லலிதா, பத்மினி, ராகினி


பத்மினி


சென்னை வந்திருந்த பத்மினி 74 வயதில் காலமாகியிருக்கிறார்.

விவரம் தெரியாத வயதில் டூரிங்க் டாக்கீஸீல் பார்த்தது முதலில். ஏனோ எனக்கு பத்மினியை விட லலிதாவைத்தான் பிடிக்கும். ராகினியைப் பிடிக்காது. பத்மினி அழகு திகட்டும் அழகு! ரவிவர்மா ஓவியம் போல, கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம் போல, தாஜ்மகால் போல், குறை சொல்ல முடியாத அழகு. அந்தக் காலத்தில் நடித்த நடிகைகள் போல தெளிவாகத் தமிழ் பேசக் கூடியவர். சிவாஜிக்கு சவால் கொடுத்து நடிக்கக் கூடிய அழகி. இப்போதுள்ள நடிகைகளெல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். ஒரு திறமையும் இல்லாமல், வெள்ளைத் தோலும், குறைந்த இடையும், பரந்த மார்பகமும், தடித்த தொடையும் இருந்துவிட்டால் நடிகை என்று வந்து விடுகிறார்கள். மேலை நாட்டில் போர்னோ நடிகைகள் கூட இவர்களை விட அழகாக இருக்கிறார்கள். ஏதோ தமிழக போறாத காலம், தமிழ் பேசி, நடிக்கத் தெரிந்தும், பெரிய பாத்திரங்களை சவாலாக எடுத்துக் கொண்டும் நடிக்கக் கூடிய நடிகைகளெல்லாம் மறைந்து கொண்டு வருகிறார்கள். பத்மினியை பவித்திரமான பாத்திரங்களில் மட்டுமே பார்த்திருந்த இளவயது நான், மேரா நாம் ஜோக்கரில் கிழிந்த ஜாக்கெட்டில் அவர் மார்பகம் பார்த்தபின், ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது. இது அவர் குறை அல்ல. மீடியா என் மீது ஏற்படுத்தியிருந்த தாக்கம். வடக்கு அப்போது தெற்கைப் பயன்படுத்திய காலம். இப்போ தெற்கு அதற்கு பழி வாங்கிக்கொண்டிருக்கிறது! ஆனால், ஒரு வித்தியாசம் பத்மினி, ஹேமமாலினி, வைஜெயந்திமாலா போன்றோர் ஹிந்தியும் அழகாகப் பேசக்கூடியவர்கள். சிம்ரன் மாதிரி, எனக்கு டமில் தெரியாது! என்று சொல்லிக் கொண்டு குப்பை கொட்டியவர்கள் அல்ல!

பத்மினியுடன் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. சிவாஜிக்கு 'பப்பி' மீது ஒரு கண்தான். ஆனாலும் அவர் தேவர், இவர் மேனன். சரிப்பட்டு வராது (இது பத்மினி சொன்னது).

இரண்டு வாரம் முன்தான், தில்லானா மோகனாம்பாள் பார்த்தேன். என்ன அசத்தலான நடிப்பு. பதிமினியின் சௌந்தர்யம் பார்க்க பழைய படங்கள் பார்க்க வேண்டும் (எம்.ஜி.யார் பாவடை கட்டி நடிக்கும் படங்கள் :-).

பத்மினி என்றால் சம்பூர்ண ராமாயணம்தான் ஞாபகம் வருகிறது. சீதை என்றால் அவள் 'பத்மினி' மாதிரிதான் இருந்திருப்பாள். லக்ஷ்மி களை என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டு பத்மினி.

காலம் எல்லாவற்றையும் கொண்டு போய் விடுகிறது. திருவாங்கூர் சகோதரிகள் ஒருவரும் இல்லை. நினைவுகள் மட்டும்...

15 பின்னூட்டங்கள்:

icarus prakash 9/26/2006 01:30:00 PM

எனக்கும், சகோதரிகள் மூவரில், லலிதாவைத்தான் பிடிக்கும்.. துன்பம் நேர்கையில் பாட்டில் என்ன அழகாயிருப்பார்...

