வாஜி..வாஜி..வாஜி...வா..வாவ்..ரகுமான் ஜி!

சிவாஜி படப்பாடல் வலையுலகிற்குள் கசிந்துவிட்டது. இயக்குநர் இன்னும் அது எப்படின்னு கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கார்! நம்ம ரகுமான் பாடல்கள் எடுத்தவுடனே ரசிக்காது. காதுகள் கேட்டுப் பழகணும். எப்போதும் நவமாக இருப்பது ஒரு காரணம். புதுப் பாட்டு, புது டியூன் (மெட்டு), புது இசை இப்படி எப்போதும் ஒரே கலக்கல். ஆம்! கலக்கல்! ஒரு காக்டெய்ல்!! அதுலே என்ன மியூசிக் எங்கே அப்படி கலக்குதுன்னு கண்டுபிடிக்க ஒரு பி.எச்.டி வேலை செய்யணும். இதுலே பாருங்க.."சாஹானா பூக்கள்ன்னு ஒரு பாடல்" அது சஹானா ராகத்தில் அமைந்த பாட்டுன்னு முதல் வரியும், கடைசியில் மெல்லிசாக வரும் ஒரு 'ஹம்' இவைதான் சொல்லுகின்றன. அப்புறம், 'ஒரு கூடை சன் லைட், ஒரு கூடை மூன் லைட்..ஒன்றாகச் சேர்ந்தால் என் வொயிட்!' அப்படின்னு ஒரு பாட்டு. வைரமுத்து ஒரு பச்சைத்தமிழன் என்பதை உலகிற்கு ஒளி காட்டும் பாடல் :-) (அதிலுள்ள ஸ்பானிஷ் வரிகளை அவர் எழுதவில்லை எனக் கொள்வோம்!!) புகுந்து விளையாண்டு இருக்கார் ரகுமான். நம்ம வைரமுத்துவும்தான்! தமிழில் மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய பலுப்பல் 'ள', 'ல', 'ழ' ஒலிகள். ரகுமான் இப்பலுப்பலைக் கொலைப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தப்பாட்டிலும் பாடுகிறவர் (அவர் எல்லாப்பாட்டையும் இப்படித்தான் பாடுகிறார், அதனால்தான் தேர்வோ என்னவோ!) தொடர்ந்து உருக்குலைக்கிறார். ஹீரோ! ஹிராதி ஹீரோ!..என்று எழுதுவது வைரமுத்து!தமிழ் இலக்கணம் என்பது அல்ப ஆயுசிலே தொங்கிக்கிட்டு இருக்கு! சினிமாவும், சின்னத் திரையும் விரைவில் தமிழை ஒரு 'கலக்கல் மொழியாக்கிவிடும்' (இதுக்கு பழைய பெயர் 'மணிப்பிரவாளம்' ங்க).

அட! பாட்டுக் கேக்கணுமா? மோகன்குமார்ஸ் டாட் காம் வெளியிட்டு இருக்கிறது. சிவாஜி படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு தளம் ஊருவாகியிருக்கிறது. படப்பாடல்கள் எப்படி வெளியாகியது என்பதில் சில யூகங்கள் வெளிவந்துள்ளன. 1. இதுவொரு சினிமாத்தனம் என்பதொன்று. சினிமாவில் அழுபவர்கள் நிஜமாக அழுவதில்லை. கோபப்படும் போதும் நிஜமாக கோபப்படுவதில்லை என்பது அது. 2. ரஜனி வெளியிட்டு இருக்கலாம் (?), 3) எப்படியோ வெளியாகிவிட்டது. இதன் பொருளாதார பாதிப்பு பற்றி? சின்னத்திரை வந்தவுடன் பெரிய திரையில் ஒரு தோய்வு ஏற்பட்டது. சிடி நகலெடுக்கும் தொழில்நுட்பம் வந்தவுடன் சினிமாப்பாட்டு விற்பனையில் தோய்வு ஏற்பட்டது. சின்னத்திரைக்கும், சின்னத்திரையாக YouTube தொழில்நுட்பம் வந்தவுடன் இப்போது எல்லாமே இணையத்திற்குள் வந்துவிடுகின்றன. தொழில்நுட்பம் நம் வேலையை எளிதாக்குகிறது என்ற கருத்தே வலுவானது, ஆயினும் தொழில்நுட்பம் பல நேரங்களில் நம் வேலையை கஷ்டமாக்கிவிடுகிறது என்பதும் உண்மை.

