அன்பென்ற மழையிலே!

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!

வைக்கோலின் மேலொரு
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!

வின்மீன்கள் கண்பார்க்க
சூரியன் தோன்றுமா போல்
புகழ் மைந்தன் தோன்றினானே!

கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!

நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!

இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!

முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

மின்சாரக் கனவு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

பாடல் கேட்க சுட்டுக!

6 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 12/25/2006 11:10:00 PM

இன்று காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடலைத் தான் நினைத்துக் கொண்டேன் கண்ணன் ஐயா. நீங்களும் இந்தப் பாடலை இட்டிருக்கிறீர்கள். :-)

பாரதி 12/25/2006 11:44:00 PM

உன்மையில் இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு புல்லரிப்பு எற்ப்பட்டு கண்ணில் நீர் கசிகிறது.
இது எதனால் ஏற்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை
அது இயேசு கிறிஸ்து மேல் எனக்கு உள்ள ஈர்ப்பா? அல்லது
அந்த இசையா?
பாடலை பாடிய அனுராதா சிரிராமினாலா?
அல்லது
அந்த பாடல் வரிகளா?
இது வரை எனக்கு இது புரியாத புதிராகவே உள்ளது.

மிக அருமையான பதிவு நன்பரே நன்றி.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Anonymous 12/26/2006 01:46:00 AM

எழுதியவர் ?

Srikanth 12/26/2006 01:58:00 AM

Perhaps you forgot to give credit to such a great lyrics by vairamuthu, isn't it? :)

நா.கண்ணன் 12/26/2006 07:34:00 AM

நன்றி நண்பர்களே!

நத்தார் நல் வாழ்த்துக்கள்!

இது ஊனை உருக்கும் பாடல். இதன் பலம், இதன் இசை, அனுராதாவின் இனிய குரல், நல்ல வரிகள்.

இதை வைரமுத்து எழுதியிருக்க வேண்டுமென்று நம்புகிறேன். ராகா.வணி யில் எழுதியவர் பெயர் போடவில்லை. அந்தத் தொடுப்பு கொடுத்து இருக்கிறேனே!

மின்சாரக் கனவு கிறிஸ்து பக்தி சொல்லும் நல்ல சினிமாப் படம். இந்தப் படத்தில் பல இடங்கள் நெகிழ வைக்கும். முக்கியமாக இந்தப் பாடல் வரும் இடம்!

சாத்வீகன் 12/26/2006 10:19:00 AM

அருமையான பாடல். கிறித்துமஸ் தினத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.