ஜுகல்பந்தி


கர்நாடக சங்கீதம் பாடும் பையனை எங்கோ பார்த்த ஞாபகம். சப்தஸ்வரங்களில் வந்து கலக்கியவர் போல் தெரிகிறது. Fusion Music என்றால் என்ன? ஜுகல்பந்தி என்று இந்திய மொழியில் சொன்னால் பேஷன் இல்லை. ஏன் கர்நாடக சங்கீதப் பின்னணியில் பிரபலமான தெலுங்கு, கன்னட, குஜராத்தி மெட்டுக்களைச் சேர்க்கக்கூடாது? மாட்டார்கள். ஆங்கிலம் கலந்தால்தான் கைதட்டு கிடைக்கும்! கல்லூரிகளில் அரையும் குறையுமாக ஆங்கிலம் பேசிக்கொண்டும், புரிந்தும் புரியாமலும் மேலைக்கலாச்சாரத்தைத் தழுவிக்கொண்டும், மேலே கீழே குறைத்து ஆடை உடுத்திக் கொண்டால் அது 'மேல்தட்டுக்கலாச்சாரம்' என்ற போலித்தனம். எவனுக்கு தன் மரபின் ஆழம் தெரிகிறதோ அவனே மேலோன். எவனுக்கு மரபு தெரிந்து பிற மொழிகளைக் கற்றுப் பேசுகிறானோ அவனே மேலோன். இத்தகைய மேலோர்கள், 'பன்மொழிப்புலவர்கள்' நம் பரம்பரையில் நிறைய உண்டு. இப்போது பரவி தளிர்த்து நிற்கும் ஆங்கில மோகம் வெறும் விஷஜுரம். அது கலாச்சாரத்தைக் கொல்லக்கூடியது.

இவர்கள் முயற்சிக்கின்ற ஜுகல்பந்தி "மெல்லிசை" என்று மிக விரிவாக சினிமாக்கலைஞர்களால் வளர்த்தெடுக்கப்படுவிட்டது. அங்குதான் உண்மையான ஜுகல்பந்தி தெரிகிறது. எல்லா இந்திய மெட்டுக்களும், அரேபிய, துருக்கிய மெட்டுக்களும், ஜப்பானிய-தாய் மெட்டுக்களும், ஐரோப்பிய மெட்டுகளும் கர்நாடகப் பின்னணியில் கலக்கின்றன. அது நிற்கக்கூடியது.

0 பின்னூட்டங்கள்: