சிப்ஸ் - கவனம்!Crisps are bad

Eating a packet of crisps each day is equivalent to drinking almost five litres of cooking oil every year. This particular figure was released by the British Heart Foundation as part of their Food4Thought campaign. The campaign also suggested that the number of crisps eaten in the UK would be enough to fill a telephone box every 43 seconds.

நாவிற்கு சுவையாக இருக்கும் நொறுக்குத் தீனியெல்லாம் உடலுக்கு நல்லதல்ல என்று தெரிகிறது! இம்மாதிரி junk food உண்டு வாழும் பள்ளிப் பிள்ளைகளெல்லாம் இப்போது குண்டு, குண்டாக இருப்பதின் காரணம் புரிகிறது! ஒரு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டால் 5 லி எண்ணை குடிப்பதற்குச் சமமாம்! குண்டாக இருப்பதை போஷாக்கு என்று கருதும் எண்ணம் மாறவேண்டும். கொழுப்பை உடலில் ஏற்றுவது எளிது, வெளியே எடுப்பது சிரமம். மனிதன் அடிப்படையில் 'பட்டினிப்பிள்ளை'. பட்டினிதான் இவனுக்கு நல்லது.

ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி
இருவேளை சாப்பிடுபவன் போகி
மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி

நாம எந்த வகை என்று நமக்கே தெரியும். புது வருடத்தில் படி நிலை மாற்றம் கொண்டு வரலாம்!

3 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 12/28/2006 03:33:00 AM

நானெல்லாம் நான்கு முறை சாப்பிடுகிறேனே. என்னை என்ன சொல்வது?

எண்ணையில் பொரித்த பண்டங்கள சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும் என்று இன்னொரு முறை உங்கள் பதிவு நினைவூட்டியது கண்ணன் ஐயா.

நா.கண்ணன் 12/28/2006 07:52:00 AM

குமரன்: முடிந்தால் தவிர்க்கப் பாருங்கள். இம்மாதிரி அவசர உணவுகளில் உடலுக்கு பாதகமளிக்கும் வேதிமங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு நம்ம ஊர் முருக்கு, சீடை எவ்வளவோ தேவலை (அவையும் தவிர்க்க வேண்டியவை என்றாலும்)!!

குமரன் (Kumaran) 12/28/2006 08:38:00 AM

நான் சிப்ஸ், ப்ரைஸ் இதெல்லாம் சாப்பிடுவதில்லை கண்ணன் ஐயா. அதனால் தான் எண்ணையில் பொரித்தவை என்று சொன்னேன். முருக்கு, சீடை விரும்பிச் சாப்பிடுவதுண்டு. ஆனால் அவற்றையும் குறைக்க வேண்டும்.