சில்பா வெற்றி

உலக அரங்கில் மெல்ல, மெல்ல இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசி என்று இந்தியா அழைக்கப்பட்டாலும், உலக அரங்கில் இந்தியர்கள் வெறும் 'பல்லக்கு தூக்கிகளே'. ஆனால், இந்தியா சுதந்திரத்தைப் பெற்றவிதம் உலகை உலுக்கியது. தொடர்ந்து மெதுவான, ஆனால் ஸ்தரமான இந்திய வளர்ச்சி உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் மெல்ல, மெல்ல திரும்ப வைத்தது. எத்தனையோ காரணிகள். ஆன்மீகம், பொருளாதாரம், கவர்ச்சி எல்லாம் இதில் அடங்குகின்றன. வேண்டுமானால் பின்னூட்டத்தில் இதை விரிவாகப் பேசலாம். ஷில்பா ஷெட்டி 'பெரியண்ணன்' (பிக் பிரதர்) போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது வெள்ளையர் இந்தியர் மீது வைத்திருக்கும் மதிப்பு காலத்தால் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இது சாதாரண மக்களின் தீர்ப்பு. ஒரு இந்தியரும், ஒரு கருப்பரும் கடைசித் தேர்வில் நிற்பது நல்ல குறி என்றே படுகிறது.

வழக்கம் போல் நான் மெதுவாக இச்சேதியைப் பகிர்ந்து கொள்ளலாம். இருந்தாலும் அவசியம் என்று படுகிறது. கொசுறு: ஷில்பாவை எனக்குப் பிடிக்கும். பிரபுதேவாவிற்கு போட்டியாக ஆடக்கூடிய ஒரே நடிகை. ஷில்பாவின் வெற்றிக்கு அவர் கடைப்பிடித்த தியானமுறை ஒரு காரணம் என்பது கூடுதல் சந்தோஷம் தரும் விஷயம். இந்தியாவின் பலமே இந்த ஆன்மீகம்தான். அது மீண்டும் உயர்ந்த பீடத்தில் பார்க்கப்படுவது மகிழ்வே!
Shilpa Shetty, Big Brother, Channel 4, Bollywood, actress, Gold, winner, celebrity.

10 பின்னூட்டங்கள்:

கல்வெட்டு (எ) பலூன் மாமா 2/01/2007 01:07:00 PM

:-((
நீங்களும் ஒரு சராசரி இரசிகனின் மன நிலையில் இந்தியாவின் வெற்றி..முன்னேற்றம் என்று இதனைச் சொல்வது ஆச்சர்யமாயிருக்கிறது.

நா.கண்ணன் 2/01/2007 01:18:00 PM

ம்..ஒரு சராசரி சினிமா ரசிகன் என்ற அளவில் ஷில்பாவை எனக்குப் பிடிக்கும். அது முதல் காரணம் :-))

நான் ஆய்வு செய்து வரும் போது இந்த bunker experiment வாய்ப்பு வந்தது. அதாவது ஒரு மாதம் under ground வாழ்வு! இது சோர்வு தரக்கூடியது. நம் மனநிலையை பாதிக்கும் விஷயம். ரொம்ப composed-ஆக இருக்க வேண்டும். ஷில்பா தியானம் செய்து தனது மனோநிலையை சமனப்படுத்தியது இந்தியாவின் தியானப் பயிற்சிக்கு வெற்றி.

கடைசியில் ஜாக்சன் ஷில்பாவின் வெற்றிக்காக காரணம் என்று சுட்டுவது, அன்பு, காருண்யம், தயை. இதுதான் இந்தியா காலம் காலமாகச் சொல்லி வருவது. படோடாபமும், ஆடம்பரமும், கவர்ச்சியும், மேம்போக்குத்தனமும் வாழ்வென இருக்கும் ஒரு பாலிவுட் நடிகையாலும் இந்தியாவின் ஆகச்சிறந்த விழுமியங்களை உலக அளவில் காட்டமுடியுமெனில் அது இந்தியாவின் ஆன்மீக வெற்றி.

உலகின் பெரும் போர்களுக்கும், குழப்ப நிலைகளுக்கும் பாமரனின் புரியாத்தனத்திற்கும் ஆழமான தொடர்புண்டு. பாமரன் விழிப்புறும் போது உலகம் மாறுகிறது. நிறவெறியை உலகிற்கு பாரிய அளவில் அறிமுகப்படுத்திய வெள்ளையர் சமூகம் ஒரு கருப்பனையும், இந்தியனையும் மதிக்கிறது என்றால் உலகம் மாறிக் கொண்டு வருகிறது என்று பொருள். அந்த மாற்றத்திற்கு இந்தியா வித்திடுகிறது என்றால் அது இந்தியாவின் வெற்றி :-)

லொடுக்கு 2/01/2007 01:30:00 PM

ஐயா!

இந்த நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் ஒரு நன்றாக அரங்கேற்றப்பட்ட நாடகமாக, பப்ளிசிட்டிக்காக இயக்கப்பட்ட நாடகமாக உங்களுக்கு படவில்லையா? இல்லை நான் தான் இதை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறேனா?

✪சிந்தாநதி 2/01/2007 01:34:00 PM

இந்தியாவின் வெற்றி என்ற அளவுக்கு இதை கொண்டாட தேவையில்லை என்ற போதும் நீங்கள் கூறுவது போல வெள்ளையர்களால் வெற்றிக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள் ஒரு கறுப்பரும், இந்தியரும் என்பது மிக்பெரிய சமூக மாற்றம் தான்.

✪சிந்தாநதி 2/01/2007 01:36:00 PM

//bunker experiment வாய்ப்பு வந்தது. அதாவது ஒரு மாதம் under ground வாழ்வு//

மதுரைப் பல்கலைக்கழகம் கூட முன்பு தொடர்ச்சியாக இதை ஆய்வுக்காக நடத்தியதாக நினைவு

வடுவூர் குமார் 2/01/2007 02:15:00 PM

பின்னூட்ட விளக்கம்- வித்தியாசமான பார்வை.
தியானத்தின் விளைவுகள் நம்மை அறியாமலே நம்மை ஆட்கொள்பவை.
வார்த்தைகளால் விளக்கமுடியாது.

நா.கண்ணன் 2/01/2007 02:36:00 PM

பொதுவான பதில்:
1. இது இந்தியாவின் வெற்றி என்ற அளவிற்கு கொண்டாடத் தேவையில்லை. மிகச் சின்ன விஷயம்.

2. நுகர்மயமாகிவரும் உலகில், சந்தைப் பொருளாதாரம் நம் உயிரை எடுக்கும் உலகில் இது போன்ற நிகழ்வுகள் "சந்தை" செய்யும் மாயக் காட்சிகளே! எல்லாம் முன்னேற்பாடனவையே.

3. ஆனால், இறுதித் தேர்வில் ஒரு இந்தியவர் வருவார் என்பது எதிர்பாராதது. அது சமூக மாற்றத்தின் அறிகுறி. ஒரு வெள்ளைக்காரி ஷில்பாவைத் திட்டினாள் என்பது, 18ம் நூற்றாண்டில் இத்தகைய சர்ச்சை ஆகியிருக்காது! அந்த மாற்றத்திற்கும் ஒரு காந்தி பின்னால் இருக்கிறார்!!

4. மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேரா.சந்திரசேகர் இப்பதுங்கு குழி ஆய்வை ஆரம்பித்தார் நான் இருந்த காலத்தில்.

5. தியானம் என்பது 'boredom' என்பதை சமாளிக்கும் வழி. சும்மா இருந்தால் குரங்காட்டித்தனம் பண்ணும் மனது தியானத்தில் அமைதியுறுகிறது. ஷில்பாவின் 'composure'க்கு அது ஓரளவேனும் உதவியிருக்கிறது!

