போட்டு மிதி!சமீபத்தில் தமிழகம் சென்று வந்த ஒருவர் சொன்னார், ஏதோவொரு கோயிலில் பூசாரி "ஆட்டைக் கடிக்கிறார்" என்று. இரண்டு நாளாகத் தொடர்ந்து இவர் ஆயிரம் ஆடுகளை மென்னியைக் கவ்வி, கடித்துக் கொல்கிறாராம். இதற்கு தமிழக அரசு கூட 'ஆடு' அனுப்புகிறதாம். இது என்ன பயித்தியக்காரத்தனம்? ஆடு, பாவம் சாது! அதுவும் சின்ன வெள்ளாடாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை! இவர் ஆட்டைக் கடிக்கிறாரே என்று புலிக்குட்டியைக் கொண்டு போனால் புலி இவரைக் கடித்துவிடும்! இவரது தெய்வீகம் இவரை அப்போது காக்காது!

இந்த வீடியோவில் இந்த அம்மா போட்டு மிதி, மிதியென்று மிதிக்கிறது. தமிழக மக்களுக்கு நல்ல மசாஜ் பார்லர்கள் வைத்துக் கொடுத்தால் இப்படி மிதி வாங்க மாட்டார்கள். அதற்கெல்லாம் கிழக்கே வரவேண்டும்!

தெய்வத்தின் பெயரால் எத்தனை கூத்து! இயேசுவின் கையில் ஒரு ஆடும், புத்தனின் ஆதரவில் ஒரு ஆடும் இருப்பது தற்செயல் அல்ல! தெய்வம் ஆடு பலி கேட்பதில்லை. அது நம் விலங்கு மனத்திற்கு ஒரு வழிகால். "வெறி விலக்கல்" என்றே ஒரு பத்துப் பாசுரம் நம்மாழ்வார் அருளிச் செய்திருக்கிறார். ஒரு துளசி மட்டும் போதும் அவனை வழிபட! திருமூலரும் இக்கருத்துடன் உடன்படுகிறார் (துளசிக்குப் பதில் வில்வ இலை). அவ்வளவுதான் தேவை!

இந்த உலகிலேயே தேவதைகள் இருக்கின்றன. ராட்சசர்களும் இருக்கிறார்கள். நாம் எந்த வகை என்பதை நம் குழு காட்டிக் கொடுத்துவிடும்!

கூட்டு

எல்லா நாடுகளும் இறைப்பற்றை பறை சாற்றி கடவுள் இருப்பதை ஒத்துக் கொள்கின்றன. ரஷ்யா தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் (அமெரிக்காவையும் சேர்த்து) தங்களைக் கிருஸ்தவ நாடுகளாகவே இனம் காணுகின்றன. ஆனால், மிகப்பழமையான சமய ஒழுக்கம் கொண்ட இந்தியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் தங்களை எந்த மதத்துடனும் இனம் காணுவதில்லை. உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லிக் கொண்டிருந்த நேபாளம் கூட சமயம் சாராக் கொள்கைக்கு மாறிவிட்டது.

இது ஒரு வகையில் வேடிகனுக்குச் சாதகமான நிலைப்பாடே. ஏனெனில் வேடிகனின் இருப்பே கிருஸ்தவ எண்ணிக்கையைக் கூட்டுவதில்தான் உள்ளது. ஒரிஜினலாக புத்த நாடாக இனம் காணப்பட்ட கொரியாவில் ஏறக்குறைய 50% மக்கள் இப்போது கிருஸ்தவர்களாக உள்ளனர். எங்கு நோக்கினும் சிலுவை கண்ணில் படுகிறது.


Photo by N.Kannan

இந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்திய நாணயத்தில் சிலுவை?

சமயச் சார்பின்மை என்றால் என்ன?

சிந்தனைத் திருடன்!

பல நேரங்களில் நாம் நினைப்போம் மற்றவர் சொல்லுவர். "நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே" என்பது பொதுவான பதில். வருகின்ற காலங்களில் கணினி நாம் நினைப்பதைச் சொல்லும்! ஞாயிற்றுக் கிழமை திரு.திருநாவுக்கரசுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கொரியாவில் மூளை வருடித் துறையில் ஆய்வாளராக வந்திருக்கிறார். தற்போதைக்கு மூளைக்கோளாறுகளை அறுவை சிகிச்சைக்கு முன் கண்டு சொல்லும் non-invasive technique பற்றியது அவர் ஆய்வு. நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.

இன்று வந்து கணினியைத் திறந்தால் மேலும் சுவாரசியமான தகவல்கள். வருகின்ற காலங்களில் கணினிகள் நம் மூளையில் தோன்றும் எண்ண அலைகளை கண்டறிந்து (pattern recognition) அதற்கேற்றவாறு வேலைகள் செய்யும். இது மனிதனை "வாழைப்பழ சோம்பேறி" ஆக்கிவிடாதோ? ஆக்கலாம். கை, கால் முடங்கிப்போய் வாய் கூட பேச முடியாத சில நோயாளிகளுக்கு இது மிகவும் உதவும். காருண்ய கருத்தாக்கத்தில்தான் கண்டுபிடிப்புகள் தோன்றுகின்றன. ஆயின் அது தோன்றிய பின் காவாலிகள் கைக்குப் போய்விடுகின்றன. அப்போது அடிமைகளை அது உருவாக்கும். நம்ம நாட்டில் இதுவெல்லாம் இல்லாமலே அடிமைகளை நாம் உருவாக்கி வருகிறோம். வெளிநாட்டுக்காரர்களுக்கு எல்லாவற்றிற்கும் ஒரு மெஷின் வேண்டியிருக்கு!

Human Nature: Science, Technology, and Life.
Full-Mental Nudity
The arrival of mind-reading machines.
By William Saletan

அக்லொகோ!! (அக்கோளக்கூட்டு)


Get Paid to Search the Web - Bill Gatesஇது என்ன கொக்கோ?

இல்லை இது என்ன அல்வா?

இது வேலை செய்யும் போல் தோன்றுகிறது!

இணைய உலகை உருவாக்குபவர் நாம், அதாவது நாம் இல்லையெனில் இணையம் இல்லை என்று சொல்ல வருகிறேன். நம் கவனத்திற்கு இங்கு விலை இருக்கிறது. அத்தனை விளம்பரதாரரும் நுகர்வோரை நோக்கியே காத்திருக்கின்றனர். அப்படியெனில் நம்மை வைத்துத்தான் அவர்கள் லாபம். ஆனால் நமக்கு பட்டை நாமம்! இது கொஞ்சம் மாறி வருகிறது. ஒரு பொது உடமைப் பகிர்வு உருவாகிவருகிறது. நாமே ஒரு சந்தையை உருவாக்கி வரும் லாபத்தைப் பகிர்ந்து கொண்டால் என்ன? ஒருவகையில் இணையத்தை நாம் சொந்தம் கொள்வோம். அது ஈட்டும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வோம். கீழே விளக்கம் இருக்கிறது. இதுவொரு Cooperative Society போல்.

இது வேலை செய்யும் என்று தோன்றுகிறது. உருப்பினராகி முயன்று பாருங்களேன். கைச் செலவு ஒன்றுமில்லை. ஆனால் வருமானமுண்டு.

பிறகென்ன? இதோ இங்கே தட்டி சோதனை செய்து கொள்க!

______பிற்சேர்க்கை____________

அலை உருவாகும் போதே அறிந்து கொள்ளுதல் நலம். இணைய அரங்கில் ஒரு புதிய அலை உருவாகிவருகிறது.

கூகுள் உருவான போது அதை உருவாக்குவதில் நம்மில் எத்தனை பேர் ஆர்வமுடன் பங்கேற்றோம். இன்று கூகுள் ஒரு கோடி டாலர் நிறுவனம். யூடியூப் (YouTube) ஆரம்பித்த போது யாரறிந்தார் அதுவும் கிளை விட்டு ஒரு மில்லியன் டாலர் நிறுவனமாகுமென்று. இவைகளை வளர்த்தவர், வளர்த்து வருபவர் நீங்களும், நானும். ஆயினும் ஆதயத்தில் நமக்கு எந்தப் பங்குமில்லை.

காலம் மாறி வருகிறது!

இதே கேள்வியைக் கேட்டு ஆரம்பித்திருக்கும் ஒரு உலக பொருளாதார இயக்கம் அக்கோளக்கூட்டு (Agloco). A Global Community என்பதிலிருந்து இக்குறிச்சொல் பிறக்கிறது. இக்கருத்து அதற்குள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில் கேட்ஸ்லிருந்து, சாடு ஹர்லி வரை இதுவே இணைய வளர்ச்சியின் அடுத்த மைல் கல் என்று சொல்லுகின்றனர்.

இது ஆலமாக வளரும் முன் அதை வளர்ப்பவரை அறிந்து கொள்ள இப்போது உருப்பினர் இயக்கம் தொடங்கிவிட்டது. நீங்கள் உருப்பினாராக இங்கே தட்டவும்.

ஒரு பைசாச் செலவு கிடையாது. பில் கேட்ஸ் சொல்வது போல் இணையத்தில் நாம் உலாவுவதே நமக்கு பண ஈட்டைத்தரும். இது என்ன பொருளாதாரமென்று கேட்காதீர்கள். சென்று, வாசித்து அறியுங்கள்.

நாம் இணையத்தில் எங்கு செல்கிறோம், நமது ஆசைகள் என்ன, நமது இணைய வியாபாரச் சுவடு என்ன என்பதை அறிந்து கொள்ளும் போது இணையப் பொருளாதாரம் வளர்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இத்தகவல் நம் கணியிலிருந்து வெளியே போய்க்கொண்டிருக்கிறது. கூகுள், யாகூ டூல்பார் (tool bar), பிறகென்ன செய்கிறது? இதையே ஒரு வியாபார யுத்தியாக அக்கோளக்கூட்டுப் பயன்படுத்தப் போகிறது. இதில் உருப்பினர் ஆகும் எல்லோரும் இந்தக் கம்பெனியின் பங்குதாரர்கள். இதன் வளர்ச்சி நம் லாபம்.

இது சாத்தியப்படக்கூடியதே!

நாம் ஒவ்வொருவரும் ஒரு வலைக்கரு. நம்மிலிருந்து வலை விரிகிறது. இதோ என் வலையின் நுனி. இதைப் பிடித்துக் கொண்டு உங்கள் வலையைப் பின்னுங்கள்.

_________________________________

AGLOCO’s story is simple:

Do you realize how valuable you are? Advertisers, search providers and online retailers are paying billions to reach you while you surf. How much of that money are you making? NONE!
AGLOCO thinks you deserve a piece of the action.

AGLOCO collects money from those companies on behalf of its members. (For example, Google currently pays AOL 10 cents for every Google search by an AOL user. And Google still has enough profit to pay $1.6 billion dollars for YouTube, an 18-month old site full of content that YouTube’s users did not get paid for!

AGLOCO will work to get its Members their share of this and more.

AGLOCO is building a new form of online community that they call an Economic Network. They are not only paying Members their fair share, but they’re building a community that will generate the kind of fortune that YouTube made. But instead of that wealth making only a few people rich, the entire community will get its share.

What's the catch? No catch - no spyware, no pop-ups and no spam - membership and software are free and AGLOCO is 100% member owned. Privacy is a core value and AGLOCO never sells or rents member information.

So do both of us a favor: Sign up for AGLOCO right now!


Further readings:

AGLOCO fulfills Bill Gates idea!

YouTube Founder Chad Hurley Says AGLOCO Wins

Bill Gates thinks Google should be worried!How do I earn my money by becoming a AGLOCO member?

எல்லாரும் ஜோரா கைதட்டுங்க!


"In the celebrity world, there are beauties -- and then there are world-class beauties, whose charisma and grace hail from, and touch, the four corners of the earth. In keeping with this year's Oscars featuring the most internationally represented group of nominees, let us celebrate these amazing women, whose fans and admirers cross every stretch of the globe. They range from India's Aishwarya Rai and America's amazing Beyoncé to Spain's Penélope Cruz and Malaysia's Michelle Yeoh. It doesn't hurt that the camera loves them, too. (Full story)

சினிமா பற்றி நிறையப் பேசலாம். இன்றைய கேளிக்கை உலகில் இந்தியாவின் இருப்பிடம் நிரந்தரமாகிவிட்டது. ஒரு அரை நூற்றாண்டு முன் "பல்லக்கு தூக்கிகளாக" இருந்த ஒரு இனம் இன்று 'உலகப் பிரபலம்' என்று மாறியிருப்பது உலகப் பார்வை மாறிவிட்டதாலா? இல்லை, இந்தியர்கள் தம் திறம் உலகறிய வேண்டுமென உழைப்பதாலா?

வலைஞர்கள் கவனத்திற்கு!


நான்கு வலைப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது!

1. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வுகள், கண்டு பிடிப்புகள், சுவாரசியமான சேதிகள் இவைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். இங்கு பிற வலைத்தளங்களில் தேங்கிக் கிடக்கும் சேதிகள் இன்னும் கோர்க்கப்படவில்லை. ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த வலைத்தலங்கள், வலைப்பதிவுகள் பற்றி இங்கு தொடர்ந்து இடலாம், விவரங்களுடன்.

http://www.tamilheritage.org/blogcms/

2. தமிழ் இசை பற்றிய "இணைய மாலை" இது. கண்ணிகளைத் தொடுக்க வேண்டியதே நம்
வேலை. சமீபத்திய தொழில் நுட்பம் நாம் இணையத்தில் தனிப்பட கேட்கும் எதையும் (வலையில் இருக்கும் பட்சத்தில்) பொதுவாக பகிர்ந்து கொள்ள வழி வகுத்துள்ளது. எனவே "நீங்கள்" ரசித்த தமிழ் இசை (கர்நாடக, நாட்டுப்பாடல், பிற), பேச்சு, பட்டிமன்றம் போன்றவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்). இதனால் எல்லோரும் பயனுற வழியுள்ளது.

இங்கு தமிழ் வட்டார வழக்குகளை நேரடியாகப் பேசி பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அவரவர் குடும்ப வசனங்கள், பேச்சு வழக்குகளை இங்கு வந்து பதியலாம். இது தமிழ் மொழி ஆய்விற்கு மிகவும் உதவும்.

நன்கு பாடக்கூடியவர்கள் இருந்தால் அவர்களைக் கொண்டு, நாலாயிர திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்றவற்றை இசையாகப் பதிவு செய்யலாம். இது தவிர நிறைய சிறு பிரபந்தங்கள் உள்ளன. ஓதுவார்கள் இசைப் பாடல்கள் இருந்தாலும் அவைகளையும் சேகரிக்கலாம். சேவியில் இடம் ஒரு பிரச்சனை இல்லை இப்போது!

http://www.tamilheritage.org/blogcms/voth.php

3. வீடியோப் பதிவுகளை இதே முறையில் சேர்க்கலாம். உதாரணமாக, தமிழ் நாட்டு
டி.வியில் விவரணப்படம் வந்தால் அதை ரெகார்டு செய்து இங்கு பதிப்பிக்கலாம். வீணை பாலச்சந்தர் பற்றி, பாபநாசம் சிவன் பற்றி documentary films வந்திருக்கின்றன. அவைகள் இங்கு தொகுக்கப்படும்.

இந்தியா போகும் போது எடுத்த வீடியோ கிளிப்பை இப்படி எளிதாகத் தொகுக்கலாம்.

http://www.tamilheritage.org/blogcms/video.php

4. புகைப்படம் ஒரு அற்புதம்! எண்ணங்களின் பருப்பொருள் வடிவம் அது. கடந்த
காலப் படங்கள் (உம். பிரித்தானிய காலத்துப் படங்கள்,செட்டிநாடு வீடுகள்). குடும்பப் படங்கள் கூட ஒரு காலத்தின் தகவல் சொல்லக்கூடியதே.எனவே வீட்டில் பழைய படங்கள்
இருந்தால் அவைகளை வருடி இங்கு தொகுக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது:

1. உங்கள் படங்கள் ஏற்கனவே வலையில் இருந்தால் அதன் வலையமுகவரியை எனக்கு
அனுப்புங்கள்.
2. இன்னும் வலையேறவில்லையெனில் என் முகவரிக்கு அவைகளை சுருங்கக்கோப்பாக
(சிப்) அனுப்பி வையுங்கள்.
3. படம் பற்றிய விவரங்களுடன் வெளியிட வேண்டுமெனில் அது பற்றிய விவரத்தை
simple plain text (unicode)-ல் அனுப்பி வையுங்கள்.
4. தொடர்ந்து பங்களிக்க Image Heritage தள இணை நிருவாகராகச் சேர்ந்து
விடுங்கள். உங்கள் சௌகர்யப்படி நீங்கள் படங்களை, விவரங்களுடன்
வலையேற்றலாம் (these are multi-author enabled blogs).

http://www.tamilheritage.org/blogcms/fotoblog.php

உலக அளவில் தமிழ் அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டிய காலக்கட்டமிது.
தொழில்நுட்பம் உதவுகிறது. நம் முயற்சி சேர வேண்டும்.

மேலதிகத் தகவல்:எப்படிப் பங்களிக்கலாம்!

Why new blogs?

இவ்வலைப்பதிவுகள் சுடச் சுட RSS Feed மூலம் புதிய பதிவு விவரம் தரக்கூடியன. எனவே எளிதாக சந்தாத் தொடுப்புக் கொடுக்கலாம்.

ஜுகல்பந்தி


கர்நாடக சங்கீதம் பாடும் பையனை எங்கோ பார்த்த ஞாபகம். சப்தஸ்வரங்களில் வந்து கலக்கியவர் போல் தெரிகிறது. Fusion Music என்றால் என்ன? ஜுகல்பந்தி என்று இந்திய மொழியில் சொன்னால் பேஷன் இல்லை. ஏன் கர்நாடக சங்கீதப் பின்னணியில் பிரபலமான தெலுங்கு, கன்னட, குஜராத்தி மெட்டுக்களைச் சேர்க்கக்கூடாது? மாட்டார்கள். ஆங்கிலம் கலந்தால்தான் கைதட்டு கிடைக்கும்! கல்லூரிகளில் அரையும் குறையுமாக ஆங்கிலம் பேசிக்கொண்டும், புரிந்தும் புரியாமலும் மேலைக்கலாச்சாரத்தைத் தழுவிக்கொண்டும், மேலே கீழே குறைத்து ஆடை உடுத்திக் கொண்டால் அது 'மேல்தட்டுக்கலாச்சாரம்' என்ற போலித்தனம். எவனுக்கு தன் மரபின் ஆழம் தெரிகிறதோ அவனே மேலோன். எவனுக்கு மரபு தெரிந்து பிற மொழிகளைக் கற்றுப் பேசுகிறானோ அவனே மேலோன். இத்தகைய மேலோர்கள், 'பன்மொழிப்புலவர்கள்' நம் பரம்பரையில் நிறைய உண்டு. இப்போது பரவி தளிர்த்து நிற்கும் ஆங்கில மோகம் வெறும் விஷஜுரம். அது கலாச்சாரத்தைக் கொல்லக்கூடியது.

இவர்கள் முயற்சிக்கின்ற ஜுகல்பந்தி "மெல்லிசை" என்று மிக விரிவாக சினிமாக்கலைஞர்களால் வளர்த்தெடுக்கப்படுவிட்டது. அங்குதான் உண்மையான ஜுகல்பந்தி தெரிகிறது. எல்லா இந்திய மெட்டுக்களும், அரேபிய, துருக்கிய மெட்டுக்களும், ஜப்பானிய-தாய் மெட்டுக்களும், ஐரோப்பிய மெட்டுகளும் கர்நாடகப் பின்னணியில் கலக்கின்றன. அது நிற்கக்கூடியது.

ஷிம் குடும்பம்-கொரியன் சினிமா


நேற்று ஒரு தேனீர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தேனீர் தயாரிப்பது எப்படி, அதை பருகுவது எப்படி என்று சம்பிரதாயமாக நடத்திக் காண்பித்தார்கள். 'என்னையா டீ குடிக்கிறதப்போய் பெரிசாப் பேசிக்கிட்டு?' என்று கேட்கலாம். தேனீர் தயாரிப்பது, அக்கோப்பைகளை அலங்கரிப்பது, அதை அணுகுவது இப்படி இவர்கள் மிக சிரத்தையோடு அதைச் செய்வதைப் பார்க்கும் போது 'சும்மா தேத்தண்ணி குடிக்கிற சமாச்சாரம்' அல்ல இது என்று தெரிந்தது. அது புத்த-ஜென் முறையாக கீழைத்தேசங்களில் அணுகப்படுகிறது. அவர்கள் உட்காரும் விதம், வணங்கும் விதம், தேனீர் குடித்த பின் சில நிமிடங்கள் தியானித்து இருப்பது இப்படி இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இது நிச்சயம் வழிபாடு என்பது புரிந்து போய்விடும். ஜப்பானியர்க்கு இக்கலை கொரியாவிலிருந்துதான் போயிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கொரியன் படத்திற்குப் போனோம். நம்ம பாலிவுட், கோலிவுட்டெல்லாம் சூப்பர்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா கொரியன் சினிமாவைப் பார்க்கும் போது அவர்கள் எடுக்கும் கதை, கேமிராக் கோணங்கள், இசை, நடிப்பு, காட்சியமைப்பு இப்படிச் சாதாரணப் படங்கள் கூடத் தமிழ் சினிமாவிற்கு எட்டாத தூரத்தில் இருப்பது புலப்படுகிறது. இந்தப்படம் ஷிம் எனும் பள்ளி வாத்தியார் குடும்பம் பற்றியது, அவர், அவர் மனைவி, அவள் தங்கை, ஒரு பெண், ஒரு பையன் இவ்வளவுதான். இதை வைத்து, அவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும், ஏக்கங்களையும் எடுத்திருக்கும் விதம் கவிதை.

