கூட்டு

எல்லா நாடுகளும் இறைப்பற்றை பறை சாற்றி கடவுள் இருப்பதை ஒத்துக் கொள்கின்றன. ரஷ்யா தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் (அமெரிக்காவையும் சேர்த்து) தங்களைக் கிருஸ்தவ நாடுகளாகவே இனம் காணுகின்றன. ஆனால், மிகப்பழமையான சமய ஒழுக்கம் கொண்ட இந்தியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் தங்களை எந்த மதத்துடனும் இனம் காணுவதில்லை. உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லிக் கொண்டிருந்த நேபாளம் கூட சமயம் சாராக் கொள்கைக்கு மாறிவிட்டது.

இது ஒரு வகையில் வேடிகனுக்குச் சாதகமான நிலைப்பாடே. ஏனெனில் வேடிகனின் இருப்பே கிருஸ்தவ எண்ணிக்கையைக் கூட்டுவதில்தான் உள்ளது. ஒரிஜினலாக புத்த நாடாக இனம் காணப்பட்ட கொரியாவில் ஏறக்குறைய 50% மக்கள் இப்போது கிருஸ்தவர்களாக உள்ளனர். எங்கு நோக்கினும் சிலுவை கண்ணில் படுகிறது.


Photo by N.Kannan

இந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்திய நாணயத்தில் சிலுவை?

சமயச் சார்பின்மை என்றால் என்ன?

5 பின்னூட்டங்கள்:

ஜோ / Joe 3/27/2007 10:56:00 AM

நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது!

Anonymous 3/27/2007 11:44:00 AM

Christianity is spreading fast in India also. Christians are given first preference in education as most of the schools are minority charity schhols. A study taken 2/3 years back revealed that almost 80% christians are employed. Other communities are very less.

கால்கரி சிவா 3/30/2007 02:11:00 AM

எத்தனை எத்தனை சின்னங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவையெல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு சிலுவையை போடுவது யாரையோ மகிழ்விக்க என எண்ணம் உருவாகிறது.

சுய ஏளனத்தின் உச்சம் இது.

சுட்டிக் காட்டியதற்கு நன்றி கண்ணன் சார்

ஜடாயு 3/30/2007 05:24:00 PM

கண்ணன், இந்த மதமாற்றப் புரட்டர்களின் விஷமம் குறித்து நண்பர் அருணகிரி விரிவாக இந்த வாரம் திண்ணையில் எழுதியிருக்கிறார் - படிக்கவும் :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20703295&format=html

நா.கண்ணன் 3/30/2007 05:41:00 PM

ஜடாயு:

என் பதிவிலுள்ள நாணயத்தைத் தட்டினால் இன்னொரு விரிவான கட்டுரை வரும். வாசியுங்கள். கேள்விகள்:

1. சந்தைப் பொருளாதாரத்தின் மறு உருவம் போல் தெரிகிறது இம்மதமாற்றம். உலகம் பூரா கிருஸ்தவமாக மாறிவிட்டால் யாருக்கு லாபம்? உலகம் தன் பன்முகத்தன்மை இழந்து விடாதோ?

2. மத உணர்வுகளற்ற சமுதாயத்திற்கு இறைச்செய்தி கொண்டு சென்றால் சரி, மிகப்பழமையான, மூத்த சமயங்கள் உள்ள நாட்டை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டிய அவசியமென்ன?

3. இந்தியாவில் வேண்டுமானால் பஞ்சப் பரதேசிகள் அதிகம். மத மாற்றம் என்பது பொருளாதார, ஜாதி உயர்விற்கு வழி, கொரியாவில் என்ன வந்தது?

4. கெடக்கிறது கெடக்க கெழவியத்தூக்கி மனையில் வை! என்ற கதையாக இந்திய நாணயத்தில் சிலுவை ஏன்?

5. ஏதோ அறைகுறை டிசைன், தீர்மானிக்கும் முன்னமே அச்சுக்குப் போய்விட்டது போல் படுகிறது. படு மட்டமான minting. எதிலுமே சிரத்தை கிடையாதா? நாணயம் என்பது நாட்டின் முகமல்லவா?