கொடி உணர்வுகள்!

எழுத்துப்பிழை இல்லிங்க. கொடி உணர்வு பற்றித்தான் பேசுகிறேன் (x கோடி உணர்வுகள்). தேசியக் கொடி என்பது உணர்வை ஊட்டுவதற்காக உருவான ஒன்று. அமெரிக்கக் கொடியை ஜட்டி, பிரா என்று பயன்படுத்தினாலும், அதை எப்படி உப்யோகிக்க வேண்டுமென்ற சட்டம் இருக்கிறது அந்த நாட்டில். இருந்தாலும் நாட்டு நடப்பில் அது கிடப்பில் கிடக்கிறது. இருந்தாலும் அமெரிக்கா போனால் எல்லார் வீட்டிலும் கொடி பறக்கிறது. கொடியை மறக்கக்கூடாது என்று ஜட்டிவரை அதைக் கொண்டு போவது அவரவர் மனோபாவம். ஜெர்மனியில் வாழ்ந்த காலத்தில் அங்கு கொடியைப் பறக்கவிடுவது தேசிய உணர்வைத் தூண்டுவதாக அமையும் என்று யாரும் பறக்கவிடுவதில்லை. ஐயா!ஹிட்லர் செய்த தேசியம்தான் உலகறியுமே! எனவே கொடி என்பது அபாயகரமானது. இருமுனைக் கத்தி போல. இவ்வளவு கதையும் இப்போ எதற்கு என்று கேட்கிறீர்களா? கீழேயுள்ள படம் உங்களுள் என்ன உணர்வைத் தூண்டுகிறது? அதைக் கேட்கத்தாங்க இவ்வளவும். மிச்சத்தை பின்னூட்டத்திலே பாப்போம்!

என்னை நான் கூகுள் செய்த போது!


இப்படியொரு சினிமாப்படம் வர இருக்கிறது. நல்ல ஐடியா! என்று கமல் ஏற்கனவே நினைத்திருப்பார். ஆனாலும் தமிழகத்தில் இ-கலாச்சாரம் இன்னும் வளரவில்லை. மின்னஞ்சலையும், போஸ்ட் கார்டையும் இன்னும் ஒன்றாகவே அங்கு கருதுகிறார்கள். ஒரு முறை ஒரு பல்கலைக்கழகம் போயிருந்தபோது பேராசிரியரிடம் மின்னஞ்சல் முகவரி கேட்டேன். அவர் பெல்லை அடித்தார். ஒரு பெண்மணி வந்தார். "சாருக்கு நம்ம இ-மெயில் முகவரி கொடுங்க!" என்றார். எனவே கமல் இன்னும் காத்திருக்க வேண்டும்.

"கண்ணன்" என்று தட்டினால், கோகுலக் கண்ணனுக்கு முன் நான் வந்துவிடுகிறேன். நா.கண்ணன் என்றால் சொல்லவே வேண்டாம். N.Kannan-க்கும் இதே ரிசல்ட். ஆனால், அதுவல்ல கதை! கண்ணன் என்று தட்டப் போய் பல்வேறு கண்ணன்கள் வந்து சேர அவர்களை நான் நேரில் சந்திக்க, சிலர் என்னைப் போலவே ருசி கொண்டிருக்க, சிலர் முரடாயிருக்க, யாரோ ஒருவர் என் ஒன்று விட்ட அத்தை பிள்ளையாகிப் போக..இப்படிக் கதை போகிறது (இடையில் குழப்பம், சண்டை, நகைச்சுவை எல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்).

கல்லூரியில் படிக்கும் போது என் சகா (பெண்ணுடன்)வுடன் பேசிக்கொண்டு நடக்க, அடுத்த நாள் அவள் தனியாகப் போகும் போது, "கண்ணன் என்ன மன்னனோ?" என்று எவனோ கேட்டிருக்கிறான். எனக்கு அவ்வளவு நண்பர்கள் கிடையாது. பகைவர்கள் பரக்க உண்டு!! எனவே நான் என்னை கூகுள் செய்யப் போவதில்லை!!

'Google Me: The Movie' Now In Production
Jason Lee Miller | Staff Writer

Well, we knew it was coming. After "Google: The Musical" debuted up in Minnesota last year, we knew anything was possible, perhaps inevitable. "Google Me: The Movie" is due out in the near future, a documentary focusing on filmmaker Jim Killeen and his journey of self discovery.

Or should I say selves discovery?

The Google Me (trailer) homepage is succinctly presented with the filmmaker's full name in the search box, and a quote below reading: "It all started when I Googled my own name..."

The storyline is simple and fascinating: A man googles himself and discovers there are many others out there with the same name. The difference between Killeen and you, though, is that he actually goes out to meet them and takes his camera along.

And who hasn't been curious about all the different thems? It's like an exercise in quantum logic - multiple universes and multiple me's. When I started writing online, I discovered so many other me's, most of whom are also writers, that I had to
start using my full name to differentiate.

சுப்ரபாதம் version 2எல்லோரும் சுப்ரபாதம் குழந்தையிலிருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம். விருப்பமோ இல்லையோ அது பாட்டிற்கு காதில் விழுந்து கொண்டு இருக்கும். அப்படி விழும் சுப்ரபாதம் இதோ:
இது எம்.எஸ் அம்மா பாடியது. ஒரிஜினல்.

மிக சமீபத்தில்தான் இதற்கு தமிழாக்கம் நடந்தது. திரு.பார்த்தசாரதி என்பவர் மொழிபெயர்க்க அதை மீண்டும் எம்.எஸ் அம்மா பாடினார்கள். அந்த கேசட்டு வீட்டில் இருக்கிறது. அது வலையில் இருந்தால் சுட்டி தரவும்.

கொஞ்ச நாள் முன்னம் ப்ரியா சகோதரிகள் பாடிய சுப்ரபாதம் கேட்டேன்.
அது இங்கே!

சரி இதுவும் பார்த்தசாரதி மொழி பெயர்ப்பாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் நித்யஸ்ரீ பாடியதைக் கேட்டபோதுதான் இவையெல்லாம் வெவ்வேறு படிகள் (versions) என்று உணர்ந்தேன்.

நித்யஸ்ரீ பாடியது!

ப்ரியா சகோதரிகள் பாடுவது எளிய தமிழ். உரைநடை. நித்யஸ்ரீ பாடுவது கவிநடை. இதையெல்லாம் மொழி பெயர்த்தவர்கள் யார் என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பொதுவாக சுப்ரபாதம் நான்கு பாகங்களை கொண்டிருக்கிறது:

மொத்தம் 4 பாகங்கள் கொண்டது இது!
1. சுப்ரபாதம் - பள்ளி எழல்
2. ஸ்தோத்திரம் - துதி, போற்றி
3. பிரபத்தி - திருமகளைப் பற்றித், திருவடிகளில் சரணாகதி
4. மங்களம் - சுபம்

வெவ்வேறு படிகள் இருக்கக் கூடாது என்றில்லை. பாரதியே சுதந்திரதேவி வாழ்த்து என்று இரண்டு படிகள் தருகிறான். முதல் மொழி பெயர்ப்பில் அவனுக்கே திருப்தி இல்லை. அதுபோல் என்று இதையும் கொள்ளலாம் (ஒருவர் எழுதியது என்று தோன்றவில்லை).

இதன் மூலத்தை எழுதிய "பிரதிவாதி பயங்கரம்" என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார் பச்சைத்தமிழர்! ஆழ்வார் தமிழை தலையில் வைத்துக் கொண்டாடுபவர். அவர் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். உரைநடையில் எழுதுவதை "கத்யம்" என்று வடமொழியில் சொல்வர். இராமானுஜர் ஸ்ரீரெங்கநாத கத்யம் அருளியிருக்கிறார்.

