ராஜா ரவிவர்மா


ராஜா ரவிவர்மா பற்றி அறியாதோர் குறைவு (எங்க கையைத் தூக்குங்க!) மிகவும் தத்ரூபமாக இந்தியப் புராண இதிகாச ஓவியங்களை உலகிற்கு அளித்தவர் அவர். மேலே உள்ள படம், அரிச்சந்திரன் நாடிழந்து, மனைவியிழந்து, மகனை இழக்கும் கோலம். பஞ்சத்திற்கு பிள்ளை விற்ற கதை 19ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது.

இப்போ, Photoshop வைத்து என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடிகிறது. பிள்ளையைப் பிரியும் காட்சியையும் பிரித்துவிட்டார் ஒரு வித்தகர்!!

4 பின்னூட்டங்கள்:

சேதுக்கரசி 3/10/2007 05:46:00 PM

ரவி வர்மா படத்துக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்கப்பா! :(

வடுவூர் குமார் 3/11/2007 12:41:00 AM

அந்த குழந்தையின் கை "மனதைப்பிழிகிறது"
தத்ரூபமான படம்.

துளசி கோபால் 3/11/2007 02:50:00 PM

ரவிவர்மாவின் படங்களில் நான் பார்த்து வியப்படையறது அதுலெ இருக்கற
விஸ்தாரமான detailsதான்.

பழத்தட்டு ஏந்தி நிற்கும் பெண்மணியின் புடவையின் ஜரிகை பார்டரைப் பாருங்க.
சிதார் வாசிக்கும் ஒரு மேல்தட்டுப் பெண்மணி, உக்கார்ந்திருக்கும் ஸ்டைல், அந்த பெஞ்சு,
கழற்றிப் போட்டிருக்கும் செருப்பு, முன்னாலெ இருக்கும் நாய் அடடா.........
ஒவ்வொண்ணும் கவனிச்சுப் பார்க்கவேண்டிய அம்சம்.

எதுக்கு இதை மட்டும் சொல்றேன்னு கேட்டா............. இதுதானே நான்
இந்தப் பயணத்தில் வாங்கி வந்த ஓவியங்கள்:-))))

நா.கண்ணன் 3/11/2007 03:10:00 PM

துளசி! உங்க ரேன்ஞ்சே வேற :-)

மேலை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அந்த விவரணம் (details) முதன் முறையாக ரவிவர்மா மூலமாக இந்தியாவிற்குள் வருகிறது என்ற் எண்ணுகிறேன். கிருஷ்ணதூது எனும் படத்தில் கிருஷ்ணர் 'அசல்ட்டா' தாக்கபோகும் பீமனின் கையைப் பிடிப்பது, ஏதோ சினிமாப் படப்பிடிப்பு போல இருக்கும். அவ்வளவு உயிர் இருக்கும்!