பரியங்கம் பயின்றால் பல காலம் வாழலாம்

That's part of the issue with sex. Why the hell do you have sex besides having to procreate? First of all, sex is a survival tool. Sure, we're all busy, but there are compelling health reasons to do it, and do it often: Men who have sex 116 times a year live 1.6 years longer than those who hit the national average of 58 times a year. (Guys who do it 350 times per annum -- admittedly a heroic accomplishment -- should live an average of eight years longer.) But there's also the fact that, for most of us, orgasm is the closest we get to God. It's our Zen experience. Everything disappears, and it's all bliss. That's why meaningful sexual relationships are so critical.

How the World Shaves Years Off Your Life

அறிவிப்பு: தளர்வைத் தவிற்கும் தகவலான இது, தவறான பார்ட்டி கைக்குப் போனால் நான் பொறுப்பல்ல :-)

காமசூத்திரம் எழுதிய வாத்சாயனர் காலத்தில் இந்தியா நிச்சயமாக வித்தியாசமான சமூகமாக இருந்திருக்கும்! சங்க காலத்திலும் இயற்கை தழுவிய காதல் இருந்திருக்கிறது.

சைவ மரபில் பாலியல் குறித்து இரண்டு பேர் தைர்யமாகப் பேசுகின்றனர். ஒருவர் திருமூலர். மற்றது சுந்தரர். இவர்கள் தனியான ஒரு மரபைச் சார்ந்தவர்கள். அதற்கு பரியங்க யோகம் என்று பேர். வட மரபில் இதைத் தந்திரம் என்கின்றனர். இப்போதுள்ள பாசாண்டித்தனமான தமிழ் வாழ்வில் இந்த மரபை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். சினிமாவில் மட்டுமே கட்டுக்கடங்கா காதல் தெரிகிறது. பெரும்பாலான வீடுகளில் தம்பதியருக்கு தனி அறை கூடக் கிடையாது. தாம்பத்ய உறவு வாழ்நாளைக் கூட்டுகிறது என்ற இச்சேதி திருமூலருக்கு அதிசயமாக இல்லாதிருக்கலாம். ஆனால், 21 நூற்றாண்டுத் தமிழனுக்கு இது சேதியே!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே

திருமந்திரம்

2 பின்னூட்டங்கள்:

ஜடாயு 12/20/2006 09:57:00 PM

கண்ணன்,

At last, சைவ அடியார்கள் பற்றி சில நல்ல வார்த்தைகள் சொல்லி இருக்கிறீர்கள், whatever is the context :))

சாக்தத்தில் பர்யங்கம் என்ற சொல் பிரயோகம் உண்டு. "பரமசிவ ப்ர்யங்க நிலயாம்" என்று சௌந்தர்ய லஹரி கூறும்.

மிக்க நன்றி.

நா.கண்ணன் 12/20/2006 10:02:00 PM

அன்பின் ஜடாயு:

இனிமே யார் மனதையும் புண்படுத்தாமல் சமர்தாக இருப்பதாக முடிவெடுத்துள்ளேன் :-)

கண்ணபிரான் பக்கத்தில் சைவத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவு பற்றி. மால் மருகன் பற்றியெல்லாம் சொல்லியிருக்கேன். ஒரு நடை போயிட்டு வாங்க:-)

திருமூலர் நிறைய சமிஸ்கிருத வார்த்தைகள் கையாளுவது திருமந்திரம் படித்தால் புரிகிறது!