நடுத்தெரு நாராயணர்கள்!

ரொம்ப நாளா எனக்கு விடை கிடைக்காத கேள்வி ஒண்ணு. யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

எதுக்கு தமிழ் படக் காதலர்கள் நடு ரோட்டிலே ஆடறாங்க?

இதுலே யாருக்கு கிக்? கேமிரா மேனுக்கா? இயக்குநருக்கா? இல்லை பதறிப் போய் உட்கார்ந்திருப்பாங்கன்னு நினைக்கிற ரசிகர்களுக்கா?

சுவிஸ் நாட்டில் ஒருமுறை இப்படி வளைவான ரோட்டில் திரும்பும் போது நட்ட நடு ரோட்டில் ஹிந்திக் காதலர்கள். நல்ல வேளை ஏற்றியிருப்பேன். உயிர் தப்பியது ஹிந்தி தேவி புண்ணியம் (இப்போ ஹிந்தி எதிர்ப்புக் காலம் கூட கிடையாது, பெருமையாக சொல்லிக் கொள்ள :-) நம்ம ஹீரோயின் ஐஸ்வர்யராயைக் கூட விடவில்லை (ஜீன்ஸ்). உலகப் புகழ் பெற்ற அந்தக் கலைஞரைக் கூட நம்ம ஆளுக வெள்ளைக்காரன் வேடிக்கை பார்க்க நட்ட நடு ரோட்டில் ஆட வைத்துப் பார்க்கிறார்கள், ஏன்?

இந்தக் கேள்விக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் பதில் சொல்லவில்லையெனில் தலை சுக்கு நூறாகிவிடும் (யாருக்கு?) :-))

5 பின்னூட்டங்கள்:

மஞ்சூர் ராசா 9/10/2006 09:06:00 PM

ரசிகர்களுக்கு நாங்கள் வெளிநாட்டில் போய் படம் எடுத்தோம் என்று சொல்வதற்கும். இலவசமாக வெளிநாடு போய் தயாரிப்பளர் பணத்தில் ஜாலி பண்ணுவதற்கும், தயாரிப்பாளரை ஒட்டாண்டி ஆக்குவதற்கும் போன்ற காரணங்களுடன். சில தயாரிப்பாளர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கும்
இப்படி வெளிநாட்டில் போய் ரோட்டில் படம் எடுக்கிறார்கள். அங்கிருப்பவர்கள் இதைப் பார்த்து சிரிப்பதை நினைத்தால் இன்னும் வேடிக்கை.
இதில் மிக மிக கொடுமை என்னவென்றால் இது போல ரோட்டில் ஆடும் பாட்டு வரும் போது பலர் வெளியில் எழுந்து போவது தான்.

பின்குறிப்பு: ஐந்து நிமிடத்திற்குள் சரியான பதில் கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.

நா.கண்ணன் 9/10/2006 09:32:00 PM

நன்றி ராஜா,

ஆனாலும் இது என்ன ரசனை என்பதுதான் கேள்வி!

நடு ரோட்டில் கார் போகும் போது, சிக்கனுக்கு கார்கள் காத்திருக்கும் போது இப்படியொரு இடைஞ்சலான சூழலில் அற்புதமான பாடலை, எப்படி இப்படிப் படமாக்குகிறார்கள்?

துளசி கோபால் 9/11/2006 10:41:00 AM

இங்கே எங்கூருக்கு இந்த 'புகழ்' நிறைய இருக்கு.
'நடு ரோடு' பிரச்சனையே இல்லை. ஆள் இருந்தாத்தானே?

ஷாப்பிங் மால் முன்னாலே நின்னு ஆடணுமுன்னு ஒரு 'விதி' இருக்கு:-))))

ஒவ்வொரு வரியாத்தான் படம் எடுக்கறாங்க. நாலுபேர் நின்னுக்கிட்டு கையிலே
கேமெரா, பை, ரிஃப்ளெக்ட்டர் வச்சுக்கிட்டு இருந்தா, 'ஓஹோ.... அங்கே ஷூட்டிங்':-)))

நா.கண்ணன் 9/11/2006 10:50:00 AM

உங்க ஊருதான் பூலோக சொர்க்கமாச்சே! வரமாட்டாங்களா என்ன? :-)

ஆனா, ஒண்ணு! இவங்களால இப்போ ஸ்விஸ் ஹோட்டல்களிலே இந்தியக் கொடி கம்பீரமாப் பறக்குது! நல்ல வியாபாரம் தராங்கன்னு...

ambaran 9/21/2006 12:56:00 AM

அது என்ன சார் எதுக்கு எடுத்தாலும் சுக்கு நூறுன்னு சொல்றீங்க அட கொஞசம் கூடத்தான் சொல்லக்கூடாதா
இனியாவது சுக்கு ஆயிரம் சுக்கு லக்சம்னு
சொல்றாங்களோ அன்னிக்குதான் உங்களுக்கும் விடை கிடைக்கும்