படம் நிலாவில் தெரியும் பூமிப்பந்தின் காட்சியுடன் தொடங்கி அங்கிருந்து கேமிரா அப்படியே பூமிக்கு வந்து நிலாவை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் நெற்றியில் வந்து நிற்கிறது. இப்படம் முழுவதும் நிலாவைக் காட்டு காட்சிகள் அற்புதமாக உள்ளன. அதே போல் தியேட்டரில் Stereo phonic effect(இதைத் தமிழில் தட்டிப்பாருங்கள்!). பக்கத்து ரூமில் பேசும் போது ஒலி அங்கிருந்து மட்டும் வருகிறது. படியில் கீழே உட்கார்ந்து கொண்டு பேசினால் பேச்சு அப்படியே ஒலிப்பதிவாகியுள்ளது. "கொரியா வாட்ச்" என்று பாலிவுட் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன கொரியப் படங்கள். Beware!

SHIM'S FAMILY. ("Johji-anihanga" சொச்சி அனிஹங்கா!) Jeong Yun-cheol's feature debut Marathon was nothing if not successful, selling over five million tickets and drawing much interest from audiences. His second film looks to be a much smaller and quirkier affair: a comic drama about a somewhat disfunctional family faced with a sudden crisis. The film features some big names such as Kim Hye-soo (Tazza) and Park Hae-il (Rules of Dating), but in smaller roles -- the biggest parts are taken by lesser known actors such as the wonderfully talented Cheon Ho-jin (All For Love) as the father, musical actress Moon Hui-kyung as the mother, Yu A-in (Boys of Tomorrow) as the son who believes he was a king in his former life, and first-time actress Hwang Bo-ra as the mysterious daughter.

ராஜா ரவிவர்மா


ராஜா ரவிவர்மா பற்றி அறியாதோர் குறைவு (எங்க கையைத் தூக்குங்க!) மிகவும் தத்ரூபமாக இந்தியப் புராண இதிகாச ஓவியங்களை உலகிற்கு அளித்தவர் அவர். மேலே உள்ள படம், அரிச்சந்திரன் நாடிழந்து, மனைவியிழந்து, மகனை இழக்கும் கோலம். பஞ்சத்திற்கு பிள்ளை விற்ற கதை 19ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது.

இப்போ, Photoshop வைத்து என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடிகிறது. பிள்ளையைப் பிரியும் காட்சியையும் பிரித்துவிட்டார் ஒரு வித்தகர்!!

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!


Lyrics
ஏதாவது புதுசு, புதுசா செஞ்சுக்கிட்டு இருக்கணும்ன்னு நம்ம ஜாதகம். பரிவர்த்தனம் என்பதுதான் இணையத்தின் ஆணிவேரே! நானும் சும்மா வீட்டில கிடக்க, நீங்க எங்கேயோ கிடந்தால் பிறகேன் இணையம்? பகிர்தல் என்பதே இணையச்சாரம்! எனவே இனிமே சும்மா வந்துட்டு போகக்கூடாது. சும்மா, தமாஷா! ஏதாவது வந்து சொல்லிட்டுப் போங்க. அதுக்கான ஒரு விட்ஜெட், அதுதான் இணையப்புறா பக்கத்திலே போட்டிருக்கிறேன். என் பேரைத் தட்டுங்க என் குரலைக் கேட்கலாம். உங்க குரலை நான் கேட்க வேண்டாமா?

உண்மையில் இதை டெலிபோன் போல நீங்க பயன்படுத்தலாம். ஏதாவது அவசரமா சொல்லணும்ன்னா, ஒரு ஒலி அஞ்சல் விடலாம் (2 நிமிஷம். இதுக்குள்ள உலக விஷயம் பேசற ஆட்களெல்லாமுண்டே!). ஆக, வாங்க, வந்து பேசுங்க. உங்க மணிக்குரலைக் கேட்போம்!

