Blogger (beta) வும் தமிழ் மணமும்

புளோக்கர் பீட்டா (பீடா அல்ல :-) கதை முடிந்து இனிமேல் இதுதான் புத்தம் புதிய புளோக்கர் என்ற அறிவிப்பு வந்தாகிவிட்டது. இடையில் மாறிய எனது வலைப்பதிவு என்ன செய்தும் தமிழ் மணத்தில் ஒட்டவில்லை (syndicate). அவர்கள் இதற்கொரு தீர்வு காணும் வரை நான் எழுதும் பதிவுகளைப் பற்றிய அறிவிப்பு வேண்டுமெனில் உங்கள் முகவரியை அறியத்தாருங்கள். உள்ளே போட்டுவிடுகிறேன். புளோக்கர் புதிய பதிவு ஏற்றியவுடன் உங்களுக்கு அறிவிக்கும் (நம்புவோம்). புதிதாக உருவாக்கிய வலைப்பதிவு என்ன செய்தும் தேன்கூட்டில் ஏறமறுக்கிறது! ஒரு புளோக்கர் முகவரியை ஏற்றுக் கொள்ளும் தேன்கூடு இன்னொரு புளோக்கர் முகவரியை ஏற்க மறுக்கிறது (Ping செய்ய). எனவே கொஞ்ச காலம் 'திக்குத் தெரியாமல் அலைய வேண்டியதுதான்' போலும்!

6 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 12/21/2006 02:16:00 AM

நல்ல வேளை நான் கூகுள் ரீடரில் உங்கள் பதிவினை இட்டு வைத்திருப்பதால் நீங்கள் புதிதாக இடும் பதிவுகளைச் சொல்லாமலேயே வந்து படித்து விட முடியும்.

பொன்ஸ்~~Poorna 12/21/2006 10:45:00 AM

தமிழ்மணத்தில் வந்துவிட்டீர்களே கண்ணன்..

நான் இப்போது தமிழ்மணத்திலிருந்து தான் உங்கள் பதிவைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்..

நா.கண்ணன் 12/21/2006 10:56:00 AM

பொன்ஸ்:

அட! ஆமாம்! ஆனால்...
என்னால் என் பதிவை வகைப்படுத்த முடியவில்லை. அதுவாக 'வகைப்படுத்தாதவை' என்று போட்டுவிடுகிறது!! மேலும் பின்னூட்டங்களும் தெரிகின்றதா? முடிந்தால் இது குறித்து இன்னொரு பின்னூட்டம் தாருங்கள்.

மிக்க நன்றி!

பொன்ஸ்~~Poorna 12/21/2006 11:07:00 AM

பின்னூட்டங்கள் தெரிகின்றன

நீங்கள் இன்னும் பீட்டா வார்ப்புருக்களுக்கு மாறவில்லை. பீட்டாவுக்கு மாறிய பின் பீட்டா வார்ப்புருவுக்கும் தனியாக மாறவேண்டும். அப்படி யில்லை எனில், வகைப்படுத்த இயலாது.

ஆனால், ஏற்கனவே இருக்கும் வார்ப்புரு மூலம் தமிழ்மணத்தில் தெளிவாகத் தெரியும்.

இப்போது நீங்கள் வார்ப்புரு மாற்றம் செய்தால், மீண்டும் தமிழ்மணப்பட்டி சேர்த்து தமிழ்மணத்தில் தனியாக தெரிவிக்க வேண்டும்..

♠ யெஸ்.பாலபாரதி ♠ 12/21/2006 11:10:00 AM

//மேலும் பின்னூட்டங்களும் தெரிகின்றதா? முடிந்தால் இது குறித்து இன்னொரு பின்னூட்டம் தாருங்கள்.//

தெரியுது...தெரியுது... :-)

நா.கண்ணன் 12/21/2006 11:12:00 AM

//பீட்டாவுக்கு மாறிய பின் பீட்டா வார்ப்புருவுக்கும் தனியாக மாறவேண்டும். //

இது பற்றிய உங்கள் பதிவை வாசித்தேன். நல்ல பதிவு அது. ஆனால் இந்த வார்ப்பு சமாச்சாரத்திற்குள் இன்னும் போகவில்லை. உங்கள் யோசனைப்படி, தமிழ் ஒருங்குறியில் உள்ள நாம் அதற்கு மாற வேண்டிய அவசியமில்லை என்று தெரிகிறது. சரிதானே!

ஆமாம்! அது ஏன், என்னால் பதிவை, வகைப்படுத்த முடியவில்லை? நட்சத்திரம் இட முடிகிறதா?

மீண்டும் நன்றி.