லொடுக்கு 2/01/2007 04:26:00 PM

//2. நுகர்மயமாகிவரும் உலகில், சந்தைப் பொருளாதாரம் நம் உயிரை எடுக்கும் உலகில் இது போன்ற நிகழ்வுகள் "சந்தை" செய்யும் மாயக் காட்சிகளே! எல்லாம் முன்னேற்பாடனவையே.
//

இது போதுமய்யா எனக்கு. :)

நா.கண்ணன் 2/01/2007 04:42:00 PM

//இது போதுமய்யா எனக்கு. :)//

இப்பதிவின் பின்னணி:

1. இது என் முந்தையப் பதிவுடன் தொடர்புடையது. அதையும் பாருங்கள். நான் நினைத்துப் பார்க்காத அளவில் உலகு மாறிவருகிறது. நவீன உலகில் இந்திய (ஆசிய) விழுமியங்கள் நிரம்ப உள்வாங்கப்பட்டு வருகின்றன! யோகா இல்லாத ஜெர்மன் கிராமம் கூட கிடையாது!; பாலிவுட் என்பது ஜெர்மனியில் தினப்படி சொல்; ஆங்கில உணவு என்றால் தந்தூரி சிக்கன் எனுமளவு இந்தியத் தாக்கம், நிறவெறி தவறு என்பதை வெள்ளையர் உணர்ந்துவிட்டனர், மறுபிறப்பு, கர்மா, அவதாரம் என்பவை ஆங்கிலச் சொற்களாகிப் போயின!

2. சூழல் பற்றிய பிரக்ஞை அதிகமாகி வருகிறது. நுகர்வு பற்றிய மறு சிந்தனை/மாற்றுச் சிந்தனை நடைமுறையில் இருக்கிறது.

3. வெளிநாட்டில் வாழும் போது இந்தியன் என்றவுடன் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை குறைந்து வருகிறது. நல்லதோ கெட்டதோ, இந்தியா அணுசக்தியானது, பாலிவுட்டின் தாக்கம், இந்திய ஐடி இவைதான் அதற்குக் காரணம்.

4. சினிமா என்பதைப் பற்றி எனக்கு தாழ்வான நோக்கம் என்றும் இருந்ததில்லை. பழனி தேவடியாள் xxx ஜால்ஜா! என்பது போன்ற 'இந்துநேசன்' ஆதிக்கத்தில் வளர்ந்தாலும் இன்றைய நவீன சினிமா மிகவும் முன்னேறிவிட்டது. பிரம்மிப்பு தருகிறது. அது சமூகத்தை மாற்றும் காரணியாகி வருவதைக் காண்கிறேன். ஷில்பா தைர்யமான பெண். எத்தனையோ insult களை ஒரு இந்தியப் பெண்ணின் பொறுமையுடன் சமாளித்து இருக்கிறார். அந்த வகையில் அவருக்கு இந்தியா ஆன்மீக பலமாக இருந்திருக்கிறது. இறுதியில் அவர் தந்திருக்கும் diplomatic answer உண்மையிலேயே நடிகைகள் பற்றிய பஞ்சாங்கத்தனமான இமேஜை நொறுக்கியிருக்கிறது. They are sophisticated, intelligent, alert, global and sexy :-))

லொடுக்கு 2/01/2007 06:30:00 PM

ஐயா!
இந்தியாவைப் பற்றிய உலகத்தின் கண்ணோட்டம் மாறியிருப்பதை பற்றி நான் எதுவும் சொல்ல வருவதில்லை. அது ஒத்துக்கொள்ளக் கூடியதே.

//இது போதுமய்யா எனக்கு. :)//
என்று நான் கூறியது அந்நிகழ்ச்சி பற்றியதே. வேறொன்றுமில்லை ஐயா. பெரியவரான உங்களின் அந்நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம் அறிந்து கொண்டேன் என்பதையே நான் அவ்வாறு கூறினேன். நான் தங்களின் உலகமயமாக்கல் பற்றிய முந்தைய பதிவையும் வாசித்துள்ளேன்.

தங்கள் விளக்கத்திற்கு ஐயா.