தெய்வம் ஒன்றா? இரண்டா?

படி ஒன்று:

ஒரு தாய்க்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை. அம்மா போல ஒன்று, அப்பா போல ஒன்று, அத்தை போல ஒன்று, மாமா போல ஒன்று, பாட்டி போல ஒன்று இப்படி. ஒண்ணு சிவப்பா இருக்கும், இன்றொன்று கருப்பா இருக்கும், ஒன்று சுட்டி, மற்றது புத்தகப்புழு இப்படி.

ஊருக்குள் பார்த்தால் ஆயிரம் ஜாதிகள். உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று எந்தக் குலத்தில் பார்த்தாலும் உள்ளுக்குள் ஜாதிகள். ஒன்றுக்கொன்று கொடுக்கல் வாங்கல் கிடையாது.

மதங்கள் என்று பார்த்தால்? பெரிதாக சிவன் கோயில் இருக்கு. அதற்குப் பக்கத்திலே பிள்ளையார் கோயில். சின்னதாக அடுத்த தெருவில் முருகன் கோயில். இரண்டு தெரு தள்ளி பெருமாள் கோயில். ஊருக்கு மூலையில் ஆஞ்சநேயர் கோயில். ஊருக்கு வெளியே ஐயனார் கோயில், பிடாரி கோயில். ஊரின் ஒரு பக்கத்தில் சர்ச. காலையில் கேட்கும் 'பாங்கு (வாங்கு)' முஸ்லிம் மசூதியிலிருந்து வரும்.

காட்டிற்குப் போனாலோ ஆயிரம் விலங்குகள்! யானை, குதிரை, புலி, சிங்கம், பாம்பு, கழுகு, வண்டுகள், நத்தைகள், நுண்ணுயிர் கிருமிகள். தாவரங்களும் பல்கிப் பெருகி இருப்பது கண்கூடு.

எதுவுமே ஒன்றில்லை. இரண்டுதான். பன்முகம் பயிலும் வையமாகவே இருக்கிறது. ஆக, காட்சிக்குப் பலவாக வையமுள்ளது. இப்பன்முகம் மட்டுமே உண்மை என்று காண்பவன் எல்லாவற்றிலும் பேதம் காண்கிறான்.

படி 2.

ஆனால் எல்லோராலும் எப்போதும் பேதத்தில் வாழ முடியாது. 'பேய்கள் அரசாண்டால் பினம் தின்னும் சாத்திரங்கள்' என்பான் பாரதி. ஆனானப்பட்ட கம்சனுக்கும், இராவணனுக்கும், ஹிட்லருக்கும் ஒரு முடிவு வரத்தான் செய்தது. எனவே மனிதர்கள் குழுமங்களை அமைத்துக் கொள்கின்றனர். இதை வர்க்கமென்றும், சமய ஒழுக்கமென்றும், மேல்தட்டுக் குழு என்றும் எப்படி வேண்டுமானாலும் காணலாம். ஆனால், குழுவான போதும் பிரிவினை 'சும்மா' உட்கார்ந்து இருக்காது. அதற்குள்ளும் 'பேதம்' காட்டும். உதாரணமாக, கிறிஸ்தவத்தில் ஜாதி கிடையாது என்று சொன்னாலும், சிரியன் கிறிஸ்தவர்கள் 'பிராமணர்களை' விட உசத்தி எனும் கருத்துண்டு (படிக்க அருந்ததிராயின் God of small things). மேலும் இந்திய கிறிஸ்தவத்தில் நாடார் கிறிஸ்தவர், பிள்ளை கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்ற பாகுபாடெல்லாம் உண்டு. முஸ்லிம்களிடம் ஜாதி கிடையாது என்று சொன்னாலும், பெரும் பிரிவாக சன்னி, ஷித்தே, சுஃபி என்ற பாகுபாடு உண்டு. தோப்பில் முகம்மது மீரான் தனது நாவல்களில் அங்குள்ள பேதங்கள் பற்றிப் பேசுவார். வெள்ளை மரைக்காயரும், கருப்பு முஸ்லிமும் ஒன்றல்ல. மலேய் முஸ்லிமும், நாகூர் முஸ்லிமும் ஒன்றல்ல. ஒன்றாகத் தொழுகை செய்யலாம், சாப்பிடலாம் என்றாலும், கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளமுடியாது. நிறம், பணம், அந்தஸ்து, படிப்பு போன்றவை மனிதனை எந்தக் குழுவிலிருந்தாலும் பிரித்து வைத்திருக்கும்.

படி 3.

இப்படிப் பலவாய்த் தெரியும் உலகம் பற்றி நவீன அறிவியல் ஆராய்ச்சி செய்திருக்கிறது. சார்லஸ் டார்வின் என்பவர் ஹச்.எம்.எஸ்.பீகிள் எனும் கப்பலில் உலகமெல்லாம் சுற்றி, இறுதியில் விலங்கு, தாவரங்கள் இவைகளுக்கு தோற்றம் ஒன்று என்று காண்பித்தார். அதாவது குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதுக்கப்புறம் ஒரு நூற்றாண்டாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இன்று Human Genome வரைக்கும் வந்துட்டாங்க. இப்போ என்னடான்னா, National Geographic channel, Animal Planet, Discovery, BBC (special)ன்னு எல்லோரும் இயற்கையின் விந்தை பற்றிச் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாத்துக்கும், எல்லாமும் உறவு அப்படின்னு நவீன ஆய்வு சொல்லிவிட்டது.

இதை ஆராய்ச்சி பண்ணி அறியனுமாகும்ன்னு சில பேர் கேக்கிறது புரியுது. உதாரணமா, கீழே உள்ள சின்ன வீடியோவை முதலில் பாருங்க!

என்னடா! பாண்டா கரடி தும்பல் போடுமான்னு கேக்கிறீங்களா? அது முக்கியமில்லை, தாய்க் கரடியோட ரியாக்சனைப் பாருங்க. "அம்மாடி! தூக்கிவாரிப் போட்டதுன்னு" சொல்லற மாதிரி இல்லே? அதுதாங்க ஒத்துமை!!

இவங்களெல்லாம் சொல்லறதுக்கு முன்னாடியே நம்ம ஆளுக உயிர்களுக்குக்குள்ள ஒற்றுமை பற்றிச் சொல்லிட்டாங்க. நம்ம தசாவதாரம் டார்வினுக்கு முன்னோடி. மேல் விவரங்கள் ஆழ்வார்க்கடியனில் பாருங்க!

அது மட்டுமில்லே, மத்த எந்த சமயமும் சொல்லாத அளவுக்கு ஒற்றுமை பற்றி இந்திய வேதங்கள் சொல்லுது. வேதமறிந்த ஒருவர் ஆற்றிய உரையைக் கீழே தருகிறேன். அவர் பெயர் பரனூர் அண்ணா.

தெய்வம் ஒன்று என்று சொல்கிறது வேதம். மூர்த்திகள் பலவாக இருக்கின்றன என்று சொல்லுகின்றன. இது அப்படியே டார்வின் சொல்வதை ஆன்மீக பரிமாணத்தில் சொல்வது போல் உள்ளது இல்லையா? அது மட்டுமில்லை, உளவியல் ரீதியாகவும் மனிதம் ஒன்று என்று இரண்டு பேர் சென்ற நூற்றாண்டில் உரக்கச் சொல்லிப் போயினர். ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி, மற்றது ஜோசப் கேம்பல். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'நீதான் உலகம்' என்பது ஆழமான பொருள் உள்ளது. அவரது பேச்சுக்களைக் கேட்டவர்களுக்குப் புரியும், அவர் ஒரு நிலையில் தனி மனிதன் (individual) என்பது 'தோற்றப்பிழை' என்று சொல்லுவார். ஜோசப் கேம்பல் பற்றி விரிவாகப் பின்னால் பார்ப்போம்.

ஆக, முதல் நிலை தாண்டி, இரண்டாம் நிலை தாண்டி மூன்றாம் நிலைக்கு வரும் போதுதான் இந்த ஒற்றுமை புரிகிறது. புரிந்தால் போதாது, அப்புரிதல் நம் ஒவ்வொரு விழிப்பிலும் இருக்க வேண்டும். அதுதான் சவால்!!

11 பின்னூட்டங்கள்:

எழில் 1/13/2007 12:11:00 AM

நல்ல கட்டுரை. நல்ல சிந்தனைகள்.

ஒன்றாக இருக்க முடிந்த கடவுளால் பலவாக இருக்கமுடியாதா என்ன?

இறையால் பலவாக இருக்க முடியாது என்று இறையை கட்டுப்படுத்த முடியுமா?

நன்றி
எழில்

Anonymous 1/13/2007 12:44:00 AM

நல்ல பிரசங்கம்
போட்டிருந்தீர்கள்.
சந்தோசம்.
நன்றி.

M R Natarajan 1/13/2007 01:43:00 AM

தத்வார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

என்ன ஒற்றுமை பாருங்கள். இந்த வார கல்கியில் நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அதை என் வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன். இரண்டும் ஒன்று என்ற தலைப்பில்!

மெலட்டூர்.இரா.நடராஜன்.

Dharumi 1/13/2007 02:00:00 AM

இன்னும் கொஞ்சம் அதிக விளக்கம் இருந்தால் நன்றாக இருக்குமே...

swami 1/13/2007 02:09:00 AM

i dont know how to post in Tamil. This is an excellent audio 'Upanyasam'. Now a days it is very rare to listen / view this types in eiter tv or radio. All are commercial and spoiled our culture and as well as tamil and we end up in ' Kuttu pattau' and there is a Lyricts and award ceremoney. This is what the so call Dravida party has done to tamil. The tamil literature is in religious texts like ramayana / mahabaratam etc.,
since DK's all are against Hindu religon they have done enough damege both tamil literature and hindusim simaltenously.
If any one take the job of publihing wither video or audio based upanyasam of various personalities it will be useful for us and for our future generations

நா.கண்ணன் 1/13/2007 02:31:00 PM

Dear Sri.Swami
Thank you for visiting. Sri Krishnapremi alias Paranur Anna is a frolific speaker on Vedanta and Krishna Bakthi. 1000s of his talks were recorded and available commercially. I shall give more of his talks in my blog in the coming days.

It is very easy to write Tamil in Unicode encoding if you have Windows XP. Download Murasu Anjal or E-kallappai and key-in Tamil here. That simple.

நா.கண்ணன் 1/13/2007 02:32:00 PM

//இன்னும் கொஞ்சம் அதிக விளக்கம் இருந்தால் நன்றாக இருக்குமே... //

சாம் சார்! பொதுவாகவா? இல்லை குறிப்பிட்ட இடங்களிலா? அடுத்த பதிவையும் பாருங்கள்.

ஜடாயு 1/19/2007 04:03:00 PM

கண்ணன், மேலும் ஒரு அற்புதமான பதிவு.

// "தெய்வம் ஒன்றா? இரண்டா?" //

ஏகன், அனேகன் இறைவனடி வாழ்க!
-திருவாசகம்

"ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ?"
-திருவாசகம்

ஒன்றே என்னில் ஒன்றேயாம்
பலவென்றுரைக்கில் பலவேயாம்
அன்றே என்னில் அன்றேயாம்
அலவென்றுரைக்கில் அலவேயாம்
-கம்பராமாயணம், யுத்த காண்டம் கடவுள் வாழ்த்து

இறையின் இந்த ஒற்றைப் பன்முகத் தன்மையை வியக்கும் இந்து ஆன்மிகத்தின் எவ்வளவு அற்புதமான வெளிப்பாடுகள்!

ஜடாயு 1/19/2007 04:12:00 PM

// இவங்களெல்லாம் சொல்லறதுக்கு முன்னாடியே நம்ம ஆளுக உயிர்களுக்குக்குள்ள ஒற்றுமை பற்றிச் சொல்லிட்டாங்க. //

நன்று சொன்னீர்கள். உயிர்களுக்குள் ஒற்றுமை என்ற உணர்வும், அறிவும் ஒன்றிணையும் இந்த அற்புதமான ஆன்மீக தத்துவத்தை pan-theism என்ற சொல்லால் சுட்டி அறிவுத் தளத்தில் அதை trivialise செய்யும் "அறிஞர்களும்" இருக்கிறார்கள்!

ஆனால், தொடரும் அறிவியல் ஆராய்ச்சிகள் இந்தக் கருத்துக்கு மேலும், மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளன? Gaia ஆராய்ச்சி பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது பற்றி நண்பர் நீலகண்டன் மிக அழகாகத் தமது பதிவில் எழுதியிருக்கிறார்.

"பல பண்டைய ஐதீகங்களும் புராணங்களும் பூமியை ஒரு தாய்த்தெய்வமாகக் கூறுகின்றன. அண்மையில் ஒரு அறிவியல் கருதுகோள் பூமியை ஒரு உயிர் அமைவாக (system)
காணும் சாத்தியக்கூறினை முன்வைத்துள்ளது. உயிரி-இயற்பியலாளர் (bio-physicist) ஜேம்ஸ் லவ்லாக்கும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லின் மர்குலிஸும் இக்கருதுகோளை
வலியுறுத்துகின்றனர்....."


மேலும் படிக்க : http://arvindneela.blogspot.com/2007/01/1_14.html

நா.கண்ணன் 1/19/2007 05:05:00 PM

ஜடாயு: நல்லவேளை வந்தீர்கள்!! உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று தெரியும். எதிர்பார்த்துக் காத்திருந்தேன். தன்யனானேன்!

நா.கண்ணன் 1/20/2007 10:22:00 AM

கைய்யா (Gaia) கருதுகோள் பற்றி முன்பு நிறைய எழுதியுள்ளேன். பாசுர மடலிலும் வரும்! நீலகண்டனின் பதிவு நன்று.