தட்டிப் பழகுங்கள் தமிழை (ஒலிப்பத்தி)

ஒலிபெயர்ப்பு முறையில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

நா.கண்ணன், அண்ணாகண்ணன்

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை ( ஒலிப்பத்தி 19 )

இணையத்தில் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது. வலையிதழ்கள் மூலமாகவும் வலைப் பதிவுகள் மூலமாகவும் புதிய படைப்பாளர்கள் தோன்றி வருகிறார்கள். ஆயினும் எழுத்தறிவு பெற்ற தமிழர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் கணினியில் தமிழை எழுதும் அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

இன்று பெரும்பாலான அலுவலகங்களில் கணினிகள் உள்ளன. வீடுகளிலும் கணினி வேகமாக இடம்பிடித்து வருகிறது. ஆயினும் சிலர் மட்டுமே கணினியில் தமிழைத் தட்டச்சு செய்யக் கற்றுள்ளனர். பலரும் 'எனக்குத் தமிழ்த் தட்டச்சு தெரியாது' என்றே கூறுகின்றனர். இந்த நிலையை மாற்ற, கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதைப் படிப்படியாகத் தமிழ்சிஃபி மூலம் கற்பிக்க விரும்புகிறோம். கணினியில் படிக்கத் தெரிந்தும் எழுதத் தெரியாது என்கிறவர்களுக்கு இந்தப் பக்கம் உதவக்கூடும்.

நம் வாசகர்கள் பலரும் நமக்கு ஆங்கிலத்திலேயே கடிதங்கள் எழுதுகிறார்கள். தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள், தமிழிலேயே எமக்குக் கடிதங்களும் படைப்புகளும் அனுப்பலாம். வாசகர்கள், படைப்பாளர்களாக மாறுவதற்கும் இந்தத் தமிழ்த் தட்டச்சு உதவும்.

அந்த வகையில் முதலாவதாக, ஆங்கில ஒலிபெயர்ப்பு முறையில் தமிழ்த் தட்டச்சு செய்யும் முறையைக் கற்கலாம்.

ஆங்கில ஒலிபெயர்ப்பு என்பது, ரோமானிய எழுத்துருக்கள் கொண்ட விசைப்பலகையில் தமிழை எழுதப் பழகுவதாகும். இதைப் படிக்கிற நீங்கள், உங்கள் கணினியுடன் உள்ள விசைப் பலகையைப் பாருங்கள்.

அதில் ரோமானிய எழுத்துருக்களும் எண்களும் சில சிறப்புக் குறியீடுகளும் இருக்கின்றன. அவற்றுள் சில விசைகளை மட்டுமே பயன்படுத்தி நம்மால் தமிழை எழுத முடியும். இன்னும் தமிழ் விசைப் பலகைகள் பெருமளவில் புழக்கத்தில் வராமையால் இந்த ரோமானிய விசைப் பலகையைக் கொண்டே நாம் தமிழைக் கற்கும் நிலையில் இருக்கிறோம்.

கொரியாவிலிருந்து நா.கண்ணன் இதைக் குறித்து உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார். பயனுள்ள அவரின் உரையை அவரது குரலில் இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 19.48 நிமிடங்கள்.

** ** ** ** ** **

ஒலிபெயர்ப்பு முறையில் தமிழ்த் தட்டச்சு குறித்து மேலும் விரிவாக விளக்கங்கள் பெற விரும்புவோர், கீழுள்ள பிடிஎஃப் கோப்புகளைப் படித்துப் பாருங்கள்.

உங்கள் கணினியில் அக்ரோபாட் ரீடர் இல்லாதவர்கள், அதை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

முரசு அஞ்சல் 2000 தொடக்க நிலை வழிகாட்டி

இணையமும் அஞ்சலும் (மின்னூல்): டாக்டர் பெ.சந்திரபோஸ்

** ** ** ** ** **

ஆங்கில ஒலிபெயர்ப்பின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டீர்களா? இனி நீங்கள் இது தொடர்பான கீழ்க்காணும் ஏதேனும் ஒரு எழுது கருவியைத் தரவிறக்கிக்கொண்டு உங்கள் கணினியிலேயே தமிழில் எழுதத் தொடங்கலாம்.

