காமராஜர் - சூத்திரதாரி (பட விமர்சனம்)

நேற்றுதான் காமராஜ் படம் பார்த்தேன். இது வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ஆனால் நல்லவேளையாகப் பார்த்துவிட்டேன். நான் காமராஜர் காலத்தில் வாழ்ந்தவன். அவர் வந்து சிறப்பித்த நிகழ்ச்சிகளில் என் சகோதரிகள் பாடிய படம் வீட்டில் தொங்குகிறது! அவரது சரிதம் நிச்சயம் படிக்க வேண்டிய பாடம், பார்க்க வேண்டிய ஆவணப்படம். படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளனர். முதல் முறையாக காதல் டூயெட், பின்னால் பத்து பேர் ஓடி ஆடாமல், இசை என்பது படத்துடன் இயைந்து போவது இதமாக உள்ளது. இளையராஜா சாத்வீகமாகவே இசைத்திருக்கிறார். காமராஜாக நடித்தவர் கனப்பொருத்தம். அதே முகவெட்டு, அதே அங்கலட்சணம் (காமராஜருக்கு கைகள் நீளம்). எல்லோருமே இயைந்து நடித்துள்ளனர். காமராஜர் காலம் சமீபம் என்பதால் நாம் அவரை அலட்சியப்படுத்த முடியாது. காந்தியம் சுடர் விட்டுப் பிரகாசித்த காலங்களில் பல நட்சத்திரங்கள் தோன்றின. இவர்தான் அக்காலக்கட்டத்தின் கடைசி நட்சத்திரம் என்பதை அழகாகக் காட்டுகின்றனர்.

மேலும் இவர் வாழ்ந்த போது அரசியல் விழுமியங்கள் வெகு விரைவில் மாறி காந்தியம் முற்றும் அழிந்துவிட்டது என்பதையும் அதை இவர் காணாமல் நாணயமாக வாழ்ந்து, பிறருக்கு விட்டுக் கொடுத்து அரசியல் தவறுக்குக் காரணமாகிறார் என்பதையும் படம் சுட்டுகிறது. காமராஜர் எளிதாகப் பாரதப் பிரதமராகி இருக்கலாம். தோலான், துருத்தியெல்லாம் அந்த நாற்காலியைப் பிடித்து ஆண்டுவிட்டனர். ஒரு தமிழன் பாரதத்தை ஆண்டான் என்று சரிதம் படைத்திருக்கலாம். ஏன் இந்த சந்தர்பத்தை விட்டார்? காந்தியமா? இல்லை, தமிழனுக்கே உரிய தாழ்வுணர்ச்சியா? மொரார்ஜி தேசாயை விட இவர் என்ன குறைந்துவிட்டார்?

காமராஜ் படம் இளைய சமுதாயத்திற்கு ஆதர்சமாக அமையும். இதுவொரு மிக நல்ல படம்.

பேசும் படம் - 06

50 களின் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் தொலைந்து போன சினிமா சரித்திரம்! எனும் பதிவிலிருந்து கிடைத்தது. அதன்படி, "சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே "லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்' என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள்
தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன".

ஆக தமிழனுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு ஆதித்தொடர்பு என்று தெரிகிறது! ஆச்சர்யமில்லை, பின் ஏன் சினிமா நம் வாழ்வில் இத்தனை ஆளுமை கொள்ளாது? நான் குட்டிப் பையனாக இருக்கும் போது மத்திய செய்தி நிருவனம் ஊர், ஊராக ஒரு வேனில் வந்து படம் காட்டுவார்கள், பேசும் படம்தான். அப்போது மின்சாரம் தமிழக கிராமங்களில் நுழைந்த சமயம். மின்சாரம் என்பது எப்படிப் பத்திரமாகக் கையாள வேண்டிய சமாச்சாரம் என்பதைக் காட்டுவார்கள். இலவச சினிமா என்பதால் கட்டாந்தரை என்றாலும் உட்கார்ந்து பார்த்த வயசு!

ஆனாலும் என் கதை 50களிலிருந்துதான் தொடங்குகிறது. எனவே 50களில் வெளிவந்து கட்டாயம் காண வேண்டிய திரைப்படம் எவை என என்னைக் கேட்டால்:

1. பராசக்தி -1952
2. ஒளவையார் -1953
3. மாயாபஜார் - 1957
4. சம்பூர்ணராமாயணம் -1958
5. சிவகங்கைச் சீமை -1959
6. வீரபாண்டியக் கட்டபொம்மன் 1959

பராசக்தி தவிர மற்றவை பழங்கதைகள். மாயாபஜார் படமெல்லாம் 21ம் நூற்றாண்டுத் தொழில் நுட்பத்திற்கு சவால் விடும் படம். சினிமாவின் பிரம்மிப்பை ஆரம்பித்து வைத்தது ஜெமினி ஸ்டூடியோ. இன்றைய மெகா ரஜனி/கமல் படங்களுக்கு ஆதர்சம் அங்கிருந்துதான் வருகிறது. சரித்திரக் கதைகள் என்றளவில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளின் கதை மருத பாண்டியர், கட்டபொம்பு கதைகள். மாயாபஜார் மகாபாரதக் காவியத்தின் ஒரு துணுக்கு. பாரதத்தை முழுமையாக என்றேனும் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அது 8 நாட்கள் ஓடும் ஒரு பெரும் திரைப்படமாக ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. டேனிஸ் டெலிவிஷனில் வந்தபோது உட்கார்ந்து, உட்கார்ந்து பார்த்தேன். ஆயினும் எ.டி.ஆர் கிருஷ்ணனாக நடிப்பது போல் வருமா? சாவித்திரியின் திறமைக்கு சவால் விடும் படம் மயாபஜார். ராமாயணம் நாம் எல்லோரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம். எனக்குப் பிடித்த பல படங்களை முன்னமே கூறிவிட்டேன்.

இனிமேல் 60க்குள் நுழைவோம்.

பேசும் படம் - 05

இலக்கியம் எப்படி வாழும் சூழலைப் பிரதிபலிக்கிறதோ அதே போல்தான் சினிமாவும். இலக்கியத்தின் மொழி எழுத்து என்றால் திரைப்படத்தின் மொழி பேசும் படம்! எனவே திறமையான இயக்குநருக்கு நல்ல காட்சி அமைப்பின் மூலம் பல விஷயங்களைச் சொல்லிவிட முடியும். கொரியாவில் உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போல் ரசித்துப் பார்க்க அதனால்தான் முடிகிறது. 50களில் வெளிவந்த பல படங்களில் பாம்பு பற்றிய தொன்மங்கள் உருக்கொள்கின்றன. பல படங்களில் சாமியும், தேவர்களும், மனிதர்களும் ஒரே அடுக்கில் வந்து போகின்றனர். ஒரு கனவுத் தன்மை. ஆனால் இது 60களை ஒட்டி மெல்ல மாறுகிறது (1952-ல் பராசக்தி என்பது இன்னும் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை). மெல்ல, மெல்ல நம் கதாநாயகர்கள் பாவடை போட்டுக்கொண்டு, கத்திச் சண்டை போடாமல் நடைமுறை சகஜ வாழ்விற்கு வருகின்றனர். தமிழ்நாட்டின் நீண்ட நெடிய தூக்கம் சுதந்திரத்திற்குப் பின் மெல்லக் கலைந்து பிரச்சனைகள் உறைக்க ஆரம்பிக்கின்றன. இந்த உணர்வை 60கள் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. சமகால சமூகக் கதைகள் திரைப்படக் கதைக்கரு ஆகிறது.

50களில் வந்த ஒரு படக்கதையில் என்.எஸ்.கிருஷ்ணன் 60 களில் இந்தியா எப்படி சுபீட்சமாக இருக்கும் என்று ஒரு காலப்பொறி கொண்டு போய்ப் பார்க்கிறார். அவர் கண்ட கனவில் 50%தான் இந்த நூற்றாண்டில் கூட நிறைவேறி இருக்கிறது என்பதைக் குமுதம்.காம் போய் பாருங்கள் (பதிவு செய்ய வேண்டியிருக்கும்)

பேசும் படம் 04

பராசக்தி 1952

கா! கா! சி.எஸ்.ஜெயராமனின் குரலுக்கு சிவாஜி வாயசைப்பு:மனோகரா 1954

சிவாஜி கணேசன், கண்ணாம்பா வசனம்!


மிஸ்ஸியம்மா 1955

ஜெமினி கணேசன், சாவித்திரி: வாராயோ வெண்ணிலாவே!


அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 (மாடர்ன் தியேட்டர்ஸ்)

எம்.ஜி.ஆர், பானுமதி: மாசிலா உண்மைக் காதலே!


மாயாபஜார் 1957

கல்யாண சமையல்சாதம்


நாடோடி மன்னன் 1958

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில்


கல்யாணப்பரிசு 1959

ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி

துள்ளாத மனமும் துள்ளும்!

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959

வானம் பொழிகிறது! பூமி விளைகிறது!

பேசும் படம் - 03

50 தொடங்கி 60வரையிலான இந்த ஐந்தாம் பத்தில் (50s) வருடத்திற்கு குறைந்தது 15 படங்களென்று வந்திருக்கின்றன! தொழில்நுட்பம் சிறந்துள்ள இந்த நூற்றாண்டில் இந்த ஆக்கத்தை மீண்டும் தமிழ் சினிமா எட்டுமா? என்பது கேள்விக்குறியே! காரணமென்ன?

1. அப்போது சொல்ல நிறையக் கதை இருந்தது. இப்போது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, நினைத்தால் அருவாளை எடுடா! வெட்டுடா! தலையை என்று படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (இதில் remix வேறு). கதாநாயகன் வெட்டினால் கேள்வி கேட்பாரே இல்லை, தமிழ்நாட்டில் :-) ஆனால் அப்போது சொல்லப் புராணக் கதைகள் இருந்தன, நாட்டுப்புரப் பழமொழிகள், வழக்குகள் இருந்தன, சரித்திர புருஷர்களின் கதைகள் இருந்தன, போதாதற்கு குடும்பக்கதைகள் நிறைய இருந்தன. இப்போது சீரியல் போடுவதற்குக் கூட கதையில்லாமல் சவ்வாக இழுக்கிறார்கள்.

2. 50கள் இந்தியா சுதந்திரமடைந்து சில காலங்களே ஆகியிருந்த காலக்கட்டம். மக்களிடம் ஒரு தாகம், நேர்மை, சத்தியம் இவையெல்லாம் இருந்தன. எனவே சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை வெற்றிகரமாக எடுக்க முடிந்தது!
ஆனால் இன்று நாம் அத்தகைய சுத்த உணர்வுகளிலிருந்து தூர வந்துவிட்டோம். முதலாளித்துவம் விரித்திருக்கும் 'நுகர்வலையில்' மயங்கிக் கிடக்கிறோம். நுகர்வு என்பது அக்னி போன்றது. எரித்து சாம்பலாக்கிவிடும், பேதமையின்றி! அதில் விழுவது நமது மொழியாக இருக்கலாம், பண்பாடாக இருக்கலாம், கலையாக இருக்கலாம், சிறப்பு தனி விழுமியங்களாக இருக்கலாம்! எல்லாம் அவுட்!

3. அப்போது அதிக செலவில்லை. ஜெமினி வாசன் போல் ஒரு சிலரே பிரம்மாண்டமாக யோசித்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ் போல் பட்ஜெட் படங்கள் நிறைய நல்ல தரத்தில் வந்திருக்கின்றன. ஆகும் அதிகச் செலவு கச்சா பிலிம்தான். அதற்குத்தான் டிமாண்டு அப்போது. அதுவும் கருப்பு வெள்ளைப் படங்கள்தான். நடிக, நடிகையரெல்லாம் 'காண்டிராக்ட்' போட்டு பல வருடங்கள் ஒரே படத்தில் நடித்தனர். அப்போது இன்னும் தமிழ் சினிமா இருமுனைப்படவில்லை (சிவாஜி-எம்.ஜி.ஆர்).

அப்படி வந்த நூற்றுக்கணக்கான படங்களை இங்கு பட்டியலிட்டால் இது வலைப்பதிவு எனும் குணம் தாண்டி, ஆராய்ச்சி வெளியீடு எனும் குணம் பெறும். வலைப்பதிவின் அழகே அதன் தனித்தன்மைதான். அவரவர் 'குட்டி உலகம்'. விக்கிபீடியாவில் எழுதுவதைவிட வலைப்பதிவு இன்னும் சுகம். நமக்குப் பிடித்ததைச் சொல்லலாம். கையைப் பிடிக்க ஆளில்லை (பொது மரியாதை கடைபிடித்தால்).

மேலும் இப்படங்கள் அப்போது என்மீது ஏற்படுத்திய தாக்கம் என்று புருடா விடமுடியாது, ஏனெனில் அப்போது நான் மழலை மாறாச் சிறுவன். ஆனால், இப்படங்கள் 60களிலும் ஓடிக்கொண்டிருந்தன. மேலும் எங்களூர் அரங்கு நகர் அரங்கு (டூரிங் டாக்கீஸ்)ஆனதால் புதிய படமெல்லாம் வெளியிட முடியாது. பழசைத்தான் வாங்கிப் போட வேண்டும். அது ஒருவகையில் எனக்கு நல்லதாகப் போய்விட்டது!

1953-ல் ஜெமினியின் ஒளையார் வருகிறது! பல நூறு யானைகள் ஒன்றாக வந்து கோட்டையை இடிக்கும் காட்சியை 'lord of the ring' போன்ற கிராபிக்ஸ் இல்லாமல் ஜெமினி வாசன் எடுத்திருப்பார். கே.பி.சுந்தராம்பாளை தமிழ் உலகிற்கு இனம் காட்டிய படம். அதன்பின் எப்படி வள்ளுவர் என்றால் 'சாலமன் பாப்பையாவோ' அதுபோல் ஒளையார் என்றால் கே.பி.எஸ் என்றாகிவிட்டது!

1954- மனோகரா. சிவாஜியின் அற்புதமான உரையாடல் வெளிப்பாடு. எம்.ஆர்.ராதாவை இனம் காட்டிய "ரத்தக் கண்ணீர்".

1955- கணவனே கண்கண்ட தெய்வம். ஜெமினி பல அற்புதமான படங்களை வழங்கியுள்ளார். சிவாஜியைவிட ஜெமினியே பரிசோதனை முயற்சிகள் பல செய்தவர். மிஸ்ஸியம்மா, இது 'நடிகையர் திலகம்' சாவித்திரியை இனம் காட்டிய படம். அந்தக் காலப் படங்களின் அழகு என்னவென்றால் நடிகைகள் கண்ணசைவில், உதட்டசைவில் பேசுவர். "பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?" என்பது ஒரு ரசனை. இப்போது எடுத்தவுடன் தொப்புளில் பம்பரமாட வந்துவிடுகிறார்கள். Sexual perversion என்பதைக் காண வேண்டுமெனில் தற்போதைய தமிழ் சினிமா, சீரியல் பார்த்தால் போதும்.

1956- அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது அரபீய சரக்கு. எம்.ஜி.ஆருக்கு இதெல்லாம் அல்வா சப்ஜெக்ட். புகுந்து விளையாண்டு இருப்பார். எம்.ஜி.ஆர் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகலாம், பொழுதைப் போக்கிவிட்டு வரலாம்! மதுரை வீரன். இதில் எம்ஜிஆரை மாறுகால், மாறுகை வாங்கிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டமான தமிழ் சினிமா பிம்பம் உருவாகிவருகிற காலம். பின்னால் ஒரு படத்தில் அவர் செத்துப்போவதாகக் காட்ட, படம் படுத்துவிட்டது. இந்தப் படத்தில் கூட, தண்டனைக்குப் பிறகு அவர் இருதேவிகளுடன் தெய்வமாக மீண்டும் வந்துவிடுவார். "சுபம்" என்று கடைசியில் போடுவார்கள். அதனால் செத்துப் போனாலும், ஆவியாக வந்து சுபம் என்று சொல்லிவிட்டுப் போவார்கள். இல்லையெனில் சிவன் வந்து உயிர் கொடுப்பார். இப்படி..

1957-ல் மாயாபஜார் வருகிறது. சூப்பர்படம்! பீமனின் மகனான கடோத்கஜனாக 'சாவித்திரி' ஆகா! அவங்க எல்லாம் செய்வாங்க!

1958-ல் காத்தவராயன். சிவாஜி-கண்ணாம்மா போட்டி போட்டு நடிக்கும் படம். கடைசி வசனம் சூப்பர். இதே வருடம் நாடோடி மன்னன். எம்.ஜி.ஆர் திரு உரு (icon) உருவாகிவிடுகிறது. சம்பூர்ண ராமாயணம். எப்படியும் தமிழனாகப் பிறந்த ஒருவன் கடைசி பட்சமாகவேணும் தெரிந்திருக்க வேண்டிய கதை, பார்க்க வேண்டிய படம் (கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ! இது திருவாய்மொழி). இப்போது பார்த்தாலும் கூட "ஏன் பிரிந்தீர், என்னை ஏன் பிரிந்தீரோ" என்று சிவாஜி கையை தலைக்கு மேல் கூப்பிக்கொண்டு பரதாழ்வானாக வருவது நெஞ்சை உருக்கிவிடுகிறது. விஷ்ணு என்றால் அது என்.டி.ஆர், பாவமென்றால் அது சிவாஜி. அதே வருடம் ஜெமினிக்கும் ஒரு வெற்றிப்படம் வருகிறது, அதுவே "வஞ்சிக்கோட்டை வாலிபன்". ஜெமினி மெல்ல, மெல்ல "காதல் மன்னனாக" மாறி, மாற்றுக் கதாநாயகனைத் தமிழ் சினிமாவிற்குத் தருகிறார்.

1959-சிவாஜி வருடம்! நிச்சயமாக. பாகப்பிரிவினை, வீரபாண்டியக் கட்டபொம்மன். தமிழ் உச்சரிப்பு என்றால் அது சிவாஜி என்று நிலையாக்கிய படம். பள்ளி நாட்கள் முழுவதும் எங்கு பார்த்தாலும் "ம்..நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ" வசனம்தான். எல்லோருக்கும் இது மனப்பாடமாகியிருந்தது. ஜெமினியின் திரை ஓவியம் "கல்யாணப்பரிசு". ஸ்ரீதர் என்ற மெல்லினத்தைக் இனம் காட்டிய படம். இதே வருடம் இன்னொரு முக்கிய சரித்திரப்படம் வருகிறது. அது சிவகங்கைச் சீமை! இந்த இரண்டு படங்களையும் தமிழனாய் உள்ளவன் பார்க்க வேண்டும்.

1960-க்குள் தமிழ் சினிமா காமெடி சப்ஜெக்டை நாசுக்காகக் கையாளத்தொடங்கி விட்டது. நல்ல உதாரணம் டணால் தங்கவேலு, ராமாச்சந்திரன் கலக்கும் "அடுத்த வீட்டுப் பெண்"

இரும்புத்திரை (படிப்பிற்கும் ஒரு கும்பிடு! பட்டத்திற்கும் ஒரு கும்பிடு! பாசா, பெயிலா போடும் இந்த வழக்கத்திற்கும் ஒரு கும்பிடு). படிக்காத மேதை. பாவை விளக்கு. சிவாஜிக்கு வெற்றி மேல் வெற்றி. அகிலனின் நாவலை படமாக்கி தேசிய விருதும் இப்படம் பெறுகிறது.மாடர்ன் தியேட்டர்ஸ் "கைதி கண்ணாயிரம்" என்றொரு படமெடுத்து "alternative cinema" ஒன்றை இனம் காட்டுகிறது. எப்போதும் புது முகங்கள். விரு, விருப்பான கதை, காட்சி அமைப்பு, சண்டைக் காட்சிகள், ஹிட் பாடல்கள் இப்படியொரு ஆச்சர்யமான பார்முலா. I really miss Modern Theaters. மனோகர் என்ற நாடகக் கலைஞனை தமிழ்நாட்டிற்கு இனம் காட்டிய படம்.

பேசும்படம்-02

ஒரு வகையில் பார்த்தால் 60-70கள் தமிழ் உணர்ச்சியின் பொற்காலம் எனலாம். இதைத் திரையுலகம் நன்கு பயன்படுத்திக் கொண்டது அல்லது திரையை தமிழர்கள் இந்த உணர்விற்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம். 60 களில் வெளி வந்து தாக்கத்தை ஏற்படுத்திய படங்களென்று சிலவற்றை விக்கி சொல்கிறது. அந்த அட்டவணைக்குள் போவதற்குள் சில எண்ணங்கள்.

எம்ஜிஆர் படங்கள் எல்லாம் பார்க்கக்கூடியவையே. அவர் பாவடை கட்டி நடித்த காலத்திலிருந்து :-) ஏனெனில், அவர் படங்கள் இதமானவை. ஒரே பார்முலா. எந்த மாற்றமும் கிடையாது. ஹீரோ நல்லவர். பரோபகாரி பழனி (அம்புலிமாமா!).வீரம் மிக்கவர். சங்க வாழ்வை பிரதிபலிப்பவர். காதல், வீரம் இவை ரெண்டுதான் அவர் படங்களின் அடிக்கோடு.

சிவாஜி மிக, மிக வித்தியாசமான படங்களைத் தந்தவர். அவரது முழுத்திறமையையும் தமிழ் சினிமா கொண்டு வந்ததா? என்பது இன்னும் ஒரு கேள்விக்குறிதான். கமலே ஆச்சர்யப்படும்படி, அவர் டான்ஸ் செய்திருக்கிறார் (யாரடி நீ மோகினி); என் தம்பி என்ற படத்தில் எல்லோரும் மூக்கில் விரலை வைக்கும் வண்ணம் கத்திச் சண்டை செய்திருக்கிறார். அவர் ஒரு பூரணக் கலைஞர். அவருக்கு இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டால் செய்து விடுவார். முதல் படமான பராசக்தியில் மார்கழிக் குரலோன் சி.எஸ்.ஜெயராமன் பின்னணி பாட வாயசைப்பார் பாருங்கள். அது நடிப்பு.

ஆனால் சிவாஜி படத்தை ரசிக்க ஒரு அனுபவ முதிர்ச்சி வேண்டும். 60 களில் சுத்தமாக அது எனக்குக் கிடையாது. பள்ளிச் சிறார்களுக்கு பிடித்தவர் எம்.ஜி.ஆர். எனக்கும்தான்.

50 களில் வெளிவந்த படங்களும் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. உம்.பாகப்பிரிவினை, அந்த நாள் போன்றவை. பாட்டிற்காக படங்கள் எடுத்தார்கள் என்றால், பாட்டே இல்லாமல் படம் எடுத்தார்கள் 'அந்த நாளில்'. அதை மீண்டும் பார்க்க வேண்டுமென ஆசை. நிச்சயம் இப்போது பிடிக்கும். பாகப்பிரிவினையில் சிவாஜி, சரோஜாதேவி, ராதா என்று போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். எம்.ஆர்.ராதாவை ரசிக்கவும் முதிர்ச்சி வேண்டும். அது அப்போது இல்லாததால் அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது! இரும்புத்திரை என்றொரு படம். அதில் வரும் பாடல் என் நெஞ்சை விட்டு என்றுமே அகன்றதில்லை. அதுதான் "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு, நானிருக்கும் நிலமை என்னவென்று புரியுமா?" என்ற பாடல். இந்தப் பாடலுக்காகவேணும் இப்படத்தை மீண்டும் காண வேண்டும். இருப்புத்திரை கதாநாயகி வைஜயந்திமாலா. இவரை எனக்குப் பிடிக்கும். காரணம் பள்ளிப் பருவத்தில் என்னைக் காதலித்த (?) லதா வைஜயந்திமாலா போலவே இருப்பாள். சினிமாவின் தாக்கத்தால் காதல் உணர்வு இளமையிலேயே வந்து விட்டதா? இல்லை, இருக்கின்ற உணர்வுகளைத்தான் திரை காட்டுகிறதா? என்பது குஞ்சு முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பது போன்றதோர் கேள்வி. திரை இல்லாமலும் காதல் மலர்ந்திருக்கும். ஆனால், திரை அதற்கு மிகவும் உதவியாக இருந்தது. சினிமாப் பாடல்கள் மூலம் கவி அல்லாதவன் கூட தன் உணர்வினைச் சொல்ல முடிந்தது! ஆனால், அந்தக் காலத்தில் வீட்டில் சினிமாப் பாடலெல்லாம் பாட முடியாது. எப்போதாவது அக்கா, அப்படியே போய் வரும் போது முணு, முணுப்பாள். அதுவே சுகந்தமாக இருக்கும்.

50 வரைத் தமிழ்க் குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தன. எங்கள் குடும்பமும் அப்படியே. இப்படி ஒற்றுமையாக வாழும் குடும்பங்களில் பிரிவினை வருவது கொடுமையானது. இதைக் காட்டும் படம் பாகப்பிரிவினை. எனவே 50-ல் வெற்றி கண்ட பாகப்பிரிவினையும், அந்தநாளும் சிபாரிசு செய்யத் தக்கவையே! முதல் படம், ஒரு காலக் கண்ணாடி என்ற அளவில். அந்த நாள் தமிழில் பாடல் இல்லாமல் வந்த ஒரே படம் என்ற காரணத்திற்காக. இப்போது, எல்லோரும் ஏன் தமிழ் நாயகனும், நாயகியும் ஒரு கோஷ்டியுடன் பாடல் பாடிக்கொண்டு காதல் செய்கின்றனர் எனக் கேட்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கு காட்டவாவது, ஒரே ஒரு படமாவது தமிழில் வந்திருக்கிறதே! வாழ்க!

பேசும் படம் - 01

சினிமா என்பதற்கு மிகவும் அழகான தமிழ்ச்சொல் பேசும்படம். நான் பேசும் படம் காலத்தில் பிறந்தவன். அதற்கு முன் பேசாப்படங்கள் ஓடியிருக்கின்றன. பின்னால் சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அறிந்து கொண்டேன். எங்களூரில் எவரெஸ்ட் டூரிங் டாக்கீஸ் என்று ஒரு பேசும் படம் அரங்கமுண்டு. அது தென்னங்கூரைத் தியேட்டர். ஏனெனில் சட்டத்தின் படி அது 'நடமாடும் திரையரங்கம்'. அங்கு மதியக் காட்சியெல்லாம் கூடாது. ஆனாலும் எம்.ஜி.ஆர் படங்கள் பிரபலமான அக்காலக்கட்டத்தில் தீபாவளி, பொங்கலென்றால் மேட்னி ஷோ உண்டு. கேபினிலிருந்து சினிமா ஒளிக்கீற்று, தென்னைக்கூரையிலிருந்து சூரிய ஒளி என்று ஒரே நேரத்தில் பல காட்சிகள் ஓடும். எம்.ஜி.ஆர் ரசிகர்களான 'விசிலடிச்சான் குஞ்சுகள்' விடும் புகைச் சுருள் சூரிய ஒளியில் வளைந்து, வளைந்து ஓடும் காட்சி அழகாகவே இருக்கும். இப்போதுள்ள சுகாதார விழிப்புணர்வில் அம்மாதிரி இடங்களுக்கு காசு கொடுத்துக் கூப்பிட்டாலும் போக மாட்டேன். ஆனால் அப்போது சினிமா என்ற மாயாவியின் பிடிக்குள் இருந்தோம். இப்போதும் விடுபட்டோம் என்று சொல்வதற்கில்லை.

நான் வளர்ந்த காலம் பாகவதர், கிட்டப்பா போன்ற சங்கீத சாம்ராட்டுகள் போக்கொழிந்த காலம். பாடலெக்கென்றே படங்கள் ஓடியிருக்கின்றன அப்போதெல்லாம். டி.எம்.எஸ், சுசீலா என்று கொடிகட்டிப் பறந்த காலம். தெலுங்கர்களாக இருந்தாலும் தெளிவாகத் தமிழ்ப் பேசிய நடிகைகளான சாவித்திரி, கண்ணாம்பா, சரோஜாதேவி (கன்னடா), மற்றும் நாகேஸ்வரராவ், ரங்காராவ், பாலய்யா (மலையாளம்?)போன்றோர் நடித்த காலம். அப்போது தமிழ் மொழி மீது எல்லோருக்கும் ஒரு பற்று இருந்தது. 'டணால்' தங்கவேலு, சந்திரபாபு (தெலுங்கு), பின்னால் நாகேஷ் (தெலுங்கு) என்று 'கலக்கிய காலம்'. நகைச்சுவையில் ஒரு நிதானம் இருக்கும். கொச்சைத்தனம் இருக்காது. சினிமாவும் தமிழ் விழுமியங்கள் மீது மரியாதை வைத்திருந்த காலம். தமிழ் வசனங்களுக்காகவே பிரபலமான ஒரு கதாநாயகன் உருவான காலம். நாட்டியமென்றால் அது பரதம் என்று இருந்தது. பரதத்தின் உருப்படிகளை மேலாக தொட்டுச் சென்றாலும் அதைக் காட்டவேண்டுமென்ற ஒரு முனைப்பு இருந்தது. இல்லையெனில் சினிமா நடிகையுடன் இசைக்க மாட்டேன் என்று சொன்னாலும் விடாப்பிடியாக உட்காரவைத்து காரக்குறிச்சியை (சரிதானே?) நாதஸ்வரம் இசைக்க வைத்திருக்காது அன்றைய சினிமா. (வளரும்)

பாரு! பாரு! பயோஸ்கோப்பு பாரு! பாரு!


வரும் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்யும் சினிமா என்று எழுதுமாறு சாம்பார்வடை கேட்டுக் கொள்ளார். இவர் என்னைத் தெரிவு செய்ததற்குக் காரணம் எனக்கு சினிமா பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும் எனது தலைமுறைதான் சினிமாவை தமிழ் வாழ்வின் முக்கிய குறியீடாக எந்த மறுதலிப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டது. பள்ளிப் பருவத்தில் பார்பர் ஷாப்பிற்குப் போனால் சினிமா, பள்ளிக்குப் போகும் வழியில் எம்.ஜி.ஆர்/சிவாஜி ரசிகர் மன்றங்கள், பள்ளி மாணவர்களும் சினிமா பற்றியே நிறையப் பேசுவர். அப்போதுதான் சினிமா எனும் ஊடகம் ஒரு அரசியல் தன்மை பெறுகிறது. முதன் முறையாக இந்திய சரித்திரத்தில் கொள்கை என்று ஏதுமில்லாமல் வெறும் ஊடகம் காட்டும் பிம்பத்தை நம்பி தமிழகம் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது. சினிமா அரசியல் பிரச்சார ஊடகமாகிப் போனது 60 களிலிருந்துதான்.

இப்போது சினிமா என்பது முற்றும் முழுக்க தமிழன் வாழ்வை ஆக்கிரமித்து விட்டது. சினிமா இல்லாமல் இனிமேல் தமிழனால் வாழ முடியாது எனும் நிலை. தமிழனின் உச்ச கட்ட கலை வெளிப்பாடாக சினிமா மாறிப்போனது. காரணம் சினிமா பொது ஊடகம். யார்
வேண்டுமானாலும் பார்க்கலாம். சினிமாப் பார்க்க ஆகும் செலவு குறைவு. இது இவ்வளவு பிரபலமடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சினிமா நடிகர்ளை கூத்தாடி, வேசிகள் என்றெல்லாம் சொல்லி ஓரங்கட்டப் பார்த்து கடைசியில் உயர்குலப் பெண்கள்/ஆண்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இந்தத் தொழிலில் இணைய வேண்டிய கட்டாயம். கர்நாடக சங்கீதம் கூட இப்போது சினிமா பாணிக்கு மாறிக்கொண்டு வருகிறது. நாடகம், கூத்து என்பதையும் சினிமா கபளீகரம் பண்ணிவிட்டது. இதன் தொழில்திறன் செல்லும் போக்கில் தமிழே தெரியாமல் தமிழ் படங்களில் நடிக்கலாம் எனும் அளவிற்கு வந்துவிட்டது.


சினிமா வெறும் பணத்தை நம்பும் தொழில். காசு பண்ணுவதற்காக எந்தவிதமான சமரசமும் அது செய்து கொள்ளும். அங்கு தமிழ் விழுமியங்களுக்கு இடமில்லை. ஆனால் தமிழ்க் கலாச்சாரத்தைக் காட்டுவது போல் அது ஏமாற்றும். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்தினம் இவர்கள் வந்த பிறகு ஒருவகையான இந்தியப் பொதுத்தன்மை சினிமாவிற்கு வந்துவிட்டது. இந்தியப் பிரச்சனைகள் கதைக்கரு ஆகின்றன. திரை இசை என்பது ஒரு Pan Indian Flavour கொண்டு இயங்குகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசையை எந்த ஒரு பிரதேச இசை என்றும் சொல்லமுடியாது. கர்நாடக மெட்டில் ஆரம்பித்து ஹிந்துஸ்தானியில் முடியும். இடை, இடையே ராஜஸ்தான், குஜராத்தி மெட்டுகள் பாட்டில் நிரவி இருக்கும்! எனவே அவரது Pan Indian மெட்டை வைத்துக் கொண்டு இந்தி இசை அமைக்கலாம் அல்லது தமிழ்/தெலுங்கு இசை அமைக்கலாம். நான் இது நல்லது, இது கெட்டது என்றெல்லாம் பேசப்போவதில்லை. நிதர்சனத்தைப் பேசிச் செல்கிறேன்.

இந்தப் பின்னணியில், வரும் சந்ததியினர் பார்க்க வேண்டிய படங்கள் என்று எந்த அளவுகோலை வைத்துச் சிபாரிசு செய்வது?

