சேதிச் சேமிப்பு 300 கிகாபைட்

முன்பொருமுறை தமிழ் இணைய மாநாட்டில் பேசும் போது வருங்கால சேமிப்பு வகைகள் பற்றிச் சொல்லும் போது ஹோலோகிராம் எனும் வழிமுறையில் நிறைய சேமிக்கலாமென்று எடுத்தாண்டிருக்கிறேன். அது இப்போது சாத்தியப் பட்டிருக்கிறது. கீழுள்ள சுட்டியில் ஹித்தாசி, மேக்ஸ்வெல் இணைந்து 300 கிகாபைட் சேமிப்பு முறையை ஹோலோகிராம் வகையில் செய்து காட்டியிருக்கின்றன.

இங்கே சொடுக்குக!

ஆக, சேதியை ஒளியில் சேமிக்கமுடிகிறது! ஒளி என்பதே சேதிதான் (இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்) அப்படி சேமிக்கும் போது பிற காந்த ஊடகங்களில் கிடைக்காத அபரிமித இட ஒதுக்கீடு 3 பரிமாணத்தில் கிடைக்கிறது.

இந்தச் சேதியோடு எனது முந்தையப் பதிவொன்றை ஒட்டிப் பாருங்கள். இறப்பிற்குப் பிறகு நம் பிராரப்த கர்ம பலன்கள் எப்படி, எவ்வகையில் சேமிக்கப்பட்டு அடுத்த ஜென்மத்திற்குப் போகின்றன? ஏன் பரம ஹம்ச யோகாநந்தர் சூட்சும சரீரம் பற்றிப் பேசும்போது ஹோலோகிராம் வடிவில் அது இருப்பதாகப் பேசுகிறார்?

எங்கோ தொடர்பு இருக்கிறது! விஞ்ஞானிகளும், மெய்ஞானிகளும் இன்னும் வகைப்படுத்தாத குறுந்தொழில்முறை (nano technology) பற்றிப் பேசுகின்றனர். பருப்பொருள் (matter) சிந்தனை போன்ற மெல்லிய வடிவில் இருக்கமுடியும் எனும் போது, நமது ஆன்மா பற்றிய சேதிகள் ஒளி ஊடகத்தின் வடிவில் எடுத்துச் செல்லப்படுகின்றன என நம்புவதில் சிரமமில்லை!

5 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 11/22/2006 12:26:00 PM

"ஆன்மாவின் செய்திகள் ஒளி வடிவில் எடுத்து செல்லப்படுகின்றன"-அது எங்கே என்ற அடுத்த கேள்வியும் வருகிறது.
முடிவில்லாத கேள்விகள்?

நா.கண்ணன் 11/22/2006 12:28:00 PM

குமார்:

அதற்குப் பதில் இருக்கிறது. சாயந்தரம் எழுதரேன்.

நிர்மல் 11/22/2006 12:30:00 PM

கண்ணண்,

அவசியம் எழுதுங்கள்.

ஆன்மா என்பது மூளையா? வேறு ஏதாவதா?

நா.கண்ணன் 11/22/2006 12:33:00 PM

நிர்மல்:

மாலையில் (எங்கள்) எழுதுகிறேன்!

துளசி கோபால் 11/22/2006 12:50:00 PM

மேல் விவரம் ப்ளீஸ்:-))