மணிச்சித்திரத்தாழு

இது ஆறின கஞ்சி. பழம் கஞ்சி. எனவே வேண்டாதோர் போய்விடலாம்.

நேற்றுதான் மணிச்சித்திரத்தாழு பார்த்தேன். அது இணையத்தில் கிடைக்குமென்று ஏனோ இதுநாள்வரை தோணவில்லை! நல்ல படம். மலையாள முத்திரையுள்ள படம். படோடாபம் இல்லாமல் எளிமையாக, இயற்கையாக எடுத்திருக்கிறார்கள். ஒரு பாடல் மனதில் நிற்கிறது. இதைத் தழுவி எடுத்த சந்திரமுகி வானை முட்டி நின்ற கதை சரித்திரம். எப்படி? ஒரு தழுவல் படம் இப்படி சூப்பர் ஹிட் ஆகியது? காரணமிருக்கிறது. தமிழ் சினிமாக்காரர்களுக்கு வியாபாரப்படம் திறமாக எடுக்கத் தெரிகிறது. ஒரு தஞ்சைக் கோயிலை ராஜராஜ சோழனால் மட்டுமே நிர்மாணிக்க முடிந்திருக்கிறது. ஸ்ரீரங்க கோபுரம் எங்கே? பத்மநாபர் கோபுரமெங்கே? அங்குதான் வித்தியாசம். தமிழர்களால் பிரம்மாண்டமாக சிந்திக்க இன்னும் முடிகிறது! அது முதுசொம். பாரம்பரிய விழுமியம். சந்திரமுகியில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட். துருக்கியில் எடுத்த பாடற்காட்சிகள் அற்புதம். நடிக,நடிகைகள் தேர்வு, நகைச்சுவை இப்படி எல்லாமே சூப்பர். மணிச்சித்திரத்தாழு படத்தில் மோகன்லால் சொதப்பி இருக்கிறார். பாத்திரப் பொருத்தமே இல்லை. ஷோபனா செய்ததை விட ஒன்றும் குறைவில்லாமல் செய்திருக்கிறார் ஜோதிகா. மணிச்சித்திரத்தாழுவில் பாடல்கள் ஒட்டவே இல்லை. அவை இல்லாமலே எடுத்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும்.

ஆக, இந்த இரண்டு படத்தையும் பார்க்கும் போது தமிழன், மலையாளி இவர்களின் குணாம்சங்கள் தெள்ளத் தெளிவாகின்றன! தமிழன் தனக்கென உள்ள சிறப்பான குணங்களை மென்மேலும் வளர்த்துக் கொண்டால் அவன் விஸ்வரூபம் எடுக்கமுடியும் என்று தோன்றுகிறது. தமிழின் கலைவளம், அறிவு வளம், நிலவளம் அபரிதம்! இவற்றை இன்னும் அவன் முழுமையாக உணர்ந்தானில்லை.

41 பின்னூட்டங்கள்:

Anonymous 4/07/2007 10:27:00 AM

The songs in Manichithrathazhu are beautiful. The film is meant to go at a slow pace. Chandramukhi, on the other hand, goes at a good pace. Mohanlal's actions are fantastic. He was hooked in to bring a little bit of comic relief as well. He did his role wonderfully. Shobana's original portrayal was natural and her characterization was unveiled much better.

Malayalees have applauded the performance of Mohanlal and Shobana in this film. And the songs are a good hit. If not for Rajni, I wonder how well songs like Devuda Devuda, Athithom and all would have lasted.

Tastes differ. Many Tamils, including myself, have watched Manichithrathazhu and have been awed by the realistic and natural tone it carried. It carried a good coherent screenplay. Chandramukhi had Rajni, Vadivelu's comedy and of course, the climax of Jyothika. If not for all those, it would have been a shoddily made film.
-kajan

நா.கண்ணன் 4/07/2007 10:52:00 AM

முதன்முறையாக சந்திரமுகி பார்க்கும் போது பாதிப்படம்தான் கிடைத்தது. அதை வைத்து நான் எழுதிய முந்திய விமர்சனத்தில் எனக்கு படம் பிடிக்கவில்லை. வியாபாரத்தனமான படன் என்றே விமர்சித்து இருந்தேன். பின் மணிச்சித்திரத்தாழு பற்றி ஆகா! ஓகோ வென்று விமர்சித்தபின் இதைப் பார்க்காவிட்டால் சென்மம் கடைத்தேறாது போல் தோன்றிவிட்டது. நேற்றுதான் கடைத்தேறியது :-)

1.மோகன்லாலுக்கு காமெடி ரோல், ரஜனிக்குப் பொருந்துவது போல் பொருந்தவில்லை.
2. ஷோபனாவிடம் குறை இல்லை.
3. பாட்டுக்கள் ஒட்டவே இல்லை.
4. ஒரு மலையாளப்படத்தில் இருக்க வேண்டிய யதார்த்தம் என்று பார்த்தால் மணிச்சித்திரத்தாழு மிகைதான். அவர்களால் இன்னும் யதார்த்தமாக எடுக்கமுடியும்.
5. தமிழனின் கலைவெளிப்பாடு எத்தனையோ மடங்கு உயர்ந்தது. தமிழ் இலக்கியம் தொட்ட சில சிகரங்களை அவர்கள் இன்னும் தொடவில்லை.

அரவிந்தன் நீலகண்டன் 4/07/2007 11:01:00 AM

ஐயா வணக்கம்..2005 நவம்பரில் இத்திரைப்படங்கள் குறித்து அடியேன் திண்ணையில் எழுதிய கட்டுரையிலிருந்து சிலவற்றை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்....கங்காவிடம் பக்கத்து வீட்டு மூதாட்டி யட்சியான தமிழச்சி நாகவல்லியை எப்படி தரவாட்டின் காரணவர் மந்திரங்களால் கட்டி உள்ளடக்கினார் என்பதை விவரித்துக் கொண்டிருக்கிறாள். தமிழில் சந்திரமுகியும் (இடையில் இன்னபிற தென்னாட்டு மொழிகளில் ஏதேதோ எனக்கு தெரியாது) மலையாள நாகவல்லியும் மிகவும் அதிசயிக்கதக்க வெற்றியை அடைந்துள்ளனர். 'சூப்பர் ஸ்டார் ' மயக்கங்களுக்கு அப்பாலும் சந்திரமுகியிலும் சரி அதன் பூர்விக மணிசித்திர தாழிலும் சரி, பல நனவிலி கவர்ச்சிகள் இருப்பதாக தோன்றுகிறது. உதாரணமாக அந்த பெயர், அந்த காலம், அதில் -மற்றப்படி காட்டுக்கத்தலாக அனைத்து விஷயங்களும் காட்டப்படும் சந்திரமுகியில் கூட- மெலிதாக காணப்படும் குறியீட்டுத்தன்மைகள் இத்யாதிகள் நாகவல்லியின் பெயரிலேயே சர்ப்ப தொடர்பு இருக்கிறதென்றால், சந்திரமுகியில் ஒரு பாம்பு சிற்பம் கதவிலேயே காட்டப்படுகிறது. பாம்பு நிலத்தொடர்பு கொண்ட ஆன்மிகக் குறியீடு என்பதுடன் பெண் தெய்வ வழிபாடுகளுடன் தொடர்புடையது.-குறிப்பாக சந்திரமுகியின் மூலக்கதை தோன்றிய கேரளத்தில்-.இவ்விரு கதைகளிலும் கங்கா நவீன பெண்மணி. மணிசித்திரதாழில் அவள் நாக தேவதைகளை சிறுமியாக வழிபடுவதும் காட்டப்படுகிறது. சந்திரமுகி என்ற பெயரும் சுவாரசியமானதுதான். சந்திர கலைகளும் அதன் சுழலும் பெண்ணின் பாலியல் சுழலுடன் தொடர்புடையதெனக் கருதப்பட்டதால் சந்திரனுடன் பெண் தெய்வ வழிபாட்டிற்கு தொடர்புண்டு. சந்திரனை கையில் ஏந்திய பெண் தெய்வம், தலையில் தரித்த பெண் தெய்வம், சந்திர கலையில் நிற்கும் / ஆரோகணிக்கும் பெண் தெய்வம் ஆகியவற்றினை தொல் சமயக் குறியீடுகளிலும் தொல்-ஆன்மிக இலக்கியங்களிலும் காணலாம். உதாரணமாக பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியவியலாளர்களால் ஆண் தெய்வ வழிபாட்டினை முக்கியப்படுத்துவதாக கூறப்படும் ரிக் வேதத்தில்தான் சந்திர கலையின் மேல் ஆரோகணித்து வரும் பழம்பெரும் பெண்தெய்வத்தின் முதல் சொல் சித்திரம் வெளிப்படுகிறது. பின்னாளில் ரோம கத்தோலிக்க மதம் எடுத்துக் கொண்ட 'பாகன் பெண் தெய்வம் ' விண்ணரசி என்னும் மாதாவாக (12 ராசிகளையும் தலையில் தரித்து) நிற்கும் பெண் தெய்வம் ஏசு சகாப்தம் (இன்று பொதுசகாப்தம் -common era) எனக் கருதப்படுதற்கு பலகாலம் முன்னரே புதிய கற்காலத்திலிருந்தே உருவாகி உலகெங்கும் பரவிய தெய்வமாகும்.

இந்தக் குறியீடுகளெல்லாம் தெரிந்தே இக்கதையில் சேர்க்கப்பட்டதா அல்லது 'தற்செயலாக ' தொற்றிக் கொண்டதா தெரியவில்லை. நிச்சயமாக படம் பார்க்கும் பெரும்பாலான மக்கள் இதையெல்லாம் நனவுணர்வுடன் இரசிக்கவில்லையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் நனவிலி இக்கதையின் உள்ளூடும் மற்றோர் கதையோட்டத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது....காலனிய காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்பட்ட நிலவுடமையாளர்களே இரு கதைகளிலும் 'வில்லன்கள் ' (காரணவர், வேட்டையன் ராசா). அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு அநியாயமாக தமது காதலர்களை இழந்தவர்கள் சந்திரமுகியும், நாகவல்லியும். நாகவல்லியை தாங்கிய கங்கா தனது கணவனை நனவிலி நிலையில் கொல்ல முயன்று ஒருகட்டத்தில் வெளிப்படையாகவே தன் கணவனை கொல்ல முன் வந்து மன-சிகிச்சையாளரால் தடுக்கப்படுகிறாள். ... பார்வையாளனுக்கு யார் 'வில்லன் ' அல்லது 'வில்லி ' ? சந்திரமுகியா ? இருக்கலாம். சந்திரமுகி/நாகவல்லி குறித்து 'இப்படிப்பட்ட பெண்ணை எப்படி இன்னொருவனுக்கு கொடுக்க மனசுவரும். அவளைக் கொன்றது தப்பேயில்லை ' எனும் வசனம் வரும் போது அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது. சந்திரமுகிக்கு அன்று நடந்த அநியாயத்திற்கு இன்று ஏற்படுத்தப்படும் நியாயம். விக்டோரிய ஒழுக்கத்துவத்தால் நிரம்பி 'காலுக்கிடையில் கற்பிருப்பதாக ' நம்பி குஷ்புவை திட்டும் மக்களின் நனவுணர்விற்காக தரப்படும் நியாயம். ஆனால் அவ்வாறே கதை நகர்ந்திருந்தால் அது தோற்றிருக்கும். ஆனால் சந்திரமுகி/நாகவல்லி வில்லியல்ல. ஏதோ ஒரு விதத்தில் அவள் நியாயம் மறுக்கப்பட்டவள் என்பதனை ஆழ்மனதில் பார்வையாளர்கள் உணர்ந்துள்ளார்கள். ஆனால் அன்னியப்பட்டுப் போன மனதிற்கு நாகவல்லி/சந்திரமுகி ஒரு நோய்.யட்சியல்ல. எக்ஸார்ஸிஸ்ட் போன்ற கிறிஸ்தவ பேயோட்டுகிற கதையாடல்களில் அது ஒரு அமானுட நேர்மறை சக்தி. அழித்து விரட்டப்பட வேண்டியது. ஆனால் மணிசித்திரதாழின் வெற்றி அவ்வாறில்லாமல் அதனை முழுமைப்படுத்தி அகற்றுவதாகும். ஸைக்கி எனப்படும் உள்-இருப்பொன்றின் முழுமைத்துவத்தை -அது எத்தனை நேர்மறையான தன்மையுடன் இருந்தாலும் கூட- ஏற்படுத்தி அதனை ஒருமைப்படுத்துவது. உங்கிய சட்டகத்தில் சொல்வதானால் individuation நிகழ்வு. எனவேதான் அந்த சாமியாரின் பாத்திரம் அங்கு தேவைப்படுகிறது. சுவாரசியமாக ஒரு பிரபல தமிழ் வார இதழ் சந்திரமுகி விமர்சனத்தில் குறையான அம்சமாக சாமியாரின் சடங்குகள் காட்டப்பட்டதை கூறியிருந்தது. ஆனால் அது இக்கதையின் மிக முக்கியமான அம்சமாகும். மற்றொரு வருத்தமான வேறுபாடு மணிசித்திரதாழுக்கும் சந்திரமுகிக்கும் இருக்கிறது. செந்தில் கங்காவிடம் சென்று துர்காஷ்டமி அன்று அவர்கள் சென்னை செல்வதாக கூற வைக்கப்படுகிறான். அவன் முன்னரே சந்திரமுகி அமானுடதன்மையுடன் கிளர்ந்தெழுந்து இரு ஆளுமைகளும் எல்லைகள் கலக்கும் நிலையில் மயங்குகிறாள். ஏன் இவ்வாறு செய்யப்படுகிறது ? செந்திலுக்கு சந்திரமுகியை காட்டி நிரூபிப்பதற்கா ? மணிசித்திரதாழில் இதற்கான காரணம் அவளது ஆழ்மனதிற்கு கணவனின் அன்பின் வலிமையைக் காட்டசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் சந்திரமுகி/நாகவல்லி அவளது பழியினை நிறைவேற்றிக் கொள்வதாக ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. மாந்திரீகமும் நவீன உளவியலும் கலந்து செய்யப்படும் ஒரு நாடகம். சுஜாதாவின் கொலையுதிர்கால சமன்படுத்தல் அல்ல அங்கு நிகழ்வது. அதைவிட ஆழமான ஓர் நாடகம் அங்கு அரங்கேறுகிறது. Psyche முழுமையடைகிறது. கங்கா மண்டலம்/யந்திரம் ஒன்றில் அமர வைக்கப்படுகிறாள். உங்கிய உளவியலில் இது சைக்கியின் பூரணத்துவப் பெறலையே காட்டுகிறது. ஒரு கவர்ச்சிகர இளமை துள்ளும் நடிகையாக அறியப்பட்ட (கங்கா பாத்திரத்தை ஒத்த) ஜோதிகாவின் சந்திரமுகி மாற்றம் தமிழ் ரசிகர்களின் கூட்டு நனவிலியில் மேலும் ஒரு இசைவினை ஏற்படுத்தியிருக்கலாம்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=605110410&format=html

