குறள்-66


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார்

இந்தக் குறளை முதன் முறை கேட்பவர்கள் கையைத் தூக்குங்கள்?!

தெரியும் என்கிறீர்களா? சரி, ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒரு கதை இப்போது சொல்கிறேன், கேளுங்கள்!

சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கு. என்னையும், பாலச்சந்தர் போன்ற பிரபலங்களையும் (பிரித்து வாசிக்கவும்) அழைத்திருந்தனர் இரண்டு நாள் கருத்தரங்கு. மதிய உணவு இடைவெளியில் நண்பர் உல்ரிக நிக்கோலஸைப் பார்த்து வரக் கிளம்பினேன். கூடவே இரண்டு தமிழறிஞர்களும் வந்தனர். சாப்பிட்டுக் கொண்டே பேசும் போது திருக்குறள் பற்றிய பேச்சு வந்தது. வள்ளுவர் வடநூல் சம்பிரதாயத்தை வழியொட்டி அமைத்த தர்ம சாஸ்திரம் (அற நூல்) திருக்குறள் என்று நிக்கோலஸ் சொன்னார். அப்போது ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். இப்போது ஐரோப்பாவின் ஒரே தமிழ்த்துறை கொண்ட பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராகப் போய் விட்டார். வடமொழி, தென்மொழி பிரிவினை கலாச்சாரத்தில் ஊறிக் கல்வி கற்ற அந்த அறிஞர்களுக்கு நிக்கலோஸ் அப்படிச் சொன்னது எரிச்சலைத் தந்தது. அது மட்டுமல்ல, பரத நாட்டியத்தின் ஆணி வேர் தெருக்கூத்தில் உள்ளது என்று வேறு சொல்லிவிட்டார். புனிதம் கெட்டுப் போன ஆத்திரத்தில் அவர்கள் சண்டைக்குப் போக, ஏண்டா இப்படி ஆனது என்று வருந்தும் நிலையில் நானிருந்தேன். எனக்கும் வடமொழி தெரியாது. இவர் கூற்று உண்மையா? பொய்யா என்று சொல்லும் புலமை எனக்கில்லை.

ஆச்சர்யமாக இன்று திரு.கிருஷ்ணப்பிரேமியின் உரை கேட்டுக் கொண்டிருக்கும் போது குறள் 66க்கான வடமொழி கிரந்தம் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வள்ளுவரின் முதற்குறள் எப்படி கீதையை அடியொட்டி அமைகிறது என்று முன்பு சொல்லியிருக்கிறேன். கேட்டு பின் வாதிப் பிரதிவாதங்களில் ஈடுபடுங்கள் (நாராயண! நாராயண! :-))Keywords: thirukkural, valluvar, kuzanithu, kural-66, sanskrit, granta, kavya

3 பின்னூட்டங்கள்:

Anonymous 3/04/2007 10:23:00 PM

தெய்வமே :-)
-usha

நா.கண்ணன் 3/04/2007 10:27:00 PM

மேடம்!
இது எனக்கா? வள்ளுவருக்கா? நிக்கோலஸுக்கா? தமிழ் அறிஞர்களுக்கா? சும்மா குறள் போல சுருக்க சொன்னால்? :-)

ஜடாயு 3/30/2007 06:17:00 PM

கண்ணன்,

உங்கள் அனுபவம் வழக்கத்திற்கு ஏற்றாற்போலத் தான் உள்ளது! அந்த உரை இனிமை - மதுரம், மதுரதரம்!

குறள் கூறும் நெறிகள் யாவும் சம்ஸ்கிருத அற நூல்களுடன் இயைந்தவை என்பதை நானும் நம்புகிறேன், ஏற்றுக் கொள்கிறேன். எதிலிருந்து எது வந்தது போன்ற சர்ச்சைகளுக்குள் நான் போக விரும்பவில்லை.ஏப்படிப் போனாலும் இரண்டு மொழிகளுக்குள்ளும் அன்பான, இணக்கமான கருத்துப் பரிமாற்றம் இருந்து என்ற முடிவில் தான் அது வரும்.

நீங்கள் காட்டியது கருத்தளவில் ஒப்புமை. பல நேரடியான பொருள் இயைபுகளே சொல்லலாம் -

ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் (குறள்),
யதா ஸ்ம்ஹரதே சாயம் கூர்மோங்கானீவ சர்வஸ: (கீதை, 2-ஆம் அத்தியாயம், ஸ்திதப்ரக்ஞன் இலக்கணம்)

குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.

இதே உயிர்-உடல் பந்தத்த்தை விளக்கும் இதே உவமை உபநிஷதங்கள் உட்பட பல நூல்களில் உள்ளது.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இப்படி எழுதியதற்காக தமிழ்ப் பதிவுகளில் யாரும் உங்களை உதைக்க வரவில்லையே என்று தான்! சம்ஸ்கிருதம் பற்றி என்ன சொன்னாலும் அது தான் நடக்கும்!

சம்ஸ்கிருதம் பற்றிய கலாம் உரை (என் பதிவு)
http://jataayu.blogspot.com/2007/02/blog-post_117111415536219618.html

தொடர்ந்த சில கேள்விகளுக்கான பதிலடி:
http://jataayu.blogspot.com/2007/02/blog-post_15.html

இன்னொரு பதிவு, தனித்தமிழ் பற்றி:
http://jataayu.blogspot.com/2007/02/blog-post_22.html