வலைஞர்கள் கவனத்திற்கு!


நான்கு வலைப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது!

1. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வுகள், கண்டு பிடிப்புகள், சுவாரசியமான சேதிகள் இவைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். இங்கு பிற வலைத்தளங்களில் தேங்கிக் கிடக்கும் சேதிகள் இன்னும் கோர்க்கப்படவில்லை. ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த வலைத்தலங்கள், வலைப்பதிவுகள் பற்றி இங்கு தொடர்ந்து இடலாம், விவரங்களுடன்.

http://www.tamilheritage.org/blogcms/

2. தமிழ் இசை பற்றிய "இணைய மாலை" இது. கண்ணிகளைத் தொடுக்க வேண்டியதே நம்
வேலை. சமீபத்திய தொழில் நுட்பம் நாம் இணையத்தில் தனிப்பட கேட்கும் எதையும் (வலையில் இருக்கும் பட்சத்தில்) பொதுவாக பகிர்ந்து கொள்ள வழி வகுத்துள்ளது. எனவே "நீங்கள்" ரசித்த தமிழ் இசை (கர்நாடக, நாட்டுப்பாடல், பிற), பேச்சு, பட்டிமன்றம் போன்றவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்). இதனால் எல்லோரும் பயனுற வழியுள்ளது.

இங்கு தமிழ் வட்டார வழக்குகளை நேரடியாகப் பேசி பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அவரவர் குடும்ப வசனங்கள், பேச்சு வழக்குகளை இங்கு வந்து பதியலாம். இது தமிழ் மொழி ஆய்விற்கு மிகவும் உதவும்.

நன்கு பாடக்கூடியவர்கள் இருந்தால் அவர்களைக் கொண்டு, நாலாயிர திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்றவற்றை இசையாகப் பதிவு செய்யலாம். இது தவிர நிறைய சிறு பிரபந்தங்கள் உள்ளன. ஓதுவார்கள் இசைப் பாடல்கள் இருந்தாலும் அவைகளையும் சேகரிக்கலாம். சேவியில் இடம் ஒரு பிரச்சனை இல்லை இப்போது!

http://www.tamilheritage.org/blogcms/voth.php

3. வீடியோப் பதிவுகளை இதே முறையில் சேர்க்கலாம். உதாரணமாக, தமிழ் நாட்டு
டி.வியில் விவரணப்படம் வந்தால் அதை ரெகார்டு செய்து இங்கு பதிப்பிக்கலாம். வீணை பாலச்சந்தர் பற்றி, பாபநாசம் சிவன் பற்றி documentary films வந்திருக்கின்றன. அவைகள் இங்கு தொகுக்கப்படும்.

இந்தியா போகும் போது எடுத்த வீடியோ கிளிப்பை இப்படி எளிதாகத் தொகுக்கலாம்.

http://www.tamilheritage.org/blogcms/video.php

4. புகைப்படம் ஒரு அற்புதம்! எண்ணங்களின் பருப்பொருள் வடிவம் அது. கடந்த
காலப் படங்கள் (உம். பிரித்தானிய காலத்துப் படங்கள்,செட்டிநாடு வீடுகள்). குடும்பப் படங்கள் கூட ஒரு காலத்தின் தகவல் சொல்லக்கூடியதே.எனவே வீட்டில் பழைய படங்கள்
இருந்தால் அவைகளை வருடி இங்கு தொகுக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது:

1. உங்கள் படங்கள் ஏற்கனவே வலையில் இருந்தால் அதன் வலையமுகவரியை எனக்கு
அனுப்புங்கள்.
2. இன்னும் வலையேறவில்லையெனில் என் முகவரிக்கு அவைகளை சுருங்கக்கோப்பாக
(சிப்) அனுப்பி வையுங்கள்.
3. படம் பற்றிய விவரங்களுடன் வெளியிட வேண்டுமெனில் அது பற்றிய விவரத்தை
simple plain text (unicode)-ல் அனுப்பி வையுங்கள்.
4. தொடர்ந்து பங்களிக்க Image Heritage தள இணை நிருவாகராகச் சேர்ந்து
விடுங்கள். உங்கள் சௌகர்யப்படி நீங்கள் படங்களை, விவரங்களுடன்
வலையேற்றலாம் (these are multi-author enabled blogs).

http://www.tamilheritage.org/blogcms/fotoblog.php

உலக அளவில் தமிழ் அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டிய காலக்கட்டமிது.
தொழில்நுட்பம் உதவுகிறது. நம் முயற்சி சேர வேண்டும்.