நா.கண்ணன் 4/07/2007 11:19:00 AM

அரவிந்தன்: மிக்க நன்றி. மிக ஆழமான விமர்சனம், அலசல். நிறைவாக உள்ளது. இப்படங்கள் பெற்ற வெற்றியின் பின்னுள்ள உளவியல் ஆராயப்பட வேண்டியதே! ஆயினும் இரு படத்திலும் ஏதோ அமெரிக்கா போய்ட்டு வந்தால்தான் உளவியல் தெரியும் என்று காட்டுவது பாமரத்தனம். 20 நூற்றாண்டின் உளவியல் ஞானி ஜோசப்கேம்பல், மேலைஉலகின் உளவியல் மன ஆழத்தின் மேல் மட்டத்தைக்கூட இன்னும் தொடவில்லை, ஆயின் இந்திய தத்துவங்கள் பன்னெடுங்காலமாக இதில் ஆழங்காட்ப்பட்டு போயுள்ளன எனச்சொல்லும் ஒப்புமையை நோக்கும் போது வருத்தமாக இருந்தது. நம்மவரின் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு எல்லையே இல்லையா? கீதை முழுவதும் உளவியல் நூல் என்று டாக்டர் வெங்கோபராவ் (உளவியல் பேராசிரியர், மதுரை)பேசுவார். பௌத்தர்கள் தொட்ட எல்லை என்ன? நம் வேர்களைப் பற்றிய புரிதலில் நாம் இன்னும் இளநீச்சுதான் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உறுதி.

Anonymous 4/07/2007 12:39:00 PM

How you can compare Chandramukhi with Manichithrathazhu ?.Manichithrathazhu is classical where as CM is commerical interest of PV and RK .

Shobhna got national award where as jyothika done career best performance which shobhna told in a interview .

I have seen MC when it is released and after CM still i have impact of MC not CM .

even though i m a Rajini fan , Mohanlal is great in MC .

// தமிழனின் கலைவெளிப்பாடு எத்தனையோ மடங்கு உயர்ந்தது. தமிழ் இலக்கியம் தொட்ட சில சிகரங்களை அவர்கள் இன்னும் தொடவில்லை. //

This is sick of our race ( ?) we never see other's before come to conslutions whether being a hindu and say against Muslim culture or being tamil and against all others .

I heard Shivaji also a remake of mohanlal hit . dont compare Rajni with Mohanlal . Rajni is Rajni .

--Raveen

அரவிந்தன் நீலகண்டன் 4/07/2007 01:29:00 PM

உண்மைதான். தமிழ் சந்திரமுகியில் மற்றொரு அபத்தம் 'சைக்காஸிஸ்' முறையில் ஏதோ செய்யப்போவதாக சரவணன் சொல்லுவார். சைக்காஸிஸ் என்பது மனப்பிறழ்நிலை என்பது கூடவா தெரியாமல் வசனம் எழுதுகிறார்கள் என்ன கொடுமை இது சரவணன்...ஆனால் இந்த விசயங்கள் மலையாளத்தில் ஸ்படிக சுத்தமாக பார்வையாளருக்கு புரியும் விதத்தில் கூறப்பட்டிருந்தன. அப்புறம் மலையாள கலைத்தன்மையும் தமிழ் கலாச்சாரத்தின் மற்றொரு கூறுதான். தஞ்சை மண்ணின் கோபுரத்தையும் பத்மநாபசாமி கோபுரத்தையும் வைத்து அப்படி தமிழ்-மலையாளமென இரட்டைப்படுத்த முடியாது. மலையாள சமூக இலக்கிய பரிணாம வேர்கள் அழுத்தமாக தமிழ்மண்ணில் புதைந்து அதன் ஆன்மிக சத்தினை உள்ளெடுத்து வளரும் மலைவாசனை அளிக்கும் தமிழ் செடிதான். நிற்க...திருமூலரும் பதஞ்சலியும் மீண்டும் மீண்டும் ஆழ்-உளவியலில் மீள்-நிரூபிக்கப்பட்டே வருகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்கள் தமிழ் சமூகவியலை அறிதலில் தம் மண்சார்ந்ததோர் பார்வையை முன்வைத்தார்களில்லை. என்னைக் கேட்டால் மார்க்சிய கோசாம்பியுனுடையதை விட கேம்பெலின் பார்வை நம் மண்ணின் மணத்தோடு இருக்கிறதென்பேன். ஆனால் எங்கள் ஊரில் நாட்டார் வழக்காற்றியல் பேராசிரிய பெருமக்கள் கேம்பெல் என்றால் மலங்கமலங்க விழிப்பார்கள். ஜெயமோகனைத் தவிர வேறு யாருடனும் அங்கே கேம்பெல் குறித்து விவாதிக்க கூட முடியாது. 'தூய' சவேரியார் நாட்டார் வழக்காற்று பாதிரிகளுக்கோ மார்க்சிய மடத்தன பார்வைகள் மூலம் நம் மரபுகளை குறுமைப்படுத்துவதில் இருக்கும் ஏக குஷி சொல்லி மீளாது. இந்நிலையில் ஒரு புதிய தலைமுறை மண்ணின் வேர் சார்ந்து பாரத சமுதாய யதார்த்தங்களை ஆராய்ச்சி செய்ய முன்வைந்தால் அது மனிதகுலத்துக்கு கொடுக்கும் அருட்கொடை மிகப்பெரியதாக இருக்கும். 'உலகனைத்தையும் மேன்மையுறச் செய்யுங்கள்' என ஒரு பெரும் பொறுப்பினை இப்பாரத மக்கள் மீது வைக்கிறது வேதம். சனாதன தருமம் எனும் அருட்கொடையை உலகனைத்துக்கும் வழங்குவதே பாரதம் ஜீவிப்பதன் ஒரே நியாயம்.

Anonymous 4/07/2007 02:43:00 PM

அன்பின் கண்ணன்

மிகுந்த ஆசரியமாகவும் பெருத்த ஏமாற்றமாகவும் இருக்கிறது உங்கள் விமர்சனம்.

நகைச்சுவை பாத்திரம் ரஜனிக்குப் பொருந்துவது போல மோகன்லாலுக்குப் பொருந்தவில்லை என்ற உங்கள் நகைச்சுவைதான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை என நினைக்கிறேன்.

'காயை அடிக்குறாங்களா?' போன்ற இரட்டை அர்த்தம் மிகுந்த் மட்டமான நகைச்சுவையும் தமிழனின் முதுசொம்களின் அம்சம்தானா?

ஒருமுறை வந்து பார்த்தாயா பாடலுக்கு என்ன குறைச்சல்? தேவுடா தேவுடா பாடல் எந்த வகையில் கதையோடு ஒட்டுகிறது? அல்லது அத்தித்தோம் பாடல் எவ்வகையில் படத்தோடு ஒட்டுகிறது? அல்லது பட்டம் விட்டு கொக்கு பற பற ஒட்டுகிறதா அண்ணனோட பாட்டு ஒட்டுகிறதா? என்ன கதை சொல்கிறீர்கள் கண்ணன்?

தமிழ்த்திரையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஒரு சதம் கூட உதவாத, இன்னமும் பெண்களீடம் சவால் விட்டு ஜெயிப்பதை சரித்திரமாக ஸ்தாபித்து தன் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ரஜனி என்ற வர்த்தக நடிகனின் பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இன்னொரு அடிப்ப்டை ரசிகனின் மனோபாவத்தைத்தான் உங்களிடம் பார்க்கிறேன் :-(

'அவரவர்க்கு அதது'தான் என்றாலும் உங்களிடமிருந்து எனும்போது.. ஏமாற்றமாகத்தான் இருக்கிறது

ஆசிப் மீரான்

துளசி கோபால் 4/07/2007 02:50:00 PM

'ஒரு முறை வந்து பார்த்தாயா?
என் மனம் என்னவென்று அறிந்தாயே'

நா.கண்ணன் 4/07/2007 06:35:00 PM

//How you can compare Chandramukhi withManichithrathazhu ?.Manichithrathazhu is classical where as CM is commerical interest of PV and RK//
எது கிளாசிகல்? இரண்டுமே வியாபாரப்படங்கள். நீங்கள் சினிமாப் பட்டறைகளில் பயிற்சி பெற்றது இல்லை போல் தோன்றுகிறது! ஒன்று டிபிக்கல் மலையாள வார்ப்பு. மற்றது டிபிக்கல் ரஜனி படம்.

ஒன்று மற்றதின் தழுவலாக இருக்கும் போது (டான்ஸ் போஸ் முதற்கொண்டு) எப்படி ஒப்பு நோக்காக இருக்க முடியும்?

// தமிழனின் கலைவெளிப்பாடு எத்தனையோ மடங்கு உயர்ந்தது. தமிழ் இலக்கியம் தொட்ட சில சிகரங்களை அவர்கள் இன்னும் தொடவில்லை. //

This is sick of our race ( ?) we never see other's before come to conslutions whether being a hindu and say against Muslim culture or being tamil and against all others

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கேரளாவின் நிலவளம், அரசியல், பொருளாதாரம் இவை அவர்களின் கலை வெளிப்பாட்டைத் தீர்மானிக்கிறது. அவர்களாலும் நினைத்தாலும் ஒரு சந்திரமுகி எடுக்கமுடியாது. ஒரு தஞ்சைக் கோயில் கட்டமுடியாது. உள்ளதை உள்ளபடி சொல்வது உங்களுக்கு வாந்தி கொடுத்தால் நான் என்ன செய்யமுடியும்? [அவர்கள் பலம் வேறு. அவர்களை குறைத்து மதிப்பிட்டுச் சொன்னதாக நீங்கள் எடுத்துக்கொண்டுள்ளீர்கள்]

//I heard Shivaji also a remake of mohanlal hit . dont compare Rajni with Mohanlal . Rajni is Rajni//

தழுவல் என்றால் ஒப்புநோக்காமல் இருக்கமுடியாது. ரஜனியோ, மோகன்லாலோ கடவுளர் அல்ல. வெறும் நடிகர்கள். திறமையைக் கணிப்பது ரசிகன் பாங்கு!

உண்மைத் தமிழன் 4/07/2007 08:04:00 PM

ஐயாமார்களே.. சினிமா ஏதோ நாலு பேரை பறந்து பறந்து அடிக்க வேண்டும், வீர வசனம் பேச வேண்டும்.. ஸ்டைலாக நடக்க வேண்டும்.. கட்டாயம் பாடல்கள் வேண்டும். கூடவே அர்த்தமற்ற ஆடல்களும் வேண்டும்.. உடன் கனவுப் பாடல் ஒன்றுக்கு சுவிட்சர்லாந்துக்கு போக வண்டும். இது எல்லாவற்றையும்விட குழந்தைகள் கேட்கக் கூசும் அளவுக்கு கட்டாயம் இரட்டை அர்த்த வசனங்கள் வேண்டும்.. இது எல்லாவற்றையும் சேர்த்து சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தால் தமிழர்கள் ஓடோடி வருவார்கள். இதுதான் சினிமா.. இதுதான சினிமா பற்றிய உங்களுடைய அறிவு. மணிசித்திரதாழ் படத்தின் அருகே போஸ்டர் ஒட்டுவதற்குக்கூட தகுதியில்லாத திரைப்படம் சந்திரமுகி. பாசிலின் இயக்கத்தையும் யதார்த்தத்தின் மிக அருகில் இருக்கும் அந்தப் படம் எங்கே? தன் பெண்டாட்டியை அடுத்தவன் வைத்திருக்கிறானோ என்ற பதைபதைப்புடன் படம் நெடுக வலைய வரும் ஹீரோத்தனம் உள்ள இந்தப் படம் எங்கே? ஐயா.. ஒப்பிடுவதற்கும் ஒரு அளவுகோல் வேண்டாமா? சந்திரமுகி பணத்தை உங்களுக்கு வாரிக் கொடுத்திருக்கலாம். ஆனால் தரம் என்று பார்த்தால் அது மணிசித்திரதாழ்தான்.. ஆனால் தமிழன் எப்போதும் பணத்தில்தான் குறியாக இருப்பான். அதன் பின்புதான் மற்றதெல்லாம்..

நா.கண்ணன் 4/07/2007 08:31:00 PM

அவர் உண்மைத்தமிழராக இருப்பதால் உண்மையைச் சொல்லிவிட்டார். இதன் நியாயத்தை எப்படி மறுக்க முடியும்? தமிழில் ஏறக்குறைய இந்தத் தரத்திற்கு வரக்கூடிய சில படங்களுண்டு. தமிழர்களுக்கு யதார்த்தம் என்பதைவிட மிகையான நாடகமரபே அதிகம். இதனால்தான் சிவாஜியைப் பற்றி அலசும் பேரா.சிவத்தம்பி அவரைத் தேர்ந்த 'தமிழ் நடிகர்' என்கிறார். கும்பிடுவதற்கு சின்ன அம்பலம் போதும் என்பது கேரள நோக்கு, தஞ்சைக் கோயில் வேண்டுமென்பது தமிழன் நோக்கு. அவ்வளவுதான்.

We The People 4/07/2007 08:43:00 PM

கண்ணன் சார்,

கொடுமையான விமர்சனம். நீங்க மொழி புரியாம படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மணிசித்திரதாழ் ஒரு வர்த்தக ரீதியான படம் அல்ல! நேர்த்தியான திரைக்கதையுடன் கூடிய அசத்தல் படமாக தான் எனக்கு தோண்றியது! சந்திரமுகி ஒரு முழு நீள வர்த்தக படம்! ஒன் லைன் எனப்படும் கதை சுருக்கத்தை சுட்டு நல்ல திரைகதை அமைக்காமல் ரஜினிக்கா ஓடிய படம் என்று தான் சொல்லவேண்டும்! மோகன்லால் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார், காமெடி கலந்த கதாபாத்திரம் ஆனாலும் அதில் சீரியஸ் அம்சங்களும் இருக்கும்! ஷோபனாவின் நடிப்புக்கு முன் ஜோ நெருங்க முடியவில்லை என்பது தின்னம், ஜோ நன்றாக செய்தார் என்று மட்டும் சொல்லாம். shobana has done the best ever performance in that movie. என்ன Basisல நீங்க ஒரு கிலாசிக் படத்துடம் வெறும் கமேர்ஷில் படத்தை ஒப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

உங்களால் மணிசித்திரதாழின் திரைக்கதை நேர்த்தியை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று மட்டும் தெளிவாக தெரிகிறது!

