நிதானம் (ப.பா.க.சொல் - 9)


ஏகாந்தம்
Photo by Dr.K.J.S.Satyasai


தியானம் சித்திக்க ஏகாந்தம் அவசியம். புலன்கள் அடக்கமுற்று, சிந்தனைகள் செயலிழந்து, மனது ஒருமுகப்படும் போது தியானம் அமைகிறது. இது பொது! ஆனால்....activity
Photo by Dr.K.J.S.Satyasai


நடமாட்டம் இருக்கும் போது, சல, சலப்பு இருக்கும் போது தியானிக்க முடியுமா?

முயன்று பார்த்தேன், அன்றொருநாள் - எங்கள் உல்லாசப் பயணத்தில் (அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இது). அதற்கெனத் தனியான மனோநிலை உருவாக வேண்டும். சுற்றமும், சூழலும் நம் அமைதியைக் கெடுக்க வந்தவை என்றில்லாமல், 'ஈதென்ன உலக இயற்கை' (தி.மொ) என்ற மனோபாவத்தில், அச்சலசலப்பில் எற்படும் லயத்தில் ஒடுங்கப் பார்க்க வேண்டும்! முடிகிறது.

முன்பெல்லாம் வீட்டில் தியானம் செய்யும் போது என் குட்டிப் பெண் வந்து 'புறம் புல்குவாள்' (பெ.தி.மொழி). அப்போது கோபித்துக் கொள்ளத் தோன்றாது. மழலை இன்பத்தை விட்டு விட்டால் மனை வாழ்கையில் ஈடுபட ஒன்றுமில்லை. எனவே, அது ஒரு தொந்தரவாகவே இருக்காது. அவளும் என் தியானத்தின் ஒரு அங்கமாகிப் போவாள்!

எல்லாவற்றிலுமொரு நிதானம் தேவை என்றான் புத்தன்.

2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 11/08/2006 01:54:00 PM

அதென்ன நான் இருக்கும் போது நீங்கள் கண்ணை மூடலாமா? என்று சொல்லாமல் சொல்லும் "சிறுசுகள்".
அப்படித்தானே??

நா.கண்ணன் 11/08/2006 02:02:00 PM

உண்மையில் குழந்தைகள் இருக்கும் போது அவற்றைக் கொஞ்சாமல் தியானம் செய்வது தவறு (குழல் இனிது..யாழ் இனிது-குறள்). இருந்தாலும் நல்ல பழக்கங்களை விட்டு விடவும் கூடாது. எனவே பெரியாழ்வார் காட்டிய வழியே சரி!