சுய உணர்வு மனிதனுக்கு மட்டும் சொந்தமா?தத்வத்திரயம் எனும் வைணவக் கோட்பாடு பற்றிப் பேசி வருகிறோம்! அதில் எது அசித், எது சித், எவர் ஈஸ்வரன் என்று பார்த்தோம் (கொஞ்சமேணும்).

இந்தப் பேச்சு, வெட்டிப் பேச்சா? என்றொரு கேள்வி எழுகிறது! சிலருக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் நாம் முன்பு கண்டோம் அறிவு பெற்றதின் பயனே இந்த உண்மைகளைக் கண்டு நம் வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்வதென்று. அது மட்டுமில்லாமல் இது அறிவியல் பேச்சாகவும் அமைவதைக் கண்டோம். வழக்கம் போல் இந்தியர்கள், ஆன்மீகப் பார்வையிலே அறிவியல் பேசுகின்றனர். இம்மாதிரிப் பேச்சுக்கள் யாருக்கு சுவைக்கும் என்றொரு கேள்வியும் கூடவே எழுகிறது. வாழ்வு தரும் சுவைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகாளைக் காணும் ஆர்வம் உள்ளவர்களை முமுட்சுக்கள் என்கின்றனர் வைணவர். முமுட்சு என்பவன் மோட்சத்தில் ஈடுபாடு கொண்டவன். மோட்சம் என்பது வீடுபேறு. பிரபஞ்ச உண்மைகளை அறிந்து கொண்டு, பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபவன் முமுட்சு.

இப்படியான முமுட்சு பற்றிப் பேசும் போது, அச்சர்யமான ஒரு உதாரணத்தை முன் வைக்கின்றனர் நம் முன்னோர். முமுட்சு எனும் போது ஒரு மனிதனை உதாரணம் காட்டாமல் ஒரு யானையை உதாரணம் காட்டுகின்றனர். இந்திய மெஞ்ஞானத்தின் முன் அனைத்து உயிர்களும் சமம். மோட்சமடைய அனைத்து ஜீவன்களுக்கும் உரிமை உண்டு. திருவாய்மொழியில் மிக அழகான ஒரு பாசுரம் உண்டு. "கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ' என ஆரம்பிக்கும் அப்பாசுரத்தில் இராமன் திருநாடு செல்லும் போது அயோத்தியில் இருந்த ஈ, எறும்பு, புல், பூண்டு என்று அனைத்து ஜீவன்களையும் அன்புமிக அழைத்துச் சென்றான் என்று. ஆக, முமுட்சுவாக கஜேந்திரனை உதாரணம் காட்டுகிறது தேசிகரின் ரகச்ய த்ரய சாரமமெனும் நூல்!

விலங்களுக்கு 'சுயம்' உண்டா? என்று விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர். ஒரு கண்ணாடியை முன் வைத்து முகத்தைப் பார்த்து மேக்கப் செய்து கொள்வது மனிதர்களுக்கு ரசிக்கத்தக்கதாய் இருக்கலாம், ஆனால் விலங்களுக்கு அதனியற்கை சூழலில் இதனால் என்ன பயன்? தன் அழகைக் கண்டு பெருமிதம் கொள்வதோ? அல்லது தான் இருக்கிறோம் என்ற உணர்வோ அவைகளுக்கு என்ன பயன் தரும்? என்று விஞ்ஞானிகள் கேள்வி கேட்கின்றனர்.

வேடிக்கை என்னவெனில், விலங்களுக்கு சுயபிரக்ஞை உண்டு என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. இந்த ஆங்கிலக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள் புரியும்! யானை சத்தியத்திற்கு கட்டுப்பட்டு மனிதனிடம் அடிமைப் படுகிறது என்பர் தமிழர்கள். சத்திய, தர்ம உணர்வுகள் யானைக்கு உண்டு என்று ஆய்வுகள் சுட்டுகின்றன.

"Or does empathy, which implies an awareness of the state of other individuals, depend on a measure of self-consciousness? "This research," says Reiss, "links us to the rest of the natural world. It shows there are other minds around us." Think about that the next time you look in the mirror."

என்று முடிகிறது கட்டுரை! நம்மைச் சுற்றி மனோ மண்டலம் உண்டு என்று பண்டைக் காலம் தொட்டு இந்தியர்கள் சொல்லிவருகின்றனர். பரமஹம்ச யோகாநந்தர் தனது பிரபலமான 'யோகியின் கதை'யில் புலிகளின் மனோநிலை பற்றிப் பேசுகிறார். விலங்குகளின் பேச்சு பற்றி பஞ்ச தந்திரம், இதிகாச புராணங்கள் இயம்புகின்றன. மிக சமீபத்தில் வாழ்ந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வில் விலங்குகளுடான அவரது சம்பாஷணை (encounter) சொல்லப்படுகிறது.

மெஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஒரு உண்மையைக் கண்டு சொல்ல விஞ்ஞானம் ஏன் இவ்வளவு நாள் எடுத்துக் கொள்கிறது?

3 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 11/13/2006 11:17:00 AM

விலங்குகளுக்கு எவ்வளவு அறிவுன்றது எந்த மிருகத்தோடும் கொஞ்சநாள் பழகுனாத் தெரிஞ்சுரும்.
யானையைச் சொல்றமே... இந்தப் பூனை?

அவ்வளவுச் சின்னத்தலையிலெ எவ்வளோ எண்ண ஓட்டங்கள் பாருங்க! ஆச்சரியம்தான்.

சொல்ல மரந்துட்டேனே, 'யானைக்கண்' அருமையா இருக்கு.

ஜீவா (Jeeva Venkataraman) 11/13/2006 11:33:00 AM

//விலங்குகளுக்கு 'சுயம்' உண்டா?//

விலங்குகளுக்கு சுயபிரக்ஞை உண்டு என்றாலும் சுயமே எங்கும் வியாபித்து இருக்கிறது என்பதை அறிய இயலாதல்லவா? (ஓ... மாற்றி சொல்லி விட்டேனா?!)

குமரன் (Kumaran) 11/13/2006 11:47:00 AM

மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனைக் காண அடியேன் பதிவுக்கு வாருங்கள் கண்ணன் ஐயா.

http://koodal1.blogspot.com/2006/11/blog-post_12.html