நீ மாறு! உலகம் மாறும் தானாக..

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். அவரது (Jane Goodall)எண்ணங்களைத் தொடர்கிறேன் என் மொழியில் இங்கு.

'உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு சார்! நம்மால என்ன செய்ய முடியும்?' இது நாம் எல்லோரும் தினப்படி கேட்கின்ற வசனம்தான். இதில் உண்மை உள்ளதா? உண்மை இருப்பது போல் தோன்றினாலும் உண்மை இல்லை. ஏனெனில் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரியாமல் பேசுகிறோம் என்று பொருள். நம் ஒவ்வொருவரையும் சேர்த்ததுதான் நாம் காணும் உலகம். இதைப் புரிந்து கொள்ள வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். வீடு என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் கொண்டது. வீட்டில் ரூமுக்கு ரூமு லைட் இருக்கிறது. சிறுவர்களாக இருக்கும் போது போட்ட லைட்டை அணைக்கத் தோன்றாது. ஏனெனில் லைட் (விளக்கு) என்பது சக்தி ஈர்க்கும் சமாச்சாரம், அதற்கொரு விலையுண்டு என்று தெரியாது. ஆனால், அப்பா சொல்லுவார், 'யாரு ரூமுக்குள்ளே போயிட்டு வெளியே வந்தாலும் லைட்டை அணைக்கனும்' அப்படின்னு. அவருக்கு பயந்து இதைச் செய்வோம். பின் அதுவே பழகிவிடும். இதை நாம் செய்யாமல் வீடு மாறும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? இல்லையா! யாராவது ஒருவர் ஆரம்பித்து, எல்லோரும் அதைப் பின் பற்றும் போது மாற்றம் நிகழ்கிறது.

எனவே பாடம்:

1. எங்கு விளக்கு வெட்டியாக எரிந்தாலும் அணைக்கவும். அது உங்கள் வீட்டில், ஆபீஸில், லாட்ஜில் என்று எங்கு இருந்தாலும். ஏனெனில் விளக்கெரிய சக்தி தேவைப்படுகிறது. அச்சக்திக்கு விலையுண்டு. அதை நாம்தான் கட்டுகிறோம்.

2. தெருவில் குப்பை கிடக்கிறது. உங்களால் எடுக்க முடிந்ததை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

3. முதலில் குப்பை உருவாவதைத் தவிர்க்கப் பாருங்கள். அதிகமாக குப்பை போடாதீர்கள். பிளாஸ்டிக் பை தேவையானால் மட்டுமே பயன்படுத்துங்கள். தேவை முடிந்தவுடன் அதைத்தனியாக குப்பையில் போடவும். பிளாஸ்டிக்கை மீண்டும் உருக்கி பயன்படுத்தலாம். அப்ப்டியே விட்டால் அது மக்கி, மண்ணாகாது. அது விரைவில் அழியாது!

4. குப்பைகளைப் போடும் போது வகை வாரியாகப் பிரித்துப் போடவும். காய்கறித் தோல், மிஞ்சிய சோறு, கெட்டுப்போன குழம்பு இவையெல்லாம் பசுந்தாள் உரக்கிடங்கில் புழக்கடையில் போடுங்கள். அது உண்மையில் உரம். அதை பிளாஸ்டிக்குடன் சேர்த்து குப்பையில் போடாதீர்கள். காகிதம் மீண்டும் பயன்படும் பொருள். எனவே அதைத் தனியாகப் போடவும். ஜெர்மனியில் இது புழக்கத்தில் வந்து பல வருடமாகிறது. இப்படிச் செய்வதால் அங்கு அனாவசிய வரிச் செலவு பொது மக்களுக்குக் குறைவதைக் கண்டுள்ளனர்.