நா.கண்ணன் 4/07/2007 09:01:00 PM

விடமாட்டீர்கள் போல :-)

இரண்டில் மணிச்சித்திரத்தாழு அளவு, அழகு, யதார்த்தம், மிகை நடிப்பு இல்லாமை என்பவற்றில் சிறப்பாக இருப்பதை நான் மறுக்கவே இல்லையே. சந்திரமுகி 'ரஜனி' படம். சூப்பர் ஸ்டார் படம். அவவற்றை அந்தந்த அளவுகோலில் வைத்து எடை போடும் போது சந்திரமுகி தேறுகிறது. மணிச்சித்திரத்தாழு அப்படியே தமிழகத்திற்கு வந்திருந்தால் இரண்டு வாரம்தான் ஓடியிருக்கும். இந்தக்கதையையும், இப்படிப் பிரம்மாண்டமாகச் சொல்லத்தெரிகிறதே தமிழர்களுக்கு! அதே நேரத்தில் கம்யூனிச பின்புலம் உள்ள கேரளாவில் ரஜனி என்ற ஒரு phenomenon-வருவதற்கே வாய்ப்பில்லை. ஆனால், classical-என்ற வார்த்தையெல்லாம் போடக்கூடாது. பின் சத்யஜித் ரேயின் படங்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் போய்விடும். ரொம்பவும் சீரியஸான கட்டத்தில் மோகன்லால் 'பண்டைத்தமிழ்' என்று பாட்டு பாடுகிறாரே. கொஞ்சமாவது ஏற்கிறதா பட ஓட்டத்துடன்? (அது நல்ல பாட்டு என்பது வேறு விஷயம்)யதார்த்தமென்றால் பாடலே இல்லாமல் எடுத்திருக்க வேண்டும். அப்படத்திலுள்ள காமெடியெல்லாம் அநாவசியம். மோகன்லாலை 'திருமேனி' ஆகா! ஓகோ! வென்று புகழ்வது? இதுவெல்லாம் இல்லாமலும் அப்படத்தை நறுக்காகச் சொல்லியிருக்க முடியும். உலகின் மிகச் சிறந்த படங்களைப் பார்த்திருப்பின் 'மணிச்சித்திரத்தாழுவை' இப்படிக் கோபுரத்தில் வைத்துக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. மூன்றாம் பிறையில் கூடத்தான் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைத்தது. ஷோபனா இயல்பாக நடித்திருக்கிறார். அவ்வளவுதான்.

Bharateeyamodernprince 4/08/2007 02:31:00 AM

(sorry..dont have tamil fonts now) Manichithrathaazhu is a typical Fazil film..very natural. Fazil's favorite hero MOHANLAL is that film's hero too in that female-centric movie. The film was a big hit in Kerala and also created an impact in TN as it was screened in Chennai, Kovai, Trichy, Madurai,etc. I saw that movie in 1997 in Rani Paradise theatre in Thanjavur. Considering the lack of popular support for non-Tamil movies in TN, I would say the success of Manichitrathaazhu in TN also is awesome. The film brought about the exemplary talent of Shobana...whose dances and facial expressions could never be compared with any contemporary artists.

In Tamil version, it was an entirely different scenario... it was a typical Rajni film (devuda..devuda...!) with Vasu's masala touches... the film doesnt reflect any thing akin to Tamil culture... but reflects the sad copying culture of tamil movie makers.

To put it in a nutshell.... the malayalam movie was a branded Fazil epic, an identity of Malayalam movies...while its Tamil version was a distorted one with lot of compromises (all to please Rajni fans).

நா.கண்ணன் 4/08/2007 09:03:00 AM

It is nice to have some conversation over a film that was released in 1997 & made an impact in Tamilnadu!(that was a news to me). It is hard to understand the psychology of Tamilnadu film goers, at times. There are several such Malayalam, Telugu and Hindi films that ran successfully in Tamilnadu. When I was young, 'Chemmeen' was a hit! Then Sankarabaranam, Sholey, Aradhana!! Chandramukhi was a typical Rajani movie disregarding anything serious in the original script that does not suit 'His' style. In spite of that both films were successful. Chandramukhi's set was grand, music excellent, a good star cast (compare the 'Ramanathan' substitutes in both films. Who suits well?), good out door shooting and filmed like a thriller. The approach to film making is different in these two states. Could you educate me on the real commercial ventures in Malayalam films like Chandramukhi (just for information).

இலவசக்கொத்தனார் 4/08/2007 10:24:00 AM

இந்த அளவு நான் ஆழமாகப் படங்கள் பார்ப்பது கிடையாது. ஆனால் எனக்கு மணிசித்ரத்தாளு படத்தின் பாடல்கள் பிடித்தது. (பாடல்கள் மட்டுமே, படமாக்கப்பட்ட விதம் பற்றிச் சொல்ல வில்லை)

ஒரு முறை வந்து பார்ப்பாயா என்ற பாடல் குந்தளவராளி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்தது. நன்றாகவே இருந்தது.

நா.கண்ணன் 4/08/2007 10:35:00 AM

கொத்ஸ்: அப்படத்தில் இரண்டு பாடல்கள் தேறும். இந்த ஒருமுறை வந்து பார்ப்பாயா, மற்றொன்று மலையாள சாகித்யம் கொண்ட 'பண்டைத்தமிழ்' என்று வரும் பாடல் (முதல் வரி மறந்துவிட்டது). அவர்கள் படப்பாடல்கள் எல்லாமே கொஞ்சம் அமைதியாக, அமுக்கமாக சில நேரம் monotonous-ஆக இருக்கும். வித்யா சாகரின் இசையைப் பாருங்கள். எவ்வளவு வித்தியாசம்!

துளசி கோபால் 4/08/2007 11:07:00 AM

நேத்துப் போட்ட பின்னூட்டம் காணொம்.
போட்டும். இதோ உங்களுக்காக:

பழந்தமிழ் பாட்டிழையும் ஸ்ருதியில் பழயொரு தம்புரு தேங்கி
மணிச்சித்ரத்தாழினுள்ளில் வெருதே நிலவரமெய்ன மயங்கி
சரஸசுந்தரி மணி நீ அலஸமாயுறங்கியோ
கனவு நெய்தராத்ம ராகம் மிழிகளில் பொழிஞ்ஞுவோ
விரலில் நின்னும் வழுதி வீணு விரஸமாயொராதி தாளம் ( பழந்தமிழ்)

நா.கண்ணன் 4/08/2007 11:20:00 AM

//கனவு நெய்தராத்ம ராகம் மிழிகளில் பொழிஞ்ஞுவோ//

கனவில் நெய்த ஆத்ம ராகம்
விழிகளில் பொழிகின்றதோ!

ஆகா!இப்படம் ஒரு வகையான 'மோகமுள்' பற்றிப் பேசுகிறது. கதையில் படித்த ஒரு கதாபாத்திரம், கனவு நிலையில் மெய்யுருக் கொண்டு, நிஜ நிலையில் தோற்றப்பிழையாக இருந்தாலும், ஒன்றின் உருகம் ஒன்றில் மேவ, சத்தியமென்பது மருள்கிறது! அப்போது அவள் இரு உருக்கொள்கிறாள். விரகம் கொண்ட அக்கதாபாத்திரத்தை எப்படியும் கூட வேண்டுமெனும் தாபம் ஏற்படும் போது தடையாய் இருப்பவற்றை வன்முறை கொண்டேனும் நீக்கப் பார்க்கும் மனோபாவம். இம்மாதிரி subtle sex விஷயங்களை எடுக்க மலையாளிகளைத் தவிர வேறு யாரால் முடியும்? சந்திரமுகியில் கொச்சைப்படும் செக்ஸ் அங்கு இல்லையே! ஆனாலும் இரண்டின் ஆதார ஸ்ருதியும் சரஸம்தான்!!

