ஏரிக்குள் ஏரி

ஏதாவது ஓரிடத்தில்தான் இருக்க முடிகிறது:-) எங்கிருந்தாலும் மின்னுலகில் இருக்கமுடியும் என்பது தியரி என்றாலும் வளரும் நாடுகளுக்கு பயணப்பட்டால் அது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. இரண்டு வாரங்களாக பிலிபைன்ஸ், சிங்கப்பூர் பயணம். சிங்கப்பூரை வளரும் நாடு என்று சொல்வதாக கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது பிலிப்பைன்ஸைத்தான்!

பிலிப்பைன்ஸ் அழகான நாடு. அழகான மக்கள். நிறையப் பழங்கள், இளநி. பெரும்பாலும் நான் இருந்த போது சுக முனிவர் போல் பழங்கள் உண்டே காலம் கழித்தேன்.

மணிலா நகரிலிருந்து இரண்டு மணி நேரத்தில் 'தால் ஏரி' அமைந்திருக்கிறது. அதன் அழகு, அதுவொரு எரிமலை வெடித்த குழியில் இருப்பதுதான். தூர இருந்து பார்த்தால் அந்த ஏரி இப்படித் தெரியும்.தால் ஏரி
Photo by Gil Jacintoஇந்த ஏரிக்கரைக்குப் போய் படகில் பயணப்பட்டால் எரிமலையின் வாய்க்குள் போகலாம். நல்ல வேளையாக 1875-ல் வெடித்த பிறகு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது! அப்போது வெடித்த வாயை, இப்போது மழை நீர் நிரப்பி ஒரு ஏரியாக்கிவிட்டிருக்கிறது.

யோசித்தீர்களா? இந்த ஏரி, இன்னொரு ஏரிக்குள் இருப்பதை? உலகின் அதிசயங்களை நினைத்தால் ஆச்சர்யப்படத்தான் முடிகிறது!


ஏரிக்குள் ஏரி
Photo by N.Kannan


இப்போதெல்லாம் எந்த அழகைக் கண்டாலும் அது இறைவனின் அழகென்றே தோன்றுகிறது. அங்கு இருந்தது இறைவனின் சந்நிதியில் இருப்பது போலவே இருந்தது.

7 பின்னூட்டங்கள்:

Johan-Paris 11/04/2006 12:03:00 PM

சரியாகச் சொன்னீர்கள்! இயற்க்கை தான் இறைவன்! அழகிய படங்கள்!
யோகன் பாரிஸ்

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/04/2006 12:09:00 PM

சுக முனிவரே, சுக முனைவரே, கண்ணன் சார், சுகமா? :-)))

welcome back! படங்கள் அருமை!
ஏரிக்குள் ஏரி,
எரிக்குள்ளும் ஏரி!

//பழங்கள் உண்டே காலம் கழித்தேன்//
ஏன் தாய் ஃபுட் கூடவா கிடைக்க வில்லை? அது சரி, திரும்பி ஊருக்கு வந்தாவது சாப்பிட்டீர்களா? :-))

நா.கண்ணன் 11/04/2006 01:12:00 PM

நன்றி யோகன்!

நா.கண்ணன் 11/04/2006 01:20:00 PM

கண்ணபிரான் வாங்க!

சுகமுனி கொத்திய கனி பாகவதம்! அங்கு இருந்த போது ஆண்டாளின் மனோநிலை. ரொம்ப ரம்மியமாக இருந்தது!

இன்னும் திருவனந்தாழ்வான் கட்டுரை வாசிக்கவில்லை. ஒரு சுட்டி கொடுங்கள்.

கீழ தேசத்தில் புத்த கோயில்களில் மட்டுமே சைவ உணவு கிடைக்கும். பிலிப்பைன்ஸில் அதுவும் கிடையாது. அது கிறிஸ்தவ நாடு ;-)

Dharumi 11/04/2006 01:36:00 PM

//இப்போதெல்லாம் எந்த அழகைக் கண்டாலும் அது இறைவனின் அழகென்றே தோன்றுகிறது. //
Amen!

நா.கண்ணன் 11/04/2006 01:39:00 PM

சாம் சார் 'ஆமென்' சொல்லறார்ன்னா ;-)?

;-)..;-) சார்! உங்க சிரிப்பு பின்னால கேக்குது!

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/04/2006 02:16:00 PM

கண்ணன் சார், திருவனந்தாழ்வான் கட்டுரை
இதோ சுட்டி

http://madhavipanthal.blogspot.com/ உங்கள் விருப்பப்பேழையில் வைச்சுக்குங்க சார்! :-))