உலக நாடுகளில் வேளாண்மை

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 20)


பொங்கல் என்பது, உழவர் திருநாள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பலரும் அறிந்த உண்மை. அதனால்தான் உழந்தும் உழவே தலை என்றார் வள்ளுவர். உழவுக்குத் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதியார். நிலத்துக்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அவர்கள் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

அந்தச் சிறப்பு மிக்க உழவர்களைப் பற்றியும் வேளாண்மை பற்றியும் நா.கண்ணன் இங்கே நம்முடன் உரையாடுகிறார். ஆற்றங்கரை நாகரிகம் தொடங்கி, வேளாண்மையின் வரலாறு, அதன் பயனான நாகரிக வளர்ச்சி, தொழில் புரட்சிக்குப் பிறகு வேளாண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேளாண்மையில் எந்திரமயம், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்பட உலக நாடுகளில் வேளாண்மை, விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகள்..... எனப் பலவற்றைப் பற்றியும் நா.கண்ணன் செறிவான உரை நிகழ்த்தியுள்ளார்.

அழுக்குப் படும் இந்த உழவுத் தொழிலில் முதியவர்கள் மட்டுமே அதிகம் ஈடுபடுவது; இந்தத் தொழில் செய்யும் இளைஞர்களுக்கு மணம் முடிக்கப் பெண் கிடைக்காத நிலை எனப் பல நேரடி உண்மைகளை எடுத்துக் காட்டியுள்ளார். பசிக் கொடுமையை ஓட்டுவதற்கு என்ன வழி என்பதையும் அவர் கூறியுள்ளார்.

'ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை' என்ற பாடலோடு தொடங்கும் இந்தப் பதிவு, 'இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா' என்ற பாடலோடு நிறைவடைகிறது.

காலத்திற்கு ஏற்ற இந்த இனிய உரையைக் கேட்டு மகிழுங்கள்:


this is an audio post - click to play


நேர அளவு: 24 நிமிடங்கள்
www.Sify.comKeyword: voice column, agriculture, history, korea, japan, germany, india, knowledge, white-color job, farmers, foreign labour, philippines, vietnam, migration

2 பின்னூட்டங்கள்:

கபீரன்பன் 1/15/2007 02:36:00 AM

கொரியா ஜப்பானிலும் வேளாண்மையில் நாட்டம் குறைந்து வருவது வருத்தம் தருகிறது.தங்கள் தேசத்திலேயே பெண்கள் கிடைக்காமல் பிலிப்பைன்ஸ் லிருந்து பெண்கள் மணமுடிப்பது அதனினும் ஆச்சரியம். மொழிப்பிரச்சனை இல்லையா, leave alone the intellectual incompatability.அளவில் சிறிய தேசங்கள் ஆனதால் உணவு உற்பத்தி என்பது பெரிய பிரச்சனையாகமல் இறக்குமதிகள் மூலம் சமாளிக்க முடியுமோ என்னமோ ! நம் நாட்டில் ஒரு வெங்காயம் சில தினங்களுக்கு இல்லை என்றால் அரசே கவிழ்ந்து விடுகிறது. அப்படியிருந்தும் விவசாயம் என்பது ஒரு லாபமற்ற தொழிலே. இடைத் தரகர்களே, உழைப்பே இன்றி அனுபவிப்பவர்கள்!தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வழியுண்டா? பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நா.கண்ணன் 1/15/2007 08:03:00 AM

//மொழிப்பிரச்சனை இல்லையா?// உண்டு. பெரும்பாலும் பொருளாதாரக் காரணங்களால் இங்கு வருகின்ற பெண்கள் இம்மொழியைக் கற்றுக் கொள்ளுகின்றனர்.
//இறக்குமதிகள் மூலம் சமாளிக்க முடியுமோ என்னமோ!//
இல்லை. இறக்குதி அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாத்தைகப் பாதுகாக்க. ஆனால் இது ரொம்ப காலத்திற்கு தாக்குப் பிடிக்காது. விரைவில் இறக்குமதி செய்ய வேண்டிவரும்!
//தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வழியுண்டா?//
உண்டு. விவசாயிகள் படிப்பறிவு பெறும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் போய்விடுவர். ஐரோப்பிய விவசாயிகள் சந்தையுடன் நேரடித்தொடர்பிலே வியாபாரம் செய்கின்றனர். கணினி வந்துவிட்ட இக்காலத்தில் இதை எளிதாக இந்தியாவில் செய்யலாம்.