நல்ல திரைப்படங்கள் - ஒலிப்பத்தி

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 21)

நல்ல திரைப்படங்கள்
கொரியாவிலிருந்து நா.கண்ணன்

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை மீண்டும் ஒலிக்கிறது. இந்த முறை நா.கண்ணன், நல்ல திரைப்படங்களைக் குறித்துப் பேசியுள்ளார். தமிழ்த் திரைப்படங்கள், கொரியத் திரைப்படங்கள், படங்களின் கருப்பொருட்கள், காட்சி ஊடகங்களின் செல்வாக்கு, அவை ஏற்படுத்தும் தாக்கம், சிறந்த இயக்குநர், சிறந்த படங்களை ரசிப்பதற்கான பயிற்சி..... எனப் பலவற்றையும் பற்றி உரையாற்றியுள்ளார். நல்ல படங்களைப் பார்க்கும் ஆர்வத்தை இத்தகைய உரைகள் தூண்டும் என்று நம்பலாம்.

நா. கண்ணனின் இனிய உரையைக் கேளுங்கள்:


நேர அளவு: 17.32 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி.காம்

4 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 4/03/2007 10:13:00 AM

திரு நா.கண்ணன்
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
இளையராஜாவோடு தொடங்கி,முடித்து பல தரப்பட்ட தகவல்களை சொல்லியுள்ளீர்கள்,நடுவில் சர்தார்ஜி ஜோக் உள்பட.
கொரிய சீரியல்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன்,பார்த்ததாக ஞாபகம் இல்லை.
உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே திரு சுப்பையா சார் ஜாதகம் படிக்கலாம் என்று பார்த்தால் முடியவில்லை.ஆழமாக கேட்க வைத்துவிட்டீர்கள்.

நா.கண்ணன் 4/03/2007 10:21:00 AM

நன்றி குமார். நேற்றுக்கூட ஒரு கொரியன் படம் பார்த்தேன். அது அழகுக்காக முகமாற்ற சிகிச்சை பற்றியது. சுமாரான படம்தான். கொஞ்சம் நம்ம ஊர் மசாலா. ஆசியாவில்தான் ஆண்கள் அழுவதைக் காட்டமுடியும்:-) ஆனால் முகமாற்று சிகிச்சை இங்கு மிகப்பிரபலமாகி வருகிறது. கவனிக்க வேண்டிய சமூகக்கூறு.

நம்பி.பா. 4/05/2007 03:21:00 AM

மிக நல்ல முயற்சி, தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் சொன்னதுபோல், சினிமா பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொண்டே போகலாம்.
பாடல்கள் இல்லாமல் கமலும் பேசும்படம் என்ற படத்தை எடுத்துள்ளார். வணிக நோக்கு சார்ந்த தயக்கங்களினால் பல இயக்குநர்கள், மணிரத்தினம் உட்பட பாடல்களை தவிர்க்க முடிவதில்லையென பொதுவிலேயே பேசியிருக்கின்றார்கள்.
வரும்பாடல்களில் பத்து பாடலில் ஒன்றுதான் நாகரிகமாக படமாக்கப்படுகிறது, அதிலும் பத்தில் ஒன்றுதான் வரிகள் அழகிய தமிழில் இருக்கிறது. கவர்ச்சி மற்றும் வன்முறை இவையிரண்டும்தான் பிரதானமென்ற உங்கள் கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை!

நா.கண்ணன் 4/05/2007 07:20:00 AM

நன்றி நம்பி (திருநெல்வேலி பக்கமோ?):

பாடல் கூடாதென்றில்லை. அதனால்தான் இன்று மெல்லிசை எனும் புதிய வடிவம் கிடைத்திருக்கிறது. ஆனால், நம்மவர் பாடல்களை 'செக்ஸ்' காட்டுவதற்கென்று வைத்திருக்கின்றனர். அவைகள் அப்பட்டமான போர்னோகிராஃபி. (மிட்நைட் மசாலா என்றொரு சிடி வந்துள்ளது. அதைப் பார்த்தால் நான் சொல்வது புரியும்). சினிமாவிலிருந்து பிரிந்து இசைப்பாடல்கள் பிற உலகில் தனித்து விட்டன. ஹிந்தியில் கூட அது பிரபலமாகிவிட்டது. ஆயினும் தமிழகத்தில் சிறு முயற்சி கூட இல்லை. தமிழகம் மிக மெதுவாகவே காலை வைக்கிறது.