கலவி இன்பம் - ஜே.கே

ஆந்திர மாநிலத்தின் மதனபல்லியில் பிறந்தாலும், ஆங்கில மாதுவான அன்னிபெசண்ட் அம்மையார் அவர்களால் இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டதால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் 99% ஆங்கிலத்திலேயே அமைந்துவிட்டன. அவருக்கு பிரெஞ்ச் நன்கு தெரியும். ஆனால், தெலுங்கோ, தமிழோ தெரியாது (அன்னிபெசண்ட் அம்மையாரை 'அம்மா' என்று அழைப்பதைத் தவிர).

20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவ, சமய ஞானி என்று போராட்டப்படுபவர். இவரைக் கேட்பவருக்குத் தெரியும், இவர் ஒளிவு மறைவு இல்லாமல் எதையும் பேசுபவரென்று. சமயம் என்பது வேடிக்கைப் பொருளாக, கேளிக்கை சாதனமாக (குறிப்பாக இந்தியாவில்!) போய் விட்டது என்பதை உறைக்கும் படி சுட்டுவதுடன், எப்படி நமது மனது எப்போதும் தீர்க்கமுடன் இருக்க வேண்டுமென்றும், பண்டைய தத்துவ மரபான 'கேள்வியில் இருக்குது ஞானம்' என்பது மீண்டும் கண்டெடுக்க வேண்டிய ஒன்று என்றும் சொன்னவர் கிருஷ்ணமூர்த்தி.

கூகுள் தயவால் இவரது எண்ணிலா பேச்சுக்களில் சில இப்போது புழக்கடை சினிமாவாகக் கிடைக்கின்றன. இவற்றை இங்கு இட்டு சிந்திக்கலாம் என்பது என் எண்ணம்.
இந்த வீடியோவில் கிடைத்த முத்துக்கள்:

1. சிலுவை என்பது இந்தியர்கள் சொல்லும் 'நமோ' (நான் இல்லை) என்பதின் குறியீடு.

2. செக்ஸ் என்பதில் மட்டுமே சமகால மனிதன் தான் மனிதன், மனுஷி என்னும் சுய உணர்வு கொள்கிறான். மற்றை நேரங்களில் சமூகத்தின் அடிமையாக இருக்கிறான்.

3. பிரம்மச்சர்யம் என்பது மனது சார்ந்த ஒழுக்கம். அதை உடல் சார்ந்த ஒழுக்கமாக புரிந்து கொண்டது நம் தவறு.

மற்றைய முத்துக்களை நீங்கள் எடுத்துத் தாருங்கள். ஜே.கேயின் போதனைகள் 'காப்பிரைட்' பெற்றவை. இந்த வீடியோ புழக்கத்தில் உள்ளதால் தைர்யமாக இங்கு மறுபதிப்பு செய்கிறேன்!

3 பின்னூட்டங்கள்:

oosi 12/29/2006 01:46:00 PM

Thanks for sharing.

குமரன் (Kumaran) 1/29/2007 07:17:00 AM

அதென்ன புழக்கடை சினிமா என்கிறீர்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி என்றாற்போல? :-)

நா.கண்ணன் 1/29/2007 08:09:00 AM

அதே! அதே! எல்லாம் நம்ம 'அக்கா' கொடுத்த பதம்தான் :-) Garage என்பது அமெரிக்காவில் புழக்கடையில்தானே இருக்கும் ;-)