நா.கண்ணன் 4/10/2007 10:38:00 AM

ஆசீப்:

உங்கள் பின்னூட்டம் எப்படியோ தப்பிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். சந்திரமுகிக்கு நான் எழுதிய முதல் விமர்சனம் இங்கு எங்கோ கிடக்கிறது. தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதில் உங்களையும் விடத் திட்டி இருக்கிறேன். மணிச்சித்திரதாழுவை இன்னும் முழுமையான கலைப்படைப்பாக அளித்திருக்கலாம் எனும் என் ஆதங்கம் உங்கள் உணர்ச்சிப் பெருக்கில் மறைந்து போனது :-) சந்திரமுகி 'அபத்தம்' என்பது ஊரறிந்தது. ஆனால், அபத்தம் என்பதும் ஒரு சுவை. அதை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள் :-)

நா.கண்ணன் 4/10/2007 10:42:00 AM

அரவிந்தன்:

ஆற்றூர் ரவிவர்மாவை ஒருமுறை சந்தித்தேன். அவர் போன்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற பல மலையாள இலக்கியவாதிகள், அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள், தமிழ் வேர் அவர்களுக்கும் பொது என்றுதான் பேசுகின்றனர். அதை மீண்டும் பொலிவு படச் சொன்னதற்கு நன்றி. இந்தியாவின் வேர் மண் மூடிக் கிடக்கிறது. உள்ளே ஒரு சிம்மாசனம் இருப்பதை அறியாமல் மண் மேட்டில் உட்கார்ந்திருக்கிறான். விவேகாநந்தரின் பேச்சைப் பாருங்கள். மிக்க நன்றி.

Sethukkarasi 4/10/2007 11:26:00 AM

உங்கள் பதிவில் விமரிசனங்கள் "பிச்சிக்கிட்டு போகுது" என்று நினைக்கிறேன்.. பொறுமையாக வாசிக்க நேரமில்லை - வருந்துகிறேன்.

ஆனால் ஒன்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்:

மணிச்சித்திரத்தாழு இரண்டு முறை பார்த்தும் சலிக்காத அருமையான படம்.

சந்திரமுகி அடுத்தபடி தான். ஒருமுறையே திகட்டிவிட்டது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இதுபோல் (வேறு வார்த்தைகளில்) சொல்லி ஒரு தலீவர் ரசிகரிடம் திட்டு வாங்கியதால் இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ;-)

நா.கண்ணன் 4/10/2007 12:01:00 PM

அரசி:
இப்பின்னூட்டங்கள் சில தெளிவுகளைத் தந்துள்ளது. 10 வருடத்திற்குப் பிறகும் சித்திரத்தாழு பெரும்பாலோர் மனதை விட்டு நீங்கவில்லை என்பதிலிருந்து அது சிறந்த படம் என்பது புரிகிறது. சினிமா என்பது நம் எல்லோரையும் பாதிக்கிறது என்று தெரிகிறது. தமிழ் சினிமா என்பது அபத்த சாகரமாக உள்ளது. அதில்தான் திளைத்துக் கொண்டிருக்கிறோம். நான் சந்திரமுகி 2-3 முறை பார்த்தேன் :-)) ஏன்?
இப்போது ஒரு புதிய பதிவு இட்டு இருக்கிறேன். விவேகாநந்தர் கடிதம். அதற்கு இவ்வளவு பின்னூட்டம் வாராது! இது ஏதாவது உங்களுக்குச் சொல்கிறதா?

ஜோ / Joe 4/10/2007 12:09:00 PM

சந்திரமுகியை தமிழர்களின் கலாரசனைக்கு உதாரனமாக காட்டி தலையில் வைத்து கொண்டாடும் நீங்கள் நல்ல சினிமா பற்றி ஒலிப்பதிவு லெக்சர் கொடுப்பதெல்லாம் ...ஹும்..தலைவிதி.

Anonymous 4/10/2007 12:09:00 PM

Shobhana won her first National Award from the government of India, for best performance as an actress in 1994 for Manichitrathazhu.

Anonymous 4/10/2007 12:13:00 PM

A few minutes (5-10) after the introduction of Mohanlal, the movie's intermission will come. The story had been given more importance in the original than the actors :-))

துளசி கோபால் 4/10/2007 12:44:00 PM

//இது ஏதாவது உங்களுக்குச் சொல்கிறதா?//

ஆமாம். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது.:-))))

நா.கண்ணன் 4/10/2007 01:27:00 PM

ஜோ!

எல்லாவற்றையும் கருப்பும்-வெள்ளையுமாகவே பார்க்கமுடியாது. இந்தக் கலந்துரையாடலில் பல விஷயங்கள் குழம்பிப்போயுள்ளன. நான் மணிச்சித்திரத்தாழு நல்ல படமில்லை என்று சொல்லவே இல்லை. ஊன்றிக் கவனித்தீர்களெனில் அபத்த கலாச்சாரப் படங்களில் ஊறித்திளைக்கும் நமக்கு ஒரு நல்ல படம் பார்த்தவுடன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம் என்று சொல்லப் புகுந்தேன். மணிச்சித்திரத்தாழுவும் வியாபாரப்படம்தான். நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழனும் முயன்றால் at least அந்த மாதிரிப் படங்களையாவது எடுக்கமுடியும் என்று அவனை ஊக்குவிக்க எழுந்ததுதான் அப்பதிவு. மேலும், சந்திரமுகி பார்ப்பதானால் ஒருவனை அழுக்கு என்று பட்டம் கட்டிவிட முடியாது. அதில் பார்க்கத் தகுந்த பல கட்டங்கள் உள்ளன (நீங்கள் துருக்கி போயிருக்கிறீர்களா? அந்த இடங்களுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன். நன்றாக எடுத்துள்ளார்கள்)அப்படப்பாடல்கள் நன்றாகவே வந்துள்ளன. நல்லதை எடுத்து, அல்லதை விலக்கும் அன்னப்பறவையாக ஒரு தமிழன் ஆக்கப்பட்டுள்ளான். இது மாற வேண்டும். நல்ல படங்கள் தமிழில் வர வேண்டும். சரி, இது பற்றி இன்னொரு பதிவு போடுவோம்! (வேடிக்கை என்னவெனில் ரஜனி கலாச்சாரம் ஜப்பான் , கொரியாவிற்கும் பரவி இருக்கிறது. இதன் உளவியல் என்னவென்று பாருங்கள் ஐயா!:-)

நா.கண்ணன் 4/10/2007 01:42:00 PM

My God what a passion! Mr.Anony, Malayali culture is a bit sophisticated. Shobana has done her part well. But if you compare the characters, Jothika has not failed either! (I wonder why did they select her? Shobana could have acted as well). Tamil culture is raw, emotional. A broth that is capable of generating art & culture. It is still the breeding ground of good artists(music, dance, cinema etc). Tamil cinema still attracts the best of Kerala talent. Why?

Tamil cinema needs a paradigm shift. It is certainly capable of bringing the best in Indian cinema (well let's be positive:-)

G.Ragavan 4/10/2007 01:57:00 PM

மணிசித்ரதாழு, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நேர்மையாக விமர்சிக்க வேண்டுமென்றால் மணிசித்ரதாழு ஒரு சிறந்த படம். அது இயல்பு நடையிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும்..மிகச் சிறப்பான படம். சந்திரமுகி...ஜோதிகா காட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் கதாநாயகன் புகழும் அபத்த நகைச்சுவையும். சந்திரமுகியின் வெற்றி வீச்சு எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்த மலையாளப்படம் தேவைப்படுகிறதே! இந்த வீச்சை என்ன சொல்வது? உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய நிலையில் தமிழ்த் திரைப்படங்களில் டெக்னாலஜி இருக்கிறது. ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை.

