லோக சரண்யன்இயற்கையின் சீற்றத்தின் முன் மனிதன் தூசு. சமீபத்தில் வந்து கொன்ற சுநாமி பலருக்கு ஞாபகமிருக்கலாம். மனிதன் எந்த வகையிலும் சுதந்திரன் அல்லன். ஆயினும் இது அவனுக்குப் புரிவதே இல்லை. தான் சர்வசக்தன் என்பது போலவே நினைக்கிறான், நடந்து கோள்கிறான்.
கடும் புயல் பிலிப்பைன்ஸ்ஸைத் தாக்கியிருக்கிறது. முன்பென்றால் அது எனக்கொரு வேறும் செய்தி. ஆனால் அங்கு சென்று அந்த மக்களுடன் பழகிய பின் அவர்களின் துயரத்தில் தானாக இதயம் பங்கு கொள்கிறது. "வாடிய பயிரைக் கண்ட போது வாடும் இதயம்' நமக்கு இயல்பாக வாய்க்கப் பெறாவிடில் பயணிக்க வேண்டும். பயணம் இதங்களை அருகில் கொண்டுவருகிறது.


இறைவனை லோகசரண்யன் என்பார்கள். ஆபத்துக் காலத்தில் என்றில்லை, சுதந்திரம் இல்லாத நாம் எப்போதுமே அவன் சரணில் இருப்பது நலம் பயக்கும். இந்தியாவிற்கு அடுத்து மிகவும் இறை பக்தியுள்ள நாடு பிலிப்பைன்ஸ்.

கண்ணன் அல்லால் இல்லை சரண் இங்கு கண்டீர் - நம்மாழ்வார்


6 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 12/04/2006 10:43:00 AM

சரிதான்,வலி தனக்கு வரும் வரை,நம்மால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இல்லாத மனிதனே இல்லை என்று கூறலாம்.

நா.கண்ணன் 12/04/2006 10:55:00 AM

மிகச் சரியாகச் சொன்னீர்கள்! இத்தகைய வலிகள் (personal disasters) ஆன்ம வாய்ப்புக்கள் என்று சொல்கிறார் குலசேகரப் பெருமாள். இல்லையெனில் நாம் யாரையும், எதையும் கண்டு கொள்வதில்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) 12/04/2006 11:35:00 AM

கண்ணன் சார்
இரண்டாம் படம் மனதை என்னவோ செய்தது! மூன்றாம் படம், அதுவும் அந்தப் பையன் கையிலோ இறைவன் படம், கண்களிலோ ஒரு ஏக்கம்.

//வலிகள் (personal disasters) ஆன்ம வாய்ப்புக்கள் என்று சொல்கிறார் குலசேகரப் பெருமாள்//

"Problems are not problems; They are Opportunities", என்பது corporate world-இல் மட்டும் இல்லை; எங்கும் தான்; பதிவுக்கு நன்றி!

நா.கண்ணன் 12/04/2006 11:43:00 AM

கண்ணபிரான்:
புயல் வரப்போகிறது என்ற சேதி கேட்டு பயப்படும், சகோதர, சகோதரிகள். அந்த பீதி, கலவரம். மனதை என்னவோ செய்கிறது. அவர்கள் தப்பித்து இருக்க வேண்டுமென்று உள்ளம் வேண்டுகிறது. 1000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.

துளசி கோபால் 12/04/2006 12:02:00 PM

"சாமி நல்லவங்களை ரொம்ப சோதிப்பாராம்"

" எனக்கெதுக்குப்பா இந்த சோதனையும் வேதனையும்"

இது முந்தி எதோ ஒரு 'விசு' படத்து டயலாக்.

என்னதான் இயற்கை அழிவுகள் பணக்காரன், பாமரன்னு
பார்க்கறதில்லன்னாகூட அடிக்கடி ஏழைநாடுகளுக்கே வருதோ?

துயரம்(-:

நா.கண்ணன் 12/04/2006 12:35:00 PM

துளசி:

உங்கள் மனது புரிகிறது.

யாக்கை நிலையாமைச் சுட்டவே இயற்கைச் சீற்றமெல்லாம். அழிவின் கூடவே அறிவையும் கொடுக்கிறான் இறைவன். இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்ளும் திறன் இல்லாததால்தான் உயிரிழப்புகள். அமெரிக்காவைத் தாக்கிய கேத்தரினாவின் போது நடந்த இழப்புகளுக்குக் காரணம், அமேரிக்கா தன்னை சரியான் அளவில் தயார் படுத்திக் கொள்ளவில்லை என்பதே. தரக்கட்டுபாடு சரிவர அமுல் படுத்தப்படவில்லை. எல்.லேயில் இருக்கிறது அடுத்த இடி. பார்ப்போம் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று.