5. ஷேவ் செய்யும் போது கண்ணுக்கு எதிரே கொட்டிக் கொண்டிருக்கும் குழாய் தண்ணீரை நிறுத்தவும். வேண்டும் போது மட்டும் குழாயைத் திறக்கவும். மழைக் காலத்தில் எங்கு பார்த்தாலும் நீர் இருப்பது போல் தோன்றினாலும், நீர் ஒரு அரிய பொருள். உலகு ஒரு பெரிய உலை போல் வேலை செய்கிறது. கடலிலிருந்து நீராவியாகிவரும் நீர் குடிக்கும் தண்ணீராக மாறுகிறது. இந்த நீரைத் தரையில் சேமித்து வைத்துப் பழக வேண்டும். உங்கள் ஊரில் ஊரணி இருந்தால், ஏரி இருந்தால் அதை தூர் எடுத்து ஆழப்படுத்துங்கள். ஏரி, குளங்களை பிளாட் போட்டு விற்கும் செயலை நிறுத்த முயற்சி செய்யுங்கள். வீட்டு மாடியில் மழை நீரைச் சேகரியுங்கள். குளிக்கும் போது நீரை வீணாக்காமல குளியுங்கள். மீண்டும் சொல்கிறேன் குடிநீர் அரிய பொருள். இது இந்தியா என்றில்லை எங்கே இருந்தாலும் அடிப்படை உண்மை. (விஷேமாக அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு! புதிதாக சௌகர்யங்களை நுகரும் இவர்கள் நிறைய வீணாக்குவதைக் கண்டுள்ளேன்).

6. டாய்லெட் போய்விட்டு வரும் போது நனைத்த கையை உலர்த்த பேப்பரை உபயோகிக்காதீர்கள். நன்றாக உதறிவிட்டு ஜீன்ஸ் பாண்டில் துடைத்துக் கொள்ளுங்கள். கேட்டால் I'm Environmental Friendly! என்று பெருமையாகச் சொல்லுங்கள். அங்குள்ள பேப்பரை உருவாக்க காட்டு மரங்கள் வெட்டப்படுகின்றன என உணர்க. மரங்கள் வெட்டப்படுவதால் காடுகள் அழிகின்றன. காடுகள் அழியும் போது வனவிலங்குகளின் வாசம் (habitate) அழிகிறது. எனவே ஒரு வகையில் பல உயிர்க்கொலைகளுக்குக் காரணமாகிறீர்கள். மேலும் காடுகள் அழியும் போது Top Soil எனும் சத்துள்ள மேல் மண் காற்றில் தூசாகப் போய்விடுகிறது. அது போழ்து நிலம் சத்தை இழந்து வரண்டு போகிறது. நாம் நினைத்துப் பார்க்காத அளவு பாலை வனங்கள் உருவாகி வருகின்றன. இதைத் தவிர்க்கலாம்.

7. உயிர்க்கொலையைத் தவிர்க்கப் பாருங்கள். எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமையுண்டு. எல்லா உயிர்களுக்கும் வாழ ஆசையுமுண்டு. நமக்கு இருப்பது போல் அவைகளுக்கும் தாய் தந்தையர் உண்டு. குஞ்சு குளுவான்களுண்டு.

8. முன்பு போல் இல்லாமல் இப்போதெல்லாம் கோழிப்பண்ணைகள் வந்துவிட்டன. இந்தக் கோழிகள் குறைந்த இடத்தில் அடர்த்தியாக வைத்து வளர்க்கப்படுகின்றன. நாலு பேர் இருக்க வேண்டிய இடத்தில் நாற்பது பேர் இருந்தால் எரிச்சல் வருமா, வராதா? நீங்கள் உண்ணும் சிக்கன் இப்படி ஆத்திரப்பட்டு, வதையுண்டு செத்துப்போன சிக்கன் என்பதை உணர்க. நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். பன்றிகள் பல கொடுமைகளுக்கு ஆளான பின்னே கொலை செய்யப்பட்டு உங்கள் அடுப்படிக்கு வருகின்றன. ஒர் உயிர் நிறைய stress-ல் இருக்கும் போது தேவையில்லாத enzyme, hormone இவையெல்லாம் சுரக்கின்றன. அது மட்டுமல்ல, ஆடு, மாடுகள் கொழுப்புள்ளதாக இருக்க வேண்டுமென அவைகளுக்கு நிறைய ஹார்மோன் இன்செக்சன் (hormone injection) போடுகிறார்கள். இந்த ஹார்மோன்கள் அப்படியே நம் உடலுக்கு வந்து விடுகின்றன. இதனால் நமக்கு கான்சர் மற்றும் பிற நோய்கள் வருகின்றன. முடியுமென்றால், வெஜிடேரியனாக மாறிவிடுங்கள்.

9. கறிக்கு என்று வளர்க்கப்படும் மாடுககளுக்குத் தீவனம் போட காடுகள் அழிக்கப்படுகின்றன. அந்தக் காடுகளில் முறையாகப் பயிர் செய்தால் இந்த விலங்குகள் தருகின்ற புரதச் சத்தைவிட அதிக மடங்கு புரதைத்தை எடுக்க முடியும். Tofu என்று சொல்லப்படுகின்ற பட்டாணி புரதம் நிரம்பியது. பருப்பு வகைகள் அனைத்தும் புரதம்தான். வெஜிடேரியனாக இருந்தால் புரதம் சரி விகிதத்தில் கிடைப்பதில்லை என்பது பொய். நீங்கள் நினைப்பதை விட மேலதிக வெள்ளையர்கள் வெஜிடேரியனாக மாறிக் கொண்டு வருகிறார்கள். நான் ஒருவன் மாறுவதால் என்ன ஆகிவிடப்போகிறது...என்று கேட்காதீர்கள்.

10. இந்தியாவில் புலால் மறுப்பு என்பது வள்ளுவர் காலத்திற்கு முன்பே ஒரு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு, சமய அளவில் வளர்தெடுக்கப்பட்டதால்தான் இன்று உலகிலேயே மிக அதிக சாகபட்சிணிகள் (vegetarians) அங்கு வாழ்கின்றனர். நினைத்துப் பாருங்கள்! 600 கோடி இந்தியர்களும் நாளைக்கு புலால் சாப்பிட ஆரம்பித்தால் என்ன ஆகுமென்று. எங்கு போவது இவர்களுக்குத் தீனி போட? எனவே சிறு துளிதான் பெரு வெள்ளம் என உணர்க.

ஏதோ இவையெல்லாம் எட்டுக்கட்டி என் விழுமியங்களை (values) உங்கள் தலையில் கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் Jane Goodall தரும் காரணங்கள். விலங்குகள் படும் அவதியைப் பார்த்துவிட்டு அவர் வெஜிடேரியனாக மாறியவர். மேலே சொன்ன கருத்துக்களை இன்னொருமுறை படியுங்கள்.

உன்னால் முடியும் தம்பி!!

10 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் 1/04/2007 10:11:00 AM

நாம் மாறும்போதுதான் உலகம் மாற வாய்ப்புண்டு.
நல்ல பதிவு கண்ணன்.
இங்கே வேகான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.கூடவே வந்த சில நம்மூர்க்காரர்கள் ஆசையாக
புலால் உண்ணுவதையும் பார்க்கிறேன்.
அவர்கள் குழந்தைகளுக்கு சிக்கன் நக்கெட்ஸ் என்பதைக் கொடுக்கிறார்கள்,(சைவம் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்).அவர்களும் பெரிய உருவத்தோடு வயதுக்கு மீறின வளர்த்தியோடு இருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

நா.கண்ணன் 1/04/2007 10:21:00 AM

//அவர்கள் குழந்தைகளுக்கு சிக்கன் நக்கெட்ஸ் என்பதைக் கொடுக்கிறார்கள்//

Jane Goodall ஒரு உதாரணம் தருகிறார். கோழிப்பண்னையில் வாழும் கோழிகள் அதி மீறிய வெறி (aggression) கொள்கின்றன. அதனால் அவை ஒன்றை ஒன்று கொத்தித் தாக்கத் தொடங்குகின்றன. இதைத் தவிர்க்க அதை அலகை (மூக்கை) வெட்டி விடுகின்றனர். இது வலியுள்ள சித்ரவதை. இப்படிச் சித்ரவதையாகி, கோபமுற்ரு, வெறி கொண்டு, அவஸ்தையில் வாந்து மடியும் கோழிகளையே அவர்கள் உண்கின்றனர். என்ன பரிதாபம்.

நம்மவரின் பிரச்சனை, பிற குழந்தைகள் சிக்கன் சாப்பிடும் போது நாம் எப்படி சாப்பிடாமல் இருப்பது என்று. இது அசட்டுத்தனம். எப்படியும் நம்ம குழந்தைகள் வித்தியாசமாகத்தான் இருப்பார்கள், அதனால் ஒதுக்கப்படவும் வாய்ப்புண்டு. சிக்கன் சாப்பிடுவதால் அதைச் சரி செய்து விட முடியாது. இது சிகரெட் பிடித்தால் ஆண்மை கூடும் என்ற போலியான விளம்பரம் போல்தான். ஹார்மோன்களை வைத்து உடலை உப்ப வைத்துவிட்டு கமலஹாசன் சிக்கன் தின்பது போல் காட்டுவார். இங்கு ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல!

ஜீவா (Jeeva Venkataraman) 1/04/2007 01:36:00 PM

பதிவுக்கு நன்றி, செயல்படுவோம்.

நா.கண்ணன் 1/04/2007 01:37:00 PM

நன்றி ஜீவா!

ஊருக்கு நூறு பேர்!!

Anonymous 1/04/2007 02:26:00 PM

i am aasath

So some moral valuers came from the time of Valluvar. You means that the time of Budhaa ...

But Buthar told to become veg. for against the annihilation of the animals which is used for agriculture by the name of Vedha Yagam.

Did you feel the stress of animals. Can you cross-over the feelings of Thinniyam Dalits, 2002 Gujarath Muslims, and the people who sufered by stress thriugh the IT era by the world capitalism or Imperialism

You told that if one change with himself should change the world.

If it is truth, why become made diversion between the mode of usage of the property of individual and Common ...

நா.கண்ணன் 1/04/2007 02:40:00 PM

Thank you Mr.Asath

If you read that blog carefully, it addresses only the issues related to current environmental problems as seen by Dr.Jane Goodall and her suggestions to change the current sucidal trend.

Being a vegetarian has an enormous environmental impact. Imagine the 600 million & odd vegetarian Indians become meat eaters today! Imagine the recurring impact it will make on Indian Environment and the global environment. Thousands of acres of fertile forests in Amazan river delta and in Argentina are converted in to grazing lands to feed MacDonald. Being a carnivore is 'energy inefficient'. This factor has been discovered by Indian Rishis (including Valluvar) long time ago. They proposed a viable alternative feeding habit for tropical Indians based on Agriculture rather than animal forming. This is obsolutely a 'sustainable approach' by any standard.

The other issues raised by you are beyond the scope of the current discussion. By far, non-vegetarians out number vegetarians that includes Muslims and Dalis of India. They will change their food habits when the environment can not sustain anymore the ever aggressive, ever increasing consumerism of mankind.

செல்லி 1/04/2007 09:29:00 PM

நல்ல பதிவு.புலம் பெயர்ந்தவர்கள்
வெஜிரேற்யன் என்றால் பரிகாசம் செய்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரர்களே vegetarian ஆக மாறி விட்டார்கள்.
மேலும்,//Tofu என்று சொல்லப்படுகின்ற பட்டாணி புரதம் நிரம்பியது.//
அத்துடன் ஈஸ்ரோஜன் எனும் ஹோமோனும் அதிலிருப்பதால் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இது hormone replacement therapy (HRT) ஆக தினசரி உணவில் Tofu ஐ சேர்க்கச் சொல்கிறார்கள்.
ஜ்ப்பான்.சீனப் பெண்களுக்கு மெனொபொசுக்கு பின் வரும் hot flush, mood swings ஏற்படுவதில்லையாம். அப்படியென்றால் Tofu பெண்களுக்கு மிக அவசியமாகிறது.

