சர்வஜித்து வாழ்த்துக்கள்!

அன்புடையீர்

புத்தாண்டு (சர்வஜித்து) வாழ்த்துக்கள்!

இப்புத்தாண்டு தொடக்கத்தில் பல புதிய முதுசொம் சேர்க்கைகளுடன் உங்களை சந்திக்கிறோம்.

முதுசொம் சேதி

இத்தொகுப்பில் ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய ஆய்வு பூர்வமான ஆனால் எளிய தமிழில் அமைந்த கட்டுரை ஒன்றை கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் வடித்துத்தந்துள்ளார். அதைக்காண:

http://www.tamilheritage.org/blogcms/

முதுசொம் படங்கள்

இத்தொகுப்பில் கொரியாவைச் சேர்ந்த முனைவர் குணசேகரன் "பார்வையில் பட்ட குறள்" என்ற புதிய பகுதியைத் தொடங்குகிறார். படங்கள் ஆற்றுப்படுத்தும் குறள் வழி. கண்டு ரசிக்க:

http://www.tamilheritage.org/blogcms/fotoblog.php

முதுசொம் காட்சி

இத்தொகுப்பில் சிஃபி டாட் காம் தமிழ்ப் பிரிவு ஆசிரியர், கவிஞர் அண்ணா கண்ணன் அவர்களின் சமீபத்திய நேர்காணல் காணக்கிடைக்கிறது.

http://www.tamilheritage.org/blogcms/video.php

முதுசொம் வானொலி

இப்பகுதியில் இம்முறை பலர் பங்கேற்கின்றனர்.

1. பேரா.முனைவர்.ரெ.கார்த்திகேசு, மலேசியா
2. ச.சுவாமிநாதன், லண்டன்
3. அண்ணா கண்ணன், சென்னை
4. சுபாஷினி கனகசுந்தரம் - போப்ளிங்கன், ஜெர்மனி
5. கவிஞர் இரமணன், சென்னை.

இவர்கள் படைப்புக்களைக் கேட்க,

http://www.tamilheritage.org/blogcms/voth.php

இப்புத்தாண்டு இனிதாகத் தொடங்க தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.

நிகழ்ச்சி அமைப்பு:
சுபாஷினி கனகசுந்தரம்
நா.கண்ணன்

3 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் 4/14/2007 01:13:00 AM

நன்றி கண்ணன்.
உங்களுக்கும் எங்கள் நல் வாழ்த்துகள்.
தமிழ் இனிதே வளரும் ஆண்டுகள் தொடர வேண்டும்.

நா.கண்ணன் 4/14/2007 07:19:00 AM

நன்றி வல்லி. புத்தாண்டில் நல்ல பல தமிழ் தொண்டு மலர வேண்டும் என்பதே ஆசை.

ஆதிபகவன் 4/14/2007 08:51:00 PM

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.