ஜோ / Joe 4/10/2007 02:51:00 PM

கண்ணன் சார்,
மணிச்சித்திரதாழு என்ற படம் தமிழர் கையில் கிடைக்கும் போது எப்படி வேறு ஒரு கோணத்தில் சுவாரஸ்யமாக்கப்பட்டிருக்கிறது என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை .பி.வாசு போன்ற மட்டமான ஒரு இயக்குநரும் திறமையிருந்தும் அபத்தங்களை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து கொடுத்த ஒரு சுமாருக்கும் கீழான ஒரு படத்தை எடுத்துக்கொண்டு தமிழன் கலாரசனை என்றெல்லாம் நீட்டி முழக்குவது நல்ல சினிமாவைப் பற்றி பேசப்புறப்பட்ட உங்களிடம் எதிர்பார்க்கவில்லை ஐயா! வடுவேலுவும் ரஜினியின் இணைந்து நடத்திய ஆபாச கூச்சல் தான் நகைச்சுவையா ஐயா! போய் மொழி என்றொரு படம் வந்திருக்கிறது அதை பாருங்கள் .முடிந்தால் அன்பே சிவம் ,மொழி ,வெயில் ,பருத்தி வீரன் போன்ற அபத்தம் குறைந்த படங்களைப் பற்றி விவாதியுங்கள் ..இல்லையென்றால் சந்திரமுகி போன்ற அபத்த களஞ்சியங்களை பற்றி பேசி நல்ல சினிமா பற்றியும் பேசினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை (அது கொரியா ,ஜப்பானில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும்)

நா.கண்ணன் 4/10/2007 03:03:00 PM

ஜோ!

சந்திரமுகியின் நகைச் சுவை பற்றி நான் சிலாகிக்கவே இல்லை. மோகன்லாலுக்கு அது எடுக்கவில்லை என்று சொல்ல வந்தேன். மூலத்திலேயே செக்ஸ் இருக்கிறது. உண்மையில் மணிச்சித்திரத்தாழு காமத்தை அடிப்படையாகக் கொண்ட படம். அது தெரியாத வண்ணம் எடுத்து, தேசிய விருது வாங்கித்தர வைத்துள்ளார் பாசில். அது கலை வெளிப்பாடு. நம்மவர், சும்மாவே ஊதிப் பெருக்குபவர்கள். அங்கு மோகன்லால், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவியை டாவு அடிப்பதாக ஒரு காட்சி. நம்ம ஆள் காப்பி அடிக்கும் போது, அதை விரிவாகச் செய்கிறான் (வடிவேலு பாத்திரம் முழுவதும்). மூலத்தில் அமெரிக்கா சென்று வந்தவன் என்ற ஒரு இமேஜ் உருவாக்கப்படுகிறது. அது நமது ஹீரோ கலாச்சாரத்திற்கு வித்தாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே மூலத்தில் இல்லாதது சந்திரமுகியில் இல்லை. அங்கு இருப்பதை அவர்கள் சொல்லும் விதம் ஒரு மாதிரி, நம்மவர் சொல்லும் விதம் ஒரு மாதிரி. சந்திரமுகி ஒருவகையான middle cinema. முழுக்கக் கலைப்படமில்லை. முழுக்க வியாபாரப்படமில்லை. ஒரு compromise. அபத்த சினிமா பார்த்து வளர்ந்த நமக்கு அதுவே தேவாம்மிருதமாக உள்ளது. அதைச் சொல்வதும் என் நோக்கு.

ஜோ / Joe 4/10/2007 03:08:00 PM

//ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை. //
ராகவன்,
இப்போ மொழி ,பருத்தி வீரன் ,வெயில் படங்களின் தரத்திற்கு என்ன குறைச்சல் .தமிழில் தரமான படங்கள் வரத்தான் செய்கிறது .ஆனால் சிவாஜி-க்கும் சந்திரமுகிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை நான் அதற்கு கொடுக்கிறோமா ? கொடுத்தால் தமிழ் சினிமா உருப்படும் .

நா.கண்ணன் 4/10/2007 03:16:00 PM

மொழி படப்பாடல்கள் அனைத்தும் தேன். பார்க்கக் காத்திருக்கிறேன். பருத்தி வீரன் பார்க்கலாமென்று சொல்கிறீர்கள்?

உங்களிடம் கெட்ட பேர் நான் வாங்கியதற்குக் காரணம், என் குறை அல்ல. மணிச்சித்திரத்தாழு என்ற படம் வந்தது. அதை வைத்து சந்திரமுகி வந்தது. அது கிளப்பிய விமர்சனங்கள். இவைதான் காரணம். ஒன்றை வைத்துதான் ஒன்றை நோக்க முடியும். அப்படித்தான் நான் செய்தேன். உங்கள் புரிதலுக்காக ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். [எனது முதல் விமர்சனம் காட்ட முடியா வண்ணம் எங்கோ தொலைந்து போய்விட்டது. தேடிக்கண்டு பிடித்து பின்னால் இடுகிறேன்]

அபத்த கலாச்சாரம் என்பதும் ஒரு சுவாரசியமான உளவியல். அது பற்றி வேறொரு சமயம் பேசுவோம். ஏன் ரஜனிக்கு வெளிநாட்டு ரசிகர்கள் உருவாகுகிறார்கள் என்பது பற்றி.

G.Ragavan 4/10/2007 03:24:00 PM

// ஜோ / Joe said...
//ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை. //
ராகவன்,
இப்போ மொழி ,பருத்தி வீரன் ,வெயில் படங்களின் தரத்திற்கு என்ன குறைச்சல் .தமிழில் தரமான படங்கள் வரத்தான் செய்கிறது .ஆனால் சிவாஜி-க்கும் சந்திரமுகிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை நான் அதற்கு கொடுக்கிறோமா ? கொடுத்தால் தமிழ் சினிமா உருப்படும் . //

விதிவிலக்குகள் பெரும்பான்மை இல்லை ஜோ. மொழி நல்ல படமென்று கேள்விப்பட்டேன். பருத்தி வீரனைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னுடைய கருத்து வேறுவிதமாக இருக்கிறது. ஆனால் நல்ல கான்செப்ட். பாரதிராஜாவின் பட்டிக்காடுகளோடு ஒன்ற முடிந்த அளவிற்கு அமீரின் பட்டிக்காட்டோடு ஒட்ட முடியவில்லை. ஆனால் படத்தில் அனைவரின் நடிப்பும் கனகச்சிதம். அதிலும் ப்ரியாமணி. அடேங்கப்பா!

சந்திரமுகி முடிஞ்சி இப்போ ஜிவாஜி வருதுங்கோ. மக்கள் அதுக்குள்ளயே பல்லேலக்காடிக்கிட்டிருக்காங்க. வெகுஜனப்படங்களுக்கு நான் விரோதி இல்லை. ஆனா ஊறுகாயில கொழம்பு ஊத்தித் தின்னுன்னா எத்தன வாட்டி சாப்புடுறது. வயிறு வலிக்குல்ல.

We The People 4/10/2007 03:25:00 PM

//அங்கு மோகன்லால், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவியை டாவு அடிப்பதாக ஒரு காட்சி.//

ஐயா, இது ஓவர், மோகன்லால் சுரேஷ் கோபியின் மாமன் மகள் தான் குளியலறையில் உள்ளாதாக நினைத்து "உங்களை சந்திந்த்து பேச வேண்டும், யாருக்கும் தெரியாமல் வந்து சந்திக்கிறேன்" என்று சொல்லுவார், அதுவும் கதைக்கும் அந்த மாமன் மகள் கதாபாத்திரம் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று இருக்கும் நிலையில், உண்மையை அறிந்த மோகன்லால் சொல்லும் காட்சி அது, இதுல என்ன அபத்தம் இருக்கு! ஆனால் சந்திரமுகியில் வாய் திறந்தாலே கேவலா பேசி நகைசுவை செய்தார்கள், U cant compare these two things.