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்! - போனஸ் பாட்டு மேலே! (ராகா படத்தைத் தட்டவும்)

மஞ்சள் கடல் ஆய்வு


மஞ்சள் கடல் என்பது சீனாவிற்கும், கொரியாவிற்கும் மத்தியில் இருக்கிறது. இரண்டுமே அதிவேகமாக வளரும் நாடுகள். எனவே இக்கடலுக்கான சூழல் பிரச்சனைகள் பொது. இது குறித்த எங்கள் ஆய்வு பற்றி செய்தித் துணுக்கொன்று கிடைத்தது. சும்மாப் பகிர்ந்து கொண்டேன். இது கொரிய மொழியில் உள்ளது. ஆங்கில துணைத்தலைப்பு இல்லை, மன்னிக்க. படம் பார்த்து கேள்வி கேட்டால் பதில் சொல்வேன். இதில் காட்டப்படும் கப்பல்கள் எங்கள் ஆய்வக ஊர்திகள், எனவெ சகா வொன் ஜூன் ஷிம் பேசுகிறார். அதில் ஒரு ஷாட்டில் கப்பல் வழியாக எங்கள் ஆய்வகம் காட்டப்படும் (சூப்பர் ஆங்கிள்).

நிறப்பிரிகை


நமக்கு ஹோலி பழக்கமில்லை. ஆனால் வர்ணங்கள் பொது. பொறுமையாக கடைசிவரை பாருங்கள்..ப்ளீஸ்!

குறள்-66


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார்

இந்தக் குறளை முதன் முறை கேட்பவர்கள் கையைத் தூக்குங்கள்?!

தெரியும் என்கிறீர்களா? சரி, ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒரு கதை இப்போது சொல்கிறேன், கேளுங்கள்!

சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கு. என்னையும், பாலச்சந்தர் போன்ற பிரபலங்களையும் (பிரித்து வாசிக்கவும்) அழைத்திருந்தனர் இரண்டு நாள் கருத்தரங்கு. மதிய உணவு இடைவெளியில் நண்பர் உல்ரிக நிக்கோலஸைப் பார்த்து வரக் கிளம்பினேன். கூடவே இரண்டு தமிழறிஞர்களும் வந்தனர். சாப்பிட்டுக் கொண்டே பேசும் போது திருக்குறள் பற்றிய பேச்சு வந்தது. வள்ளுவர் வடநூல் சம்பிரதாயத்தை வழியொட்டி அமைத்த தர்ம சாஸ்திரம் (அற நூல்) திருக்குறள் என்று நிக்கோலஸ் சொன்னார். அப்போது ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். இப்போது ஐரோப்பாவின் ஒரே தமிழ்த்துறை கொண்ட பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராகப் போய் விட்டார். வடமொழி, தென்மொழி பிரிவினை கலாச்சாரத்தில் ஊறிக் கல்வி கற்ற அந்த அறிஞர்களுக்கு நிக்கலோஸ் அப்படிச் சொன்னது எரிச்சலைத் தந்தது. அது மட்டுமல்ல, பரத நாட்டியத்தின் ஆணி வேர் தெருக்கூத்தில் உள்ளது என்று வேறு சொல்லிவிட்டார். புனிதம் கெட்டுப் போன ஆத்திரத்தில் அவர்கள் சண்டைக்குப் போக, ஏண்டா இப்படி ஆனது என்று வருந்தும் நிலையில் நானிருந்தேன். எனக்கும் வடமொழி தெரியாது. இவர் கூற்று உண்மையா? பொய்யா என்று சொல்லும் புலமை எனக்கில்லை.

ஆச்சர்யமாக இன்று திரு.கிருஷ்ணப்பிரேமியின் உரை கேட்டுக் கொண்டிருக்கும் போது குறள் 66க்கான வடமொழி கிரந்தம் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வள்ளுவரின் முதற்குறள் எப்படி கீதையை அடியொட்டி அமைகிறது என்று முன்பு சொல்லியிருக்கிறேன். கேட்டு பின் வாதிப் பிரதிவாதங்களில் ஈடுபடுங்கள் (நாராயண! நாராயண! :-))Keywords: thirukkural, valluvar, kuzanithu, kural-66, sanskrit, granta, kavya