கலை வடிவம் என்று பார்த்தால் முன்பு போல் பரத நாட்டியத்தைத் தூக்கிப்பிடிக்கும் பழக்கம் போய்விட்டது. சம்பிரதாயம் என்ற சொல்லே சினிமா உலகில் வழக்கொழிந்து போய்விட்டது. மைக்கேல் ஜாக்சன் பிரபலப்படுத்திய கருப்புக் கலாச்சார நடனம், அமெரிக்கா உருவாக்கிய ராப் இவையெல்லாம் தமிழ்க் கலையுடன் ஒன்றிவிட்டன. தமிழ் நடனம் என்று சொல்ல ஏதுமில்லை.

தமிழ் மொழி என்ற அளவுகோலை எடுக்கவே கூடாது. ஏனெனில் சினிமாவின் முதல் பலி மொழிதான். சினிமாவும், சின்னத்திரையும் தமிழ் மொழிச் சுத்தம் பற்றி கண்டு கொள்வதில்லை. எல்லா நடிகைகளுக்கும் இரண்டு பேர்தான் மாற்றி, மாற்றி பின்குரல் கொடுக்கின்றனர். நடிகைகளுக்கு தமிழ் தெரிவதில்லை. தமிழ் பேசக்கூடிய நடிக, நடிகைகளும் ஒரு சொதப்பல் மொழியில் பேசுகின்றனர். அதுதான் ஸ்டைல்.

இந்த வயதினர்தான் பார்க்க வேண்டும் எனும் அளவுகோல் சினிமாவிற்குக் கிடையாது. அதுவொரு கலவை (மசாலா). எனவே எல்லோரும் எல்லாப்படத்திற்கும் போகலாம். முன்பெல்லாம் "ஏ" சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். இப்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டனர். ஏனெனில் எல்லாப்படத்திலும் ஏதாவதொரு காட்சி வரம்பு மீறுகிறது. பாட்டுக்கள் எல்லாம் semi-porno வகையைச் சார்ந்தவை. காமெடி வசனம் என்ற பேரில் எவ்வளவு கொச்சையாகப் பேசமுடியுமோ அவ்வளவு கொச்சைத்தனம் வந்துவிட்டது.

இப்படியெல்லாம் எவ்வளவுதான் சொன்னாலும் எல்லோரும் சினிமாவிற்கு போய்க்கொண்டுதான் இருக்கிறோம். ஏன்?

அ. செலவழிக்க நேரம் இருக்கிறது. வருகின்ற காலங்களில் இது இன்னும் கூடும் என்பதொரு கணிப்பு.

ஆ. சினிமாவின் கவர்ச்சி எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. நாலு பேர் இருக்கும் போது "சீ!சீ" என்று சொன்னாலும் உள்ளுக்குள் அது எல்லோரையும் ஈர்க்கிறது. எல்லோருடைய ஈரக்கனவுகளுக்கும் அது தீனி போடுகிறது.

இ. எல்லாப் படங்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்திவிட முடியாது. ஏனெனில் தொழில் நுணுக்கம் தெரிந்த சிலர் மடை மாற்றம் செய்ய அவ்வப்போது முயன்று கொண்டேதான் இருக்கின்றனர். எனவே "நல்ல" படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் எவை "நல்ல" படம் என்று யார் சொல்வது? சினிமா ஒரு பொதுஜன ஊடகம். அதில் ஆயிரம் வேறுபட்ட ருசி உடையவர்கள் இருப்பார்கள். நான் கொச்சை என்பது பலருக்கு 'அல்வா' சாப்பிடுவது போலிருக்கலாம். சினிமா ஒன்றுதான் நட்டுக் குத்தாக தமிழ் சமூக அடுக்குகளை தகர்த்திருக்கிறது. அதன் பரிணானம் கண்காணிக்கத் தக்கது. தமிழ்நாடு போன்ற இறுகிய சமூக அடுக்குகள் கொண்ட நாட்டில் சினிமா எல்லா சமூக ருசிகளுக்கும் தீனி போடுகிறது. எல்லா சமூகங்களும் தன் ஆளுமையை இவ்வூடகத்தில் செலுத்துகின்றன. அதே போல் எல்லா சமூகங்களையும் சினிமா பாதிக்கிறது.

என்னென்ன படங்களைச் சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? சரி, யாராவது சும்மா ஒரு லிஸ்டு போடுங்கள். அதிலிருந்து நான் எனக்குப் பிடிச்சதைச் சொல்கிறேன்.

இந்திய எஞ்சினியர்களே! கொரியாவில் தங்குங்கள்!

சனிக்கிழமை இரவு உல்சான் எனும் நகரத்திற்கு தீபாவளி விழாக் காண நண்பர் அனந்தகிருஷ்ணன் அழைத்துச் சென்றார் (போகவர 8 மணி நேரக் கார்ப் பயணம்). உல்சான் நகர் கொரியாவில் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் அங்குள்ள ஹூந்தே (현대 - Hundai) கார் தொழிற்சாலையும், உலகின் ஆகப்ப்பெரிய (நம்பர் ஒன்)கப்பல் கட்டும் தொழிற்சாலையும்தான். உல்சான் வளைகுடாவை அப்படியே ஹுந்தே நிறுவனம் வளைத்துப் போட்டுவிட்டது. சுமார் 5000 கார்களை அள்ளிச் செல்லும் பெரிய கப்பலை இவர்களே செய்து கொள்கிறார்கள். இங்கு வேலை பார்க்கும் இந்திய எஞ்சினியர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்ல, Oh Suk Koh, Chief Executive of U S Division and President of U S Division வந்திருந்தார்.

தீபாவளி வாழ்த்துக்களுடன், "இந்திய எஞ்சினீயர்கள் கொரியாவிலே தங்கி விட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். கொரியாவிற்கும், இந்தியாவிற்குமுள்ள கலாச்சாரத்தொடர்பு என்பது தொன்மையானது; வேற்றுமைகள் இருப்பினும் ஒற்றுமை கண்டு, மகிழ்ந்து இங்கேயே தங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

கொரியா இந்திய தொழில் வல்லுநர்களுக்கு புதிய அமீரகமாக (வளைகுடா) மாறி வருவதை இங்கு சாரி, சாரியாக வந்து சேரும் இந்தியர்களைக் கண்டால் புரிந்து கொள்ளலாம். இங்குள்ள இந்தியர்கள் இரண்டு யாகூ மடலாடற்குழுக்கள் நடத்துகின்றனர். இங்குள்ள தமிழர்களை தமிழ்ப்பணிக்கு இழுக்க நானும் ஒரு மடலாடற்குழைவை ஜனவரி 8, 2004 தொடங்கி நடத்தி வருகிறேன். பொதுவாக இது மாதிரி சமூகத் தொண்டு செய்யும் குழுக்களில் அதிக அலசல்கள் இருப்பதில்லை. இருப்பினும் இக்குழுவிற்கு மீண்டும் உயிர் தரவேண்டும். இவர்களுடன் பேசிய போது நிறைய விஷயம் தெரிந்து கொள்ள முடிகிறது!

ஆங்கிலம் பேசுங்கள்! தவறில்லாமல்....

ஆங்கிலம் என்பது மற்ற மொழிகள் போல் அழகானது, வளமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதுவொரு உலக மொழி எனும் நிலையை அடைந்துள்ளது. இதனால் ஆங்கிலம் அறிந்த இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் ஆங்கிலக் கல்வி என்பது இந்தியாவில் இன்னும் சீராக முறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆங்கிலம் தெரியும் என்ற தைர்யத்தில் வெளிநாடு வரும் பலர் சில ஆண்டுகளில் ததிகினதோம் ஆடுகின்றனர். அதுவும் சமகாலத் தமிழர்களுக்கு சீரானத் தமிழ் அறிவும் இல்லை, ஆங்கில அறிவுமில்லை. சமீபத்தில் என் ஆய்வகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்த ஒருவர் பேசிய தமிழ் வருத்தமளித்தது. ஒரு உதட்டள்ளவு தமிழ், உதட்டளவு ஆங்கிலம் என்று இருக்கிறது. 'பில்லையார் எனக்குப் பிடிக்கும்' 'தமில் வரும், ஆனா..' என்பது போல். கேட்டால் தமிழ்ப் பற்று அதிகம் உண்டு என்கிறார். பற்று வைத்து என்ன பயன்? பயில வேண்டாமா?

நம் தமிழருக்கு ஒரே ஒரு வார்த்தை:

தமிழ்ப் பேச வேண்டுமென்று விரும்பினால் தமிழில் பேசுங்கள். அது கேவலமில்லை. தமிழும் ஆங்கிலம் போல் ஒரு மொழிதான்.

ஆங்கிலம் பேச வேண்டுமெனில், தெளிவாக ஆங்கிலம் பேசுங்கள். தமிழைக் கலக்காதீர்கள். ஒரு கலவை மொழியால் யாருக்கும் பிரயோசனமில்லை என்பது மட்டுமல்ல, உங்கள் எண்ணத்தைச் சீராக எந்தவொரு மொழியிலும் சொல்லத் தெரியாமல் போய்விடும். ஒரு நாகரீகத்திற்காக இப்படியொரு கலவை மொழியில் பேசப் போக, அதுவே பழக்கமாகிவிடும். நமது தொலைக்காட்சிப் பேட்டிகளில் 99% இப்படிக் கலவை மொழியிலேயே நடைபெறுகிறது. இது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பது நம்மவர் வெளிநாடு வரும் போது தெரிகிறது. இந்தியாவிலேயே இம்மொழிகளைத் தனித்தனியாகப் பேசி பயிற்சி பெறுங்கள்.

இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.

வாழ்க நற்றமிழர்.

அலையெனப் புரளும் பாவம்!தீபாவளிச் சாப்பாடு, பட்டாசு என்பது மட்டுமல்ல. தீபாவளி நிகழ்ச்சிகள் என்றொன்றுண்டு! நம்ம ஊரில் எப்படியோ? வெளியூரில் இதுதான் தீபாவளியே. சமீபத்தில் எங்க ஊரிலும் இப்படியொரு தீபாவளி பார்ட்டி இருந்தது. அது போது எடுத்த வீடியோ இது. இதில் என்ன அழகு என்றால், அந்தப் பெரிய பெண்தான் முழுக்கக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறாள். இந்த மிச்ச வாண்டூஸ் அப்படியே மேடையிலேறி அந்தப் பெண் செய்வதை அவ்வப்போது பார்த்து நடிப்பது! ஒரே வேடிக்கை போங்கள்! பின்னாலிருக்கும் சிறுவனைப் பாருங்கள். அது பாட்டுக்கு இடுப்பை, இடுப்பை ஆட்டிக் கொண்டு...குழந்தை என்றாலே எல்லாமே அழகுதான். ஆனால் பாவம் சொல்லிக் கொடுத்த பெரியம்மா படற பாடு! அதுதான் பரிதாபம்!!

மணிக்கொடியின் கடைசி ஓசை!

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் எனும் அவதார தோற்றம் இந்தத் திங்கள் (29.10.2007) அன்று முடிவடைந்திருக்கிறது. என்ன இருந்தாலும் இது கொஞ்சம் "டூ மச்" அப்படின்னு சொல்லறீங்களா? அப்படி இல்லை. அவரது கருத்துப்படி நாம் எல்லோருமே ஒவ்வொரு அவதாரங்கள். வானில் மின்னும் வண்ண தாரகைகள். இந்திய சமயக் குறியீடுகளுக்கு பாரதி வழியில் புத்துயிர் அளித்தவர் லா.ச.ரா. அவர் எழுத்தை வாசிக்கவில்லையெனில் நானும் இன்னொரு அறிவியல் மாணவன் போல் அறிவியலோடு இருந்திருப்பேன். என்ன உயிருள்ள எழுத்து! அவர் ஒரு சொற்சிற்பி. செதுக்கிக்கொண்டே இருப்பார். சில கதைகளை 6 மாதம் ஒரு வருடமென்று செதுக்குவார். இப்படி செதுக்கியதை "சிறு" கதை என்று எப்படி சொல்ல முடியும்? சுண்டக்காய்ச்சிய பால் போல் இனிப்பவை அவர் கதைகள். மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேசிய அவர் இன்னும் ஒரு படி போய், "நான் வெறும் முற்றுப் புள்ளி வைத்தால் அதில் என் வாசகன் ஓர் உலகைக் காண வேண்டும்" என்று வேறு சொல்லிவிட்டார்!

இவரை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று ஒருமுறை கடிதம் போட்டுவிட்டு சென்று பார்த்தேன். இனிமையாக வரவேற்று உபசரித்த கையோடு "நீ வைஷ்ணவனா?" என்றார். இவர் எப்படி இதைத் துப்புத் துலக்கினார்? என்ற ஆச்சர்யத்துடன் பார்க்க! "உன் கடிதத்தில் "இந்தத் தேதி தோதுப்பட்டு வருமா?" என்று கேட்டிருந்தாய். இந்தப் பயன்பாடு அவர்களிடம்தான் உண்டு. அதுதான் கேட்டேன்" என்றார். தீர்க்கமான பார்வை. ஒரு மதியம் பூரா பேசி விட்டுக் கிளம்பும் போது, "மாமா சேவிக்கிறேன்!" என்றேன். மாமியையும் உடன் அழைத்து விபூதித் தட்டுடன் நின்றபோது 'சிவ தரிசனம்' ஆன உணர்வு! வாசல்கதவைத் திறந்துவிட்டபடியே "கண்ணா! இது இந்த ஜென்மத் தொடர்பல்ல. நாம் நம்மை முன்பே அறிவோம்!" என்று வேறு சொல்லி அந்த மாலைப் பொழுதிற்கு மேலும் மயக்கத்தை ஊட்டினார். அவர் ஒரு அவதாரம். அவர் அறிந்த நானொரு அவதாரம்! ராமனும், பரசுராமனும் சந்தித்தது போல் இரண்டு அவதாரங்கள் சந்தித்துக் கொண்டன. ஒரு அவதார காலம் திங்களோடு முடிந்து விட்டது. அவர் மறைந்த நாளில்தான் அவர் முன்பு தோன்றினார் என்பது இன்னொரு மயக்கமளிக்கும் விஷயம்!

சைத்தான் சடங்கு


அமெரிக்காவில் ஹாலோவின் வருகிறது. ஊரெல்லாம் பேயென்று பேச்சு! அமெரிக்காவில் விலை போகாத ஐட்டமே கிடையாது. அது பிசாசாக இருந்தாலும்! கீழேயுள்ள சுட்டியில் பேய் பிடித்த 9 இடங்களைத் தந்துள்ளனர். தைர்யமுள்ளவர்கள் நேரடி அனுபவம் பெறலாம்.

அமெரிக்காவின் 9 பேய் பிடித்த இடங்கள்!

பேராநார்மல் என்று சொல்லக்கூடிய இவ்விஷயங்கள் பற்றி நம்மவூரில் நிறையவே கதைகளுண்டு. ஆனாலும் பேய் பிடித்த இடமென்று சுற்றுலா செல்வதில்லை. அமெரிக்காவில் பேயை வைத்து பெரிய வியாபாரமே நடக்கிறது. நம்ம ஊருப் பேய்களை அமெரிக்காவிற்கு விரட்டி விடுங்கள். அங்கு அவை விலை போகும்!

மொழியறிவு

மனிதன் மொழியை உருவாக்கினான் என்பதை விட மனிதன் மொழியில் பிறக்கிறான் என்றே சமகால மொழி அறிஞர்களும், அறிவியலும், நம் பண்டைய வேதமும் சொல்கின்றன. சிலர் ஒரு மொழியில் பிறக்கின்றனர். சிலர் பல மொழியில் பிறக்கின்றனர். இந்தியா தன்னளவில் பல்வேறு மொழிகளுக்குத் தாயாகி தன் பிள்ளைகளுக்கு அம்மொழிகளை அளிக்கிறது. ஆயின் 20ம் நூற்றாண்டின் ஆங்கில மேலாண்மை, ஆங்கிலம் பேசும் மக்களுக்கு வெறும் ஒரு மொழியை மட்டும் அளித்து நின்றுவிட்டது. உலகை நோக்கின் அது பன்முகமாக இருப்பது தெரியும். தானியமென்றால் பல்வேறு வகையுண்டு. காய்கறி என்றால் பல்வகையுண்டு. விலங்குகளும் அப்படியே. எனவே மொழி என்று வரும் போதும் பல்வகையாக இருத்தல் தொலை நோக்கில் பயனளிக்கக் கூடியதே. இதனாலேயே தமிழகம் தன் பரப்பில் தெலுங்கர்களுக்கு, மலையாளிகளுக்கு, கன்னடத்துக்காரர்களுக்கு, குஜராத்திகளுக்கு என்று பலமொழி பேசும் மக்களுக்கும் இடமளித்துக் காத்து வருகிறது. இது இந்தியா சுதந்திரம் அடைந்து அதனால் வரும் இந்திய ஒருமைப்பாட்டிற்கான முயற்சி என்றில்லாமல் காலம், காலமாக அப்படியே இருந்து வந்திருக்கிறது. எனவே குறைந்தது இரு மொழியாவது பேசுங்கள் என ஒரு இந்தியருக்குச் சொல்வது, காலையில் இரண்டு இட்லியாவது பசியாறுங்கள் என்று சொல்வது போல்!

