தேனீர்த் தியானம்

தியானம் என்பது பற்றி சமகால அறிஞர்களில் மிகத்தெளிவாக விளக்கமளித்தவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தியானம் என்பது சப்ளாம் போட்டு உட்கார்ந்தால்தான் வருமென்றில்லை. சிந்தனை எப்போது தன்னியல்பாய், தன்னிடத்தில் தங்கிறதோ அங்போது தியானம் சித்திக்கிறது. அது மலை முகட்டிலிருந்து ஜிவ்வென்று ஸ்கைடர் கொண்டு பறக்கும் போது இருக்கலாம், பனிச் செருக்கில் வளைந்து தாவும் போது இருக்கலாம், இசையில் லியித்து மெய்மறக்கும் போது இருக்கலாம், ஏன் தேனீர் வழங்கும் போது கூட சித்திக்கலாம். ஆங்! கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் தேனீர் அருந்துதல் ஒரு தியானச் சடங்கு என்றால், நம்மவருக்குப் புரியாது. காலங்கார்த்தாலே 4 மணிக்கு லவுட் ஸ்பீக்கர் வைத்து ஐயோ அப்பா! என்று சாரி, ஐயப்பா! என்று கத்தினால்தான் இவர்களுக்கு ஒரு நிம்மதி!! விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும் போதோ, லக்ஷ்மி நரசிம்மர் நாமாவளி சொல்லும் போதோ அடிக்கடி தியானம் என்று வரும். நம்ம ஆட்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அடித்துப் புரட்டிக் கொண்டு போகும் போது 'தியானம்' என்ற சொல் கூட சரியாக வராது. பின் தியானம் எப்படி வரும்? நம் பெரியவர்கள் இறைவனை துதிக்க மலர் எடுத்த கையோடு தியானிக்கத் தொடங்க மாலையாகி, கையில் வைத்த மலர் வாடிய கதையெல்லாம் உண்டு. அதெல்லாம் சம காலத்தில் சிந்திக்கக் கூட முடியாது. சரி, அது போகட்டும்.

இன்று கொரிய நண்பர் ஒருவர் ஒரு கொரியன் தேனீர் கடைக்கு அழைத்துப் போயிருந்தார். இனிய மெல்லிய கொரிய இசை. எங்கு பார்த்தாலும் கலை வடிவம். ஏதோ ஆர்ட் கேலரிக்குள் புகுந்த மாதிரி எதைத் தொட்டாலும் ஒரு அழகு. மூங்கிலை வைத்து கரண்டி, பில்டர், கப். பல்வகை தேனீர் கோப்பைகள். தேனீர் என்றால் நமக்குத் தெரிந்தது ஒரு மசலா டீதான். அது தூக்கத்தைக் கெடுத்துவிடும். இது மனதை, உடலை சுகப்படுத்தும் மலர்த் தேனீர், மூலிகைத் தேனீர். இது சீனா, கொரியா, ஜப்பானில் மிகப்பிரபலம். ஐரோப்பாவிலும்தான். நாம இன்னும் இதைப் பழகிக்கொள்ளவில்லை. நம் உணவு அவ்வளவும் ரஜோ குணம் கொண்டவை. கார சாரமானவை! புத்தன், கீதை சொல்வது போல் "மூன்று குணங்களில் மத்திய குணத்தை எடுத்துக் கொள்" என்றான். இவர்கள் இயல்பாகவே அதைக் கடைப்பிடிக்கின்றனர். தேனீர் வழங்குதல் என்பது ஒரு தியான வழிபாடு என்றால் யாருக்குப் புரியும். மதுரைப் பல்கலைக் கழகத்தில் அக்கா கடையில் தேனீர் சாப்பிடப் போகும் இளைஞர் கோஷ்டி தேனீர் சாப்பிடவா போகிறது? அக்காவிற்கும் சேலை மார்பில் தங்குவதே கிடையாது :-)

இதெல்லாம் வேண்டாங்க! இன்னொருமுறை விவரமா தேனீர் விருந்து பற்றி படம் போட்டு கதை சொல்கிறேன். இப்ப தேனீரோட இஃபெக்ட் தூக்கம் வருது.