//தில்லானா மோகனாம்பாள் பார்த்தேன். என்ன அசத்தலான நடிப்பு. பதிமினியின் சௌந்தர்யம் பார்க்க பழைய படங்கள் பார்க்க வேண்டும்//

இந்தப் படத்தில் நடித்த போது அவருக்கு வயது 36. யாராச்சும் நம்ப முடியுமா? ஹ்ம்ம்ம்ம்

//திருவாங்கூர் சகோதரிகள் ஒருவரும் இல்லை. நினைவுகள் மட்டும்//

உண்மை

நா.கண்ணன் 9/26/2006 01:38:00 PM

உண்மை பிரகாஷ். லலிதாவிடம் ஒரு வித்தியாசமான வசீகரமுண்டு. ஆனால், இவர்கள் மூவரும் நடித்தால் பத்மினி தவிர மற்றவரை வில்லியாக்கிவிடுவர். கடுப்பாக இருக்கும்!

பத்மினியின் தமிழ் சுத்தமானது. மலையாளம் கலக்காதது. "கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி, மானே! படைத்தவனே, பறித்துக் கொண்டானே" பாட்டில் ஒரு கதறு, தறுவார் பாருங்கள்! அப்பா! உசிரைக் கொடுத்து நடிக்கும் காலமது! வியட்நாம் வீடு படத்தில், 'பாரதியின் பாடல் வரி கொண்ட பாடலில்' என்ன நடிப்பு..என்ன நடிப்பு..ஹும்....

துளசி கோபால் 9/26/2006 01:47:00 PM

நானும் நேத்து 'தில்லானா மோகனாம்பாள்'தான் பார்த்தேன்,
அவருக்கு ஒரு அஞ்சலியாக இருக்கட்டும் என்று.

நா.கண்ணன் 9/26/2006 01:53:00 PM

துளசி:

அதில் ஒரு காட்சி. மோகனா, ஷண்முகனைப் பார்த்து 'அறிவுகெட்டதனமா பேசாதீங்க!' அப்படீன்னு வரும். மிடுக்கான பெண் பாத்திரம், தன்னம்பிக்கையுள்ள பெண் பாத்திரம், சிவாஜிக்கு துளியும் குறைவில்லாத கர்வமுடைய பாத்திரம். சூப்பர்!!

[இதிலே பாலைய்யாவும், மனோரம்மாவும் சேரும் போது. அடேங்கப்பா! அந்தக் காலத்து நடிகர்களின் ஒரு பெட்டகம் அந்தப் படம்! நாகராஜனின் மகுடம் அது!]

icarus prakash 9/26/2006 01:58:00 PM

சில காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்..

ப்பா.... என்ன ஸ்டார்காஸ்ட் அந்தப் படத்திலே

சிவாஜி, பாலையா, ஏவிஎம் ராஜன், பாலாஜி, நாகேஷ், நம்பியார், தங்கவேலு, சாரங்கபாணி, டி.ஆர்.ராமசந்திரன், பத்மினி, மனோரமா...

அந்தமாதிரி மல்டிஸ்டாரர் எல்லாம் யோசிக்கக் கூட முடியாது இப்பல்லாம்....

நா.கண்ணன் 9/26/2006 02:03:00 PM

சிவாஜி, பத்மினிக்கு சளைக்காத பாத்திரம் மனோரம்மாவுடையது. அது நிச்சயம் அவரின் மிகச் சிறந்த படங்களிலொன்று. அந்தக் காலத்து தாரகைகள் அனைத்தையும் ஒரு கலையகத்தில் காண்பது போன்ற ஒரு அமைப்பு அந்தப் படம். ஒன்றுக்கொன்று போட்டி. ஒன்று கூட சோடையில்லை. சபாஷ்! ஏ.பி.என்!!

ramachandranusha 9/26/2006 02:17:00 PM

கண்ணன், பத்மினிக்கு ஒரு பதிவு போடுவீர்கள் என்று நான் எதிர்ப்பார்த்தேன் :-)
தி.மோ எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காது. பாலையாவின் நடிப்பும் அருமை.

