உருப்படியான சந்ததி உருவாகும் காலம்!

Genetic testing is changing medicine, too. Three years after scientists announced they had sequenced the human genome, new knowledge about how our genes affect our health is transforming the way diseases are understood, diagnosed, treated—and even predicted. Today gene tests are available for more than 1,300 diseases, including cystic fibrosis and hemophilia. And now, as genetic screening gets cheaper and faster, researchers are hunting down the biological underpinnings of more-complex disorders that involve multiple genes—big, rampaging illnesses that strike millions of Americans every year. On the list: type 2 diabetes, Alzheimer's, heart disease and depression. If the scientists are right, genetic tests for some of these diseases could be available by 2010. Testing positive doesn't guarantee that you'll get the illness, but it does help determine your risk. "We are on the leading edge of a genuine revolution," says Dr. Francis Collins, head of the National Human Genome Research Institute.

Newsweek Health for Life20ம் நூற்றாண்டின் பெரிய பங்களிப்பு என்னவெனில், பிறப்பு என்பது தற்செயலாக நிகழ வேண்டியதில்லை, அதைத் திட்டமிடமுடியும் என்பதே. வெட்கமில்லாமல் சொல்லலாம், ஆணுறை என்பது நோபல் பரிசு பெற வேண்டிய கண்டுபிடிப்பு! அது இருக்கட்டும். மேலே உள்ள சேதி சொல்வது போல் மரபு தொடர்பான ஆய்வுகள் அதிசயக்கத்தக்க அளவில் முன்னேறியிருக்கின்றன. நமக்கு மரபு வழியில் நோய்கள் உள்ளனவா எனக் கண்டு கோள்ளுதல், அப்படி உள்ளதெனில் அது நம் குழந்தைகளுக்கு வர என்ன சாத்தியம் போன்றவை இப்போது தெளிவாக அறியமுடிகிறது. எனவே, ஏதோ கல்யாணம் ஆச்சு, அடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது கடமை என்றில்லாமல், நாம் இவ்வுலகிற்கு ஆரோக்கியமான ஒரு பிரஜையைத் தருகிறோமோ? அப்பிறப்பால் குழந்தைக்கும், நமக்கும் வரப்போகின்ற வாழ்வு இதமாக இருக்குமா? என்று கண்டு பின் பெறுவது நல்லது. மரபு வழியில் ஊனமுற்ற குழந்தைகள் தெருவில் பிச்சை எடுக்கும் போது மனதைப் பிசையும். இதைத் தவிர்த்திருக்கலாமோ? என்று! ஒரு பில்லியனைத் தாண்டி விட்ட இந்தியா இனிமேலும் தனது குடும்பம் பற்றிய விழுமியங்களை மாற்றிக் கொள்ளவில்லையெனில் கஷ்டம் அந்த நாட்டிற்கே!

மரபுச் சோதனைகள் மலிவாகி வருகின்றன. நமது துணையைத் தேடுவதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அது போல் சந்ததியை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவோம்!

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 12/06/2006 10:15:00 AM

ஆணாக(vice versa) இருக்கும் பட்சத்தில் இந்த மாமா,அத்தை பெண் கல்யாணத்தை தவிர்த்தால் கூட நல்லது.

துளசி கோபால் 12/06/2006 12:27:00 PM

அடுத்த பிறவியில் இப்படி இருக்கலாமுன்னா அதுக்கும் நோ ச்சான்ஸ்.:-)

நா.கண்ணன் 12/06/2006 01:22:00 PM

துளசி

சரிதான். இனிப் பிறவி ஏது? போதாது பிறந்தது? செத்ததின் வயிற்றில் சின்னது பிறப்பது?