நாளை இங்கு இருக்க மாட்டேன். கொரிய மொழியில் கீதை மொழிபெயர்ப்பாகியுள்ளது. நாளை கீத ஜெயந்தி! பதஞ்சலி முனி தாஸ் எனும் வைஷ்ணவ சிரேஷ்டர் (கொரியர்தாங்க!) அழைத்திருக்கிறார். கொஞ்சம் ஹரிநாம கீர்த்தனம் செய்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

அதுவரை, பராசக்தி சிவாஜி ஸ்டைலில், பஜனை செய்வோம் கண்ணன் நாமம், பட்டினி கிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம் (பட்டினி உடலுக்கு நல்லது. கொழுப்பு கூடியவர்களுக்கு அது அருமருந்து).

6 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 12/01/2006 09:32:00 AM

கொரிய மொழியில் "கீதையா" கேட்கவே நன்றாக உள்ளது.
இங்கும் சீனரிடம் இந்த சின்ன கப் டீ அருந்தும் பழக்கம் உள்ளது ஆனால் அது தியானமாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை.
கல்யாணம் ஆகி வரும் மணப்பெண் பெரியவர்களுக்கு இத்தூண்டு கப்பில் தேநீர் கொடுப்பதை பல சீரியல்களில் இங்கு பார்த்திருக்கேன்.
அதெல்லாம் ஆராயக்கூடாது "அனுபவிக்கனும்".:-))

துளசி கோபால் 12/01/2006 10:19:00 AM

ஆமாங்க. இந்த 'டீ செரிமனி'யே ஒரு தியானமுன்னு படிச்சிருக்கேன். அவ்வளவு
சிரத்தை எடுத்துச் செய்வாங்களாம்.

கொரியன் கீதை நல்லா வந்துருக்கா? பார்த்துட்டு வந்து சொல்லுங்க.

பட்டினி கிடந்துறலாமா? இன்னிக்கு 'ஏகாதசி'வேற:-)))

நா.கண்ணன் 12/02/2006 04:42:00 PM

பகவத் கீதை கொரியனில் வருகிறது. பதஞ்ச்சலி முனி தாச் அவர்களுடன் நான் நடத்திய உரயாடலின் சாரத்தை அடுத்தா வாரம் தருகிறீன். கீதை வெளியீட்டு விழாவில் பீசச் சொல்லியிருக்கிறார்கள். எனவீ ந்ஜாயிறுவரை தங்க்க வீண்டியுள்ளது! இது ஒரு தெலுங்க்கர் வீட்டில் தமிழில் டைப் செய்தது. அட்ட்படித்தான் இருக்கும் :-)

enRenRum-anbudan.BALA 12/03/2006 03:08:00 PM

நல்லதொரு பதிவுக்கு நன்றி, கண்ணன் சார்.

PL. see when you have the time.

http://balaji_ammu.blogspot.com/2006/12/7.html

Anonymous 12/06/2006 01:43:00 AM

//ஐயோ அப்பா! என்று சாரி, ஐயப்பா! //

அடுத்தவரை இப்படி கேலி கிண்டல் செய்வது,
இவ்வளவு எழுதும்,
உங்களுக்கு
அழகாக இருக்கிறதா?

நா.கண்ணன் 12/06/2006 06:23:00 AM

//அடுத்தவரை இப்படி கேலி கிண்டல் செய்வது//

அடுத்தவரை துன்புறுத்தும் போது அங்கு பக்தி இல்லாமல் போய் விடுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் வாழ்ந்த போது ஒவ்வொரு மார்கழியும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். இங்கு இருந்து தப்பி குருவாயூர் போனால் அங்கும் வந்துவிட்டார்கள். எல்லாவற்றையும் அதன் எல்லைக்கு இழுத்துப் பார்ப்பது இந்தியாவில் வழக்கம். நீங்கள் இவர்கள் தொல்லை தாங்காமல் கஷ்டப்பட்டதில்லை போலும் (நான் சாடுவது ஒரு கெட்ட பழக்கத்தை என்று பாருங்கள். மதுரைப் பக்கம் ஒப்பாரியைக் கூட லவுட் ஸ்பீக்கர் வைத்து அலற விடுகிறார்கள். இது என்ன பழக்கம்? இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?)