என்னை நான் கூகுள் செய்த போது!


இப்படியொரு சினிமாப்படம் வர இருக்கிறது. நல்ல ஐடியா! என்று கமல் ஏற்கனவே நினைத்திருப்பார். ஆனாலும் தமிழகத்தில் இ-கலாச்சாரம் இன்னும் வளரவில்லை. மின்னஞ்சலையும், போஸ்ட் கார்டையும் இன்னும் ஒன்றாகவே அங்கு கருதுகிறார்கள். ஒரு முறை ஒரு பல்கலைக்கழகம் போயிருந்தபோது பேராசிரியரிடம் மின்னஞ்சல் முகவரி கேட்டேன். அவர் பெல்லை அடித்தார். ஒரு பெண்மணி வந்தார். "சாருக்கு நம்ம இ-மெயில் முகவரி கொடுங்க!" என்றார். எனவே கமல் இன்னும் காத்திருக்க வேண்டும்.

"கண்ணன்" என்று தட்டினால், கோகுலக் கண்ணனுக்கு முன் நான் வந்துவிடுகிறேன். நா.கண்ணன் என்றால் சொல்லவே வேண்டாம். N.Kannan-க்கும் இதே ரிசல்ட். ஆனால், அதுவல்ல கதை! கண்ணன் என்று தட்டப் போய் பல்வேறு கண்ணன்கள் வந்து சேர அவர்களை நான் நேரில் சந்திக்க, சிலர் என்னைப் போலவே ருசி கொண்டிருக்க, சிலர் முரடாயிருக்க, யாரோ ஒருவர் என் ஒன்று விட்ட அத்தை பிள்ளையாகிப் போக..இப்படிக் கதை போகிறது (இடையில் குழப்பம், சண்டை, நகைச்சுவை எல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்).

கல்லூரியில் படிக்கும் போது என் சகா (பெண்ணுடன்)வுடன் பேசிக்கொண்டு நடக்க, அடுத்த நாள் அவள் தனியாகப் போகும் போது, "கண்ணன் என்ன மன்னனோ?" என்று எவனோ கேட்டிருக்கிறான். எனக்கு அவ்வளவு நண்பர்கள் கிடையாது. பகைவர்கள் பரக்க உண்டு!! எனவே நான் என்னை கூகுள் செய்யப் போவதில்லை!!

'Google Me: The Movie' Now In Production
Jason Lee Miller | Staff Writer

Well, we knew it was coming. After "Google: The Musical" debuted up in Minnesota last year, we knew anything was possible, perhaps inevitable. "Google Me: The Movie" is due out in the near future, a documentary focusing on filmmaker Jim Killeen and his journey of self discovery.

Or should I say selves discovery?

The Google Me (trailer) homepage is succinctly presented with the filmmaker's full name in the search box, and a quote below reading: "It all started when I Googled my own name..."

The storyline is simple and fascinating: A man googles himself and discovers there are many others out there with the same name. The difference between Killeen and you, though, is that he actually goes out to meet them and takes his camera along.

And who hasn't been curious about all the different thems? It's like an exercise in quantum logic - multiple universes and multiple me's. When I started writing online, I discovered so many other me's, most of whom are also writers, that I had to
start using my full name to differentiate.

1 பின்னூட்டங்கள்:

Gopinath Selvaraj 2/22/2007 10:55:00 PM

A good one...