நா.கண்ணன் 1/04/2007 10:03:00 PM

நன்றி செல்லி:
ஜெர்மனியில் மிக வேகமாக வெஜிடேரியனிசம் பரவி வருகிறது. பசு மாடுகளுக்குப் போடப்படும் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் அபரித வளர்ச்சியைக் கொடுப்பதை அங்கு எளிதாகக் காணலாம். பெண்களின் Breast cancer தொகை அதிகமாகி வருகிறது. Mad cow diseases மனிதர்களுக்கு பரவக் கூடியது என்று தெரிந்தவுடன் மாறியவர்கள் அதிகம். ஜேன் சொல்கிறார் இப்போது பரவி இருக்கும் HIV வைரஸ் சிம்பான்சி குரங்களை ஆப்பிரிக்கர்கள் உண்டதால் வந்த வினை என்று. சிக்கன் ப்ளு போன்ற பறவை வியாதிகள் சுட்டுவது என்னவெனில் விலங்குகளிடமிருந்து எளிதில் வியாதிகள் நமக்கு பரவ வாய்ப்புள்ளது என்பதே.

ஒரு சுவைக்காக, ஒரு வெறிக்காக கறி உணவு உண்ணலாமே தவிர அதே சுவையை, அதே சக்தியைத் தரக்கூடிய தாவர உணவுகள் மண்டிக்கிடக்கின்றன. உணவுச் செலாவணிக் கணக்கில் புலால் உண்பது செலவுக்கணக்கு. நஷ்டக் கணக்கு. மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் விலங்குணவு என்பது வழக்கொழிந்து போய்விடும் ஒரு காலக்கட்டத்தில். விலங்குகளைப் பராமரிக்க, அவைகளுக்குத் தீவனம் போட எடுக்கும் சிரமத்தில் எளிதாக பயிர் சாகுபடி செய்து சாப்பாடு போடலாம். இங்கு சமயம், சடங்கு, விழுமியம் ஒன்று வரவேண்டிய அவசியமில்லை. எளிய சூழலியல் கணக்கு இது.

Tofu பெண்களுக்கு பல வழிகளில் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். நன்றி. பொதுவாகவே கொரிய, ஜப்பானியப் பெண்கள் நம்மவர் போல் சிடு, சிடுப்பதில்லை. அதுவும் வயதானவர்கள் கோபப்பட்டு இன்னும் நான் பார்க்கவே இல்லை. இது tofu effect என்று விளக்கியதற்கு நன்றி.

வடுவூர் குமார் 1/05/2007 10:25:00 AM

தண்ணீர் பயண்பாடு??
வெளிநாடு போகும் நம்மவர்கள் (சொந்த ஊரில் டப்பாவில் தண்ணீரை எடுப்பவர்கள்)டேப்பை திறக்கும் போது எரிச்சலாக வரும்.
அமெரிக்கா போகும் நம்மக்கள் மட்டும் அல்ல இங்கு வருபவர்கள் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
என் தாத்தா சொன்னது "எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரை விரயமாக்குகிறோயோ அவ்வளவுக்கு பணம் உன் கையை விட்டு போகும்".

நா.கண்ணன் 1/05/2007 10:41:00 AM

குமார்: ஒரு ஏழை நாட்டிலிருந்து அமெரிக்கா போகும் போது அனுபவிக்க வேண்டும் என்று ஆசை எழுவது நியாயமானதே! ஆனால், அதை முதலிரண்டு ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டு அந்த நாட்டின் நலம், உலகின் நலம் இவைகளைக் கண்ணுற வேண்டும்.

ஜெர்மனியில் சூழல் பிரக்ஞை என்பது உச்சம். எனக்கு பிரான்சிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். கோடையில் இரண்டு முறை குளிப்பதைப் பார்த்துவிட்டு வீட்டுக்காரி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஏனெனில் அங்கு தண்ணீர் வரி அதிகம்!

அமெரிக்காவில் நிறைய வளமிருப்பது உண்மை. ஆனால், அது எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வளமல்ல. வளம் எங்கிருந்தாலும் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதே இன்றையத் தேவை. இதைத்தான் sustainable development என்று சொல்கிறோம். Our resources are finit and we should learn to utilize them intelligently. இதில் இந்தியாவின் பாரம்பரிய அறிவை பயன்படுத்திக் கொள்வது உசிதம். உங்கள் வீட்டுப் பெரியவர் சொல்வது sustainable use of water. Vegetarianism in India was adapted with the same motto.