கொடி உணர்வுகள்!

எழுத்துப்பிழை இல்லிங்க. கொடி உணர்வு பற்றித்தான் பேசுகிறேன் (x கோடி உணர்வுகள்). தேசியக் கொடி என்பது உணர்வை ஊட்டுவதற்காக உருவான ஒன்று. அமெரிக்கக் கொடியை ஜட்டி, பிரா என்று பயன்படுத்தினாலும், அதை எப்படி உப்யோகிக்க வேண்டுமென்ற சட்டம் இருக்கிறது அந்த நாட்டில். இருந்தாலும் நாட்டு நடப்பில் அது கிடப்பில் கிடக்கிறது. இருந்தாலும் அமெரிக்கா போனால் எல்லார் வீட்டிலும் கொடி பறக்கிறது. கொடியை மறக்கக்கூடாது என்று ஜட்டிவரை அதைக் கொண்டு போவது அவரவர் மனோபாவம். ஜெர்மனியில் வாழ்ந்த காலத்தில் அங்கு கொடியைப் பறக்கவிடுவது தேசிய உணர்வைத் தூண்டுவதாக அமையும் என்று யாரும் பறக்கவிடுவதில்லை. ஐயா!ஹிட்லர் செய்த தேசியம்தான் உலகறியுமே! எனவே கொடி என்பது அபாயகரமானது. இருமுனைக் கத்தி போல. இவ்வளவு கதையும் இப்போ எதற்கு என்று கேட்கிறீர்களா? கீழேயுள்ள படம் உங்களுள் என்ன உணர்வைத் தூண்டுகிறது? அதைக் கேட்கத்தாங்க இவ்வளவும். மிச்சத்தை பின்னூட்டத்திலே பாப்போம்!

5 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 2/24/2007 09:33:00 AM

இன்னும் ஒரே அங்குலம் தான் இருக்கு.
பரவாயில்லை!!
அதையாவது விட்டுவைத்திருக்கிறார்கள்.

நா.கண்ணன் 2/24/2007 10:26:00 AM

மேலேயா? கீழேயா? ஹா..ஹா!!

வடுவூர் குமார் 2/24/2007 11:06:00 AM

பின்னூடம் ஏத்தியவுடன் தான் சடாரென்று உரைத்தது.
இனி என்ன செய்யமுடியும் என்று இருந்துவிட்டேன்.
இப்படி கேள்வி வரும் என்று தெரியும்.
நான் சொன்னது கீழேக்கு தான்.
திருத்தமாக..
கீழே உள்ள பெரியவர்கள் படத்துக்காக.
:-))

Anonymous 2/25/2007 04:34:00 AM

Nice comment by kumar. :-))))))) கண்ணன் சாருக்கு இருந்தாலும் நக்கல் ஜாஸ்தி தான்.

நா.கண்ணன் 2/25/2007 07:53:00 AM

அட நீங்க ஒண்ணு ! ஜப்பானில் இப்ப என்ன பேஷன்னு தெரியாது போலருக்கு. சில படமிருக்கு. போட்டால், பிரச்சனையாகிவிடும் :-))