ளியே இருக்கும். இங்கு நான் காணும் கடற்கொக்கு நான் வருகிறேன் என்றால் 100 அடிக்கு முன்னாலேயே கூக்குரலுடன் பறந்துவிடும். இரவில் போகும் போது அது பாட்டிற்கு திடு திடுமென்று அடிக்குரலில் கூக்குரலிட்டு பறக்கும் போது பதற அடித்துவிடும் :-)

ஆனால், சில பறவைகள் மனிதருடன் கூடிக்குலாவுவதுண்டு. இந்த மைனா, ஒரு சீன மைனா. இந்த சீனாக்காரர் சிகரெட் குடிப்பதைப் பார்த்துவிட்டு, மடியில் அழகாக உட்கார்ந்து கொண்டு (அதன் நகத்தைப் பாருங்கள்!!) சிகரெட்டைப் பிடுங்கி தன் வாயில் வைத்துக் கொள்கிறது. போன ஜென்மத்தில் அவரின் மனைவியோ, பெண்ணே? யார் கண்டது? இப்படி அக்கறையாக சிகரெட் புகைக்க விடாமல் பிடுங்குகிறது!

4 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 9/25/2006 12:56:00 PM

//அவரின் மனைவியோ, பெண்ணே? யார் கண்டது? இப்படி அக்கறையாக சிகரெட் புகைக்க விடாமல் பிடுங்குகிறது!//

இதுதான் 'ஊழ்வினை உருத்தும்'ங்கறதா? :-))))0

நா.கண்ணன் 9/25/2006 01:18:00 PM

ஹ, ஹா!

G Gowtham 9/25/2006 01:38:00 PM

//அவரின் மனைவியோ, பெண்ணே? யார் கண்டது?//
காதலியாகக் கூட இருக்கலாம்?!
அல்லது பற்ற வைத்ததைப் பிடுங்கி ஓசி தம் அடிக்கும் நண்பன்?!

நா.கண்ணன் 9/25/2006 01:41:00 PM

அப்ப, இது மனைவியான காதலி இல்லை என்கிறீர்கள்? :-)
இல்லை, காதலித்த பெண் இறந்துவிட நம்ம சீனக்காரர் தேவதாஸ் மாதிரி? :-)
ஓசி, தம் அடிக்கும் நண்பன்! நல்ல கற்பனை :-)