முரசு அஞ்சல்

எ.கலப்பை

அழகி

** ** ** ** ** **

தரவிறக்காமல் நேரடியாக இணைய தளத்திலேயே தமிழில் தட்டச்சு செய்ய விரும்புகிறீர்களா? அதற்கும் வழியுண்டு. கீழுள்ள இணைய தளங்களுக்குச் செல்லுங்கள்.

http://www.composetamil.com/tamil/default.aspx

http://tamil.net/ (பக்கத்தின் அடிப் பகுதியைப் பாருங்கள்)

http://suratha.com/leader.htm (பக்கத்தின் அடிப் பகுதியைப் பாருங்கள்)

www.pdstext.com (இந்தத் தளத்தில் உங்கள் பெயரைப் பதிந்த பிறகு தட்டச்சு செய்யலாம்; உங்கள் அறைக்குள் தட்டச்சு செய்த கோப்புகளைச் சேமித்தும் வைக்கலாம்)

** ** ** ** ** **


ஒலிபெயர்ப்பு முறையில் மட்டுமல்லாது, மேலும் பல்வேறு முறைகளிலும் தமிழைத் தட்டச்சு செய்ய முடியும். அவற்றைப் பிறகு அறியலாம்.

இனி என்ன தடை? தமிழில் எழுதுங்கள். நமக்கு வானமே எல்லை.
** ** ** ** ** **

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி (இப்பதிவில் மூலத்திலிருக்கும் விளக்கப்படங்கள் சேர்க்கப்படவில்லை)

5 பின்னூட்டங்கள்:

ரவிசங்கர் 11/28/2006 08:52:00 AM

சிஃபி தளத்தில் உங்களின் இந்தப் பத்தியை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். அஞ்சல் பலகையை தொடர்ந்து பரவலான பலகைகளாள தமிழ்நெட்99, பாமினி ஆகியவற்றுக்கும் விளக்கம் தாருங்கள். உங்களை போன்ற ஆர்வலர்கள் இது போன்ற முக்கியமான தளங்களில் பணியாற்றி நல்ல முறையில் தமிழ் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்குத் தெரிந்து இந்தியமொழிகளில் தமிழர்கள் தான் ஆர்வமுடன் இணையத்தில் தமிழில் எழுத முற்பட்டு வருகின்றனர் ..(அந்தத் தொகையும் கொஞ்சம் தான் என்றாலும்..)..இநதப் போக்கு இன்னும் வளர உங்கள் வலைத்தளம் உதவட்டும்..
ரவி

ரவிசங்கர் 12/10/2006 10:29:00 PM

தமிழ்நெட்99 பலகையில் சிறப்பை விவரித்து நான் எழுதி இருக்கும் இடுகையை இங்கு காணலாம்.
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

இப்பலகை நன்று நீங்கள் கருதும் பட்சத்தில் இதை பெரிதும் பரிந்துரைத்து வலியுறுத்தி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்

நா.கண்ணன் 12/13/2006 02:30:00 PM

அன்பின் ரவிசங்கர்

எனக்கு பழக்கமான விசைப்பலகை பற்றி எழுதவே மனம் துணிந்தது! அண்ணா கண்ணன் எல்லா விசைப் பலகைத் திட்டங்கள் பற்றியும் எழுதச் சொன்னார். அனால், படித்து அறிந்து கொள்ளும் அவகாசம் தற்போது இல்லை. வேலைகளுக்கு நடுவிலேதானே தமிழ்ப் பணி செய்து கொண்டு இருக்கிறோம் :-)

techtamil 12/18/2006 04:09:00 AM

//ஒலிப்பத்தி//
ஒலிப்பத்தி என்றதும் உடனே தமிழிற்கு "sound recognition" ஏதும் அறிமுகம் எங்கேனும் செய்திருக்கிறார்களா என்கிற ஆர்வத்தில் வந்தேன்.

ஹும். அந்நாள் எந்நாளோ.

ஆயினும் உங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதும் பாராட்டத்தக்கதும் ஆகும்.

நா.கண்ணன் 12/21/2006 11:23:00 AM

Voice Recognition என்பது பற்றி தமிழகத்தில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. சென்ற தமிழ் இணைய மாநாடு (சிங்கப்பூரில்) நடந்த போது சென்னையிலிருந்து ஒருவர் இது குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தார்.

வார்ப்பறிதல் (Optical character recognition) தொழில் நுட்பம் தமிழுக்கு வந்துவிட்டது. அடுத்து 'குரலறிதல்' தான். பொறுமை காக்க!