எப்படி ஆயினும் வேங்கடேசன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த 'திருப்பள்ளியெழுச்சி'யை முதலில் கேட்டுவிட்டே எழுகிறான். ஆழ்வார் தமிழுக்கு முன் நம் தமிழ் எங்கே? என்றுணர்ந்தே பூர்வாச்சாரியர்கள் சுப்ரபாதத்தை தமிழில் வடித்துத் தரவில்லை. ஆயினும் நம்மைப் போன்ற நிரட்சரகுட்சிகள் கடைத்தேற எளிய தமிழ் சுப்ரபாதங்கள் தேவையாய்தான் இருக்கின்றது! இதை உணர்ந்துதான் திரு.கண்ணபிரான் சுப்ரபாதத்திற்கு என்றே தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கி வரி, வரியாக பொருள் தருகிறார்.

உப்பிட்டவரை....

உப்பிட்டவரை உள்ளவும் நினை! அப்படின்னுதானே கேள்விப்பட்டிருக்கோம். இனிமேல் அப்படி நினைக்காதீர்கள்! நான் சொல்லவில்லை, அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது! பாதுகாப்பான உணவுப் பண்டமெனும் பட்டியலிலிருந்து உப்பு போகப்போகிறது! என்னடா! கஷ்டம் என்கிறீர்களா?


"The most recent Dietary Guidelines for Americans recommend that healthy adults get no more than 2,300 mg of sodium a day, the amount in about a teaspoon of salt. (If you are over age 50, are African American, or already have high blood pressure, your limit should be 1,500 mg.) Still, most of us scarf down close to 4,000 mg by day's end, according to the latest government surveys. But my blood pressure is normal, you're thinking. Great. However, a high sodium intake affects far more than that. Take your bones. In a 2-year study of postmenopausal women, researchers found that the higher a woman's sodium intake, the greater her bone loss at the hip."


By Sally Kuzemchak, RD, Prevention magazine


முழுக்கட்டுரையும் இங்கே வாசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்!!


நேற்றே உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்ப எண்ணி வேலைப்பளுவில் முடியவில்லை. கொரியாவில் சந்திரப் பஞ்சாங்கத்தின்படி நேற்றுதான் புது வருடம் பிறந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!!


நல்லதொரு பழக்கமாக அன்று கொரிய தம்பதியர், இளைஞர்கள் தாயகம் சென்று பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்! இனிமேல் புதுவருடப்பிறப்பன்று தமிழனும் இப்படிச் செய்தால் நல்லது.

இக்குப்பை (இலத்திரன் குப்பை)

Spam - Monty Python's Flying Circus


தமிழில் இப்படியொரு ஓரங்க நாடகம் தயாரிக்க முடியுமா? சுவையாக இருக்கும். சல்லடை, தானொழிப்பு குப்பை சுத்தி இல்லையெனில் நமது தபால் பெட்டி ஊதிப் பெருகி ஊரை விழுங்கிவிடும்!!

உடல் இளைக்க எளிய வழி!

"ஐ லவ் யூ" சொல்லாதவரை விடமாட்டார்கள் போலிருக்கிறது! வாழ்க!!

February, 2007

Just what you ever wanted to know about "Kissing", just in time for Valentine's Day!

Kiss & Tell...
- You burn 26 calories in a one-minute kiss.
- The average person spends two weeks of their life kissing.
- Eskimos, Polynesians and Malaysians rub noses instead of kissing.
- Victorian etiquette required a man to kiss the back of a ladies hand.
- In Ireland, you will have good luck if you kiss the Blarney Stone.
- The scientific name for kissing is philematology.
- Longest movie kiss - 3 minutes and 5 seconds between Jane Wyman and Regis Tommey in, "You're in the Army Now" (1941).


 "FREE" VIRTUAL CARD
Love, Love, Love

Valentine Cards absolutely FREE!

Send it now!

சித்திர டெக்கி


கடவுச் சொல், சொல்!!Please cast your vote in the rightside Poll
மறக்காமல் உங்கள் தேர்வைச் சொல்லவும் (ஓட்டுப் பெட்டி வலது மேற்புறம்)

ஜோக்! ஆனால், உண்மை!A worldwide survey was conducted by the UN. The only question asked was:

"Would you please give your honest opinion about solutions to the food shortage in the rest of the world?"