ஆனால் அமெரிக்காவில், இங்கிலாந்தில் நிலமை அப்படியல்ல. அங்கு இன்னொரு மொழி கற்றலின் அவசியத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. அதைத்தான் கீழ்க்காணும் கட்டுரை செய்கிறது.

Bilingual Babes: Teach Your Child A Second Language
By Ilisa Cohen

மீண்டும், அமெரிக்காவில், ஐரோப்பாவில் வாழும் இந்தியர்களுக்கல்ல இச்சேதி. அக்குழந்தைகள் இயற்கையாகவே இருமொழி பேசுகின்றனர். எனினும், இது குறித்த ஒரு பிரக்ஞையைக் கொண்டு வர இக்கட்டுரை உதவும்.

ஆழ்கடல் அதிசயம்

ஆழ்கடலின் ஆழம் காணலாம், ஆனால் அங்கு வாழும் உயிர்களின் முழுக்கணக்கு இன்னும் நமக்கு முழுமையாய் தெரியவில்லை. சமீபத்தில் 5000 மீ ஆழமுள்ள பிலிபைன்ஸ் கடலில் 2800 மீ-ல் பல அதிசய உயிரினங்களைக் கண்டுள்ளனர். ஆழ்கடல்தான் அனைத்து உயிரினங்களின் தொட்டில் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். காற்றாட கடற்கரையோரம் நடந்து பழகும் மனிதனின் ஆதி முன்னோர்கள் கூட அங்கிருந்து வந்தவர்களே! அறிவியல் பயணம் முடிவுறாத வண்ணம் இயற்கை பல அதிசயங்களை பல இடங்களில் ஒளித்து வைத்துள்ளது! சில ஆச்சர்யமான உயிர்களை படத்தொகுப்பாக கண்டு களியுங்கள்:

வேலியே பயிரை மேய்தல்

பள்ளியில் சிறார்களின் பாதுகாப்பு பற்றி நிறையப் பேச வேண்டியுள்ளது. விரிவாக எழுத நேரமில்லை. அமெரிக்காவில் பல விஷயங்கள் பட்டவர்த்தனப்படுகின்றன. அங்கு கூட பள்ளியில் நடைபெறும் பாலியல் வன்முறை பற்றி அதிகம் பேசுவதில்லை என்று கீழேயுள்ள சேதி சொல்கிறது. அங்கேயே அப்படியென்றால் இந்தியாவில் சொல்ல வேண்டியதில்லை. பள்ளியில் பல வகையான வன்முறைகளுண்டு. மாணவர்களுள் பலசாலி, நோஞ்சானைப் படுத்தும் வன்முறை, ஆசிரியர் மாணவர்களிடம் காட்டும் வன்முறை (அடிச்சுத் திருத்துங்க சார்!), பெரிய மாணவன் சின்னவனை பாலியல் இச்சைக்கு உட்படுத்துதல், ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் உறவு கொள்ளுதல்..இது போன்று. ஆணுக்கு ஆண், பெண்ணிற்குப் பெண், மாற்றுப் பால் வன்முறைகள் என்று பலவுண்டு. இது பற்றியெல்லாம் பேச கீழுள்ள கட்டுரை நம்மைத் தூண்டுகிறது!

Sexual misconduct plagues US schools

சரஸ்வதி பூஜையா?

இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் ஆழமாகக் கற்றவர் குறைவு. கம்பன் போல், நம்மாழ்வார் போல், அருணகிரி போல், வள்ளலார் போல் வடமொழி ஞானம் என்பது சுத்தமாகக் கிடையாது. இலக்கியம் தவிர பிற கலை விளக்கம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் குறைவு. இச்சூழலில்தான் ஸ்ரீரங்கன் மோகன ரங்கனும் வித்தியாசமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். நல்ல தமிழ்ப் புலமை, வடமொழி அறிவு, தத்துவ அலசல் (சாக்ரடீஸிலிருந்து, சநாதானம் வரை), ஆங்கில மொழி ஆளுமை, கூத்து இப்படி...இவர் அறிந்த துறைகள் விரிந்து கொண்டு போகின்றன. இவர் மின் உலகிலும் உலாவுகிறார். இவர் சமீபத்தில் மின் தமிழில் "கலையின் விளக்கம்" எனும் பொருளில் எழுதிய கட்டுரையை கீழே தருகிறேன். வாசித்துப் பயன் பெறுங்கள்!சரஸ்வதி பூஜை என்றதுமே அன்று புத்தகம் படிக்கக்கூடாது. பூஜை அறையில் வைக்கவேண்டும். என்ற நினைவு வரும்படியான மடமை நடைமுறையில் எப்படி ஏற்பட்டது? இதே லக்ஷ்மி பூஜை என்றால் அன்று காசையே வெளியில் எடுக்கக்கூடாது. பயன்படுத்தக்கூடாது. சம்பாதிக்கக்கூடாது. அன்று முழுவதும் ஏழ்மையையே பேண வேண்டும் என்று சொன்னால் எப்படி முரணாகவும் விரசமாகவும் இருக்கும். சக்தி பூஜைஅன்று ஆற்றல் அனைத்தையும் இழந்துவிட்டு நோயையும், பலவீனத்தையும் கொண்டாடிக்கொண்டிருக்கவேண்டும் என்றால் கேட்பதற்கே அசிங்கமாக இருக்காது? பின் ஏனோ படிப்பும் அறிவும் சம்பந்தப்பட்ட சரஸ்வதி பூஜையில் அன்று முழுவதும் படிக்காமல், புத்தகம் தொடாமல்( ஏதோ வருடம் முழுவதும் தொட்டுக் கிழித்துவிடுகிறார்ப்போல்) இருப்பதுதான் சரஸ்வதியை வணங்கும் வழி என்று சொன்னால் சென்னை சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்போனால் 'இது ரொம்ப கலீஜா இல்லை?' மற்ற நாட்களில் சிறிது நேரம்தான் படிக்கமுடிகிறது. அவகாசம் இல்லை. ஏதோ இன்று ஒரு நாளாவது முழுக்க முழுக்க படிப்புக்கும், அறிவுக்குமே செலவழிக்கப் போகிறேன் - என்று சொல்வதுதானே சரஸ்வதி பூஜையாக இருக்கமுடியும். பின் இந்தக் கண்மூடி வழக்கம் புத்தியில் மண்ணாக வந்து தொலைத்தது எப்படி? இதைக் கொஞ்சம் யோசிப்போம்.

இப்பொழுது இருப்பதுபோல் அந்தக் காலத்தில் அச்சுப் புத்தகம் இல்லை. ஓலை, சுருள் இப்படி வகையறாதான். இவற்றைக் கட்டிக் கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். வேண்டும் என்ற சுவடிதான் வெளியில் புழங்கிக் கொண்டிருக்கும். வாரம் ஒரு முறை, பக்ஷம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, அயனம் ஒரு முறை, வருடம் ஒரு முறை எடுத்து துடைத்து தகுந்த எண்ணையிட்டுத் தடவி, நாளானவற்றிற்கு மைபூசி துடைத்து காய வைக்கவேண்டிய நியமங்கள் வீடுகளில் சரியாகக் கைவராது. எனவே ஒருநாளாவது நூல்களைப் பராமரிக்கும் பணியாக இருக்கட்டும், ஓலைகளை பாதுகாக்கும் பணியாக இருக்கட்டும் என்று சரஸ்வதி பூஜையில் அந்தக் கடமையை இணைத்தார்கள்.

காலம் மாறிவிட்டது. அச்சு வந்தது. கேடு அகன்றது. வெற்றிடத் தூய்மைப் பொறி பெரும் வசதியைத் தந்தது. மின்படு நூலுருவம் வந்ததும் நிலைமையே முற்றிலும் வேறு. எங்கிருக்கிறது என்று தெரியாத பரவெளியில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கமுடியும். 'சார் நூல்கள் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. எனவே எதுவும் வாங்கமுடிவதில்லை. என்ன செய்வது?' தெரியும் சரஸ்வதிக்கு மக்கள் மடையர்கள். ஏதாவது அசௌகரியம் என்றால் முதலில் தன்னைத்தான் காவு கொடுப்பார்கள். என்று மக்கள் தயவில்லாமலேயே புத்தகம் பாதுகாப்பாக இருக்கும் வழியை அவள் கண்டுபிடித்துக் கொண்டுவந்துவிட்டாள். இனிமேல் பழைய பஜனை நடக்காது.

படி படி சிந்தி. நாள்முழுதும் படி. வாரம் முழுதும் மாதம் முழுதும் ஆண்டு முழுதும். ஆண்டிற்கு ஒரு முறையேனும். சரஸ்வதி பூஜை அன்றாவது நாள் முழுதும் படி. வேகு வேகு என்று காசு பின்னால் ஓடாமல், வேலை வேலை என்று பேயாய் அலையாமல், சம்பாத்தியம் என்ற தவிர்க்கமுடியாத இயந்திரப் பிடியில் சிக்கிச் சுய நினைவே தப்பிவிடுவதிலிருந்து ஒரு நாள் 'ஐய்யா ஜாலி விடுமுறை. இன்று முழுவதும் படிப்பு. சிந்தனை. விவாதம். ஆய்வு என்று ஜமாய்க்கலாம்' என்று எண்ணு. அன்று படித்தால் ஐயோ சரஸ்வதி கோபிப்பாளே! என்று யோசிக்காதே. கேட்டால் நான் சொன்னேன் என்று சொல்.

சரஸ்வதி பூஜை எப்படிக் கொண்டாடலாம் என்று யோசித்துப் பாருங்கள். அன்று முழுவதும் அனைத்து இந்துக்களும் காலை தொடங்கி நாள் முழுவதும் படிப்பு, சிந்தனை, கல்வி, நூல் பேணுதல் நூல் ஆய்வு, அதாவது இந்த நூல் அந்த நூல் என்றில்லை, ஆன்மிகம் புராணம் என்றில்லை, என்ன நூலாயிருந்தாலும், ஆய கலைகள் 64ல் சிக்கினாலும் சரி அன்றேல் சிக்காது போனாலும் சரி, ஏதாவது நூல் ஏதாவது துறை. அன்றைக்கும் காசு பண்ணுவதற்கு என்று இல்லாமல் இருந்தால் சரி. உலகம் முழுதும் இந்த படிப்புத் திருநாள் அமுலில் வந்தால், நாமே ஒரு வெறி கொண்டு புத்தகப் படிப்புக்கென்றே நமது வாழ்நாளில் ஒரு நாளை விடுப்பு நாளாகப் பேணினால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

போயும் போயும் கிரிக்கட் மாட்சுக்கென்று எவ்வளவு நாள் லீவு போடுகிறார்கள். என்ன சாதித்து விட்டது கிரிக்கட் மனித குல வரலாற்றில்? ஆனால் புத்தகம் மனிதனிடம் வந்து எத்தனை நாட்களாகிவிட்டது. என்ன சாதிக்கவில்லை புத்தகங்கள்? நமது பேச்சு, செய்கை, வாழும் வாழ்க்கை இதோ பார்க்கும் கணினி, இணையம் ஈமெயில் ஏன் என்ன இல்லை அனைத்தும் அதோ அந்த ஐயோ பாவம் என்று அமர்ந்திருக்கும் சந்தனம் பூ என்று மக்கள் மடமையை பூசிக்கொண்டிருக்கும் அந்த புத்தகத்தால்தானே, அந்த அச்சுப் போட்ட சரஸ்வதியால்தானே, அந்த மின்வலையில் லயமான கலைமகளால்தானே நமக்குக் கிடைத்தது !!!!
நான் இந்துக்கள் என்று சொன்னேனா சரியில்லை பற்றாது. புத்தகம் அனைத்து மனித குல வரம் அல்லவா? உயிர் சுமந்த மக்கட்குலம் அனைத்தும் என்று வைத்துக்கொள்.
அன்று ஒரு நாள் படி படிக்கச் செய். புத்தகம் இல்லாதோர்க்கு புத்தகம் கொடு. முதலில் அன்று எவரும் வயிற்று பிழைப்பு என்று படிக்கமுடியாமல் போகக்கூடாது. எனவே அன்று முழுவதும் உணவு எல்லோருக்கும் பரிபாலிக்கப் படுதல் வேண்டும். தனியாக படிப்பு. கூட்டமாக சேர்ந்து படிப்பு. படிப்பில் கலந்து கொள்வோருக்கெல்லாம் உணவு, எழுத்து எழுதும் கருவிகள்
குழந்தைகள், சிறுவர், இளைஞர் மனிதர் முதியோர் அனைவரும் அன்று நூலும் கையுமாக இருக்கும் காட்சியை எண்ணிப் பாருங்கள். இப்படி ஒரு நாள் நடந்தால் போதும். மறுநாள் எழுந்திருக்கும் போது உலகம் பல மைல்கள் முன்னேறிப் போயிருக்கும்.ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்
ஊனமின்று பெரிதிழைக்கின்றீர்
ஓங்கு கல்வியுழைப்பை மறந்தீர்
செந்தமிழ் மணி நாட்டிடை வந்தீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வது என்றால்
வாழி அஃது எளிதென்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை அன்றாம்
வீடுதோறும் கலையின் விளக்கம்

(பாரதி)

பரவெளியின் பத்து அதிசயங்கள்!

அறிவியல் வளர, வளர இயற்கையின் விந்தைகள் நம் கற்பனையைவிட விநோதமாக இருப்பதை அறிய முடிகிறது.

"பரவெளியின் பத்து அதிசயங்கள்" இதோ!

யார் பிழை?

கொரிய இந்தியர்கள் எனும் மடலாடற்குழுவில் ஒரு தமிழர் கலைஞரைக் கன்னாபின்னாவென்று திட்டி எழுத, அதற்கெழுந்த எதிர்வினையில் கழக அரசியல் பேசப்பட்டு தமிழின் முதன்மைத்துவம் சந்திக்கு வந்தது. தமிழ் என்றால்தான் உடனே தோள் தட்டிக் கொண்டு வந்துவிடுவேனே (இது பதப்படுத்தலா? இயல்பா? ஏன் இந்தப் பதட்டம்?)! அப்போது பல விஷயங்கள் பிடிபட்டன.

1. வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு இந்தி தெரியவில்லை என்று சொல்லும் போது "உங்கள் தேசிய பாஷை" தெரியவில்லையா?" என வெளிநாட்டார் கேட்கும் போது வரும் அவமானம். (இந்தியாவின் சரித்திரம் தெரியாமல் இருப்பது இதற்கு உட்காரணம்!)

2. வெளிநாட்டில் ஒரு விசேஷம், வைபவம் என்றால் தமிழனைத் தவிர மற்ற எல்லோரும் கொஞ்சமாவது ஹிந்தியில் கதைக்கும் போது வரும் தாழ்வு மனப்பான்மை. குழந்தைகள் அம்மாவைக் கோபித்துக் கொள்வதுபோல் இளம் தமிழர்கள் தமிழக அரசியல்வாதிகளைக் கோபித்துக் கொள்கின்றனர்.

3. தமிழ் என்பது செம்மொழி என்று நாம் காட்டுக் கூச்சல் போட்டாலும் மற்ற இந்தியர்களுக்கு அது "வெறும்" இன்னொரு இந்திய மொழி. வேடிக்கை என்னவெனில் எவ்வளவு ஆதாரம் காட்டினாலும் அது அரசியல்வாதிகளின் கூலிக்கு மாறடித்த அறிஞர்கள் கண்ட முடிவு அதை நம்ப வேண்டிய அவசியமில்லை எனும் துணிபு.

4. சமிஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்பதில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை.

5. தமிழ் எளிய மொழி, அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் தெலுங்கர்கள் கூட, "அட! அதை இப்போது கற்றுக் கொண்டு என்ன ஆகப்போகிறது?" அதற்குப் பதில் சமிஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாமே? எனும் முடிவு! தமிழின் அரிய வளம், சமிஸ்கிருதத்தின் வளத்தின் முன் கூலிக்காரன் நிலையிலேயே நிற்கும் அவலம்.

இவை என்னைக் கொஞ்சம் ஆட வைத்துவிட்டன.

1.தமிழ் மொழி பற்றிய சரியான புரிதல். அதன் தோற்றம், அதன் வளமை, அதன் முக்கியம் ஏன் இந்திய உபகண்டத்தில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகவே தெரியாமல் போய்விட்டது? உண்மையில் நாம் பீடுகொள்ளும் தமிழ் அரியதா? இல்லை நாமே உருவாக்கிக்கொண்ட பிரமையா?

2. சுதந்திர இந்தியாவில் தமிழின் கேடு கெட்ட நிலைக்கு யார் காரணம்? தமிழ் மொழி பற்றிய இந்திய சரித்திரம் ஏன் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் போதிக்கப்படவில்லை. தமிழின் பெயரில் நாம் வஞ்சிக்கப்பட்டுள்ளோமா?

3. தமிழ் மொழி சார்ந்த அரசியல் ஒரு காலக்கட்டத்தின் அவசியத் தேவை. ஆனால், அதுவே தமிழைப் பற்றிய அவதூறுக்கும் வித்திட்டுவிட்டதே. இனி எவ்வளவுதான் தமிழ் உயர்வு பற்றிப் பேசினாலும் அதில் அரசியல் பூச்சைக் காண்பதால் தமிழ் பற்றி இந்திய அரங்கில் பேசவே முடியாது உள்ளதே!

4. செம்மொழி என்றால் என்ன? என்பது பற்றிய தெளிவின்மை. இது தமிழர்களுக்கும்-இந்தியர்களுக்கும் பொது. ஒரு இந்தியர் எழுதுகிறார். இந்தியாவில் ஹிந்திதான் அதிகம் பேசப்படுகிறது (இந்தக் கணக்கு உண்மையா? இல்லை போஜ்புரி, குஜராத்தி என்று மானாவாரியாக ஹிந்தி போல் பேசப்படும் மொழிகள் அனைத்தும் சேர்த்து கணக்கிடுகிறார்களா?), அடுத்து பெங்காலி, அடுத்து தெலுங்கு, அடுத்து மராத்தி, பின் தமிழ் என்று இருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் செம்மொழி என்ற பட்டம்? இது "மைனாரிட்டி ரைட்" எனும் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ? என்று. இதற்கு நான் பதில் சொல்லும் முன் இந்தத் தொடர் நிறைவுற்று என் கடிதம் வெளிவரவில்லை.

ஒட்டு மொத்தத்தில் இந்திய உபகண்டத்தில் தமிழ் பற்றிய புரிதல் மிகக் கேவலமாக உள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லி நாங்கள் ஒரு தலைமுறை பாழாய் போனோம்!


Statement on the Status of Tamil as a Classical Language


The classical status of Tamil


Statement on the Status of Tamil as a Living Classical Language

குறும்படங்கள் "உன்குழலுக்குள்" வாராதா?

சென்னையில் நடக்கும் நாட்டார் கழக விஷயங்கள் குறித்த அழைப்பிதழ் வந்து கொண்டே இருக்கும். அங்கு இல்லையே எனும் வருத்தத்தைத்தரும் அளவு விஷயகனமுள்ளவை நடந்து வருகின்றன. இந்த அழைப்பிதழைப் பாருங்கள் (சொடுக்கினால் பெரிதாகும்). இந்தப் படங்களைக் காண வேண்டுமென்ற ஆவல். எத்தனையோ குப்பை கூளங்கள் "உன்குழல்" (YouTube) அரங்கில் வீடியோவாக வருகின்றன, தமிழ்க் குறும்படங்கள் இப்படி உன்குழல் வீடியோவாக வரும் காலம் என்றோ?

உன்னாலே-உன்னாலே

கொரிய நாட்டின் தேசியக் குறியீட்டுடன் (யின்-யான்) படம் ஆரம்பிப்பதால் மட்டும் இந்தப்படம் எனக்குப் பிடிக்கிறது என்றில்லை. மேலும் பல காரணங்களுண்டு. முதற் காரணம். படப்பிடிப்பு. என்ன இது? தமிழ் சினிமாதான் பார்க்கிறேனா இல்லை ஹாலிவுட் படம் பார்க்கிறேனா என்ற பிரம்மிப்பு. இந்த பிரம்மிப்பை கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் ஏற்படுத்தினார். ஆனால் அதில் சில சீன்கள் மட்டும். இதில் படம் முழுவதும். இதுவொன்னும் மெகா ஸ்டார்ஸ் நடிக்கும், கிகா படமில்லை. புது முகங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். இதுவே இப்படியென்றால், தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை மீண்டும் துளிர்க்கிறது.

அடுத்த காரணம், தமிழ் சினிமா இந்த கோரமான முகங்களைக் கொண்டு, கோரமான வன்முறை காட்டி, காட்டுக் கூச்சல் போட்டு, கொச்சை வசனம் பேசி, காமெடி என்ற பேரில் இந்துநேசன் வசனம் பேசும் காலக்கட்டத்தைத் தாண்டி விட்டது என்பதற்கு அச்சாரம் போல் இந்தப் படம் அமைந்துள்ளது. இளமை உண்மையிலேயே துள்ளுகிறது. சிக்கென்ற கதாநாயகிகள். சுமாரான கதாநாயகன். மோசமில்லை. ஆனாலும் அவனது சகாக்களாக பழைய 40 வயசு ஆட்கள்தான் மீண்டும். இது தமிழகத் தலைவிதி போலும். ஆனாலும், செந்தில், கவுண்டமணி முகங்களைப் பார்த்து புண்ணாகிப் போன கண்களுக்கு இந்தப்படம் விருந்தே!

கதை! அடடே! தமிழ் சினிமாவால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதா? படக்கதை சொல்லப் போவதில்லை. ஒருமுறை கட்டாயம் பாருங்கள். இரண்டாம் முறை கூடப் பார்க்கலாம்.

விமர்சனம் படித்த போதுதான் தெரிந்தது, எனக்குப் பிடித்த 12B பட இயக்குநர்தான் இதையும் இயக்கி இருக்கிறாரென்று. ஜீவா! உமக்கு ஜீவன் இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜீவனைக் காக்கும் ஜீவ சக்தியும் இருக்கிறது!

படப்பாடல்கள் சுமார்தான் (ஹரீஸ் ஜெயராஜ்). அசல் அசின் போல் கதாநாயகி. பேர் சாதாவாம் இல்லை, சதாவாம்! அந்தக் காலத்தில் ஸ்ரீதர் காஞ்சனாவை அறிமுகப்படுத்தினார். அது போல் ஜீவா, தனிஷா என்பவரை அறிமுகப்படுத்துகிறார் (மாற்றிச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும், யார் தனிஷா, யார் சதா என்று இன்னும் பிடிபடவில்லை). வினய் தேறுவார் என்று தோன்றவில்லை. இந்தப்படத்தில் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஒரு காலத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று பார்த்துவிட்டு இடையில் பல கலக்கல்கள் வந்து தமிழ் சினிமாவின் அழகியலை மாற்றிவிட்டன. மீண்டும் தமிழ் சினிமாவின் அழகியல் சரியான பாதையில் ஓடுவது போலுள்ளது. ஆனாலும் இந்த டப்பிங் வந்த பிறகு, எல்லாக் கதாநாயகிகளும் ஜோதிகா-சிம்ரன் பேசுவது போலவே உள்ளது :-)) இறைவா! இறைவா! இந்தத் தமிழை மட்டும் சினிமா உலகில் என்ன செய்வதாய் உத்தேசித்துள்ளாய்?

புயற்பேச்சுதைஃபூன் தாமரை (கொரியப் பெயர் "நாரி) இப்போது எனது தீவைத்தாண்டிக் கொண்டிருக்கிறது!150 கிமீ வேகத்தில் காற்று. ஊ! ஊ! என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது வெளியே! பிலிப்பைன்ஸ் வட கிழக்கில் உருவெடுத்த இக்கோடைப் புயல் தைவான், ஒகினவா (ஜப்பான்) நாடுகளைப் பதம் பார்த்துவிட்டு கொரியாவிற்குள் நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறது. பழைய படங்களில் ஆடுவார்களே, பாவடை புஸ்ஸென்று ஊதிப்பருக்க சுழன்று, சுழன்று ஆடுவார்களே! அது போன்ற நடனம். 2003-ல் முதன் முறையாக ஒரு பெரும் புயலை எதிர்பாரதவிதமாக இங்கு ச்ந்தித்தேன். அதன் வீச்சு என்னெவென்று தெரியாமலே குலை நடுக்கிப் போய் ஒரு நேரடி வருணனை இங்கு தந்தேன். மேமி என்ற அந்தப் புயல் கொடுத்த பேரதிர்ச்சிக்குப் பின் கொரியா இப்போது அசட்டையாக இருப்பதில்லை. இரண்டு நாளாகவே கப்பல்களெல்லாம் எங்கள் ஆய்வகக் கிடையில் கட்டிப் போடப்பட்டுள்ளன. இப்படிக் கப்பல்களெல்லாம் இங்கே ஒதுங்குகின்றன என்றால் புயல் வரப்போகிறது என்று நான் தெரிந்து கொள்கிறேன்!

தெற்கிலிருந்து வருவதால் உஷ்ணக்காற்றையும் கூடவே எங்கிருந்தோ கொசுவையும் இந்தப் புயல் நேற்றுக் கொண்டு வந்துவிட்டது. கொசுத்தொல்லை தாங்கவில்லை! முதல் முறையாக இங்கு இப்படியொரு அவஸ்தை! மற்றபடி இந்தப் புயல் சாது. நிறைய மழையைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறது. பயிர் அறுவடைக்கு நிற்கும் போது என்ன வேண்டியிருக்கிறது மழை?

நமக்குத்தான் புயலென்றால் பயம்! போன வாரம் ஜப்பானில் இருந்தபோது ஒரு புயல்! கருத்தரங்கு அது பாட்டிற்கு நடந்து கொண்டு இருந்தது. பாவம் சேவைக்கென்று வந்திருந்த இரு சிப்பந்திகள் புயலில் இறந்துவிட்டார்கள் என்று பத்திரிக்கை சொன்னது. ஆனால் தோக்கியோ பாட்டுக்கு வழக்கம் போல இயங்கிக்கொண்டிருந்தது! கொரியாவில் கூட மழைக்கிடையிலும் பேருந்துகள் நேரத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தன. இன்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவில் என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். போகமுடியவில்லை. பஸ்ஸு போய்க் கொண்டுதான் இருந்தது. மூடிய பஸ்ஸில் 4:30 மணி நேரம் பயணப்படிருந்தால் மூச்சு முட்டி செத்துப் போயிருப்பேன் (எனக்கு காட்சி பார்க்க வேண்டும், ஓரிருமுறையாவது இறங்கி காற்று வாங்க வேண்டும்!)

இவ்வளவு புயலிருந்தும் மின்சாரம் தடைப்படவில்லை. இணையம் பழுதுறவில்லை. நேற்று கொசுத்தொல்லை தாங்காமல் இரவில் அடைக்கு ஊறப்போட்டு, இன்று அடை-அவியல் சாப்பிட முடிந்திருக்கிறது! கொஞ்சம் மெறாஸ் மிக்சரை (ஒரே காரம்!) கொறித்துக் கொண்டே உங்களுக்குச் சேதி சொல்ல முடிகிறது. புயல் எதற்கு வருகின்றதென்று தெரியவில்லை. கோணலாகச் சுற்றும் பூமி கொஞ்சம் நடுங்கும் போது இப்படியெல்லாம் ஆகிறதென்கிறார்கள். புயல் பெரும் அழிவுச்சக்தி என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. எனக்கென்னவோ கடலைக் கலக்கி சுத்தி பண்ணி, காட்டைத் திருத்தி, பெருக்கிச் சுத்தம் செய்ய இப்புயல் தேவை என்று படுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் கவிதைக்கு இப்புயல் தேவை! என்ன வீச்சு, என்ன கம்பீரம்? என்ன இருந்தாலும் பெரும் சக்திகளுக்கு முன் நாமெல்லாம் சிறுவர்கள் தானே? துபாய்யில் மழை பார்த்ததில்லை என்கிறார்கள். இந்த மழையைக் கொஞ்சம் அனுப்பி வைத்தால் என்னவென்று தோன்றுகிறது! புயலே! நீ! வாழ்க!

ஜப்பான் விஜயம்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் ஒரு கருத்தரங்கிற்காக ஜப்பான் சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேச ஜப்பானிய இளவரசர் வந்திருந்தார். கீழே வீடியோ காண்க.ஒரு நாட்டில் சில வருடங்கள் வாழ்ந்து விட்டால் பின் அது நம் சரிதமாகிவிடுகிறது. தன்னையறியாமல் ஒரு பிடிப்பு! தோக்கியோவின் கின்சா, அசாகுசா, மெய்ஜி பூங்கா என்று சுற்றும் போதெல்லாம் நெகிழ்வாக இருந்தது. தாய் வீட்டிற்கு வருவது போல். கருத்தரங்கம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது (அரசு அழைப்பு என்றால் சும்மாவா?) அந்த விருந்தில் எதிர்பாராத விதமாக 'விருந்தின் நாயகன்' என்ற பட்டம் எனக்கு சூட்டப்பட்டது. என்ன விஷயமென்றால் அக்கா கொடுத்த பைஜாமா, குர்தாவைப் போட்டுக் கொண்டு பளிச்சென்று இருந்தேன். அதுதான்! ஷாருகான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார்கள் :-)

பறவைக்கிரங்கல்


உலகம் எவ்வளவு மாறி வருகிறது. அலெக்ஸ் எனும் பேசும் பறவை இறந்துவிட்டது என்று சி.பி.எஸ் நியூஸ் இரங்கல் செய்தி வெளியிடுகிறது! இப்பேசும் பறவை பற்றிய சின்ன ஆவணப்படம் இருக்கிறது!

உலகில் அதிசயப்பட எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அறிவு என்பது மனிதனுக்கு மட்டும் எனும் மமதை என்று ஒழிகிறதோ அன்று அடக்கமும், அன்பும் பீரிட்டு எழும். இப்பறவை பேசுகிறது, கணக்குப் போடுகிறது, கல்லா? மரமா என்று உணர்ந்து சொல்கிறது! கொரியத் தொலைக்காட்சியில் ஒரு நாய் குட்டி ஒற்றை ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கும் வித்தியாசம் காட்டியதைக் கண்டு அதிசயத்தேன். இவையெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது? அறிவே மயமான ஒன்று உள்ளே இருந்து கொண்டு செயல்படுவதால்தான். பாகவதம் சொல்லிய சுகமுனி கூட ஒரு கிளி தான். வாழ்க!

அன்னமய்யா (தெலுங்கு)

அன்னமாச்சார்யா எனப்படும் அன்னமய்யா பற்றிய திரைப்படத்தை இப்போதுதான் பார்த்தேன். 1997-ல் வந்த படத்தை இப்போதுதான் பார்த்தேன். காரணம் இரண்டு. முதன் முதலாக அவர் கீர்த்தனைகளைக் கேட்டதிலிருந்து அவரிடம் ஓர் ஈர்ப்பு. இரண்டாவது ரவிசங்கர் கண்ணபிரான் அவர் ஒரு தலித் என்று எழுதியது. அவர் கீர்த்தனைக் கேட்டபோது சந்தேகம் வலுத்தது. படம் பார்க்க வேண்டிய அவசியம் வந்தது. நான் பார்த்தது ஒரு டப்பா காப்பி என்றாலும் நல்ல ஒரு இணைப்பு கீழே தந்துள்ளேன், பாருங்கள். அப்படப்பாடல்கள் கேட்க முகவரியும், அன்னமாச்சாரியார் பற்றி அறிந்து கொள்ள வலைத்தள முகவரியும் இணைத்துள்ளேன்.

15ம் நூற்றாண்டு. ஆழ்வார்கள் அவதரித்து, உடையவர் அவதரித்து, ஆச்சார்ய பரம்பரை வட வேங்கடவன் 'கோயில் ஒழுங்கு' செய்த பிறகு அவதரிக்கிறார் அன்னமய்யா. நிச்சயமாக இந்தப் போக்கின் ஒரு தெலுங்கு நீட்சியாக அவர் வருகிறார். ஆழ்வார்களைத் திருமாலின் ஆபரண, ஆயுதங்களின் அவதாரம் என்பர். அதே கோட்பாடு இங்கும் எடுத்தாளப்படுகிறது. நந்தகம் எனும் வாள் அன்னமய்யாவாக வருகிறது. ஹரி கீர்த்தனம் அவரவர் தாய் மொழியில் வரும் போதுதான் சிறப்புறும் எனும் கருத்து பாகவத இயக்கத்தின் அடிவேர். எவ்வளவுதான் தீக்ஷதர் கீர்த்தனைகளை உயர்வாகச் சொன்னாலும் வாக்கியகர்த்தா 'அன்னமய்யாவின்' கீர்த்தனைகள் முன் அவை சாதாரணமாகப் படுகின்றன. ஒன்று அறிவு ஜீவிகளுக்கு, மற்றது எல்லோருக்கும். ஆனால், சாரத்தில் இரண்டுமே சமம். 37,000 கீர்த்தனைகள் பாடி ஸ்தானத்தில் எங்கோ நிற்கிறார் அன்னமய்யா. அவர் வழியொட்டித்தான் பின்னால் தியாகய்யா வருகிறார்.

படம் சுமார்தான். ஆனால் நன்றாக ஓடியிருக்கிறது. நிறைய தமிழ்ப் படக் காப்பி. ஆந்திரா, தமிழ் நாட்டுக்காரர்கள் இனிமேல் சுவாமி படம் எடுத்தால் நல்ல காட்சிகளுக்கு கேரளாதான் போக வேண்டும் என்று தெரிகிறது. ஒன்று அங்கு, கோயில், குளம் இவை சீராக உள்ளன, இரண்டு, கோயிலுக்குள் படமெடுக்க அனுமதிக்கிறார்கள். ஆந்திர கோயில் பின்னணி இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? ஆந்திர மண்வாடை தெரியாமலே, செட் வைத்து படத்தை முடித்து விட்டார்கள்! அட! நம்ம, படையப்பா ரம்யா கிருஷ்ணனா அது? ரொம்பபப.....அடக்கம்!! யார் அந்த அசடு மோகன்பாபு? ரொம்ப செயற்கையான படம்! ஆனாலும் சினிமா வழியில்தான் இனிமேல் நம் வாழ்வு என்றாகிப் போனபின் இம்மாதிரிப் படங்கள் தேவையாகவும் உள்ளன.

படப்பாடல்கள்

முழுப்படம்

கதைச் சுருக்கம் (ஆங்கிலத்தில்)

அன்னமாச்சாரியர் வலைத்தளம்

ANNAMAYYA
Music: M.M.Keeravani
*ing Nagarjuna, Ramyakrishna, Kasturi, Bhanupriya, Suman, Mohan Babu
Directed by K. Raghavendra Rao

கொரிய பிணைக் கைதிகள்

கடந்த 47 நாட்களுக்குப் பின், இரண்டு பேரைத் தவிர மீதமிருக்கும் கொரிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். எங்கே போய் விளையாடுவது என்றில்லையா? பாரிசு தீக்கிரையாகும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக ஆப்கானிஸ்தானில் போய் கிருஸ்தவத்தைப் பரப்பக் கிளம்பின கோஷ்டி இது. [உலகில் மிகப் பெரிய மதமாற்றுக் குழுவைக் கொண்டிருக்கும் நாடு கொரியா என்பது சேதி! உலகின் 2ம் இடம்] "நரகம்" என்றால் என்ன என்று நேரிடை அனுபவம் இப்போது கிடைத்திருக்கும்! அரசு சொல்லையும் மீறி இம்மாதிரி இடங்களுக்குப் போனதால், கொரிய அரசு ரொம்ப கடுப்பாகி இருக்கிறது! இதுவரை செலவான காசுக்கு கிருஸ்தவ சபையும், அக்குடும்பங்களும் பொறுப்பேற்க வேண்டுமென்று அரசு சொல்லிவிட்டது. இது கொஞ்சம் வித்தியாசமான திருப்பம். அரசு வட்டி வசூல் பண்ணுவது! இனிமே அங்கே இங்கே போனே படவா! என்று அம்மா திட்டுவது போல் அரசு இவர்களை மிரட்டி இருக்கிறது. பயங்கரவாத நாடுகள் என்று ஒரு பட்டியலிட்டு அங்கு இனிமேல் வீம்பிற்கேனும் போவேன் என அடம்பிடிக்கும் கொரியர்களுக்கு முழுத்தடை விதித்திருக்கிறது கொரிய அரசு

இதுவொரு நல்ல முடிவு. பிணைக் கைதிகளைக் கொண்டுவர அரசு கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கிறது (இல்லை என அரசு சொன்னாலும், இப்படித்தான் விடுதலை கிடைத்தது என்பதொரு பத்திரிக்கை யூகம்). இப்படி வரும் வருமானத்தில்தான் தாலிபான் போன்ற வன்முறைவாதிகள் பிழைக்கின்றனர். வன்முறைச் செயல்களை வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனில், வருமான வழிகளைத் தடை செய்ய வேண்டும். பாரிய அளவில் இந்திய அரசு, இனிமேல் இந்தியாவிற்கு காசு அனுப்பினால் அது பற்றிய முழு விவரமும் தர வேண்டுமென சொல்லியிருப்பது ஒரு வகையில் இவ்வருமான வழிகளை அறியவே.

21ம் நூற்றாண்டு போர்த் தந்திரமென்பது ஒன்றுமறியா அப்பாவிகளை பலியாடு ஆக்குவது என்று ஆகிப்போனது, அறம், மறம் போன்றவை மனிதர்களுக்கு மரத்துப் போய், படுகோழை ஆகிவிட்டதையே காட்டுகிறது. குழந்தைப் பருவத்தில் சண்டை வரும் போது "தைர்யமிருந்தால், ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வாடா!" என்போம். இப்போது யாரும் இப்படிப் போர் புரிவதில்லை என அறியும் போது சங்க காலமே தேவலை என்றிருக்கிறது!

ஸ்ரீநிவாச கத்யம் தரும் உணர்வுகத்யம் என்பது வடமொழிக் கவிதை. கொஞ்சம் வசன கவிதை, கொஞ்சம் மரபு, கொஞ்சம் உரைநடை. ஆம்! எல்லாம் சேர்ந்தது. இது இப்படி இருப்பதற்குக் காரணம் இது தரும் சுதந்திரமே. இறைவனுக்கு பாமாலையாகச் சூட்டப்படும் கத்யம் பெரும்பாலும் ஒரு உணர்ச்சிப் பெருக்கில் உருவாவதே! இவ்வகைக்கு மகுடம் போல் உள்ளது உடையவர் ஸ்ரீராமானுஜர் இயற்றிய ஸ்ரீரங்கநாத கத்யம். சங்கரர் செய்தது போல் ராமானுஜருக்கு கவிதைகள் அதிகம் செய்ய நேரமில்லை. அவரொரு செயல் வீரர். ஆதலால் அவர் செய்த இந்த கத்யம் மிக சிறப்பாகப் போற்றப்படுகிறது.

அன்றொரு நாள் மியூசிக் இந்தியா வலைத்தளத்தில் உலாவிய போது வேங்கடேசன் மீதும் ஒரு கத்யம் இருப்பதை அறிந்தேன். அதைக் கோயில் சாற்றுமுறையாகக் கேட்ட போது அசந்துவிட்டேன். சும்மா புகுந்து விளையாண்டு இருக்கிறார் இக்கத்ய சாகித்யகர்த்தா. அதைப் பற்றி மேலே சிலாகிக்கும் முன், முதலில் அதைக் கேளுங்கள்:

ஸ்ரீநிவாச கத்யம் கோயில் சாற்றுமுறை

அட இப்படியொரு கவிதையை யார் எழுதியிருப்பார் என்று தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. சரியென்று விட்டுவிட்டேன். மீண்டும் இக்கத்யத்தை எஸ்.பி.பி பாடிக் கேட்டபோது ஆர்வம் இன்னும் கூடியது. ச்ச..நம் இணையம் இருக்கும் போது ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? :-) என்று தோன்றி கண்டுபிடித்துவிட்டேன். ஸ்ரீமான் ஸ்ரீசைல ஸ்ரீரங்காச்சாரியார் என்பவர் எழுதியிருக்கிறார். ஆனால், இதில் சுவாரசியமாக வரும் கர்நாடக, ஹிந்துஸ்தானி ராகங்கள் பற்றியது பிற்சேர்க்கையாம்! கோயில் வேத பாராயண கர்த்தா பி.வி.அனந்தசயனமய்யங்கார் என்பவர் இடைச்சேர்க்கை செய்திருக்கிறார். அது உண்மையில் சுவை கூட்டுகிறது. எப்படியெனில் அதை எஸ்.பி.பி பாடிக் கேட்க வேண்டும். என்னை மாதிரி ஒரு ரசிகருக்கு இவர் இதைப்பாடிக் கேட்டால் எப்படியிருக்கும் என்று தோன்றியிருக்கிறது. நம்மாளு தன் இசை மேதமையை, திரை அனுபவத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார்.

எஸ்.பி.பி பாடியிருக்கும் கத்யம்

என்ன ஆச்சர்யமெனில், கோயிலில் வேத பாராயணப் பிராமணர்களுக்கு மட்டுமென்று இருந்த சம்பிரதாயம் சினிமாவினால் பொதுவுடமை ஆகியிருக்கிறது. இப்போது எல்லோரும் எல்லாமும் பாடுகின்றனர். பூணூல் போடும் போது யாரும் கேட்கக்கூடாது என்று அங்கவஸ்திரத்தில் மூடிமறைத்து சொல்லப்பட்ட காயத்திரி இப்போது சி.டி ராமில் வந்திருக்கிறது. ஒன்றுக்கு மூன்று என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். ஆக, பிராமண கலாச்சாரம் பொதுவுடமையாகிவிட்டது. பிராமண மொழி கேலியாகவேனும் பொதுவுடமையாகியது சினிமாவினால்தான். இப்போது சினிமாவின் ஆதரவு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது எனும்படி தீவிர ஆளுமை தெரிகிறது. சினிமாப் பிரபலமொருவர் பாடுகிறார் என்றால் உடனே விற்பனையாகிவிடுகிறது. எஸ்.பி.பி வேங்கடேச சுப்ரபாதம் முதல் எல்லாம் பாடியிருக்கிறார். அவரது தெலுங்குப் பின்னணி சமிஸ்கிருத உச்சரிப்பிற்கு நிரம்ப உதவுகிறது என்று தோன்றுகிறது. தமிழர்களுக்கு நிரம்பப் பயிற்சிக்குப் பின்னரே பிழையின்றி சமிஸ்கிருத உச்சரிப்பு வருகிறது. இளையராஜா கூட முயன்றிருக்கிறார். ஏதோ தேவலாமென்றே தோன்றுகிறது. ஆனால் எம்.எஸ் இதில் வென்றது மட்டுமில்லை இன்று பிரபலமாகியிருக்கும் பக்திப் பாடல் மரபிற்கே வித்து இட்டுச் சென்றிருக்கிறார். அவர் கடைபிடித்த தீவிர தரக்கட்டுப்பாடு இதுவரை இருக்கிறது. அதை சினிமா மோகம் கரைத்துவிடக் கூடாது. மந்திரங்கள் பிழையாக உச்சரிக்கப்படும் போது விபரீத விளைவுகளை அளித்துவிடும் என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள் (இது தரக்கட்டுப்பாட்டிற்கான சூட்சுமமா? என்று தெரியவில்லை). ஆனால் இவர்கள் புண்ணியத்தில் எங்கோ கோயிலுக்குள், சில சமூகங்களுக்குள் ஒளிந்திருந்த பொக்கிஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் விநியோகமாகிறது. பாடியதையே பாடாமல், பிரபலமாகாத கீர்த்தனைகளை, ஸ்லோகங்களை, பிரபந்தங்களைப் பிரபலமாக்க வேண்டும். கோதை நாச்சியார் தாலாட்டு என்றொரு கிரந்தம் கிடைத்திருக்கிறது. அதை யாரேனும் முயன்று பிரபலமாக்கினால் வடபத்ரசாயி மகிழ்வான்.

லொள்ளு மிட்டாய்!

Wanted New Actor & Actress Mittai – New Tamil Movie Acting opportunity in new Tamil film Wanted New Actor & Actress for New Tamil Movie Mittai Contact – Director Anbu Cell - 9444732535 Please forward this message to interested your friends.

இப்படியொரு கடிதம் எனக்கு வந்திருக்குங்க! நானும் கமலும் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே...பிறந்தவர்கள் என்பதினால் எனக்கும் கமல் போல் ஒரு ஹீரோவாக வர வேண்டுமென்ற கனவிருந்தாலும், யோசித்துப் பார்த்தால் 'அப்பா' ரோல்தான் தருவானுக. இல்லை எம் தலைவர் சாலமன் பாப்பையாவை 'மாமா' ஆக்கியது போல் (சிவாஜி) நம்மையும் மாமா ரோலுக்கு தள்ளிவிடுவாங்கே. இது எதுக்குங்க வம்பு? இதப்பாக்கற இளவட்டங்க முருக்கு இருக்கிறதுக்குள்ளே போன் போட்டு வாய்ப்பை வாங்கிங்கிங்க.

நமக்கும் பதிவிட யோசனையே வரமா இருந்த போது இப்படியொரு லொள்ளு வந்ததும் நல்லதா போச்சு!

அமெரிக்காவில் பால்ய விவாகம்?

LITTLE ROCK, Ark. - A law passed this year allows Arkansans of any age — even infants — to marry if their parents agree, and the governor may have to call a special session to fix the mistake, lawmakers said Friday.

The bill reads: "In order for a person who is younger than eighteen (18) years of age and who is not pregnant to obtain a marriage license, the person must provide the county clerk with evidence of parental consent to the marriage."

நாம் இந்த பால்ய விவகாரம் சமாச்சாரமெல்லாம் முடித்து ஒரு நாகரீகப் பாதையில் போய் கொண்டிருக்கிறோம் என எண்ணும் போது அமெரிக்காவில் பால்ய விவாகத்திற்கான ஒரு புதிய காரணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாலியல் சுதந்திரமுள்ள அந்த நாட்டில் பெண் குழந்தைகள் இளவயதிலேயே பாலியல் செயற்பாட்டில் இறங்கி தாயாகும் வாய்ப்பு இருக்கிறது. அங்கு பெண்ணைப் பெற்று வளர்க்கும் தமிழ்ப் பெற்றோரெல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அலைய வேண்டியுள்ளது. டெனிசியில் ஒரு இந்துக் கோயிலில் "பாதுகாப்பாக கூடுவது எப்படி?" என்ற தலைப்பில் டேடிங் சமாச்சாரங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். 13 வயதில் அமெரிக்கச் சிறுமிகள் பாலுறவு கொள்ளத் தொடங்குகின்றனர் என ஒரு நேர்காணலில் அறிந்தேன். எனவே 18 வயதிற்குள் தாயாகிவிட்டாள் அவளுக்கு திருமண வாய்ப்பு தற்போது அமெரிக்காவில் மறுக்கப்படுகிறது. அதை நிறைவு செய்யும் முகமாக ஆர்கென்சாவில் புதிய சட்டம் கொண்டு வர, அது இப்போது எதிர்பாராத அர்த்தங்களைத் தரத்தொடங்கி பிரச்சனையாகியுள்ளது! வேடிக்கை என்னவெனில், இந்தியாவில் ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் பாதுகாப்பு தரவே பால்ய விவாகங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அது அப்படியே இப்போது புரட்டிப் போடப்பட்டுள்ளது சரித்திர முரண்!

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!நம்மாளுக்கு 60 வயசு ஆயுடுச்சு! எந்தக் கணக்கிலே பாத்தாலும் அது கிழம் :-) பழுத்த பழம். எல்லோரும் நிறைய எழுதி படம் போட்டுக் காட்டிட்டாங்க. சுதந்திரம் வாங்கிய 60 வயதிற்குள் இந்தியா நிறையவே வளர்ந்திருக்கிறது. "எம் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே" உற்சாகம் வரத்தான் செய்கிறது. ஆனால், இந்தியாவிற்கு இரண்டு முகமுண்டு. பழக்கமற்றோரைப் பயமுறுத்தி விரட்டிவிடும் முகமும், வேண்டியவரை எத்தருணத்திலும் அரவணைக்கும் முகமென்றும் இரண்டு உண்டு. சுதந்திர தின விழாவிற்கு பூசான் போகிறேன் என்றவுடன் 'உனக்கு வேற வேலையே இல்லையா?' என்று கேட்டு சுருதியை இறக்கிய பிஜி நண்பருக்கு இந்தியா முதல் முகத்தையே இருமுறை காட்டி இருக்கிறது. இதற்கும் அவர் இந்திய வம்சாவளியினர். அவர் குறைக்குக் காரணமிருக்கிறது. ஒரு காட்டுமிராண்டித்தனம் அங்கு உண்டு. பிச்சை, குப்பை, சுரண்டல், அழுக்கு, ஒழுங்கின்மை, ஊழல் இவை பல்கிப் பரவிக் கிடக்கின்றன. இந்தியா ஒரு புது வெள்ளம். இன்னும் மண்டிகள் மிதந்த வண்ணமே உள்ளன. இவை அடங்கி இந்தியா ஒரு நாகரீகப் பொலிவுள்ள நாடாக மலர இன்னும் சில பத்தாண்டுகள் ஆகலாம். இல்லை பேரா.அப்துல் கலாம் கனாக் காண்பது போல் விரைவிலும் நடந்து விடலாம்.

இந்தியாவில் வாழப் பயந்து வெளி வந்த வந்தவன் நான். இந்திய சமூக அமைப்பு அப்படி. உலகம் போற்றும் தத்துவங்களை உள்ளடக்கிய அந்நாடு எப்படி சமூகவியலில் கவனம் கொள்ளவில்லை என்பது ஆச்சர்யம்! இந்தியாவிற்குப் போட்டி சீனா என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை. காரணம், ஒருமித்த சமூகவியல் அங்கு வளர்ந்திருக்கிறது. கம்யூனிசம் அதற்கு துணை போகியிருக்கிறது. சீனக் கன்பூசியன் தத்துவத்தை சமூக சீரமைப்பிற்கு அடிப்படையாகக் கொண்ட கொரியாவில் பிச்சை இல்லை, ஒழுங்கீனமில்லை, ஜாதி பேதமில்லை. ஆனால் பெரியோருக்கு மரியாதை இருக்கிறது, எங்கும் இன்சொல் இருக்கிறது, குற்றம் மிகக்குறைவாக உள்ளது [இரவு எந்நேரத்திலும் பெண்களும், முதியோரும் பயமில்லாமல் நடமாட முடிகிறது]. 40 ஆண்டுகளுக்குள் ஜனநாயகம் வேரூன்றி இருக்கிறது. அடிமட்டத்திலிருந்து உலகின் செல்வாக்கான 11வது பொருளாதரமாக வளர முடிந்திருக்கிறது.

இத்தனை ஆதங்கம் எதற்கு? இந்தியாவும் வள்ளுவன் பேசும் வலுவான சமூக விழுமியங்களை தன்னுள் உள்வாங்கி மலரும் ஒரு நாகரீக நாடாக விரைவில் வர வேண்டும் என்ற ஆசையால்தான்.

இந்தியாவின் பலம், அதன் கல்வி, வளைந்து கொடுத்து முன்னேறும் தன்மை (adaptability), ஜனநாயக அரசியல், முழு மனிதச் சுதந்திரம், மிகப் பழமையான பண்பாடு போன்றவை. இவை அதன் முன்னேற்றத்திற்கு துணை புரிய இன்று நாம் வாழ்த்துவோம்.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு!

பதிவர் சங்கம் அவசியமா?

தொழிற்சங்கங்கள் காலம் நிழல்வெளிக்குள்ளும் வந்துவிட்டது.

நமக்கு சங்கம் அவசியமா? என்றொரு கேள்வியை ஜேசன் மில்லர் என்பவர் கேட்கிறார்.

Do Bloggers Need To Unionize?
by Jason Lee Miller

அவர் கட்டுரையிலிருந்து வெட்டி ஒட்டி சில கருத்துக்கள் கீழே:

In the past two years, blogging, as a profession, has grown from geeky obscurity into a direct challenge to the journalism industry, even with bloggers' reputation for being unruly, unvetted, grammatically and syntactically insufficient, and above all, a disorganized mess.

But that is sort of what (okay, completely what) made the medium so appealing. They answered to no one and therefore were accountable to no one; the individualist, populist, no-truth-barred approach both what propelled it and what held it back. Abused, sometimes inaccurate, sometimes out and out wrong, but for the most part, a development for the greater good, for freedom of speech, for information exchange, for the free market of ideas.

பலருக்கு இன்னும் எதற்குப் பதிவிடுகிறோம் என்றே புரியாமல் எழுத்திக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் 'சும்மா' எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் தீவிரமாக எழுத ஆரம்பித்து பின்னூட்டக் கூச்சல் தாங்காமல் ஓடி ஒளிந்து விட்டனர். முன்பிருந்த ஆரவாரம் இப்போது தமிழ்ப் பதிவர்களிடம் இல்லையெனினும், மின்வெளிப் போர்கள் நடந்த வண்ணமேயுள்ளன. எப்படியாயினும் பதிவு என்பது சில பலன்களைத் தருகிறது.

1. எழுத்துப் பயிற்சியை எழுதுபவருக்குத் தருகிறது.
2. தங்கள் எண்ணங்களைக் கோர்வையாக பதிப்பிக்கும் முறை கைவரப்பெறுகிறது.
3. கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
4. நமது அரசு அளிக்கும் சுதந்திரத்தை சுவைக்க முடிகிறது.
5. தங்களை முன்னிருத்தி வியாபாரம் பெருக்கிக் கொள்ளமுடிகிறது.
6. தகவலைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

With whom are bloggers bargaining, and why is there a need for them to bargain collectively?

The winning answer to that is blog publishers and blog network owners, who pay on a percentage basis rather than a per-post basis. Entrants to the "profession," and yes we must call it that now, claim to make pennies for hours of work, without health insurance and other benefits afforded to other workers.

நம் எழுத்து ஒரு தொழில் எனும் நிலைக்கு வந்து விட்டதா? சில பதிவர்களின் எழுத்தைப் புலமைச் செம்புலத்தில் போடலாம்தான். அப்போது அது தொழில் நுணுக்கம் பெருகிறது. பலர் இன்னும் கிண்டர்கார்டன் லெவலிலேயேதான் உள்ளனர். நிறைய மறுபதிப்பு வாய்ப்பை உன்பெட்டி (YouTube)வழங்குகிறது.

நம் எழுத்தால் மறைமுகப்பயன் யாருக்குண்டு? புளோகருக்கா? அமெரிக்காவிற்கா? டெலிபோன் கம்பெனிக்கா? நாம் தொழில் சங்கம் அமைத்தால் நாளை இவர்களிடமிருந்து ஊதியம் பெறமுடியுமா? கோளக்கூட்டு என்றொரு இயக்கம் இதை நோக்கிய முதல் அடியை வைத்துள்ளது. இன்னும் பலன் பயனோருக்குக் கிட்டவில்லை!

சும்மா இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைப்போமே! எதிரி யார் என்று தெரியாமல் சுடுவது போல்!

சாது மிரண்டால்!

பொதுவாக உயிரினங்களுக்கு சில குணங்களுண்டு. மான் மருண்டு போய் இருக்கும். புலி, சிங்கம் என்பவை மின்னல் வேகத்தில் பலத்துடன் தாக்கிக் கொல்ல வல்லவை. யானை சாத்வீகமாக இருக்கும், இப்படி. ஆனால், இவை எப்போதும் இப்படி இருப்பதில்லை. கோபக்கார யானைகளுண்டு. முட்டி வீழ்த்தும் மான்களுமுண்டு. ஆயினும் பொது வாழ்வில், ஏதோ ஒரு காரணத்திற்காக பயம் என்பது எல்லோர் அடினமனத்திலும் இருக்க ஒரு ஜீவன் இன்னொன்றிற்கு இரையாகிறது. உம். சிங்கம் கர்ஜித்தால் மான்கள் ஓடுகின்றன. ஏன்? காட்டு எருமைகள் நல்ல தீனி. அவை பலசாலிகள். ஆயினும் பொதுவாக அவை இறைச்சிக்கென்றே உருவானது போல் படைப்பில் இருக்கின்றன. இது விசித்திரம். அமெரிக்கச் செவ்விந்தியர் இதனாலேயே, காட்டு எருமைகளைக் கொன்ற பின் அவற்றை வழி பட்டு உண்பது வழக்கம் (உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!)

சிங்கம் வழக்கம் போல் வேட்டையாடுகிறது. எருமைகள் ஓடுகின்றன. ஒரு குட்டி எருமை மாட்டிக்கொண்டு விடுகிறது. தட்டி வீழ்த்தப்படுகிறது. அதன் அதிர்ஷ்டம் அது அருகிலுள்ள ஆற்று நீரில் விழுந்து விடுகிறது. அதைச் சிங்கம் இழுக்க, ஆற்றிலிருக்கும் முதலையும் பங்கிற்கு வருகிறது. ஆனால் அப்போதுதான் அந்த எதிர்பாராத திருப்பம் நிகழ்கிறது! குட்டி எருமை காப்பற்றப்படுகிறது? எப்படி?

விடை காண இங்கே போய் பார்க்கவும்!

இச்சேவை சாத்தியமா?மிக ஆச்சர்யமான வகையில் இங்கொரு பெருமாள் சேவை காட்டப்படுகிறது! திவ்யமாக உள்ளது என்பதில் கேள்வி இல்லை. இவன் வேங்கடேசனா என்பதே கேள்வி? இவ்வளவு நெருக்கமாகப் போய், மூலஸ்தானத்தில் இருந்து கொண்டு பக்தர்களை எடுத்திருக்கும் விதம், நம்பும்படியாக இல்லை. இவ்வளவு உரிமை யாருக்கு இருக்கிறது? மறைத்து வைத்தும் எடுத்திருக்க நியாயமில்லை. கேமிரா கைக்கு மேல் உயரத்தில் இருப்பதாகக் கோணம் சொல்கிறது! இது திருப்பதி என்று தலைப்பிடப்பட்டு உன் கூண்டு (YouTube)-ல் வலம் வருகிறது. பலர் ஆச்சர்யப்பட்டுப்போய் கேள்வி கேட்டுள்ளனர். தெரிந்தவர் விளக்கவும்!

கணக்கு!அண்ணே! நமக்கு கணக்கு கொஞ்சம் வீக்! எனக்கென்னமோ 25 ஐ அஞ்சால வகுத்தா 14 என்பது சரி என்றே படுகிறது. நீங்களும் பாத்துட்டுச் சொல்லுங்க!

வாழ்க நண்பர்கள்

ஞாயிறு, நண்பர்கள் தினமாம். அறிந்து கொண்டேன். நண்பர்கள் இல்லையெனில் வாழ்வு இவ்வளவு சுவாரசியமாக இராது. வாழ்வு புதிய, புதிய நண்பர்களை தினமும் வழங்கிய வண்ணமுள்ளது. பள்ளியில் படித்தவர் சிலர், கல்லூரியில் சுவை கூட்டியவர் சிலர், தெரு நண்பர்கள், ஊர் நண்பர்கள், உலகலாவிய நண்பர்கள் இப்படி. இன்னும் முகமே பார்த்திராத நண்பர்கள் என்றொரு வகையை இணையம் எனக்கு வழங்கி வருகிறது. இவர்கள் நிழல்வெளி மாந்தர். காலம் கனியும் போது நிழல் நிஜமாகிறது. நண்பர்கள் அபூர்வமானவர்கள். ஆச்சர்யமானவர்கள்.அரிது, அரிது எனக் கேட்கும் கந்தக் கோட்டத்து வேலோய்!

அரிது, அரிது நண்பராய் பிறத்தல் அரிது.

அதனினும் பெரிது அந்நண்பர்களை

நினைத்துப் போற்றுதலாகும்!!வாழ்க, வாழ்க! நட்பு!

உடனிருக்கிறோம் நண்பா!

அமீரக நண்பர் ஆசீப் மீரானின் துணைவியார் மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி நண்பர் ஷ்ரவன் ரவி கண்ணபிராண் வலைப்பதிவு மூலம் சில நொடிகள் முன் அறியப்பெற்றேன்.

வாழ்வின் துயரை எதிர்கொள்வது எப்படி என்ற கட்டுரையை "ஆழ்வார்க்கடியனில்" மறுபதிப்பு செய்திருக்கும் வேளையில் இச்சேதி என்னை அண்டியிருக்கிறது. ஆசீப்மீரான் இறைப்பற்று உள்ளவர். அவருக்கு இக்கட்டுரையே சமர்ப்பணம்.

எனது பாசுரமடல்களை சிடியாகக் கொண்டு வந்த காலத்தில் துபாய் தமிழ் மன்றம் சார்பாக வெளியிடலாமே என்று ஆர்வமுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீரங்கம் முகமதியப் பெண்ணை "துலுக்க நாச்சியார்" என்று இறைவியாக ஏற்கொண்டதற்கு மறுமொழி போல் ஆசீப்மீரான் திரு.முஸ்தபா அவர்களை வைத்துக் கொண்டு சிடி வெளியீடு செய்தார். அது பொழுது அவரையும் அவர் குழந்தைகளையும் சந்தித்து ஒரு மாலைப்பொழுது போக்கியிருக்கிறேன். அக்குழந்தைகளை நினைத்தால் பகீர் என்கிறது. பள்ளிப் பருவத்தில் என் இன்னுயிர் தந்தையை இழந்த வடுக்கள் இன்னும் நினைவில் உள்ளன.

நான் என்ன பெரிதாய் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? உன் துயரில் பங்கு கொள்கிறேன் என்று சொல்வதைவிட. காலமும், நட்பும் இவ்வேதனையைப் போக்கும்.

பதிவர் பட்டறை

தமிழ்ப் பதிவர்களெல்லாம் சேர்ந்து ஒரு பதிவர் பட்டறை நடத்த வருகின்ற ஞாயிறன்று (ஆகஸ்ட் 5) முடிவு செய்தியுள்ளனர். தமிழ் மண்ணிற்கே உரிய சிறப்புடன் அதை இலவசமாக நடத்துகின்றனர். வெளிநாடுகளில் இலவசம் என்றால் உள்ளடக்கம் இல்லை என்று பொருள். ஆனால் இவர்கள் நிகழ்ச்சி நிரல் பொறாமைப் பட வைக்கிறது. நான் சென்னையில் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. எவ்வளவு விஷயங்கள் கற்றுத்தர உள்ளார்கள். அது மட்டுமில்லை, வருகின்றவர்களுக்கு சோறு போட்டு நடத்துகிறார்கள். என்ன இது? அன்று கூரத்தாழ்வான் செய்தது. வள்ளலார் செய்தது. இன்னும் செயல்பாட்டில் உள்ளதே!

இச்செயல்பாடுகளை 90 களில் நாங்கள் வெளிநாடுகளில் நடத்தும் போது, நினைத்துக் கொள்வோம். இந்தியா இன்னும் முழித்துக் கொள்ளவில்லை. அது விழிக்கும் போது என்னவாகுமென்று. இப்போது புரிகிறது!


இந்தியாவின் வளம் பொன், பொருள் அல்ல. அங்குள்ள இளைஞர்களே! அவர்கள் நினைத்தால் உலகையே புரட்டிவிடமுடியும்.


வாழ்க தமிழ். வாழ்க தமிழர்தம் நல் முயற்சிகள்.


மேல் தொடர்பிற்கு: தமிழ்ப் பதிவர் பட்டறை

ஹரி கதையின் 21ம் நூற்றாண்டு வளர்ச்சி

நண்பர் மலைநாடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்! விசாகா ஹரியின் ஹரிகதையின் முழுநீள (ஏறக்குறைய 90%?) ஒளிப்பதிவைக் கண்டு சொல்லி இருக்கிறார். தாஜ்மகால் மிகப் பிரபலம் என பலமுறை கேட்டிருந்தாலும் நாம் நேரில் சென்று பிரம்மிக்கும் போதுதான் அபிப்பிராயங்களின் உண்மை உணர்வு புரியும். அதுபோல்தான் விசாகா ஹரி பற்றிய என் புரிதலும். பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லியுள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தோய்ந்த போதுதான் ஹரிகதை என்ன செய்யும் என்று உணர்ந்தேன். சிலருக்கு வெறும் கதை மட்டும் பிடிக்கும். சிலருக்கு சங்கீதம் மட்டும் பிடிக்கும். சிலருக்கு மெல்லிசை மட்டும் பிடிக்கும், கர்நாடக சங்கீதம் பிடிக்காது. ஆனால் என்னைப் போன்ற சிலருக்கு இவை எல்லாம் பிடிக்கும்! சௌகர்யம்! எல்லாவற்றையும் அனுபவிக்க முடியும்.

ஆயினும் விசாக ஹரி எங்கோ என் இதய வீணையை மீட்டி விட்டார். அது இந்த ஜென்ம வாசனை மட்டுமென்று தோன்றவில்லை. பூர்வ, பூர்வ ஜென்ம வாசனைகள். இசைக்குடும்ப வாசனைகள். பக்தி சம்பிரதாய வாசனைகள். இப்படியொரு உள்புதைந்த பூஞ்சோலை வாசனைகளை கிளறி விட்டுவிட்டார். கண்கள் பனிக்க, நெஞ்சு கனக்க, செவிகுளிர அவர் ஹரிகதை கேட்கும் பாக்கியம் பெற்றேன். சாதரணமாகப் பார்த்தால் சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சாகித்யத்தின் பாவம் பிடிபட பல கதைகளை குருமார்கள் சொல்லதுண்டு. அவர் இப்படிக் கேட்டதைத்தான் பகிர்ந்து கொள்கிறார். ஆனால், அவர் அதை நிகழ்கலையாக நிகழ்த்தும் போது சொல் உணர்வு பெற்று இசை வடிவில் பிரவாகமெடுக்க, அப்போது மாயாஜாலம் நடந்துவிடுகிறது! நாம் மாறி விடுகிறோம். 25 வயது தியாகராஜர் இராம தரிசனம் கிடைக்க வேண்டுமென்று இராமபிரம்மம் எனும் தன் தந்தையிடம் கேட்கிறார். அவர் சொல்லித்தரும் மகாமந்திரம் இரண்டே சொல். ராம! அவ்வளவுதான். ஆனால், அதன் சக்தி அறிய நீங்கள் விசாகா ஹரியின் ஹரிகதா கேட்க வேண்டும்! அது உங்கள் உள்ளதை உலுக்கவில்லையெனில் உங்களுக்கு ஏதோ கோளாறு என்று பொருள். இப்படி ஒன்றா, இரண்டா? பொறுக்கிப், பொறுக்கி, தியாகராஜர் வாழ்வில் நடந்த முக்கிய திருப்புமுனைகளை அடுக்கிச் செல்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும் (episode) உள்ளம் கரைகிறது. தியாகராஜர் வெறும் உஞ்சவிருத்தி பிராமணர். படு ஏழை. ஆனால், அவர் வாழ்வு எவ்வளவு பூர்ணமாக இருந்திருக்கிறது. அவர் கதை கேட்டாலே நம் வாழ்வும் பூரணமடைகிறதே. அது எப்படி?

ஹரி கதை எனும் வடிவிற்கு புதிய பொருள் தருகிறார் விசாகா ஹரி. சொல் என்பதை மந்திரமாக்கும் திறன் இசைக்கு உண்டு என்று நிகழ்த்திக்காட்டுகிறார். சினிமா என்ற வடிவம் இதைத்தான் பாமரவடிவில் செய்கிறது. சினிமாவின் விர்சுவல் வடிவம்தான் ஹரிகதை எனும் கலை. சினிமா நமக்கு அப்பீல் ஆவதற்குக் காரணம், அதில் கதை இருக்கிறது, நடிப்பு இருக்கிறது, இசை இருக்கிறது. இவை எல்லாம் கொஞ்சம் யதார்த்ததிற்கு மிஞ்சிய அளவில் கலந்திருக்கின்றன. அக்கலவைதான் நம்மை பாதிக்கத்தக்கது. வெறும் யதார்த்தம் நம்மை பாதிக்கும் என்றால் நடைமுறை வாழ்வே நம்மை மாற்றியிருக்க வேண்டும்! கூத்து வடிவில் கொஞ்சம் மிகை இருக்கும். உச்ச ஸ்தாயியில் பாடப்படும் பாடல் எடுக்கிறது. எல்லாமே கொஞ்சம் யதார்தத்திற்கு மிஞ்சியது. ஹரிகதை இதைச் சரியாகச் செய்கிறது என்று உணர்ந்தேன்.

விசாகா ஹரி அவர்கள் குழந்தைக்கு கதை சொல்வது போல்தான் சொல்கிறார். அவர் இன்னும் இளமை என்பதால் அந்த பாவங்கள் கூட மழலைத்தன்மையுடன் இருக்கின்றன. ஆனால், கேட்கும் பாதிப்பேருக்கு மேலே 50 வயதிற்கு மேல்! கதை கேட்க எல்லோருக்கும் பிடிக்கிறது. அதனால்தான் வள்ளுவன் செவிக்கு இல்லாத போதுதான் வயிற்றுக்குச் சோறு என்றான் போலும்! சங்கீதம் கேட்க கொஞ்சம் பக்குவம் வேண்டும். இவர் லால்குடியின் சிஷ்யை! சுத்தமான இசை. பிசிறு இல்லாத குரல். பொதுவாக கதை சொல்லும் போது தொண்டை வரண்டு போகும். பாடுபவர்களால் கதை சொல்ல முடியாது. ஆனால் தொண்டை வரள கதை சொல்லும் போதே பட்டென பிருகா கொடுக்கிறார். கமகம் செய்கிறார். ராகப்பூஞ்சோலையின் பல்வேறு வர்ணங்களைக் காட்டுகிறார். இது எப்படி சாத்தியப்படுகிறது? சினிமா நடிகர்கள் பாடுவதில்லையே (at least, இந்தக்காலதில்). அவர்கள் சுயமாகக் கூட பேசுவதில்லையே இப்போது. ஆனால் விசாகா ஹரி கதை சொல்கிறார், நடிக்கிறார், பாடுகிறார், கேள்வி கேட்டால் பதிலும் சொல்கிறார். ஒரு அறிவுஜீவி இப்படியெல்லாம் செயல்படமுடியுமா? முடியும் என்று காட்டும் 21ம் நூற்றாண்டு வித்தகி விசாகா! முன்பு சிவானந்த சரஸ்வதி ஹரிகதா காலட்சேபம் செய்வார்கள். அவரும் ஒரு தேர்ந்த கலைஞர். அக்ககலை விசாகாவிடம் ஒருபடி மெருகு கொள்கிறது.

ஹரி கதை எனும் கலைக்கு புது வாழ்வு பிறந்துள்ளது. வாழ்க. கையில் ஒரு மணி நேரமிருந்தால் கேட்டு ரசியுங்கள் முழு நிகச்சியையும் (இந்த இடையில் வரும் விளம்பரம் ஒரு இடைஞ்சல். அதை வெட்டி அவரது முழு நிகழ்ச்சியையும் யாராவது எடுத்திருக்கலாம். விசாகா ஹரி அடுத்தமுறை வெளிநாடு வந்தால் முறையாக ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யுங்கள். அது தமிழர் மனதை மாற்றும் மருந்து. புதிய வாழ்விற்கான விருந்து!

விசாகா ஹரி என்னும் இளம் கதைச் சொல்லி

குழந்தையிலிருந்தே எனக்குக் கதை கேட்கப்பிடிக்கும், கதை சொல்லவும் பிடிக்கும். இலக்கியத்தின் ஆணிவேர்கள் இக்கதையாடலில்தான் உள்ளன. இது ஒரு சமூக உத்தியாக இந்தியாவில் பன்னெடும் காலமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. எத்தனையோ கதை சொல்லும் சம்பிரதாயங்கள் உண்டு. விசாகா ஹரி எனும் இவ்விள கதை சொல்லி ஒரு கதை சொல்லும் குடும்பத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார். இவரது கணவர் கல்லூரி மாணவராக இருக்கும் போது சொல்லிய கதையாடலில் மயங்கியதுண்டு. இவரது மாமனார்தான் இவர்களுக்கு வழிகாட்டி. கிருஷ்ணப்பிரேமி என்பது பெயர். கண்ணன் மேல் இன்னும் காதல் வராதவர் இவர் கதை சொல்லி ஒருமுறை கேட்டால் போதும். பின் கண்ணதாசன் ஆகிவிடுவர். இப்படியான குடும்பத்திலிருந்து வந்திருக்கும் விசாகா ஹரி மிகப்பிரபலாகி வரும் இளம் கலைஞர். நல்ல இசை ஞானம், இவரது பிளஸ் பாயிண்ட். ஆனால், இசை இவரது கதையின் ஒரு அங்கமே. இந்திய முதுசொம் காப்பாளராக வந்திருக்கும் இவரை மின்னுலகம் தன்னுள் வரவேற்றிருக்கிறது. இந்தச் சின்ன புழக்கடை சினிமா, ஜெயா டிவியில் வந்த உபன்யாசத்தின் ஒரு சிறுதுளி என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை யாராவது முழுதும் பதிவு செய்துள்ளனரா? அதைப் பார்க்கும்/கேட்கும் வாய்ப்புக்கிடைக்குமா? (இன்னொரு பிட் உள்ளது. ஆனால் அதுவும் முழுப்பதிவல்ல, நிறைய வெட்டுக்கள் உள்ளன)

விசாகா ஹரியின் பணி சிறக்க எம் வாழ்த்துக்கள்!

இந்தியாவில் கொரிய அலை அடிக்கிறதா?

இந்தியாவில் பலர் கொரியக் கார்களில் பயணித்துக் கொண்டு, கொரிய நுகர் பொருட்களை அநுபவித்துக்கொண்டு உள்ளனர். ஆனால் கொரியா எங்கே என்றால் தெரியாது. ஆனால் கிழக்காசியாவில் நிலமை அப்படி இல்லை. எப்படி பாலிவுட் என்பது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமோ அது போல், வியட்நாம், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கொரியன் தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப் படங்கள் பிரபலம். ஆனால் இந்த எல்லை தாண்டி கொரிய அலை இந்தியா வரை வீசுமா? என்பதைக் கீழ்காணும் கட்டுரை அலசுகிறது. போஸ்கோ நிறுவனம் 12 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முடக்க யோசிக்கிறது. இதுவே கொரியா முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகையை ஒரு வெளிநாட்டில் முதலீடு செய்வது. இந்தியாவிற்குள் இத்தனை பெரிய முதலீடு என்பதுவும் இதுவே முதன் முறை. இப்படி பலத்த பொருளாதார உறவு இருக்கும் போது நம்மவர் கொஞ்சம் கொரிய மொழி கற்றுக் கொள்வது நமக்கு நலமே. அக்கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்வது நலமே! அப்படி ஒன்றும் அவர்கள் அந்நியர்கள் அல்ல. மாமா, மச்சான் உறவு இருக்கு! விட்டுப் போய் கிடக்கு. போக்குவரவு இருந்தால் பலப்படும். வாழ்க!

Has the Korean wave arrived in India?
Mr. Sandip Mishra

Recently Chongdong Theater, an official Korean theater group performed in three metropolitan cities of India. The public responses to these performances were jam-packed auditorium and cheering crowd. Hardly has any foreign troop and its performances been bestowed upon such generous, thundering and uninterrupted applause. When the performers introduced a genre of Korean music to Indian audiences, everybody in the auditorium seemed to have gone in a trance. Mesmerized from such an enchanting performance, the audience incessantly clamored for an encore. Undoubtedly, it was an obvious knock of Hallyu (Korean Wave) on the doors of India and it seemed to be a thundering knock in every sense of the term.

The Korean wave might be just touching the shores of India culture and musical landscape, but it had been flowing in torrents in the East and the South East Asian countries. The spread of the Korean cultural wave had been a decade long process, starting from the neighboring countries of Japan and China. The South East Asian countries were next to be hit by the Korean wave. Initially, there were apprehensions about the spread of Korean wave in the other regions of the world as the phenomenon was understood from the point of view of Cultural proximity theory. The theory purports that media productions from culturally affiliated countries have greater reception than those from the culturally distanced countries. It was speculated that the spread of the Korean Wave could not go beyond the shores of the countries having cultural proximity with Korea, but there have been growing realization and understanding that the Korean wave might transcend the regional and cultural boundaries because of its intrinsic strength.

Although, it is true that the Korean government has shown interest in introducing these dramas to the countries, which are geographically and culturally away from Korea, the popularity, demand and sustainability of these dramas could not be ensured just by the government support. There seems to be a popular demand for the cultural products of the Korean Wave. Take an example of Japan, where despite many political disagreements between Japan and Korea, Korean dramas such as Winter Sonata became a fad among the general people. The Korean government might facilitate the availability of these products to various countries but the globalization of cultural traits must have to pass the fair trail of being interesting and inspiring to people and only then there could be sustained demand for these products in foreign countries. In the case of performance of the Korean troop in India also, it is true that the Korean Embassy in India and the Indian Council of Cultural Relations hosted the event, but the credit of all those applause could not be given to them alone. It was basically power of the Korean music which made every spectator to enjoy the performance.


In May-June 2006, a Korean delegation visited India, Indonesia and Thailand as part of its efforts to spread the Korean Wave in these countries. In India, for first time the Korean Drama �Emperor of Sea" was introduced by DD 1 on 23rd July 2006. In another move to make Indian audiences aware about the Korean cultural richness, the MBC hit drama "A Jewel in the Palace" began to be aired on DD 1 from 24th September. It is difficult to make any assessment about the popularity of these dramas as initial viewer ship of first drama was around 0.8 percent only. However, it is notable that there has been 4 percent growth of viewer ship of the first drama since then. Although, it is premature to make any definite statement about the popularity of these Korean dramas as they are still in nascent days only, there are people who like these dramas very much and they wish that these dramas would be shown more often (presently these dramas are shown only once in week). Not only in India but also in other South Asian countries such as in Pakistan there are demands for the Korean dramas and soon Pakistani audience too would be able to watch these eternal and omnipresence saga of Korean history and culture on their state channel. It is nothing but the popularity and the huge market potential of these Korean dramas that have evinced a keen interest from the hugely popular Sony TV channel in them. The Sony TV has expressed its willingness to have these dramas in its milieu of programmes. All these developments clearly point to an incoming Korean Wave in the South Asian countries also, which are geographically far away from the Korea.

Korean wave, though of a different nature, first came in India with the opening up of opportunities for the external players in the liberalized market of India in the beginning of 1990s. The first phase of the recent interactions of Indians with Korea was essentially growing acquaintance with the Korean Jaebol like Daewoo, Hyundai, LG and Samsung. There were people in India who were not aware of Korea though they had well information about these Korean companies and their products. In subsequent years, these companies further expanded and diversified the range of their products and became household names in India. Now there is hard to find a family, especially in urban India, which does not have products of these Korean companies. Gradually, small and medium sized Korean companies have also come to Indian market and are working as a cultural ambassador of Korea in India. Thanks to the economic interests of the Korean companies in India, the bilateral trade between the two countries has grown from a meager $570 million in 1991 to about $7 billion in 2006. With the proposal of the POSCO, a steel giant of Korea, to investment around $12 billion in integrated steel plants at Paradip in Orissa, there have been speculations that there would be increased interests of Korean multinationals in India in coming years. The POSCO investment in India would be the largest ever foreign investment in India till date and the single largest overseas investment by a Korean company. If it is not a Korean economic Wave in India than what is it? Moreover, the growing interest of Korean companies in India has also brought its spill-over in various forms. Korean language education and Korean studies have grown faster in recent decades in India.

There has been growing demand in India for not only Korean language but also Korean studies in general with the growth of Korean companies in India. The Korean studies, which was taught in only one university of India, namely the Jawaharlal Nehru University, has been established in University of Delhi in 2002, University of Madras and University of Calcutta in 2005. Every year the number of students enrolled in various courses related to Korean studies has been growing dramatically. In these universities, various events like Korea Week by University of Delhi and Hangul Day by Jawaharlal Nehru University have been celebrated annually and are quite popular. It is worth to mention in this regard the Korean Drama which has been presented as part of the Korea Week by the University of Delhi. Though the drama directors come every year from Korea, the casts are Indian students learning Korean language in the University. In 2004 and 2005, Korean dramas Chunhyang-jeon and Heungbu-jeon were performed and they became so popular that the Korean drama performance has become central to the Korea Week celebration. Because of growing demand and popularity of these drama shows, this year the performance of the Korean drama Kimsorowangwa Heowangwhu was done at the Kamani Auditorium of Delhi which hosts most of the significant performances of Indian theatre and is the hub of cultural life of Delhi.

So, the introduction of Korean dramas on the National TV Channel of India and loud support to Korean music performances were not out of the context. They are part of growing interest of Indians in not only Korean economic miracle but also in the cultural traits of Korea exemplified in various TV soap operas and music. Like wise spread of Korean wave in Japan, China and other Southeast Asian countries, the wave seems to have reached at the shore of South Asia. Putting things into perspective, it could be said that the coming of the Korean wave in India might take some more time to make a visible and splashing presence but augmented by all encompassing relations between the two countries and growing business relations between the countries in leaps and bounds, there could not be any doubt from its becoming more and more popular and strong in coming times.


Even looking from the point of view of cultural proximity angle, Korea and India share the story of Kim Suro of Gaya kingdom, who married to Indian princess of Ayodhaya in 1stcentury BC. The story of ancient marital alliance between the two countries is not the lone intersection of the past. Buddhism and Asian values are other common features in Korea and India from time immemorial. On the bedrock of historical and cultural linkages as well as growing economic mutuality between both countries, the Korean wave could venture into a country of billion with its never ending ebb. Even beyond the cultural proximity theory, there are uniqueness of Korean elements in these cultural products which also have many generic elements. Take for example the Korean dramas, which enact and narrate emotionally gripping themes such as family, friendship, love, greed and betrayal. The portrayal of universal themes explains the transcending appeal of Korean dramas in various cultural context of Asia. However at the same time, these dramas do reflect unique elements of Korean values, beliefs and practices in their narration and presentation.

The phenomenon of the Korean Wave and its spread in far away countries like India and South Asian region is also symbolic of Korea emerging as a 'soft power' in Asia. Here soft power means that Korea has the 'power to attract' based on its intangible resources such as its ideas, culture, business practices, intellectual know-how, political and social values and so on. In contrast to hard power, which primarily relies on its physical resources such as military forces, population, territory and raw materials, acceptance of Korean intangible aspects would certainly provide it the leverage to play more significant role in Asia. It is said that 21stcentury would be an era of intangibles and definitely Korean wave and its intangible effects on the social psyche of human beings in Asia could be a phenomenon to be reckoned with in the new century.

Though, the prospect of Korean wave looks promising in India and even in other South Asian countries, however, given the size and other infrastructural factors of India, it would be premature to come to a definite conclusion about the process in advance. The Korean wave in India would take its unique course, however it has shown a good beginning with capturing the imagination of the people and we could be optimistic about its future. Till date only two dramas have been performed in India but in future there are number of popular Korean dramas such as presently running Yul Aphop Sunchong, Paris' Yeonin, Naeirumun Kim Sam Soon that could be introduced in India with success in future. There is possibility as well of the Korean drama being shot in India with the help of Indian casts. In March last year, Korean TV program production company DHB introduced entertainment show 'Muya Muya' fully shot in Thailand and the program recorded highest viewer rating within six months in Thailand. It is estimated that in last two years, a total of 10 Korean studios have explored foreign markets in order to produce TV programs in Thailand, Vietnam, and China. There are expectations that India would also be included in this list.

In the Indian case, it is difficult to decide whether it was the growing demand for knowing Korea that was instrumental in making Hallyu introduced in the country or it was started with the government help, to make the possibility of Hallyu in India and South Asia. At this stage of economic and cultural exchange, it is incumbent upon the government and private players to bring Korean cultural product to South Asian countries and introduce them to general population. Given the geographical distance, the Hallyu needs initial helping-hand but later on it might become a driving force in the bilateral relations of Korea with these countries. The example of India could be a case of precedent in this regard.