ஷிம் குடும்பம்-கொரியன் சினிமா


நேற்று ஒரு தேனீர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தேனீர் தயாரிப்பது எப்படி, அதை பருகுவது எப்படி என்று சம்பிரதாயமாக நடத்திக் காண்பித்தார்கள். 'என்னையா டீ குடிக்கிறதப்போய் பெரிசாப் பேசிக்கிட்டு?' என்று கேட்கலாம். தேனீர் தயாரிப்பது, அக்கோப்பைகளை அலங்கரிப்பது, அதை அணுகுவது இப்படி இவர்கள் மிக சிரத்தையோடு அதைச் செய்வதைப் பார்க்கும் போது 'சும்மா தேத்தண்ணி குடிக்கிற சமாச்சாரம்' அல்ல இது என்று தெரிந்தது. அது புத்த-ஜென் முறையாக கீழைத்தேசங்களில் அணுகப்படுகிறது. அவர்கள் உட்காரும் விதம், வணங்கும் விதம், தேனீர் குடித்த பின் சில நிமிடங்கள் தியானித்து இருப்பது இப்படி இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இது நிச்சயம் வழிபாடு என்பது புரிந்து போய்விடும். ஜப்பானியர்க்கு இக்கலை கொரியாவிலிருந்துதான் போயிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கொரியன் படத்திற்குப் போனோம். நம்ம பாலிவுட், கோலிவுட்டெல்லாம் சூப்பர்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா கொரியன் சினிமாவைப் பார்க்கும் போது அவர்கள் எடுக்கும் கதை, கேமிராக் கோணங்கள், இசை, நடிப்பு, காட்சியமைப்பு இப்படிச் சாதாரணப் படங்கள் கூடத் தமிழ் சினிமாவிற்கு எட்டாத தூரத்தில் இருப்பது புலப்படுகிறது. இந்தப்படம் ஷிம் எனும் பள்ளி வாத்தியார் குடும்பம் பற்றியது, அவர், அவர் மனைவி, அவள் தங்கை, ஒரு பெண், ஒரு பையன் இவ்வளவுதான். இதை வைத்து, அவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும், ஏக்கங்களையும் எடுத்திருக்கும் விதம் கவிதை.

படம் நிலாவில் தெரியும் பூமிப்பந்தின் காட்சியுடன் தொடங்கி அங்கிருந்து கேமிரா அப்படியே பூமிக்கு வந்து நிலாவை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் நெற்றியில் வந்து நிற்கிறது. இப்படம் முழுவதும் நிலாவைக் காட்டு காட்சிகள் அற்புதமாக உள்ளன. அதே போல் தியேட்டரில் Stereo phonic effect(இதைத் தமிழில் தட்டிப்பாருங்கள்!). பக்கத்து ரூமில் பேசும் போது ஒலி அங்கிருந்து மட்டும் வருகிறது. படியில் கீழே உட்கார்ந்து கொண்டு பேசினால் பேச்சு அப்படியே ஒலிப்பதிவாகியுள்ளது. "கொரியா வாட்ச்" என்று பாலிவுட் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன கொரியப் படங்கள். Beware!

SHIM'S FAMILY. ("Johji-anihanga" சொச்சி அனிஹங்கா!) Jeong Yun-cheol's feature debut Marathon was nothing if not successful, selling over five million tickets and drawing much interest from audiences. His second film looks to be a much smaller and quirkier affair: a comic drama about a somewhat disfunctional family faced with a sudden crisis. The film features some big names such as Kim Hye-soo (Tazza) and Park Hae-il (Rules of Dating), but in smaller roles -- the biggest parts are taken by lesser known actors such as the wonderfully talented Cheon Ho-jin (All For Love) as the father, musical actress Moon Hui-kyung as the mother, Yu A-in (Boys of Tomorrow) as the son who believes he was a king in his former life, and first-time actress Hwang Bo-ra as the mysterious daughter.

6 பின்னூட்டங்கள்:

Dubukku 3/13/2007 03:19:00 AM

தேசிபண்டிட்ல் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி !

http://www.desipundit.com/2007/03/12/koreacinema/

நா.கண்ணன் 3/13/2007 08:24:00 AM

தேசிய பண்டிதரில் இப்பதிவை highlight செய்தமைக்கு நன்றி டொபுக்கு.

Anonymous 3/13/2007 11:25:00 AM

where did you saw this movie ???

moses

நா.கண்ணன் 3/13/2007 11:37:00 AM

Moses: Never miss this movie. This was released in February end. This is from the director who made that wonderful movie called 'Marathon' (a story about a handyhapped person participating in Seoul marathon. Super film!). Korean films attract me as the visualization & acting are so good that you need not know the language to understand the film!

ஊ..வே..சா 3/13/2007 01:22:00 PM

டொபுக்கு இல்லைங்க...டுபுக்கு..அய்ய, இந்த மாமாவுக்கு தமிழே தெரியல.

நா.கண்ணன் 3/13/2007 01:53:00 PM

டுபுக்கு/டொபுக்கு ரெண்டுமே தப்பு. தமிழ் இலக்கணப்படி 'ட'கர உயிர்மெய்யில் பெயர்ச்சொல் அமையாது. எனவே அவர் இன்றையிலிருந்து "தொபுக்கு/துபுக்கு" :-))