//மூலத்திலேயே செக்ஸ் இருக்கிறது. உண்மையில் மணிச்சித்திரத்தாழு காமத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.//

ஐயா மீண்டும் தவறு, இது காதலை அடிப்படையான படம் என்று நினைக்கிறேன். காமம் காதலின் உச்ச கட்டம் அது எங்கேயும் வெளி கொண்டுவரப்படவில்லை என்று நினைக்கிறேன்.

ஜோ / Joe 4/10/2007 03:28:00 PM

கண்ணன் சார்,
கடுமையான பின்னூட்டங்கள் இட்டதற்கு வருந்துகிறேன் .ஆனால் எனக்கு ஒரு சின்ன வருத்தம் .உங்கள் நல்ல சினிமா பற்றிய ஒலிப்பதிவை கேட்டிருந்தேன் .ஆனால் சகட்டு மேனிக்கு எல்லோரும் எழுதிய சந்திரமுகி என்ற குப்பைப் படத்தை நீங்களும் கொஞ்சம் சிலாகித்து எழுதியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது .சந்திரமுகி ,சிவாஜி பற்றியெல்லாம் எழுதுவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள் .நீங்களாவது மாற்று சினிமா பற்றி பேசுங்கள் .சில அறிவுஜீவுகள் தங்களை வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டுமென்பதற்காகவே ரொம்ப சுமாரான படங்களை வித்தியாசமாக பார்ப்பது போலவும் எழுதுவார்கள் .ஆனால் மொழி போன்ற எவ்வளவோ (தமிழ் சூழலில்) பரவாயில்லை போன்ற படங்களை உலக சினிமாவுக்கு ஒப்பிட்டால் குப்பை என்று சொல்லி நிராகரிப்பார்கள் .நடிகர் திலகம் போன்ற மாபெரும் கலைஞனை சாதாரண மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் தாங்களும் ஏற்றுக்கொண்டால் சாதாரணமாகி விடுவோமோ என்று பெரிதாக அவரெல்லாம் மிகை நடிப்பு அப்படீன்னு பெரிய உலக மகா கண்டுபிடிப்பை வெளியிட்டு அவரை நிராகரிப்பார்கள் .இதெல்லாம் ஒரு அறிவு ஜீவி கூச்சல் என்றே நான் நினைக்கிறேன்.

நா.கண்ணன் 4/10/2007 03:33:00 PM

ஜோ!
வருந்த வேண்டாம். எழுத்து ஒற்றைப் பரிமாணம் கொண்டது. மொழி ஒரு குழுமக்குறி என்றாலும் முழுப்புரிதலை அது எப்போதும் தந்ததில்லை. உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் குழந்தையிலிருந்து சினிமாப் பார்த்து வளர்ந்தவன். அந்த industry-ஐ எப்போதும் அனுதாபத்தோடு பார்ப்பவன். சினிமா என்ற பிரம்மாண்டம் என்னை எப்போதும் வியக்க வைக்காமல் இருந்ததில்லை.

ஜடாயு 4/10/2007 10:42:00 PM

கண்ணன்,

இந்தப் பதிவைப் படித்து விட்டு நீங்கள் தானா என்று 2-3 முறை கண்ணைக் கசக்கிப் பார்க்கிறேன். மணிச்சித்திரத்தாசு போன்ற ஒரு காவியத்துடன் எப்படி சந்திரமுகியை ஒப்பிடக் கூடத் துணிந்தீர்கள்? டப்பாங்கூத்துப் பாடலுடன் முக்கூடற்பள்ளு பாடல்களை ஒப்பிடுவது போல இருக்கிறது!

பின்னூட்டங்களில் ஏற்கனவே ரொம்ப விளாசி விட்டார்கள். ஸோ இதோடு போதும் என்று நினைக்கிறேன் :))

நா.கண்ணன் 4/10/2007 11:03:00 PM

அடக்கடவுளே! ஜடாயு! நீங்களுமா? இது என்ன வம்பாப் போச்சு. மணிசித்திரதாழுன்னு ஒரு படம் எடுப்பாங்களாம், அதைக் காப்பி அடிச்சு ஒரு தமிழ் படம் வருமாம். இதைப் பத்திப் பேசினா எல்லோரும் சேர்த்து வைத்து மொத்துவார்களாம்! என்னைய்யா கொடுமை இது :-) ஐயா! நானொன்றும் ரஜனி ரசிகனல்ல. பலரைப்போல் பார்த்து பழகிவிட்டது, அவ்வளவுதான். இப்படி நீங்களெல்லாம் கொடுத்த hype-லே அந்தப்படத்தைப் பாக்காட்டி..என்பது போல் ஆகிப்போச்சு. கடைசியில் பார்த்தேன். பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். இருப்பினும் அதுவும் ஒரு மலையாள பிராண்ட் படம்தான். நமக்கெல்லாம் சில முத்திரைகள் உள்ளன. ரஜனிக்கு மட்டுமென்றில்லை. அதன் பின்தான் சந்திரமுகி பற்றிப் பேசத்தோன்றியது. தப்பா?

சரி, அடுத்தவர் கேட்குமுன் சொல்லி விடுகிறேன், எப்படிச் சந்திரமுகியை 3 முறை பார்க்க வேண்டிய நிலை வந்தது என்று (பட்டம் கட்டறதுக்கு ரொம்பப் பேர் தயாராகிட்டாங்கண்ணே:-). முதலில் இடைவேளையிலிருந்துதான் பார்த்தேன். அதுதான் முழுப்படமென்று நம்பிவிட்டேன். ஏதோ புண்ணியவான் தியேட்டரிலே காமிராக் கொண்டு எடுத்து போட்டிருக்கான் :-) கொஞ்ச நாளைக்கப்புறம் DVD Rip கிடைச்சது (தடியைத் தூக்காதீங்க. கொரியாவிலே தமிழ்ப்படமெல்லாம் ரிலீஸ் பண்றதில்லே!). ரொம்ப பளிச்சின்னு இருந்தது. கொக்கு பற, பற பிடிச்சது, துருக்கியில் எடுத்த படக்காட்சி பிடித்தது. ரஜனி லக, லகன்னு வர காட்சி பிடிச்சது (அது அவருக்கு உண்மையிலேயே பொருந்துகிறது. (திரும்ப அடிக்க வராங்கடோய்!). கொஞ்ச நாளைக்கப்புறம் என் பெண் என்னைப் பார்க்க வந்தபோது அவளுடன் பார்க்க வேண்டியிருந்தது (அதுக்கு பேய் பயம் :-). அவ்வளவுதான். அதுக்குள்ளே நமக்கு பட்டம் கட்டி, நோட்டிஸ் ஒட்டிருப்பாங்கண்ணு நினைக்கிறேன். இருந்தாலும் எல்லோரும் ரொம்ப மோசம் :-(

சேதுக்கரசி 4/11/2007 04:31:00 AM

//மணிச்சித்திரத்தாசு போன்ற ஒரு காவியத்துடன் எப்படி சந்திரமுகியை ஒப்பிடக் கூடத் துணிந்தீர்கள்?//

காப்பியடிச்சா மனசு ஒப்பிடத் தானே நினைக்கும்?

நான் சந்திரமுகி பார்த்த கதையே வேற. தியேட்டர்ல போய் உட்கார்ந்தபிறகு, அந்த மாளிகையைப் பார்த்தவுடன் தான் இது மணிச்சித்திரத்தாழின் தழுவலோன்னு தோணிச்சு.. அப்புறம் தான் தெரியவந்தது. படம் முடியறதுக்குள்ள எழுந்து ஓடாத குறை தான். ஒரு நல்ல ரசனையுள்ள மலையாளப்படத்தை வச்சு, தமிழில் நல்லாவே சிதைச்சிருக்காங்க.