மேலதிகத் தகவல்:எப்படிப் பங்களிக்கலாம்!

Why new blogs?

இவ்வலைப்பதிவுகள் சுடச் சுட RSS Feed மூலம் புதிய பதிவு விவரம் தரக்கூடியன. எனவே எளிதாக சந்தாத் தொடுப்புக் கொடுக்கலாம்.

9 பின்னூட்டங்கள்:

தமிழ்பித்தன் 3/14/2007 03:32:00 PM

போய் பார்த்தேன் என்னால் இயன்ற பங்களிப்பு நல்குவேன்

நா.கண்ணன் 3/14/2007 03:38:00 PM

நன்றி. பல்லூடகத்தன்மையை முழுதாக வெளிக்கொணரும் திறன் வலைப்பூக்களுக்குண்டு. தமிழர் தம் திறம் வெளிவரட்டும், உலகறிய. வாழ்க.

Dubukku 3/14/2007 10:14:00 PM

இந்தப் பதிவை தேசிபண்டில் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/14/tamilheritage/


dubukku [at] desipundit [dot] com.

சேதுக்கரசி 3/15/2007 04:18:00 AM

அரும்பணிக்கு வாழ்த்துக்கள். இயன்றதைச் செய்ய முற்படுகிறேன்.

நற்கீரன் 3/15/2007 06:06:00 AM

நல்ல சேவை.

இந்த ஆக்கங்கள் எந்த உரிமத்தின் கீழே சேர்க்கப்பட வேண்டும், அல்லது பயன்படுத்தலாம்.

நன்றி.

நா.கண்ணன் 3/15/2007 08:19:00 AM

//இந்த ஆக்கங்கள் எந்த உரிமத்தின் கீழே சேர்க்கப்பட வேண்டும், அல்லது பயன்படுத்தலாம். //

உரிமம் என்ற சொல் எதற்கு இங்கு நிற்கிறது? விளக்கினால் நலம்.

இந்த வலைப்பூக்களின் பயன்பாடு பற்றிய விளக்கங்கள் ஒவ்வொரு வலைப்பூவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக 'Contact' தொடுப்பிற்குச் சென்று உங்கள் பங்களிப்பை அளிக்கலாம். உங்கள் தொடர் பங்களிப்பு உங்களுக்கு இணை ஆசிரியர் உரிமையை வழங்கும்.

நா.கண்ணன் 3/15/2007 08:21:00 AM

//அரும்பணிக்கு வாழ்த்துக்கள். இயன்றதைச் செய்ய முற்படுகிறேன்//

சேதுக்கரசி, 'அன்புடன்' குழுமத்தில் வெளிவந்திருக்கும் சுவாரசியமான தொடுப்புக்களை எடுத்துக் கொடுத்தாலே பெரிய பணி. இதுபோல் பிற வலைப்பூக்கள், வலைத்தளங்கள்....அப்பாடி!!

ஜடாயு 3/16/2007 07:42:00 PM

கண்ணன், மிக அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

இதில் குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கதைகள் பற்றி ஒரு சிறப்பு ஆடியோ பகுதி சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை, அதன் வளத்தை எல்லா வழிகளிலும் எடுத்துச் செல்ல இது உதவும்.

நா.கண்ணன் 3/16/2007 07:52:00 PM

வாங்க பட்சிராஜரே! செய்வோம் என்று சொல்வோம்! ஏனெனில் அந்தப் பன்மையில் நீங்களுமுண்டு என்ற பொருளில். கண்ணில் படுவதை காட்சிப் படுத்துங்கள்!!