கவித் திண்ணை - ஒலிப்பத்தி 22

முலை முட்டும் கன்றுகள் - கவித் திண்ணை

கொரியாவிலிருந்து நா.கண்ணன்
தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 22)
ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

இணையத்தின் சாத்தியங்கள் பல. அவற்றுள் ஒலி முக்கியமானது. எழுத்துப் படி, ஒலி வடிவம் பெறும்போது அதன் பரிமாணமே வேறு. இசையும் கலக்கும்போது அது தரும் அனுபவம் அலாதி. அவற்றைப் பயன்படுத்தும் முனைப்புடன் நா.கண்ணன் களம் இறங்கியுள்ளார். எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் நமக்கு அறிமுகமான கண்ணன், இங்கே கவிஞராக முகம் காட்டுகிறார்.

தமிழ்சிஃபியின் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கும் வகையில் நா.கண்ணன் 'முலை முட்டும் கன்றுகள்' என்ற ஆக்கத்தை எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் அளித்துள்ளார். அது மட்டுமின்றி, தன் படைப்பு குறித்துச் சிலரின் விமர்சனங்களையும் ஒலி வடிவில் தரச் செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து பலரின் உரைகளை ஒருங்கே திரட்டி அளித்துள்ள வகையில் இணையத்தில் இது புது முயற்சி. இந்தக் கன்னி முயற்சியைக் கேட்டு மகிழுங்கள்:

நா.கண்ணன் கவிதை அறிமுகம்:
நேர அளவு: 4.38 நிமிடங்கள்

கவிதை வாசிப்பு - நா.கண்ணன் (தென் கொரியா):
நேர அளவு: 7.44 நிமிடங்கள்

எழுத்து வடிவில் முலை முட்டும் கன்றுகள்

===================================================

விமர்சனப் பார்வை 1 - நா.சுசீந்திரன், பெர்லின் (ஜெர்மனி)
நேர அளவு: 2.37 நிமிடங்கள்

விமர்சனப் பார்வை 2 - அண்ணாகண்ணன், சென்னை (இந்தியா)
நேர அளவு: 7.26 நிமிடங்கள்

விமர்சனைப் பார்வை 3 - கி.லோகநாதன், பினாங்கு (மலேசியா)
வாசிப்பு: ஷைலஜா, அமெரிக்கா.
நேர அளவு: 3.42 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி.காம்

0 பின்னூட்டங்கள்: