படம் பார்த்துக்கதை சொல் 6பாண்டாக் கரடிகள் பற்றி அமெரிக்க, பி.பி.சி தொலைக்காட்சிகள் மூலம் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் அதைக்காணும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப cute! அது
கரடியே இல்லை. சும்மா இலையை நிமிண்டிக்கொண்டு, தூங்கிக்கொண்டு இருக்கும் ஒரு விலங்கு. குழந்தைகளின், பெரியவர்களின் ரசிப்பிற்கென்றே உருவான விலங்கு போல் தோன்றுகிறது! இது சீனாவில் அதிகமாக வாழ்கிறது. மூங்கில் காடுகளில் வாழும் விலங்கு. எல்லா மிருகங்களுக்கும் நேர்ந்தது போல் மனித மேம்பாட்டுத்திட்டங்களினால் இவைகளுக்கும் ஆபத்து இப்போது. காடுகள் அழிந்து வருவதாலும், மனித நெருக்கடியின் விளைவினாலும் வனவிலங்குகளுக்கு போறாத காலமிது. இந்தியாவில் 1 பில்லியனுக்கும் கூடுதலாக மனிதர்கள் வாழும்போது வனமாவது, விலங்காவது! எல்லாம் கதையாய், பழம் கனவாய்...

இருந்தாலும் இதன் சுற்றுலா வருமானத்தைக் கணக்கில் கொண்டு இப்போது செயற்கைச் சினை முறையில் இவற்றின் இருப்பை தக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கரடிக்கு வந்த வாழ்வு! இப்போது இக்கரடிகளுக்கென்று மருத்துவ நிலையம், நர்சுகள் இத்யாதி.

யானைக்கொரு காலமென்றால் கரடிக்கொரு காலம் வர வேண்டாமா!

3 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 10/01/2006 02:05:00 PM

ஆகா, நேற்று கருடன். இன்று (பாண்டா) ஜாம்பவான்-ஆ?
சூப்பர்!
ஒவ்வொரு கரடிக்கும் ஒரு நர்ஸா? :-))
இவ்ளோ பேர் பெற்ற கரடியை இன்சல்ட் பண்றா மாதிரி 'கரடி விடுறான்-பா" என்று ஏன் சொல்கிறார்களோ?

சார்; உங்கள் மின் மடல் முகவரி என்னவோ? என் ப்ரொஃபைலில் இருந்து ஒரு மெயிலில் தட்டி வுடங்க சார். உங்கள் பின்னூட்டத்துக்கு பதிலிறுத்துள்ளேன் (அனுமன் பதிவில்)

துளசி கோபால் 10/01/2006 02:17:00 PM

இதுவும் நம்ம க்வோலா கரடியும் ஒரே இனமா? அதுவும் தான் கரடியில் சேர்த்தி இல்லையாம்.

போட்டும், பேர்லேயாவது 'கரடி'யா இருக்கே.

ரெண்டும் இலை நிமிண்டும் ஜாதிதான். ஆனா எங்க பக்கத்தூட்டுக்காரர் 'தனிமை விரும்பி'!

'தேமே'ன்னு உக்கார்ந்துண்டு இருப்பார்.

நா.கண்ணன் 10/01/2006 02:21:00 PM

துளசி:

எல்லாம் சொந்தம்தான். சரி, இது அடுத்த பதிவிற்கான கருவாகிவிட்டது..:-)

நல்லா இருக்கே, வீட்டுக்கு பின்னால குவாலாவா? உங்க வீட்டு கொலுப்பொம்மைகள் எல்லாம் வெளியேவே இருக்கும் போலருக்கே!

நம்ம 'கண்ணபிரான் கரடிவிடச் சொல்றார்' ..இவ்வளவு நாள் அதைத்தானே செஞ்சுட்டு இருக்கோம் :-))