நாணய நண்பன் (Paypal)

பணம் செயற்கை. அது இன்னும் செயற்கையாகிக் கொண்டு போகிறது! பண்டமாற்று என்பது போய் பணம் என்பது நாகரீக வளர்ச்சியடைந்ததன் அடையாளமாகிப் போனது. நான் சிறுவனாக இருந்த போது பண்டமாற்று இருந்தது. இரண்டு ஆழாக்கு (?) அரிசி கொடுத்துவிட்டு காய்கறி வாங்கி வருபவருண்டு. இப்போதுள்ள தமிழகத்தில் இது பற்றியாவது பேசமுடியுமா? இப்போது காசுப் புழக்கம் கூட வழக்கொழிந்து வருகிறது. எனது வெளிநாட்டுப் பயணங்களில் நான் hard cash எடுத்துச் செல்வதில்லை. எல்லாம் credit card வழியாகவே செலாவணி! இதை பிளாஸ்டிக் மணி (money) என்கின்றனர். அமெரிக்காவில் credit card கொண்டு டாக்சி ஓட்டுனருக்குக் கூட காசு கொடுக்க முடிகிறது. அந்த அளவிற்கு செலாவணி செயற்கையாகிக் கொண்டு வருகிறது.

இப்போது இணையம் வந்தவுடன், காசைக் கண்ணிலே காட்டவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது ;-) பண்டமாற்று போய், பொற்காசுகள் வந்தன, அது போய் செப்புக் காசுகள் வந்தன, அது போய் ஒன்றும் உதவாத அலுமினியக்காசு வந்தது, அது போய் பிளாஸ்டிக் காசு வந்தது. இப்போது அதுவும் போய் இலத்திரன் காசாகி (electronic cash) நிற்கிறது.

Paypal கணக்கை முதன் முதலில் பல வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் துவங்கினேன். இ-வாணிபம் என்பது பிரபலமான போது Paypal எனும் கருதுகோள் நிலை பெற்றது. நமக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதை Paypal கணக்குடன் சேர்த்துவிடலாம். உங்களிடம் இதுபோல் ஒரு கணக்கு இருந்தால், பெயர் கூட வேண்டாம், மின்னஞ்சல் முகவரியிலேயே காசை அனுப்பிவிடலாம்.

இது சிறு செலாவணிக்கு மிகவும் அனுகூலமாக இருக்கிறது. Freeware அல்லது Shareware வாங்குவதற்கு இது மிக எளிது! நான் எனது தொலைபேசி அட்டைகளை Paypal மூலமே வாங்குகிறேன். வங்கி வழியாகப் போய் வியாபாரம் செய்வதெல்லாம் நேரமெடுக்கக் கூடியது. ஒரே சொடுக்கில் விற்பனையாளரும், நுகர்வோரும் இதன் மூலம் இணைக்கப் படுகின்றனர். சின்ன நன்கொடைகள் செய்ய இது ரொம்ப வசதி. 1 டாலரிலிருந்து 100 டாலர்வரை சிரமில்லாமல் அனுப்பலாம். பேங்கில் போய் ஒரு டாலர் அனுப்பமுடியாது, பாருங்கள்.

Paypal வங்கியை விட சிறப்பாகச் செயல்படுகிறது! தமிழ் மரபு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க இதை இப்போது பயன்படுத்தத் துவங்கியுள்ளோம். "கொடை மனது" சில நொடிகள்தான் நிற்கும். ரொம்ப யோசித்தால் எதற்கும் காசு கொடுக்கத் தோன்றாது. அந்த நொடிப்பொழுதுகளை சரியாக உப்யோகப்படுத்த Paypal உதவுகிறது. முதல் முயற்சியாக தொடங்கியுள்ள பக்கத்தைக் காண இங்கே சொடுக்குக!

ஆனால் அதற்கு முன் ஒரு Paypal கணக்கை ஆரம்பிக்க இங்கே சொடுக்குக!

