சிந்தனைத் திருடன்!

பல நேரங்களில் நாம் நினைப்போம் மற்றவர் சொல்லுவர். "நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே" என்பது பொதுவான பதில். வருகின்ற காலங்களில் கணினி நாம் நினைப்பதைச் சொல்லும்! ஞாயிற்றுக் கிழமை திரு.திருநாவுக்கரசுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கொரியாவில் மூளை வருடித் துறையில் ஆய்வாளராக வந்திருக்கிறார். தற்போதைக்கு மூளைக்கோளாறுகளை அறுவை சிகிச்சைக்கு முன் கண்டு சொல்லும் non-invasive technique பற்றியது அவர் ஆய்வு. நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.

இன்று வந்து கணினியைத் திறந்தால் மேலும் சுவாரசியமான தகவல்கள். வருகின்ற காலங்களில் கணினிகள் நம் மூளையில் தோன்றும் எண்ண அலைகளை கண்டறிந்து (pattern recognition) அதற்கேற்றவாறு வேலைகள் செய்யும். இது மனிதனை "வாழைப்பழ சோம்பேறி" ஆக்கிவிடாதோ? ஆக்கலாம். கை, கால் முடங்கிப்போய் வாய் கூட பேச முடியாத சில நோயாளிகளுக்கு இது மிகவும் உதவும். காருண்ய கருத்தாக்கத்தில்தான் கண்டுபிடிப்புகள் தோன்றுகின்றன. ஆயின் அது தோன்றிய பின் காவாலிகள் கைக்குப் போய்விடுகின்றன. அப்போது அடிமைகளை அது உருவாக்கும். நம்ம நாட்டில் இதுவெல்லாம் இல்லாமலே அடிமைகளை நாம் உருவாக்கி வருகிறோம். வெளிநாட்டுக்காரர்களுக்கு எல்லாவற்றிற்கும் ஒரு மெஷின் வேண்டியிருக்கு!

Human Nature: Science, Technology, and Life.
Full-Mental Nudity
The arrival of mind-reading machines.
By William Saletan

0 பின்னூட்டங்கள்: