ஆழிப்பாலூட்டி அழைப்பது எப்படி?படம் பார்த்துக் கதை சொல்லிய படங்களிலிருந்து மனிதன் மட்டுமே புத்திசாலி, மற்ற விலங்குகள் அறிவற்றவை என்ற எண்ணம் மாறியிருக்குமென்று நம்புகிறேன்! (பழைய ப.பா.கதை சொல் பதிவுகளைக் காணவும்)

இன்று Natural Environment Research council நடத்தும் "Planet Earth" (Autumn 2006) இதழைப் புரட்டியபோது (பக்கம் 4) ஒரு சுவாரசியமான சேதி கிடைத்தது. ஆழிப்பாலூட்டிகளான (marine mammals) டால்பின்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைத்துக் கொள்கின்றனவாம்! சுப்பு, ரம்பா என்பது ஒலிகள்தானே! இவைகளும் ஒருவகையான விசில் முறையில் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்கின்றனவாம். கடலில் பேசமுடியாது என்பதால் இவை விசில் போன்ற ஒலி எழுப்புகின்றன. சரசோட்டா வளைகுடா, (புளோரிடா) பாட்டில் மூக்கு டால்பின்கள் இப்படி அழைத்து தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன என ஆய்வு சொல்கிறது.

எனவே அடுத்தமூறை டால்பினைப் பார்க்கும் போது மரியாதையாக ஒரு சல்யூட் போட்டுவிட்டு வாருங்கள்! அது விசிலடித்தால் உங்களைத்தானென்று கொள்ளுங்கள் :-)

3 பின்னூட்டங்கள்:

johan -paris 11/22/2006 06:17:00 PM

அண்ணா!
டால்பீன்களைத் தமிழில் கடற்பன்றி என்பர்.
இத் தகவல்களை அறிந்துள்ளேன்.
யோகன் பாரிஸ்

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/22/2006 11:48:00 PM

//சரசோட்டா வளைகுடா, (புளோரிடா) பாட்டில் மூக்கு டால்பின்கள் இப்படி அழைத்து தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன என ஆய்வு சொல்கிறது//

Sea World, Orlando, FL-வில் இதை செய்தும் (வித்தை) காட்டுகிறார்கள்!

வடுவூர் குமார் 11/23/2006 11:57:00 AM

தெரியாத தகவல்.
தெரியப்படுத்தியதற்கு நன்றி