இணையம் என்பது ஒரு paradigm shift! எல்லாவற்றையும் தலைகீழாய் புரட்டிப் போட்டிருக்கும் மாற்றம். தமிழக வியாபார யுத்திகள் மாறவேண்டும். இணைய்ப் பொருளாதாரம் என்பது மாறிவரும் நிலப்பரப்பு. அதன் வாய்ப்புகளை எப்படி லாபகரமாக பய்ன்படுத்தலாமென்று தமிழக சினிமா யோசிக்க வேண்டும். கூகுளைப் பாருங்கள்! அது இப்படி ஆலமாக வளருமென்று யார் கண்டார்? இணையத்துடன் இணைந்து செயல்படும் பொருளாதாரமே இங்கு இனி நிற்கும்!

5 பின்னூட்டங்கள்:

ரவிசங்கர் 4/01/2007 04:46:00 PM

படத்தில் வைரமுத்துவையும் சேர்த்து 4 பாடலாசிரியர்கள். எல்லா பாட்டையும் இவர் எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. எதை யார் எழுதினார் என்று பாடல் வெளிவந்த பின் தான் தெரியும். தவிர, பட வெளியீட்டுக்கு முன்னே, இப்படி உங்கள் பதிவில் பாடல்களுக்கான இணைப்பைத் தருவது ethicsஆகவும் தோன்றவில்லை.

நா.கண்ணன் 4/01/2007 05:00:00 PM

மோகன்குமார்ஸ் டாட் காம் இதை வெளியிட்டு இருக்கிறது. இது மறுஒலிபரப்பு மட்டுமே! இன்னொரு தளம் வேண்டுமா? இது ரகுமானுக்குச் செய்யும் உபகாரம். கேட்கத்தான் அவர் இசை ருசிக்கும்!

SurveySan 4/02/2007 03:08:00 AM

Nalla sevai. :)

aduththavan uzhaippai vittru dhuttu sambaadhikkum .com's, endraavadhu oru naal ulle poga vendi varum.

http://surveysan.blogspot.com/2007/03/blog-post_27.html

நா.கண்ணன் 4/02/2007 07:42:00 AM

இவ்வளவு பொறுப்பு வலையகத்தில் இருக்குமென்று நினைக்கவில்லை! பெரும்பாலும் ரஜனி ரசிகர்கள் துள்ளிக் குதிக்கும் கூட்டமென்று நினைத்திருந்தேன். அவர்கள் கமல் ரசிகர்கள் போல் ஆகிவிட்டார்களே :-)

பாடல்களை எடுத்துவிட்டு மூலத்திற்கு இணைப்புக் கொடுத்துவிட்டேன்.

எல்லோரும் பொறுப்பாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு என்றும் ஆசையுண்டு. நான் பெரிய சினிமா வித்தகன் அல்ல. ரகுமான் இசை எனக்குப்பிடிக்கும். ஒரு நண்பர் இப்பாடல்களை அறிமுகப்படுத்தினார். நான் இங்கு அறிமுகப்படுத்த விரும்பினேன். இதன் வெளியீடு குறித்த சிக்கல்கள் பின்னால் தெரியவந்தன. நன்றி.

cdmslm 8/19/2007 08:01:00 PM

Hi,

This is really cool information.

We can find more Tamil Songs with Lyrics at http://movies-tv-songs.com

Tamil Songs with Lyrics