The survey was a huge failure,

In Africa they didn't know what 'food' meant,

In India they didn't know what 'honest' meant,

In Europe they didn't know what 'shortage' meant,

In China they didn't know what 'opinion' meant,

In the Middle East they didn't know what 'solution' meant,

In South America they didn't know what 'please' meant,

And in the USA they didn't know what 'the rest of the world' meant

கடலை போடுதல்!இச்சொல் இப்போதும் இதே பொருளில் வழங்குகிறதா? என்று தெரியவில்லை. என் கல்லூரிக் காலங்களில் ஆணும், பெண்ணும் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தால் 'கடலை' என்பார்கள். இதை ஆங்கிலத்தில் Flirt என்கின்றனர். காதலர் தினம் நெருங்கி வருகிறது. என்னைக் கடலை போடத் தூண்டும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதற்கு அவர்கள் தரும் காரணத்தைப் பாருங்கள் ;-) லொடுக்கு! இதுவும் 'சந்தை செய்யும்' மாயமா? இல்லை...? :-))

"Here are some very interesting "Flirting" facts, just in time for Valentine's day!

Flirting is good for you. Studies show that people who flirt have higher white blood-cell counts, which boost their immunity!

Flirting need not occur face to face. According to Pew Research, 40 percent of people who look for love online say they can easily flirt with someone via email or IM.

Flirting is universal. A woman living in New York City and one in rural Cambodia may not have much in common, but when it comes to attracting a little attention, they both employ the very same move: smiling, arching their eyebrows, then averting their gaze and giggling.

Animals flirt, too: Birds, reptiles, and even fish have their own way of strutting their stuff. Moral of the story: If the simple sea bass can act cute to enhance a romantic agenda, you can, too - so give it a go!

வெறும் வாயிலேயே மெல்லக் கூடிய வித்தகர்கள் இங்கு சென்று இ-மலர் அனுப்பலாம்!Keyword: Valentine's Day, lover's day, romance, February, St. Valentine.

சில்பா வெற்றி

உலக அரங்கில் மெல்ல, மெல்ல இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசி என்று இந்தியா அழைக்கப்பட்டாலும், உலக அரங்கில் இந்தியர்கள் வெறும் 'பல்லக்கு தூக்கிகளே'. ஆனால், இந்தியா சுதந்திரத்தைப் பெற்றவிதம் உலகை உலுக்கியது. தொடர்ந்து மெதுவான, ஆனால் ஸ்தரமான இந்திய வளர்ச்சி உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் மெல்ல, மெல்ல திரும்ப வைத்தது. எத்தனையோ காரணிகள். ஆன்மீகம், பொருளாதாரம், கவர்ச்சி எல்லாம் இதில் அடங்குகின்றன. வேண்டுமானால் பின்னூட்டத்தில் இதை விரிவாகப் பேசலாம். ஷில்பா ஷெட்டி 'பெரியண்ணன்' (பிக் பிரதர்) போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது வெள்ளையர் இந்தியர் மீது வைத்திருக்கும் மதிப்பு காலத்தால் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இது சாதாரண மக்களின் தீர்ப்பு. ஒரு இந்தியரும், ஒரு கருப்பரும் கடைசித் தேர்வில் நிற்பது நல்ல குறி என்றே படுகிறது.

வழக்கம் போல் நான் மெதுவாக இச்சேதியைப் பகிர்ந்து கொள்ளலாம். இருந்தாலும் அவசியம் என்று படுகிறது. கொசுறு: ஷில்பாவை எனக்குப் பிடிக்கும். பிரபுதேவாவிற்கு போட்டியாக ஆடக்கூடிய ஒரே நடிகை. ஷில்பாவின் வெற்றிக்கு அவர் கடைப்பிடித்த தியானமுறை ஒரு காரணம் என்பது கூடுதல் சந்தோஷம் தரும் விஷயம். இந்தியாவின் பலமே இந்த ஆன்மீகம்தான். அது மீண்டும் உயர்ந்த பீடத்தில் பார்க்கப்படுவது மகிழ்வே!
Shilpa Shetty, Big Brother, Channel 4, Bollywood, actress, Gold, winner, celebrity.