கணக்கு ஆரம்பிக்க எந்தச் செலவும் கிடையாது! அதே போல் குறைந்த அளவாவது நமது கணக்கில் காசு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் கிடையாது. என் கணக்கு எப்போதும் 0.00 டாலர்தான். உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் இணைத்துக் கொள்ளவும். இங்கு seller-தான் கமிஷன் கொடுக்க வேண்டும். Buyer அல்ல! எனவே மிகவும் சௌகர்யமானது!

எனவே காசுகள் உள்ளவர் (நிதி மிகுந்தவராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை பாருங்கள் :-) நன்கொடை தாரீர்! :-)

100 மில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கும் நிருவனமாக இது இப்போது வளர்ந்து நிற்கிறது. எல்லா நாடுகளிலும் செலாவணியாகும்படி செய்கிறார்கள். சிறு தொழில் அதிபர்களுக்கு உதவும் வண்ணம் பல மடலாடற்குழுக்கும், உதவி யோசனை வழங்கும் குழுக்கள் இப்போது உள்ளன. ஒருவரை நாம் அறிமுகப்படுத்தினால் reward bonus உண்டு.

கணக்கு ஆரம்பித்த பின் Paypal உங்களிடம் கணக்கு verification என்று எந்த மின்னஞ்சலும் அனுப்பாது. அப்படி நிறைய குப்பை அஞ்சல்கள் வரும். அதை அப்படியே கடாசி விடுங்கள். காசு அனுப்பியவுடன் அல்லது பெற்றவுடன் உங்களுக்கு வரும் வரவு, செலவுக் கணக்கையும் கடாசி விடாதீர்கள். காசு அனுப்பிய அடுத்த நொடி உங்களுக்கு மின்னஞ்சல் வந்து நிற்கும். வாழ்க உங்கள் இ-வாணிபம், மின் கொடைகள், மின் பரிசுகள், மின் தீபாவளிகள்!!

Keywords: Paypal, internet banking, e-commerce

4 பின்னூட்டங்கள்:

Anonymous 1/22/2007 03:31:00 PM

paypal - நான் கேள்வி பட்டது என்ன வென்றால் paypal ஒரு பிராடு கம்பெனி என்று. இந்த முகவரியை காணவும். www.paypalsucks.com

நா.கண்ணன் 1/22/2007 03:37:00 PM

அப்படியில்லை. அதன் சேவை பயன்படுத்தத்தக்கது. நான் பயன்படுத்தி வருகிறேன். Auction, eBay போன்ற தளங்களில் வியாபாரம் செய்யும் நபர்கள் தவறு செய்தால் நல்ல தண்டனை உண்டு. இது நாணயமற்றவர்களைப் பயமுறுத்த வாய்ப்புண்டு. எல்லாவற்றிற்கும்தான் எதிர்பு இருக்கிறது. Microsoft, Google, Yahoo இப்படி. அதற்காக இச்சேவைகளை நாம் பயன்படுத்தாமல் உள்ளோமா என்ன? நீங்கள் Paypal பயனாளர் இல்லை என்று தெரிகிறது!

Mayooresan 1/22/2007 03:54:00 PM

இலங்கை இன்னும் இந்த சேவையில் உள்ளடக்கப்பட வில்லையே!

பேபால் உலகறிந்த சேவை இதைப் போய் பொய் என்று எப்படிச் சொல்லலாம்! பேபால் பொய் என்றால் மைக்ரோசாப்ட்டும் பொய் என்று சொல்லலாம்.

நா.கண்ணன் 1/22/2007 03:59:00 PM

100க்கும் மேலான நாடுகளில் இச்சேவை உள்ளது. இலங்கையில் இந்தப் பிரச்சனை இல்லாமலிருந்திருந்தால் இந்தியாவிற்கு முன் சேர்ந்திருக்கும். எப்படி இருக்க வேண்டிய நாடு...ம்ம்ம்