கொடுக்கு மீன்!

உலகம் விசித்திரமானது. உலகில் எத்தனைவகை உயிர்கள் உள்ளன என்று யாருக்கும் தெரியாது. புதிது புதிதாக ஜீவராசிகளை இனம் கண்ட வண்ணம் உள்ளது அறிவியல். சுரா மீன் வகைகளில் கொடுக்கு மீன் ஒருவகை. பார்க்க மிக அழகாக உள்ள மீனினம். ரோஜா செடிகூட ஒரு முள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு இனத்திற்கும் தற்காத்துக் கொள்ள ஒரு ஆயுதம் உள்ளது. சாதாரணமாக மனிதருடன் இயைந்து பழகும் இம்மீனினம், ஆஸ்திரேலிய வனவியலர் ஸ்டீவ் இர்வின் அவர்களின் உயிரைக் குடித்துவிட்டது. பாம்பு, பல்லி, முதலை என்று தரை விலங்குகளின் கொடுக்கிலிருந்து தப்பிய இவர் ஒரு படப்பிடிப்பில் கொடுக்கு மீனின் ஒரு சொடுக்கில் உயிரை இழந்திருக்கிறார். இச்சேதியை MSN மெசன்ஸர் வைத்திருப்பவர்கள் வாசித்திருக்கக் கூடும். இச்சேதி வாசித்த பின் இக்கொடுக்கு மீன் பற்றிய வீடியோ தேடினேன்.இணைத்துள்ள வீடியோவைப் பார்த்தால் அது கொல்லும் மீன் என்றா தெரிகிறது? அதன் கொடுக்கு எப்படி இருக்கும் என்று வேறு காட்டுகிறார்கள். யாருக்கு சாவு எப்படி வருமென்று யாருக்குத் தெரியும்?

வன விலங்கு பாதுகாப்பை முன்னிருத்திய ஸ்டீவ் அவர்களின் நினைவாக இம்மீன் பற்றி அறிந்து கொள்வோம்.

5 பின்னூட்டங்கள்:

கார்த்திக் பிரபு 9/09/2006 04:44:00 PM

good post..see my page i have posted one post abt irvin..and can u send me this video to my id gkpstar@yahoo.com..advance thanks

நா.கண்ணன் 9/09/2006 04:55:00 PM

கார்த்திக்:
உங்கள் வலைப்பதிவின் முகவரி என்ன? எங்கு வெளியிட்டு உள்ளீர்கள் இர்வின் பற்றி?

Kanags 9/09/2006 05:23:00 PM

Stingray என்ற மீனுக்கு தமிழ்ப் பெயர் தேடிக்கொண்டிருந்தேன் நல்ல பெயர் தந்தீர்கள். இது திருக்கை வகையைச் சேர்ந்ததா? இந்த மீன் தாக்கி இறந்தவர்களில் (அவுஸ்திரேலியாவில்) இவர் மூன்றாமவர். இது தற்காப்புக்காகவே தாக்குமாம் என்று சொல்கிறார்கள்.

கார்த்திக் பிரபுவின் பதிவு:
bharathi-kannamma.blogspot.com

நா.கண்ணன் 9/09/2006 06:09:00 PM

உண்மைதான். இது திருக்கைச் சுரா. ஸ்டீவ் வழக்கம் போல் வனவிலங்குகள் (wildlife) பற்றிப்படமெடுத்துக் கொண்டிருந்தபோது பயந்து போன ஒரு மீன் அவர் நெஞ்சில் தைத்து விட்டது. கொடிய விஷம் அது. பிராணவலி கொடுத்துக் கொல்லும் விஷம். இதற்கும், ஸ்டீவ் தைத்த முள்ளைப் பிடுங்கி எடுத்திருக்கிறார்! அதற்குள் விஷம் தலைக்கேறிவிட அங்கேயே மரணித்து இருக்கிறார். பொதுவாக கடல்வாழ் பிராணிகளின் விஷம் மிகக் கடுமையானது. கடற்பாம்பு தீண்டினால் உடனே மரணம். தரையாக இருந்திருந்தால் தப்பியிருப்பார். தன் சாவு கடலில்தான் என்று முன்பு அவர் சொல்லியிருக்கிறார். ஏனெனில் நீர் பரப்பில் மனிதனின் சாகசம் செல்லுபடியாகாது. அது நம் பரப்பல்ல.

கார்த்திக் பிரபு 9/09/2006 06:18:00 PM

hi sir en perai click seyungo ashu ungalai en pakkthirku alaithu sellum