கண்ணன்! நீங்கள் சொன்ன அந்த அறிவுகெட்டதனமாய் பேசாதீங்க வசனம் படத்தில்! கொத்தமங்கலம் சுப்பு, கதை முழுக்க நாயகன், நாயகியின் ஈகோ கிளாஷ் இன்னும் நல்லா சொல்லியிருப்பார் இல்லையா?

துளசி கோபால் 9/26/2006 02:20:00 PM

நம்ம ஜில்ஜில் ரமாமணி மட்டுமா?

"அது வெறும் ஜிஞ்சர்பீர்தான். பித்த உடம்பாச்சா, ஒரேதா தூக்கிருச்சு"

பாலைய்யா ....அட்டகாசம். சாரங்கபாணி சூப்பர். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

நா.கண்ணன் 9/26/2006 02:24:00 PM

உஷா!

பத்மினி மாதிரியே என் சகோதரி சௌந்திரம் இருப்பார். அதுவும் பத்மினியைப் பிடிக்கக் காரணம் :-) [வைகைக்கரைக் காற்றே தொடரில் போட்ட ஞாபகம்)

மூலக்கதை நான் வாசித்தது இல்லை. செட்டிநாட்டுப் பழக்கமெல்லாம் சிறப்பாக எழுதியிருப்பார் என என் அத்தான் சொல்லுவார். அவர்களெல்லாம் செட்டிநாடுதான். மனோரம்மாவின் அந்த நடிப்பைப் பார்த்துவிட்டு பல காலம் அவர் 'ஆச்சி' என்றே கருதியிருந்தேன். ஒரு பேட்டியில் அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியொரு நடிப்பு! என்ன படம், என்ன படம்!

நா.கண்ணன் 9/26/2006 02:27:00 PM

அம்மா! மாரியம்மா ! (அவள் பெயர் மேரி) இந்தக் கடுகு இருக்கில்ல கடுகு, அந்தத்தண்டி பேசிக்கிறேன் என்பார் பாலையா! மிக இயல்பான நடிப்பு. காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு பாலைய்யாவை மிகவும் ரசித்த படமிது!

ராதாராகவன் 9/26/2006 05:23:00 PM

மூவரில் எனக்கு பத்மினியைத்தான் பிடிக்கும். அந்தக் காலத்தில் ஒரு படம் விடாமல் பார்ப்பேன்.

நா.கண்ணன் 9/26/2006 05:26:00 PM

பாவம் ராகினி ;-(
இவரைப் பிடித்தவர் எவரேனுமுண்டா? :-)

raman 9/29/2006 09:27:00 AM

ennanga ellorum innum oru arputhamana nadigarai vittuteenga. namma nagash.enna arumaiyana pathiram vaithi mathiri nadaimurai villan supera panniyirunthare

நா.கண்ணன் 9/29/2006 09:39:00 AM

நாகேஷின் பாத்திரப் படைப்பு வித்தியாசமானது. அவரும் அநாயசமாக நடித்திருப்பார். அவரால் எந்தப் பாத்திரமும் செய்யமுடியும், செத்த மனிதன் பாத்திரம் வரை! ஆனால், இப்போதெல்லாம் அவர் ரொம்பக் கத்துகிறார் என்று தோன்றுகிறது!

வல்லிசிம்ஹன் 9/29/2006 11:58:00 AM

கண்ணன்,
ஒரு பதிவில் இவர்களைப் பற்றி
முடித்துவிட முடியாது.
லலிதாம்மா படங்கள் சொற்பமே.
அவர்களை விட பத்மினி ஒளிவிட்டது அவருடைய உணர்ச்சி
வெளிப்பாடுகள் நம்மை உடனேயே
வந்தடையும்.
இவரும் சிவாஜியும் சேர்ந்த பேசும் தெய்வம் படத்தில் 'பத்துமாதம் சுமக்கவில்லை கன்னையா'
பாடல் நான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.
ஆக்ஷன் அண்ட் ரியாக்ஷன்
பிரமாதமா இருக்கும்.
நன்றி கண்ணன்.