தொடுகுறி சாஸ்திரம்

ஜோதிடத்தில் எனக்கு அதிக நம்பிக்கை என்று சொல்லமுடியாது. காரணம் அரைகுறை ஜோதிடர்கள் சொல்லும் குறி தவறிப்போவதால் இருக்கலாம். ஆனால் எதிர்காலம் பற்றிச் சொல்லும் சில கலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு. ஆத்ம அறிவு கொண்டவர்கள் சொல்லும் 'ஆரூடம்' பலிப்பதுண்டு. இதில் தொடுகுறி சாஸ்திரமும் ஒன்று. கற்றை (குவாண்டம்) இயற்பியல் சொல்கிறது 'பட்டுப்பூச்சியின் சிறகை ஒடித்தால் பருவ காலங்கள் மாறும்' என்று. பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. 'பட்டுப்பூச்சி விளைவு' எனும் இக்கோட்பாட்டை வைத்து சினிமாப்படம் கூட வந்திருக்கிறது. இதற்கு சமீபத்தில் வரக்கூடிய தமிழ் சினிமா 12B. இது ஒரு ஆங்கிலப்படத்தின் தமிழ் நகல்!

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் தொடுகுறி சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்கு லண்டன் சென்ற போது, பிரித்தானிய நூலகத்தில் இது குறித்த ஒரு பழைய நூலொன்று கண்டேன். அது இப்போது இலக்க வடிவில் காணக்கிடைக்கிறது. இதை வைத்து ஒரு சிறு விளையாட்டு செய்தேன். உங்களின் இன்றைய பலன் அறிய கீழே உள்ள வலைத்தளம் செல்க. இன்று நல்ல நிமித்தமா என்று பார்க்க இது உதவுகிறது. நீங்கள் இத்தளத்திற்கு வருகின்ற வேளை, இங்குள்ள சக்கரத்தைத் தொடுகின்ற பொழுது உங்களின் நாட்பலனை தீர்மானிக்கிறது. இதில் சொல்லியபடி நடந்ததா என்று சோதித்துப் பார்த்து எழுதவும்.

http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html (ஆங்கிலம்)http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html (தமிழ்)

சக்கரத்தைத் தொட்டவுடன் (சொடுக்கியவுடன்), உங்கள் பலனுக்குரிய தேவதை வரும். அதை மீண்டும் சொடுக்கினால், உங்கள் பலன் வந்து சேரும். இது முழுக்க, முழுக்க randomized! ஒரே பலன் திரும்ப வரவே, வராது. அப்படி வந்தால் அது உங்கள் விதி என்று கொள்க! ஆனால், ஒரே ஒரு முறை, காலையில் சொடுக்குங்கள். தினபலன் அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பின்னூட்டம் நிமித்த சாஸ்திரம், தொடுகுறி சாஸ்திரம் பற்றி அறிந்து கொள்ள மேலும் உதவும்.

இவ்வலைத்தளத்திலுள்ள மூலப் புத்தகத்தில் மேல் விளக்கம் காணலாம்!

வாழ்க!!

Keywords: fortune telling, horoscope, astrology, quantum physics, butterfly effect, indian art, science

6 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 1/16/2007 06:31:00 PM

கற்றுத்தெளிந்தவரிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கிறது.
பார்ப்போம்.
விளக்கம் இன்னும் கொஞ்சம் எளிய தமிழில் கொடுத்திருக்கலாம்.
என்க்கென்னவோ,அதே தான் திரும்பத்திரும்ப வருகிறது.

நா.கண்ணன் 1/16/2007 08:56:00 PM

//விளக்கம் இன்னும் கொஞ்சம் எளிய தமிழில் கொடுத்திருக்கலாம்.//

மூலத்தைச் சொல்கிறீர்களா? என் பதிவைச் சொல்கிறீர்களா?

//அதே தான் திரும்பத்திரும்ப வருகிறது. //

வரக்கூடாதே! எனக்கு அப்படி வந்ததே இல்லையே!

வல்லிசிம்ஹன் 1/16/2007 10:32:00 PM

நன்றி கண்ணன்.
அற்புதமன பலன் கிடைத்தது.
21 நாள் கழித்து மீண்டும் என்ன நடக்கிறது என்று சொல்லுகிறேன்.
சோதிடம்,நாடி சோதிடம் எல்லாமே

மிகவும் கவரக்கூடிய சாஸ்திரங்கள்.
ஃபாஸினேடிங்&மிஸ்டீரியஸ்
வகை.
ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்.

நா.கண்ணன் 1/16/2007 10:44:00 PM

//அற்புதமன பலன் கிடைத்தது.//

வாழ்த்துக்கள். திரும்ப வந்து பின்னூட்டம் தாருங்கள். மகிழ்ச்சி.

வடுவூர் குமார் 1/17/2007 04:43:00 PM

உங்கள் பதிவை சொல்லமுடியுமா?
மூலத்தை தான்.
:-))

நா.கண்ணன் 1/17/2007 04:45:00 PM

ஹ, ஹா! :-))
நன்றி!