ஒப்பு நோக்கும் கல்வி! ஜே.கே.

சிந்தனை என்பது என்ன என்று சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. வாக்கு, சிந்தனை, மனம், புத்தி இவையெல்லாம் என்னவென்று இந்திய மெய்ஞானம் ஆராய்ந்து அறிந்துள்ளது. சில கலாச்சாரங்களில் 'சிந்தனை' என்றால் 'புறம்' என்று பொருள் படுவதாக, ஒரு புதிய கோணத்தை முன் வைக்கிறார் ஜே.கே! சிந்தனை என்பது, எவ்வளவு சிறந்த சிந்தனையாக இருந்தாலும் அது 'குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல' என்று கருதுகிறார் ஜே.கே. கற்றது (சிந்தனை) கைமண் அளவு! என்பது இதனால்தான்.

சிந்தனை உலகை தேசங்களாக, மதங்களாக, வர்ணாசிரமமாக பிரித்து வைத்திருக்கிறது. சிந்தனை முறையில் அமையும் கல்வி, ஒப்பு நோக்குதல் எனும் அலகு கொண்டு மனிதத் திறனை அளக்கிறது. மனிதம் என்பது அழகானது. மானுடம் அழகு. ஆனால் அழகை சிந்தனையால் அளக்க முடியாததால், அவனை அலகுக்குள் அடக்கி அளந்துவிடுகிறது. இது உண்மைக்குப் புறம்பான செயல் என்கிறது இந்த உரையாடல்.

ஒப்புமை இல்லாத கல்வி முறையை கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் உலகெங்கும் செயல்படுத்தி வருகின்றன. உபநிடதம் ஜீவனை ஞான சொரூபன் என்றே வருணிக்கிறது. நாம் பள்ளிக்குப் போவது ஞானம் இல்லாததால் அல்ல. ஞானம் இருப்பதால்தான் மேலே கற்க வேண்டுமென்ற ஆசையே பிறக்கிறது. எனவே நமது சொரூபமான ஞானத்தில் நாம் எப்போதும் நிலை பெறும்படி செய்வது எப்படி? சிந்தனை அதற்கு ஹேதுவா? விரோதியா?

2 பின்னூட்டங்கள்:

M R Natarajan 1/13/2007 12:38:00 PM

ஜே.கே.யின் பேட்டியை கேட்டேன். அருமை. உங்களின் எல்லா பதிவுகளையும் நிதானமாக பார்க்க வேண்டும்.

Thank you for your comments to my recent story. 25 stories of mine are already published by various magazines. I have posted all the 25 stories in my blog in December 2006 in five parts. If anyone is ready to do epublishing, I am ready for it.

I do not expect any monetary benefit out of it. My purpose is to reach as many persons as possible. If the e-pbulisher could make profits out of it, he can part a portion of it so that I can divert it to orphanage/old age homes.

Thank you once again for showing interest in my writings and welfare of me.

I will improve my blog to post my drama clippings.

m r natarajan

நா.கண்ணன் 1/13/2007 02:18:00 PM

அன்பின் நடராஜன்:

உங்கள் சிறுகதை தொகுப்பை தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் வெளியிட்டு மதுரைத் திட்டத்திலிடலாம். எனக்கு தனிமடல் எழுதுங்களேன்!